Thursday, November 19, 2009

கவி தோன்றும் நேரம்


ஆழ்மனதில் கவி தோன்றும் நேரம்
ஆனந்தம் கூத்தாடும் காலம்
வானத்தில் மிதக்கின்ற மேகம்
போல் பஞ்சாய் லேசான தேகம்!

காதல் தீ கங்கான திப்போ,
நீர் ஊற்றி நீ அணைத்தால் தப்போ?!
மாதவளை மயக்குவதும் எப்போ,
மனம் வென்ற ஜெயத்தால் பூ ரிப்போ??!

கண்ணிரண்டும் கனவோடு பேசும்
கால் கொலுசை நீ தீண்ட கூசும்!
மனம் தொட்ட மச்சானின் நேசம்,
மலர்தோட்டம் போல் வாசம் வீசும்!!

உணர்வெல்லாம் மெழுகாக உருகும்,
உதவாமல் பழுதாகி மருகும்!
பெண்மனது உன் நினைவால் கருகும்,
பொன்வண்டு பூந்தேனைப் பருகும்!!!

3 comments:

  1. //உணர்வெல்லாம் மெழுகாக உருகும்,
    உதவாமல் பழுதாகி மருகும்!
    பெண்மனது உன் நினைவால் கருகும்,
    பொன்வண்டு பூந்தேனைப் பருகும்!!!//
    ரசித்த வரிகள்....அருமை...
    அக்கா இது எப்போ எழுதியது சொல்லவே இல்லையே???

    ReplyDelete
  2. நன்றி சீமான்கனி!

    இது சமீபத்தில் தான் ஓரிரு மாதங்களுக்கு முன்பு எழுதியது!

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.