Friday, November 20, 2009

என்ன தான் நடக்குது காலேஜ்ல???

காலேஜ் அப்டேட்ஸ் எல்லாம் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது.

எங்க க்ளாஸில் ரெகுலராக வருபவர்கள் மொத்தம் 70 பேர். நான் முதல் பெஞ்ச்!

காலேஜில் கேண்டீன் கிடையாது. கண்டிப்பாக லன்ச் கொண்டு போக வேண்டும். எதாவது ஒரு நாள் என்றால், பணம் கொடுத்து ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

லேடீஸ் காலேஜ் என்றாலும், லெக்சரர்ஸ் ஜென்ஸும் இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் சின்ன பசங்க. மேடமும் கூட நிறைய பேர் யூத் தான்.

காலையில், வீட்டில் இருந்து 8.45க்கு கிளம்பினால், 9.25க்கு காலேஜ் போய் சேர்வேன். 17 கி.மீ. 9.45க்கு பெல்!

லஞ்ச் டைம் 1.10 முதல் 1.50 வரை! மாலை 4.50க்கு காலேஜ் முடியும். நான் ஸ்பெஷல் பர்மிஷனில் 3.30 மணிக்கே கிளம்பி விடுவேன்.

ஒரு பத்து பேர் மட்டும் என்னுடைய வயதுக்காரர்கள். மீதி எல்லாரும் 21-25 வயதுக்குட்பட்ட ஜூனியர்ஸ். சோ எல்லாரும் என்னை அக்கா என்று தான் கூப்பிடுவார்கள்.

லெக்சரர்ஸ் கூட, என்னை ‘மேடம்’, ‘மேடம்’ என்று கூப்பிட்டு வந்தார்கள். நான் அப்படி கூப்பிட வேண்டாம், ‘சுஹைனா’ என்றே கூப்பிடுங்கள் என்று சொன்ன பிறகு மாற்றிக் கொண்டார்கள்.

நிறைய அசைன்மெண்ட் தருகிறார்கள். ஏதாவது சொன்னால், இண்டர்னல் மார்க்ஸ் என்று சொல்லி பயம் காட்டுவார்கள். நான் எல்லாம் முதல் ஆளாக முடித்து விடுவதால் பிரச்சினை இல்லை.

அடிக்கடி டெஸ்ட் வேற! இறைவன் கிருபையால், இது வரை வைத்த எல்லா டெஸ்ட்டிலும், நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண். இதனால், கொஞ்சம் போட்டியும் பொறாமையும் உருவானதைத் தான் தவிர்க்க முடியவில்லை...இவள் நம்மை விட அதிகம் தெரிந்திருக்கிறாள் என்று லெக்சரர்களே சில சமயம் ஃபீல் பண்ணுவது தான் கஷ்டமாக இருக்கிறது. அதனால், இப்போதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.

பக்ரீத்தை முன்னிட்டு போன செவ்வாய் கிழமை எல்லா ஸ்டாஃப்ஸுக்கும் பிரியாணி செய்து, காலேஜ் கொண்டு சென்று, மதிய விருந்து கொடுத்தேன்.

இதுவரை 5 ரெக்கார்டுகள் முடித்திருக்கிறேன். மொத்தம் 20 ரெக்கார்டுகள். அதெல்லாம் டீச்சிங் ப்ராக்டிஸ் போது தான் முடிக்கணும். அதாவது, 40 நாட்கள் ஏதாவது ஒரு கவர்ன்மெண்ட் பள்ளியில் நம்மை ப்ராக்டிஸ் செய்ய அனுப்புவார்கள். அப்போது, நிறைய சார்ட், மாடல் எல்லாம் செய்யணும். டெஸ்ட்டுக்கு படிக்க வேண்டியது இல்லை என்றாலும், இந்த வேலை நிறைய இருக்கும். அதோடு, நாம் வகுப்பில் எடுக்கும் பாடத்துக்கு ஏற்ப லெசன் ப்ளான் ரெக்கார்டு எழுதணும்.

எல்லாரும் எனக்கு ஃபிரண்ட்ஸ் தான். ஆனால், டியர் ஃபிரண்ட் என்று யாரும் இது வரை இல்லை. ஆப்ஷன் க்ளாஸ் என்று ஒரு பீரியட் வரும். அதாவது, மேத்ஸ், சைன்ஸ், இங்கிலீஷ் இப்படி என்ன மேஜரோ, அதற்கேற்ப பிரிந்து க்ளாஸ் அட்டெண்ட் செய்வோம். என்னுடையது இங்கிலீஷ் மேஜர். அதற்கு 12 பேர் இருப்பார்கள்.

ஒரே டெஸ்ட், அசைன்மெண்ட் என்று போர் அடித்தது. அதனால், சில்ட்ரன்ஸ் டே வை முன்னிட்டு ஒரு கல்சுரல் ப்ரோக்ராம் வைக்கலாம் என்று கேட்டோம். அனுமதி கிடைக்க வில்லை. எல்லாருக்கும் ஏமாற்றம். சரி, அவரவர் திறமையை தனித்தனியாக வெளிப்படுத்து ஒரு சின்ன ப்ரோக்ராம் செய்யலாம் என்று மேனேஜ்மெண்ட் சார், அவர் வகுப்பில் அனுமதி தர, அவசர அவசரமாக ஏற்பாடு செய்தோம்.

நான் காலேஜில் நடக்கும் விஷயங்களை வைத்து, ஒரு சின்ன ஸ்கிட் ரெடி செய்தேன். அதில் நான் தான் புலிகேசி. மேலே ஒரு ஜிகுஜிகு ஷால் போர்த்தி, தலையில் ஒரு தலைப்பாகை வைத்து ஐந்து நிமிடத்தில் புலிகேசி ரெடியாகி விட்டார். சொல்ல சொல்ல கேட்காமல், மீசை வேறு வரைந்து விட்டார்கள்...அந்த ஸ்கிட் கீழே தருகிறேன்.

/////இம்சை அரசன் 23-ம் புலிகேசி 30-ம் புலிகேசி ஆன கதை

அரசர் 23ம் புலிகேசி அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார். சேவகன் கட்டியம் கூறுகிறான்.

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்

புலிகேசி: ,அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடியும் சொல் பார்ப்போம்

சேவகன்: (நடுங்கியபடியே) மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தவறாக சொன்னதற்கு இண்டர்னல் மார்க்ஸ் குறைப்பேன் என்றீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை அசைன்மெண்ட் எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா...

புலிகேசி:அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய்? இன்னொரு முறை சொல்!

சேவகன்: ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்

புலிகேசி: நிறுத்து இனி 23 புலிகேசி என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா? அப்படியே தினமும் 30 முறை அசைன்மெண்ட் எழுதிவா தெரிகிறதா?

சேவகன்:சரி மன்னா.. (மன்னர் சென்று விடுகிறார். சேவகன் தனக்குள்) ஒரு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடையாது. இந்த அரசவையில் எப்போது நம்மை வேலையை விட்டு தூக்குவார்கள் என்றும் புரியாது. ஆனால்.....

அமைச்சர்: என்ன உமக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறீர் சேவகரே?

சேவகன்: பிறகு என்ன அமைச்சரே! ஒரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமில்லை! லைஃப் ரொம்ப போரடிக்குது! எப்போது பார்த்தாலும் மன்னர் அசைன்மெண்ட் எழுத சொல்கிறார். மன்னர் இடும் அராஜக சட்டங்களுக்கு பணிந்து பணிந்து....அதுவும் 30ம் புலிகேசி என்று இனி 30 முறை எழுதி வர வேண்டுமாம்....விரல்கள் எல்லாம் வீங்கி விட்டன. விழிகள் எல்லாம் சோர்ந்து விட்டன.

அமைச்சர்: என்னது 30ம் புலிகேசியா? 23ம் புலிகேசி தானே?! இதுவரை 23 சிம்மாசனங்களை உடைத்ததால் தான் 23ம் புலிகேசி என்று அழைக்கிறார்கள்.... எப்போது இவர் 30ம் புலிகேசி ஆனார்?

புலிகேசி: அமைச்சரே!

அமைச்சர்: மன்னா...என்னா...
தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்?

புலிகேசி: நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா? நான் மன்னனா நீயா?

அமைச்சர்: சரி சரி கோபப் படாதீர்கள்

(இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.)

அமைச்சர்: திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா? இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் டூயட் பாட வேண்டிய நேரமாயிற்றே???? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?

புலிகேசி: அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்

நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்?

அமைச்சர்:தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா

புலிகேசி:உடனே 6 பேரை பதவி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்...

அமைச்சர்: மன்னா ஏன்…

புலிகேசி: ஒரு துறைக்கு ஒரு அமைச்சர் போதும்...

அமைச்சர்: மன்னா....நம் அரசாங்கத்தில் மொத்தம் 33 துறைகள்....அதோடு, திடீரென்று போகச்சொன்னால், எங்கே போவார்கள்????

புலிகேசி: சரி, அவர்கள் வேறு வேலை தேடிக் கொள்ள, 30 நாட்கள் அவகாசம் கொடுத்து விடு! எப்போதும் ஓரிரு துறைக்கு அமைச்சர்கள் இருக்கவே கூடாது...இதெல்லாம் நம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள்...

அமைச்சர்: மன்னா, அமைச்சர்கள் இல்லாவிட்டால், மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்....

புலிகேசி: கேள்வி கேட்காதே. அதிகமாக பேசினால் எனக்கு பிடிக்காது.... ஆனால்.... வரியை மட்டும் பாக்கியில்லாமல் வசூலித்து விடு!

அமைச்சர்: மன்னா...நாம் இதுவரை 50 பொற்காசுகள் வரி வசூலித்து வந்தோம்...அதையும் 30 பொற்காசுகள் என்று மாற்றி விடலாமா?

புலிகேசி: வேண்டாம்...வேண்டாம்...அதை 60 ஆக மாற்றி, இரு தவணைகளில் முப்பது முப்பதாக செலுத்த சொல்லுங்கள்...
அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்?

அமைச்சர்: சில 31 ,30,28 இப்படி

புலிகேசி: சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
அதோடு மாதத்துக்கு எத்துணை முறை அரசவை உறுப்பினர்களின் அறிவை சோதித்தோம்?

அமைச்சர்: வாரம் இரு முறை பரிச்சை வைத்துக் கொண்டிருந்தோம் மன்னா...

புலிகேசி: இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.இனி மாதம் 30 நாளும் பரிச்சை வைக்க ஏற்பாடு செய்! அதோடு இண்டர்னர் மார்க்ஸ் 20ஐ முப்பது ஆக மாற்றி விடு!
(அங்கத்தினர் மயங்கி விழுகிறார்கள்)

அமைச்சர்: ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி? ,இன்னா நாற்பது,இனியவை நாற்பது …..

புலிகேசி: நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்?

அமைச்சர்:133 அதிகாரம் மன்னா

புலிகேசி:அதையும்…

அமைச்சர்:மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளது (30 ஐ அழுத்திச் சொல்ல)

புலிகேசி:சரி சரி இருந்து விட்டு போகட்டும்
(சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறது‘அரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்‘)

புலிகேசி: ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் முன்னால் வா மகனே (வருகிறார்)

அமைச்சரே இந்த பண்டிதனுக்கு 30 பொற்காசுகள் சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;

அமைச்சர்: 26 மன்னா

புலிகேசி: உடனடியாக இன்னும் நால்வருக்கு ஏற்பாடு செய்யும்.அப்புறம் நம் பற்களின் எண்ணிக்கை.....

அமைச்சர்: 32 மன்னா...ஆனால், தாங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடி வரும் போது, கல் தடுக்கி விழுந்து 2 பற்கள் உடைந்து விட்டன.

புலிகேசி: அப்படியா ரொம்பவும் நல்லது...இனி, அனைத்து குடிமக்களுக்கு 30 பற்கள் தான் இருக்க வேண்டும். அதிகமாக இருப்பதை தட்டி விட ஏற்பாடு செய்!

(அவையினர் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். ‘என்ன ரொம்பவும் அராஜகமாக இருக்கிறதே????’ ‘பல்லைக் காட்டாமல் பேசுங்கள்...தட்டி விட போகிறார்கள்....)

சேவகன்: என்ன எல்லாரும் கண்டிப்பாக பேசித்தான் ஆக வேண்டுமா? சற்று அமைதியாக இருங்கள்.

புலிகேசி: அப்புறம்....இந்த மீசைக்கார பாரதி எழுதிய ‘முப்பது கோடி முகமுடையாள்’ பாடலை நமது தேசிய கீதமாக்கி விடுங்கள்.

அமைச்சர்: சரி மன்னா....இப்போது தான் புரிகிறது, நீங்கள் 30ம் புலிகேசி ஆக எவ்வளவு சிரமப்பட்டு சிந்திக்கிறீர்கள் என்று!

புலிகேசி: ஹூம் இப்போது 30 மட்டும்தான்... இது மீண்டும் 50 ஆகக் கூட மாறும்.
(மன்னர் சென்று விடுகிறார்.)

அமைச்சர்: அய்யோ...அய்யோ.... இவர் இதுவரை 23 சிம்மாசனங்களை உடைத்ததால், தான் மக்கள் 23ம் புலிகேசி என்றார்கள்.... இனி இன்னமும் ஏழு சிம்மாசனங்களை தயாரிக்க சொல்ல வேண்டும்.

.- சுமஜ்லா.////

எல்லாம் செம்ம காமடி! அப்புறம் நான் ஓரிரு கவிதைகள் வாசித்து அப்ளாஸ் வாங்கினேன். எல்லாரும் அவரவர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

டெஸ்ட், அசைன்மெண்ட் என்னும் ஹீட் குறைந்து மனதுக்கு இதமாக இருந்தது! அடுத்த புதன் முதல் டீச்சிங் ப்ராக்டிஸ் என்கிறார்கள். சி.ஓ. ஆர்டர் தந்து விட்டால், போய் விடுவோம். இல்லாவிட்டால், இன்னமும் ஒரு பதினைந்து நாட்கள் ஆகும்! அப்படி போக வில்லை என்றால், யூனிட் டெஸ்ட் ஆரம்பித்து விடும்.

வகுப்புக்கு நான் தான் லீடராக இருந்தேன். பிறகு என்னால், முடியவில்லை என்று (ஓய்வு நேரத்தில் படிக்க முடிவதில்லை) வேறு ஆள் போட சொல்லி விட்டேன். எல்லாம் ஜாலியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலர் மட்டும்(லெக்சரர் உட்பட) தம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, என் திறமையின் மேல் பொறாமை கொண்டு என்னை துச்சமாக மதிப்பதைத் தான் என்னால் ஜீரணிக்க முடிவதில்லை! உலகத்தை புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பு எனக்கு! அந்த மன உளைச்சல் காரணமாகவும், எம்.ஏ.எக்ஸாம்ஸுக்கு(டிசம்பரில் எக்ஸாம்) படிப்பதற்காகவும் தான் மூன்று நாட்கள் லீவு போட்டிருக்கிறேன்.

கடைசியாக, எங்கள் மேடம் சொன்னது, “சுஹைனா...உங்களுக்கு வகுப்பு தோழிகளை விட இண்டர்நெட் ஃப்ரெண்ட்ஸ் தான் ரொம்ப பிடிக்கிறது...” இதை அவர் ஒரு குறையாத் தான் சொன்னார். ‘ஆமாம்...அதில் என்ன தவறிருக்கிறது? அது தன்னலம் பாராத நட்பு!’ என்றேன். சரி தானே?!

-சுமஜ்லா.

35 comments:

  1. அடிக்கடி டெஸ்ட் வேற! இறைவன் கிருபையால், இது வரை வைத்த எல்லா டெஸ்ட்டிலும், நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண்.//

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. உங்கள் திறமைகள் அபாரம்!!

    ReplyDelete
  3. சுமஜ்லா அருமையான பதிவு படிக்க, படிக்க அத்தனை சுவராஸ்யமாக எழுதி இருக்கீங்க

    // ‘ஆமாம்...அதில் என்ன தவறிருக்கிறது? அது தன்னலம் பாராத நட்பு!’ என்றேன். சரி தானே?! //

    நிச்சயமா தோழி

    ReplyDelete
  4. //பக்ரீத்தை முன்னிட்டு போன செவ்வாய் கிழமை எல்லா ஸ்டாஃப்ஸுக்கும் பிரியாணி செய்து, காலேஜ் கொண்டு சென்று, மதிய விருந்து கொடுத்தேன்.//


    அப்போ எனக்கு
    பிரியாணி இல்லையா அக்கா ?

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லா எஞ்சாய் பண்ணுங்க!

    ReplyDelete
  6. அக்கா காலேஜ் லைஃப் செம ஜாலியா போகுதுபோல. இறைவனின் துணையுடன் அனைத்தும் நன்மையாகவே நடக்கட்டும்..

    ReplyDelete
  7. //இவள் நம்மை விட அதிகம் தெரிந்திருக்கிறாள் என்று லெக்சரர்களே சில சமயம் ஃபீல் பண்ணுவது தான் கஷ்டமாக இருக்கிறது.//
    ஃபீல் பண்ண வேண்டிய விஷயமா இது, பெருமை பட வேண்டாமா???

    உலகத்தை புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பு எனக்கு! உண்மைதான்...அக்கா...
    30-ம் புலிகேசி அரசிக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. சுஹைனா அனுபவத்தை அப்ப அப்ப அப்டேட் செய்யுங்கள்,கற்கும் காலம் ஒரு பொற்காலம்.

    ReplyDelete
  9. நன்றி தேவன்மாயம் & கருவாச்சி!

    அய்யோ கிருஷ்ணா, எங்க காலேஜ் பக்கம் வாங்களேன், பிரியாணியோடு, அழகான பெண்களையும் அறிமுகம் செய்கிறேன்...

    ஆமாம் அருணா, ஒவ்வொரு கணத்தையும் ரசித்து தான் அனுபவித்து வருகிறேன்.

    மலிக்கா...ஜாலி என்பது நாமா கிரியேட் செய்வது தானே?!

    சீமான்கனி, யார் பெரியவர் என்ற ஈகோ எல்லா இடத்திலும் இருக்கே?! ஸ்கூலில் என்றால், மாணவர்களின் திறமை கண்டு ஆசிரியர்கள் பெருமை படுவார்கள்...காரணம் நம் உழைப்பால் இவனை உருவாக்கி இருக்கிறோம் என்ற பெருமிதம்...ஆனால், இங்கு காலேஜில் பார்த்தால், இது ஷார்ட் டேர்ம் கோர்ஸ்...அதில் நம்மை விட இவ அதிகமா தெரிஞ்சு வெச்சிருக்கிறா என்பது சிலரால் ஜீரணிக்க முடிவதில்லை...

    ஆசியா அக்கா...நீங்கள் சொல்வது சரிதான்! 1993ல் ஸ்கூல் விட்டு வெளியேறிய பின், இப்போதானே எனக்கு சான்ஸ்...மிஸ் பண்ணுவேனா?

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகளை படிச்சுகிட்டு இருக்கேன்

    உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது
    நிறைய உள்ளது அக்கா

    ReplyDelete
  11. //எல்லா டெஸ்ட்டிலும், நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண்.//

    வாழ்த்துக்கள் !!!

    //ஆனால், ஒரு சிலர் மட்டும்(லெக்சரர் உட்பட) தம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையின் காரணமாக//
    இதை உங்க லெக்சரர் படித்தால் என்ன ஆகும். :(((

    ReplyDelete
  12. //எங்க காலேஜ் பக்கம் வாங்களேன், பிரியாணியோடு, அழகான பெண்களையும் அறிமுகம் செய்கிறேன்...//

    ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா

    ReplyDelete
  13. எல்லாருக்கும் என்னுடைய ப்ளாக் பற்றி தெரியும்...ஆனால் யாரும் அதிகம் நெட்டில் லாக் ஆன் ஆவதில்லை! ஓரிருவர் மேட்ரிமோனியல் பார்க்க அவ்வப்போது நெட் வருவதாக சொன்னார்கள்.

    அப்படியே படித்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். நான் எழுதியது முற்றிலும் உண்மை! எந்த, எந்த விதத்தில் பாதிக்கப்பட்டேன் என்பதை அழகாக விளக்கி விடுவேன்...யார் தவறு செய்தாலும், தைரியமாக சுட்டிக் காட்டி விடுவதால், என்னிடம் எல்லாரும் கொஞ்சம் உஷாராகவே இருப்பார்கள்.

    இன்னொரு விஷயம், எதுவாக இருந்தாலும் நான் ப்ளாகில் போட்டு விடுவேன் என்ற பயம் எல்லாருக்கும் கொஞ்சம் இருக்கிறது! ஒரு நாள் என் லெக்சரர் ஒருவர், தன்னைப் பற்றி ஒரு பாடல் எழுதித் தர கேட்டு விட்டு, பின் வேண்டாம் என்று கூறி விட்டார்...காரணம் கேட்டதற்கு, நீங்கள் ப்ளாகில் போடுவீர்கள் அதான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்றார். அவ்வளவு பயம் இருக்கும் போது, உண்மையை எழுத நான் ஏன் தயங்க வேண்டும்...????

    ReplyDelete
  14. //ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா//

    அழகான பெண்கள் என்று சும்மாவாச்சும் உடான்ஸ் தான்... பாதி பேர் அரைக் கிழவிகள்...:)))

    ReplyDelete
  15. // அழகான பெண்கள் என்று சும்மாவாச்சும் உடான்ஸ் தான்... பாதி பேர் அரைக் கிழவிகள்...:))) //

    ஐயோ அந்த காலேஜ் பக்கமே வரமாடோம்ல

    ReplyDelete
  16. அனுபவ பதிவு அழகாய் மிக மிக அழகாய் இருக்கிறது .

    ReplyDelete
  17. /*நான் முதல் பெஞ்ச்!*/
    /*8.45க்கு கிளம்பினால், 9.25க்கு காலேஜ் போய் சேர்வேன். 9.45க்கு பெல்!*/
    /*நிறைய அசைன்மெண்ட் தருகிறார்கள். நான் எல்லாம் முதல் ஆளாக முடித்து விடுவதால் பிரச்சினை இல்லை*/
    /*இது வரை வைத்த எல்லா டெஸ்ட்டிலும், நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண்.*/

    அக்கா...உங்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.....

    ReplyDelete
  18. கல்வி சொல்லிகொடுக்கும் இடத்தில என்ன யார் பெரியவர் என்ற ஈகோ...கற்றது கையளவு கல்லாதது உலகளவு இல்லையா??? எப்படி இவர்கள் லெக்சரர் ஆனார்கள்..??
    அவர்களை கொஞ்சம் ஏன் பக்கத்து வீட்டு குட்டி பாபாவின் கேள்விக்கு பதில்.. சொல்லசொல்லுங்கள் பார்ப்போம்...
    1,அண்ணா தப்பு பண்றவங்கள சாமி கன்னகுதும்னு அம்மா சொன்னங்க அப்போ தீவிரவாதிகலபாத்த சாமிக்கு பயமா??
    2, குட்டி பசங்கலகூட அவங்களுக்கு பிடிக்காதா??
    3,எதுக்கு பாம் போடுறாங்க??
    4,மிலிடரி டிரஸ் போட்டு இருக்கங்களே அவங்க நாட்ட காபாதுரவங்க தானே அண்ணா,அனால் அவங்க ஏன் மக்களை சுடுறாங்க???

    ReplyDelete
  19. மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டேன்....

    ReplyDelete
  20. //‘ஆமாம்...அதில் என்ன தவறிருக்கிறது? அது தன்னலம் பாராத நட்பு!’ என்றேன். சரி தானே?!//

    மிகச்சரி. :)

    ReplyDelete
  21. உண்மை தான்

    இங்கு தன்னலம் பாராத நட்புகள் நன்றாகவே கிடைக்கின்றன.

    ReplyDelete
  22. //ஐயோ அந்த காலேஜ் பக்கமே வரமாடோம்ல//

    கருவாச்சி கவனிக்கவும், பாதி பேர் என்று தான் சொன்னேன்...பெர்னார்ட்ஷா சொன்னது போல...

    ReplyDelete
  23. பாராட்டுக்கு நன்றி நிலாமதி!

    ராம்...நீங்க தான் ஒரிஜினல் காலேஜ் பாய்! நாங்க எல்லாம் வேஸ்ட்!

    ReplyDelete
  24. சீமான்கனி, அருமையான கேள்விகள்!

    லெக்சரர்களும் மனிதர்கள் தானே???அதனால் தான் சரி சரி என்று நான் போய் விடுகிறேன்...பொதுவாக என்னை வகுப்பில் பேச வாய்ப்பு தருவதில்லை...! சில சமயம் இது இன்சல்டிங் ஆக இருந்தாலும், சில சமயம் நான் எதிர்பார்க்காமல் விட்டு விடுகிறேன்...சரி, இன்னும் நாலு பேர் தம் திறமையை வளர்த்துக் கொள்ளட்டுமே என்று நினைத்து!

    ஆனால், யாருக்கும் சொல்ல தெரியவில்லை என்றால், கடைசியாக அந்த வாய்ப்பு எனக்கு வரும்...இது போன்ற சந்தர்ப்பங்கள் அதிகம்!

    சரி விடுங்கள்...ஏதோ என் ஆதங்கங்களைக் கொட்டி விட்டேன்...எல்லாவற்றையும் பாசிடிவ்வாக எடுத்துக் கொள்வோம்!

    ReplyDelete
  25. பீர், ஜமால்...உண்மையில் நான் எழுத நினைத்தது, பிரதிபலன் எதிர்பார்க்காத நட்பு என்று தான்!!!

    இரண்டுமே சரி தான்...பாருங்கள்...இந்த ஒரு மாதமாக என் பிஸி செட்யூல் காரணமாக என் நண்பர்களின் ப்ளாகுகளை படிக்கக் கூட நேரமில்லை...! படித்தால் தானே பின்னூட்டமிட!!! இருந்தாலும், நான் பதிவிட்டால், கருத்து சொல்லவும், வாழ்த்து சொல்லவும் நாலு பேர் உடனே வருகிறார்கள்...! இந்த நட்பை வேறு என்னவென்று சொல்வது?????

    ReplyDelete
  26. இரண்டு நாளா நெட் பக்கம் வரமுடியல ரொம்ப பிஸி தினம் பார்ப்பேன் ஏதாவது பதிவு போட்டீர்களா என்று ஓ அதற்குள் நிறைய பதிவு போட்டுவிட்டீர்கள் போல‌


    //என் திறமையின் மேல் பொறாமை கொண்டு என்னை துச்சமாக மதிப்பதைத் தான் என்னால் ஜீரணிக்க முடிவதில்லை//

    இது அங்கென்றில்லை, எல்லா இடத்திலும் நடப்பது தான், கள்ள வேஷம் போடும் மக்களை பற்றி புரிந்து கொள்ளலாம்.


    காலேஜ் லைஃப் ரொம்ப‌ சூப்ப‌ரா என்ஞாய் பண்றீங்க‌ளா?

    ம்ம் ந‌ட‌க்க‌ட்டும் ந‌ட‌க்கட்டும்.

    உங்கள் புலிகேசி பதிவு சூப்பர்.
    ரொம்ப‌ வே சிரிப்பு,

    ReplyDelete
  27. //பக்ரீத்தை முன்னிட்டு போன செவ்வாய் கிழமை எல்லா ஸ்டாஃப்ஸுக்கும் பிரியாணி செய்து, காலேஜ் கொண்டு சென்று, மதிய விருந்து கொடுத்தேன்.//

    I appriciate you very much for your hospitality, suhaina.

    ReplyDelete
  28. கல்லூரி வாழ்க்கையே தனிதான்.அதை நன்றாக அனுபவிங்க சுகைனா!!.

    எங்களுக்கெல்லாம் பிரியாணி இல்லையா?

    புலிகேசி பதிவு செம காமெடி!!

    ReplyDelete
  29. எங்க அக்காவுக்கு ஈத் முபாரக்
    சிராஜ்
    கத்தார்

    ReplyDelete
  30. நன்றி, பாத்திமா ஜொஹ்ரா, மேனகா & சிராஜ்!

    எல்லாருக்கும் ஈத் முபாரக்!

    மேனகா, சமையல் ராணி உங்களுக்கு இல்லாமலா...வாருங்கள் எங்கள் வீட்டுக்கு! பிரியாணி என்ன பஃப்ஃபே விருந்தே ரெடி செய்து விடுகிறேன்!

    ReplyDelete
  31. சுகைனா !!! போன வருஷத்தில் இருந்து திரும்பி பாருங்க ... You have come a long way. The key to success is to measure our progress with our own indicators. I wish upon you to reflect that in day today life. You are an example for many people in many ways. No one can be perfect in our lifetime. I hope you enjoy your journey every single day. As a women who has gone through ups and downs in career one humble word is "never" be in a position to make others jealous. it has bitten me so hard i know the place where and how to shine. I hope you take this message in a positive manner . As a women I have the obligation to tell about the perils ahead. I am sure this is not new for you. Good luck !!!!

    ReplyDelete
  32. Hey Anani,

    Unless you tell me who you are, i cannot consider what you say! I dont pay heed to the cowards who hide their names! I will me myself and I cannot or neednot change for anybody! If others are jealous of me or pity of me or afraid of me or love me, will not change my life and attitude a single bit! Try to make a self-analysis before advicing anybody!

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.