Saturday, August 22, 2009

இது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்க!

(பெண்பிள்ளைகளின் இந்நாள் அப்பாக்களும், வருங்கால அப்பாக்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்!)

ஐந்து வயது பையன், தன் தாயிடம் கேட்கிறான், “இது என்னம்மா?”

தாய், என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ஏழு வயது சகோதரன், முந்திக் கொண்டு பதில் சொல்கிறான், “இது கூட தெரியாதா, இது விஸ்பர்!” என்று!

இந்த வயதில், நிச்சயமாக இது பற்றி தெரியாது தான், ஆனாலும் ஏதோ ஒரு வகையில் புரிந்திருக்கிறார்கள். புரியாத வயதில், புரியாமல் இருப்பது நல்லது தான். ஆனால், புரியக்கூடிய வயதிலும் புரியாமல் இருந்தால், தவறு யார் மேல்?

ஒரு சிறுமி, தான் வயதுக்கு வந்து இரண்டு நாட்களாகியும் பெற்றோரிடம் சொல்லாமல் கஷ்டப்பட்டு மறைத்து வந்திருக்கிறாள். அடிக்கடி பாத்ரூம் போய் வருவதை பார்த்த, விபரம் தெரிந்த அவளுடைய தோழி கேட்கவும், இவள் தந்த பதில் சற்று அதிர்ச்சிக்குரியது,

“காயம் பட்டால் தானே ரத்தம் வரும். இதைப் போய் என் அம்மாவிடம் சொன்னால், யூரின் போகும் இடத்தில் எப்படி காயம் ஆனது? எப்படி அவ்விடத்தில் இடித்து கொண்டாய்? என்று கேட்பார்கள். அதனால் தான் சொல்லவில்லை!” என்று கூறி இருக்கிறாள்.

இதுமட்டுமல்ல, முதன்முறை மாதவிலக்கு ஏற்பட்டதும், தான் சாகப் போகிறோம், அதனால் தான் உடலில் இருந்து இவ்வளவு ரத்தம் வெளியாகிறது என்று எண்ணி ‘கோ’வென்று அழுத சிறுமியின் கதையையும் நான் கேட்டிருக்கிறேன்.

இதற்கெல்லாம் காரணம் அறியாமை தான். தன் பெண்குழந்தைகளுக்கு தக்க வயதில், உடலியல் சம்பந்தமான அறிவை வளர்ப்பது பெற்ற தாயின் கடமை. தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் இதில் பங்குள்ளது.

இதை படிக்கும் உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கலாம். அல்லது வருங்காலத்தில், பிறக்கலாம். ஒரு தகப்பனுடைய ஸ்தானத்தில் இருந்தோ, தாயுடைய ஸ்தானத்தில் இருந்தோ படித்தால், அதன் சீரியஸ்னஸ் புரியும்.

விவரம் அறியாத சிறுமிகள், பள்ளியில் வயதுக்கு வரும் போது, உடன் படிக்கும் தோழிகளின் கேலிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஓரளவுக்கு முன்பே இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். தைரியமாக ஆசிரியையிடம் சொல்லுமளவுக்கு புரிந்திருக்க வேண்டும்.

முன்பு போல் அல்லாமல், இப்போ நம் உணவு முறை மாற்றத்தால், ஒன்பது அல்லது பத்து வயதிலேயே நம் குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். அந்த வயதில், செக்ஸ் கல்வி என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கும். அதனால், புரியும் விதமாக பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் என் மகளின் தோழி பருவமடைந்தவுடன், நான் என் மகளிடம், “வயதுக்கு வருவதென்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். “தெரியாது” என்றாள். ஏன் கேட்டேன் என்றால், பள்ளியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் அறியாமையின் காரணமாக தவறான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

மிகவும் சிறிய வயதில், கருமுட்டை உருவாகுதல், ஃப்யூசன் ஏற்படுதல், அல்லது அந்த லைனிங் உடைந்து உதிரமாக வெளியேறுதல் ஆகியவை எல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. தேவையுமில்லை. ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதில், இது பற்றி தெளிவு படுத்தலாம். பத்து அல்லது பதினோரு வயது சிறுமிகளுக்கு வேறு விதமாக புரியவைக்க வேண்டும்.

என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”

இதை சொல்லும் போது, என் கணவரும் உடன் இருந்தார். இதில் நமக்கு சம்பந்தமில்லை என்று அப்பாமார்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. வயது வந்த காரணத்தால், தான் தந்தையின் பாசத்தில் இருந்து ஒதுங்கி போகிறோம் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது.

பொதுவாக, ‘விஸ்பர்’, ‘ஸ்டே ஃப்ரீ’ போன்ற சேனிடரி நேப்கின்களை அப்பாமார்கள் வாங்கி தந்தாலும், பெண்பிள்ளை தனக்கு தேவையென்றால், தாய் மூலமாகத் தான் தூது விடுவாள். அவ்வாறு நேராமல், நேரடியாக எந்த தயக்கமும் இல்லாமல் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான், அதைப் பற்றி விளக்கம் தரும் போது, என் கணவரையும் உடனிருக்கச் செய்தேன்.

முதலில், மாதவிலக்கு, ஒரு வெட்கப்படக் கூடிய சமாச்சாரமோ, ஒரு நோயோ அல்ல என்பதை பிள்ளைகள் விளங்க வேண்டும். இது இயல்பாக, ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போவது போல இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது அவர்கள் உள்ளத்தில் பதிய வேண்டும்.

பருவமடைந்த புதிதில், மாதவிலக்கு வரும் போது, வயிறு வலிக்கிறது என்றோ, கால் வலிக்கிறது என்றோ பிள்ளைகள் சொன்னால், அதை அவ்வளவாக பொருட்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இப்படி நாம் செய்தால், பின்னாட்களில், சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், அதை தாங்கி கொண்டு பெரிது படுத்தாமல், வழக்கம் போல் இயங்க பழகிக் கொள்வார்கள்.

அதே போல, இரத்தச்சோகையுள்ள சிறுமிகளுக்கு அதற்கான மாத்திரைகள், உணவு வகைகளைக் கொடுக்கலாம். ஆனால், சாதாரணமான, ஆரோக்கியமான பிள்ளைகள் விஷயத்தில் இதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ‘இதனால், உடலின் சத்துக்களை நீ இழந்துவிடுவாய்’, போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அச்சப்படுத்தக் கூடாது. வெளியேறுவது ரத்தமல்ல, கழிவு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்த நேரத்தில், ஓடாதே, குதிக்காதே போன்ற கண்டிஷன்களையெல்லாம் விட்டு விட்டு, எப்பவும் போல இரு என்று சொல்லிப் பாருங்கள், தானாகவே ஒரு மெச்சூரிட்டி ஏற்பட்டு, துரு துரு பிள்ளைகள் கூட அடங்கி விடுவார்கள். ஆனால், மாதவிலக்கு துணியில் கறையாய் படியும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருப்பது ரொம்ப ஷேம் என்பதை மட்டும் ஆரம்பத்திலேயே மனதில் பதிய வைத்து விடுங்கள்.

‘Have a happy period' என்று விளம்பரத்தில் சொல்வது போல, நம் பெண்குழந்தைகள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இத்தருணத்தை எதிர் கொள்வது, பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது.

-சுமஜ்லா.
.
.

41 comments:

  1. நல்லா எழுதி இருக்கீங்க சுமஜ்லா.ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளிடன் இதை பற்றி பேசி புரிய வைப்பதை விட பயமுறுத்தி வைக்கிறார்கள்..ஹோப் எல்லா பெற்றோர்களும் இதை படிப்பார்கள் என்று.

    அன்புடன்,
    அம்மு.
    http://ammus-recipes.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான இடுகை

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள குறிப்புகள்
    //பருவமடைந்த புதிதில், மாதவிலக்கு வரும் போது, வயிறு வலிக்கிறது என்றோ, கால் வலிக்கிறது என்றோ பிள்ளைகள் சொன்னால், அதை அவ்வளவாக பொருட்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது// சரியாக சொன்னிங்க.

    ReplyDelete
  4. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
    the quran 2:222

    ReplyDelete
  5. இது பெண்கள் ஏரியா!... உள்ளே வராதீங்கன்னு சொல்லி இருந்தீங்க இல்லையா?.... சாரிங்க.... தவறி வந்துட்டேன்... (லொள்....)

    நல்ல ஒரு பதிவு.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. இதை படிக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் நல்ல தகவல்.

    இதை பற்றி நானும் பதிவு போட இருந்தேன், நீஙக்ள் அழகான முறையில் விளக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  7. இதை படிக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் நல்ல தகவல்.

    இதை பற்றி நானும் பதிவு போட இருந்தேன், நீஙக்ள் அழகான முறையில் விளக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  8. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல பதிவு !

    ReplyDelete
  9. அன்பு சகோதரி,நல்லதொரு சமூக அக்கறை கொண்ட விளக்கப்பதிவு.

    இது பெண்கள் ஏரியா,உள்ளே வாங்க. என்பதே சரி.

    தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், பகிர்விற்க்கு நன்றி!

    ReplyDelete
  11. //இது பெண்கள் ஏரியா,உள்ளே வாங்க. என்பதே சரி.

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், பகிர்விற்க்கு நன்றி!//

    ReplyDelete
  12. நல்ல பதிவு என்று பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்!

    //இது பெண்கள் ஏரியா,உள்ளே வாங்க. என்பதே சரி.//

    ஹா...ஹா... வராதீங்கன்னா தான் அதிகமா வருவாங்க! இதுக்கு பேர் தான் நெகடிவ் ஜர்னலிஸம்(நான் வெச்ச பேருங்கோ!)

    ReplyDelete
  13. நல்லா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  14. உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் தோழி இங்கே பெற்றுக் கொள்ளுங்கள்.

    http://gouthaminfotech.blogspot.com/2009/08/blog-post_3267.html

    ReplyDelete
  15. good mater sister

    ReplyDelete
  16. //இது பெண்கள் ஏரியா,உள்ளே வாங்க. என்பதே சரி.//

    ஹா...ஹா... வராதீங்கன்னா தான் அதிகமா வருவாங்க! இதுக்கு பேர் தான் நெகடிவ் ஜர்னலிஸம்(நான் வெச்ச பேருங்கோ!)
    :)...:)...:p
    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், பகிர்விற்க்கு நன்றி!
    அக்கா....
    பல்சுவை நாயகி...

    ReplyDelete
  17. வடிவேலன், உங்க விருதுக்கு மிக்க நன்றி!

    சீமான்கனி, இந்த ரகசியத்தை வெளியே யார்கிட்டயும் சொல்லிடாதீங்க!

    ReplyDelete
  18. நல்ல பயனுள்ள தகவல்.குழந்தைகளுக்கு அந்தந்த வய்தில் ஏற்படும் மாற்றங்களை அம்மா,அப்பா இருவருமே விளக்கி கூறுவது கடமையாகும். மேலும் இது போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளவும். வாழ்த்துக்கள் நன்றி.
    க.பார்த்திபன்
    சிங்கப்பூர்.

    ReplyDelete
  19. எங்கள் பள்ளியில் 6,7,8 படிக்கும் மாணவிகளுககு whisper கம்பெனியிலிருந்து நடத்தும் கருத்தரங்கு ரொம்ப அருமையாக சொல்லிக் கொடுக்கறது...இதில் முக்கிய விஷயம்...இநதக் கருத்தரங்குக்கு அம்மாகளையும் அழைப்பதுதான்!!!

    ReplyDelete
  20. நான் படிக்கும் போதும் இருந்தது அருணா! இப்போ என் மகளுக்கும் இருக்கு! ஆனா, பெற்றோருக்கெல்லாம் அழைப்பில்லை!

    ReplyDelete
  21. என் டெம்ப்ளேட்டில் பேக் கிரவுண்ட் இமேஜ் உங்களுக்கு தெரிகிறதா? எனக்கு எக்ஸ்ப்ளோரரில் தெரிகிறது! பயர்பாக்ஸ் மற்றும் குரோமில் தெரியவில்லை! நான் ஹோஸ்ட் பண்ணியிருந்த சர்வர் டவுன்! அதனால் அவசர அவசரமாக வேறொரு சர்வரில் ஹோஸ்ட் செய்தேன். சொல்லுங்கள் நண்பர்களே!

    ReplyDelete
  22. பகல் இரவாய் மாற:
    பகல் தோற்றம்
    இரவு தோற்றம்
    மலர் தோற்றம்

    எனக்கு ஒண்ணுமே...தெரிய மட்டிகுது அக்கா
    என்ன ப்ரோப்லேம் ??????

    ReplyDelete
  23. சர்வர் டவுன்! ஒரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  24. சீமான், இப்போ ரெஃப்ரெஷ் கொடுத்து பாருங்க! ஓரளவுக்கு சரி செய்திருக்கிறேன். ஆனால், தோற்றம் மாற்றம் வராது!

    ReplyDelete
  25. இன்னும் அப்டித்தான் இருக்கு...அக்கா....

    பிறந்தநாள் வாழ்த்துகள்
    டியர் அக்கா...
    வாழ்க பல்லாண்டு ....

    ReplyDelete
  26. ஃப்ரீயாக நான் ஹோஸ்ட் செய்திருந்த சர்வர் டவுன் ஆனதால், இப்போதைக்கு, என் தம்பியின் சர்வரில் ஹோஸ்ட் செய்திருக்கிறேன். இப்போ, எல்லாம் சரியாகி விட்டது, பழையபடி டெம்ப்ளேட் மாற்றிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  27. தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.

    என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...

    ReplyDelete
  28. அருமையான & அவசியமான பதிவு மேடம். தலைப்பைப் பார்த்து படிக்காம இருந்துட்டேன் :-(. இன்று தமிழ்மணத்தில் வாசகர்கள் அதிகம் பரிந்துரைத்த பகுதியில் இருந்ததால் வந்தேன்.

    ReplyDelete
  29. உங்களின் இந்த பதிவு தமிழ் மலர் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
    visit தமிழ் மலர்

    ReplyDelete
  30. நன்றி சப்ராஸ் தங்கள் விருதுக்கு!

    மேலும், நல்ல பதிவு என்று வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  31. Good post!
    இன்னமும் இதை மையமாக வைத்துக்கொண்டு ஊடகங்களில் வரும் ஜோக்குகள் நிறுத்தப்படவேண்டும். (ஜோக்குனு அவங்க நினைச்சிக்கிடுறாங்க)

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.