Friday, September 4, 2009

உங்க ப்ளாக் பேர் என்னங்க?

சில ப்ளாகின் பெயர்கள் பச்சக் என்று மனதில் வந்து ஒட்டி கொள்கிறது. சிலது ரொம்பவும் சண்டிதனம் செய்கிறது. சிலதோ, நினைவில் இருந்தாலும், ஸ்பெல்லிங் மறந்து விடுகிறது. பொறுமையா இந்த இடுகையை படிச்சு பாருங்க.

ஃபாலோ பண்ணினா கண்டிப்பா மறக்க மாட்டோம், மறந்தாலும் எடுத்துக்கலாம். ஆனா, எனக்கு சில சமயம் ரீடரை ஓப்பன் செய்ய சோம்பலாக இருக்கும். ரீடரில் படித்தால் ஈஸி தான், ஆனா, நல்ல இடுகைக்கு பின்னூட்டம் இட, நாம அவங்க ப்ளாகுக்கு தான் போகணும்.அதனால், நேரடியாவே போயிடுவேன்.

இதுல ஒரு சின்ன பிரச்சினை என்னன்னா, பின்னூட்டத்துக்கு ப்ளாக் ஆத்தர் தரும் பதில்! பலரும் ரொம்ப சின்சியரா பதில் தருவாங்க; ஒரு சிலர், மொத்தமாக சேர்த்து ஒரே பதில், நான் கூட சில சமயம் அப்படித்தான். ஒரு சிலர் பதிலே தர மாட்டாங்க. இதெல்லாம் பிரச்சினை இல்லை. ஆனா, பின்னூட்டம் இட்ட எத்துணை பேர்,மீண்டும் வந்து, ஆத்தர் அதுக்கு பதில் தந்திருக்காரானு பார்க்கிறாங்க???

நான் சில சமயம் பார்ப்பேன், பல சமயம் பார்ப்பதில்லை - பார்க்க ஆசை தான், ஆனா ப்ளாக் பேர் மறந்து போயிரும். ஃபாலோ அப் மெயில் கூட செட் பண்ணிக்கலாம். அப்படி கொடுத்தா, அது, நம்ம ப்ளாக் உடைய ஈமெயிலுக்கு தான் வரும். நான் அந்த மெயிலை ஓப்பன் செய்வதே இல்லை. ஏனா, அது ப்ளாகுக்காகவே பிரத்யோகமா வெச்சிருக்கற ஐடி, மற்றபடி ஜிடாக் எல்லாம் வேற ஐடியில...

(கீழே நான் தந்திருக்கும் எல்லா ப்ளாக் முகவரிகளும் தனி விண்டோவில் திறக்கும்)

சிலர் ப்ளாக் பேரிலேயே ப்ரொஃபைல் பேரும் வெச்சிருப்பாங்க. அப்ப, எனக்கு அவங்க ப்ளாக பார்ப்பது ஈஸியா இருக்கும். முன்னாடி ஷஃபி கூட http://www.shafiblogshere.blogspot.com/ நு அவர் ப்ளாக் பேரிலேயே, shafiblogshere அப்படினு பேர் வெச்சிருந்தார். சீக்கிரமா அது எனக்கு மனதில் பதிந்து விட்டது. ஆனா, இப்ப மாத்திட்டார்.

வேற பேர் வெச்சிருக்கவங்க ப்ளாகுக்கு போக, ப்ரொஃபைல் பார்க்கணும். அதுல நாலைந்து ப்ளாக் போட்டிருக்கும். எது மெயின் ப்ளாகுன்னு ஒவ்வொன்னா ஓப்பன் செய்து பார்க்கணும். நான், இதுவரை, டெம்ப்ளேட் உருவாக்கம் போன்ற பல காரணங்களுக்காக நாமகரணம் சூட்டி வெச்சிருக்கற ப்ளாக் எண்ணிக்கை மொத்தம் 39. மொத்தத்தையும் என் ப்ரொஃபைலில் போட்டு வைத்தால், தலை சுத்தி போய், யாருமே என் ப்ளாகுக்கு வர மாட்டாங்க.

www.itsjamaal.com/, www.giriblog.com/ இப்படி ஷார்ட் பேர் மனசுல ஈஸியா பதிஞ்சிருது. ஆனா, சமீபத்தில், ப்ளாக் தொடங்கிய நிஜாம் அண்ணாவோட ப்ளாக், http://nizampakkam.blogspot.com/ இதுல, nizam க்கு z ஆ, j ஆ, pakkam என்பதற்கு ஒரு k வா ரெண்டு k வா அடிக்கடி குழப்பம் வருது.

நேத்து லதானந்த் சார், பின்னூட்டம் போட்டுட்டு போயிருந்தார், அவர் ப்ளாக் அட்ரஸ் தெரியும். ஆனா, இதே மாதிரி ஸ்பெல்லிங் குழப்பம். t போடற இடத்துல d போட்டு தேட, இனி, பிரவுசிங் ஹிஸ்டரியில், ஒவ்வொரு முறையும் தப்பான அட்ரஸ் வந்து எரிச்சல் படுத்தும்.

தம்பி சீமான் கனியோட ப்ளாகுக்கு seemangani.blogspot.com னு அன்னிக்கு போட்டு பார்க்க வரல. அப்புறம் ப்ரொஃபைல் பார்த்து, http://www.ganifriends.blogspot.com/ என்ற சரியான முகவரி கண்டு பிடித்தேன்.

ஆனா, இது எல்லாத்தையும் விட, என்னை அடிக்கடி தலை சுத்த வைக்கிற மெகா ஹிட் ப்ராஜக்ட் ஒன்னு இருக்குது, அது தான் சீரடி சாய்தாசனோட, http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/ அநேகமா தமிழ் பதிவுலகில் நீண்ட பேர் உடைய ப்ளாகின் சொந்தகாரர் இவராதான் இருக்கும். ஆனா, நல்ல பயனுள்ள தொழில்நுட்ப இடுகைகள்.

ப்ளாகின் பெயரும், நம் பெயரும் ஒன்றாக இருப்பதால், இந்த மாதிரி பிரச்சினை இல்லை. அதுக்கு தான் நான் ஆரம்பித்திலிருந்தே sumazla னு ப்ரொஃபைல் பேர்ல, ப்ளாக்ல ரெண்டுலயும் போட்டுட்டு வந்தேன். அதிலும் ஒரு நாள் பாருங்க, ஒருத்தர், சுமாஷ்லா அப்படீனு தமிழ்படுத்தி இருந்தார். அப்புறம் என்னடா இது வம்புனு, ரெண்டு மொழியிலயும் போட ஆரம்பித்தேன்.

ஜலீலா அக்காவும், நிறைய நிறைய ப்ளாக்ஸ் வெச்சிருந்தாங்க. அதுல சிலதுல ஹைஃபன் வேற வரும். என்னால் ஞாபகம் வெச்சிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது, ஒரு நாள், நானே கேட்டு வாங்கி, எல்லாத்தையும் ஒன்னா இணைச்சு கொடுத்திட்டேன். அதுக்கு நானே, http://allinalljaleela.blogspot.com/ அப்படீனு பேரும் வெச்சேன். அக்காவுக்கு ரொம்ப சந்தோஷம்.

கிருஷ்ணாவும் அப்படித்தான். தன் பேருக்கும் ஊருக்கும் சம்பந்தமே இல்லாம, http://saidapet2009.blogspot.com/ னு வெச்சிருக்கார். ஒவ்வொரு முறையும் ப்ரொஃபைல் பார்த்து தான் போவேன்.

நண்பர் நவாஸுதீனோட ப்ளாக் பேர், http://syednavas.blogspot.com இது கூட ஒன்றிரண்டு தடவையில் மனசுல பதிஞ்சிருச்சு. ஆனா, அவரோட ப்ரொஃபைலில ரெண்டு மனவிலாசம் வெச்சிருப்பாரு, எது ஒரிஜினல் மனவிலாசம்னு குழப்பம் வரும். மனவிலாசம்1, மனவிலாசம்2 அப்படீனு வெச்சா, புண்ணியமா போகும்.

அதே மாதிரி முத்துலட்சுமியின் ப்ளாக் சிறுமுயற்சி, அதுக்கு c வருமா, s வருமா அப்படீனு சில சமயம் குழப்பமாயிரும். http://sashiga.blogspot.com/ , http://abiappa.blogspot.com/ , http://tvs50.blogspot.com/ , http://valpaiyan.blogpspot.com/ இதெல்லாம் ரொம்ப ஈஸி ரகம். மறப்பதே இல்லை. ஏனோ, http://jaihindpuram.blogspot.com/ கூட நான் மறப்பதில்லை.

http://tamiluzhavan.blogspot.com/, http://gunathamizh.blogspot.com/ , http://ezhuthoosai.blogspot.com/ எல்லாம் ஸ்பெல்லிங் குழப்ப ரகம். என் தம்பிக்கு ஒரு சைட் நான் உருவாக்கும் போது, http://www.majesticcircle.com/ என்பதை சஜ்ஜஸ்ட் செய்தேன். அவன் வேணாம் ரெண்டு C ஒன்னா வந்தா, குழப்பம் வரும் என்று சொல்லி விட்டான். பிறகு, தான் J கிடைக்காமல், http://www.magesticpoint.com/ என்று பெயர் வைத்தேன்.

peacetrain என்னும் நண்பர், http://peacetrain1.blogspot.com/ என்று வைத்திருக்கிறார். சமயத்தில் இந்த 1 போடாமல் நான் தேடி தோற்றதுண்டு. http://vadakaraivelan.blogspot.com/ என்ற பெயர் சற்று பெரிதாக இருந்தாலும், எனக்கு ஒரு போதும் பெயர் குழப்பம் வந்ததில்லை. இதில், d, th குழப்பமோ, ரிப்பிடிஷனோ இல்லாதது தான் காரணம்.

நான் பொதுவாக, யாராவது என் பின்னூட்டத்தில் லின்க் தந்தால், உடனே சென்று பார்ப்பேன், நன்றாக இருந்தால், பின்னூட்டமும் இட்டு வருவேன். ஆனா, மீண்டும் போவேனா தெரியாது.

ஒரு சிலர் எனக்கு தமிழிஷ்ல ஓட்டு போடறவங்க, அவங்க ப்ளாக் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, அவங்க தமிழிஷ் ப்ரொஃபைலில் அவங்க ப்ளாக் பேர் இருக்காது. அதோட, அங்க வேற மாதிரி பேர் வெச்சிக்கிறாங்க.

இன்னும் நிறைய நண்பர்களின் ப்ளாகுகள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா, கட்டுரை ரொம்ப பெரிசா போவுது.

கஷ்டமான பேர் வெச்சிருக்கவங்க, ப்ரொஃபைல் பெயரும் அதே மாதிரி வெச்சுக்கிட்டா, என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு ஈஸியா இருக்கும்!

சிலர், நல்ல பெயர் கிடைக்காமல் அல்ல பெயர் சூட்டி விடுகிறார்கள். ஆனால், சற்று கற்பனை திறனோடு, மூளையை கசக்கினால், எளிய பெயர் கிடைக்கும். கிடைக்காதவர்கள், இலவச ஐடியாவுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.

என் இடுகை முற்றிலும் என் சொந்த கருத்து தான்.

-சுமஜ்லா.
.

47 comments:

  1. instead of all these complexities, we could do follow their blogs. google reader is simple than these steps

    ReplyDelete
  2. google reader wont say, for which blogs we have commented, and what reply they gave for us...

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..

    சில பேர் ரொம்ப பெரிய பெயர் வைத்து இருக்காங்க. இந்த நடைமுறை சிக்கல்களை மனதில் வைத்தே என் தள பெயரை எளிதில் மனதில் வைக்கவும் விரைவாக அடிக்கவும் (ஒரு சிலர் நீண்ட பெயர் இருந்தால் அதற்காகவே சோம்பேறித்தனப்பட்டு வரமாட்டார்கள்) சிறிய பெயராக வைத்தேன்.

    உங்கள் தள பெயர் கூட முதலில் sumajla வா அல்லது sumazla வா என்று குழம்பியதுண்டு

    //நிறைய நண்பர்களின் ப்ளாகுகள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா, கட்டுரை ரொம்ப பெரிசா போவுது.//

    :-)

    ReplyDelete
  4. இந்த குழப்பத்துக்காகத்தான் நான் ப்ரொஃபைலில் இரண்டு மொழியும் போட்டிருப்பேன்.

    ReplyDelete
  5. அக்கா,உங்க பிளாக் பார்த்தேன்,நன்றாக இருக்கு.இப்போதுதான்,நான் இதை உண்டாக்கினேன்,எப்படி இருக்கு உங்க கருத்து சொல்லுங்க.பெயர் சரியா.இன்னுமேழுத ஆசை.

    ReplyDelete
  6. எனக்கும் பின்னூட்டமிட்டவுடன் அதற்கு அந்த பதிவர் தந்திருக்கும் பதிலைப் பார்க்க மிகவும் ஆவலாய் இருக்கும்.பாருங்களேன் இந்தப் பின்னூட்டத்திற்கும் நீங்கள் என்ன பதில் தந்திருக்கிறீர்கள் எனப் பார்க்க வருவேன்!.....

    ReplyDelete
  7. பாத்திமா ரோஜா, உங்க ப்ளாகில் கருத்து தந்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. //பாருங்களேன் இந்தப் பின்னூட்டத்திற்கும் நீங்கள் என்ன பதில் தந்திருக்கிறீர்கள் எனப் பார்க்க வருவேன்!.....//

    படுபுத்திசாலி நீங்க.........:)

    ReplyDelete
  9. தொடர்ந்து படிக்க வேண்டிய பதிவுகளில் சிலவற்றை ரீடரிலும், சிலவற்றை ஃபாலோ செய்தும், சிலதை favouritesலும் வைத்துப் படிப்பேன். பின்னூட்டங்களின் தொடர்ச்சி தெரிய வேண்டுமானால், follow-up comments அஞ்சல் பெட்டிக்கு வரும்படி செய்வதுதான் எளிய வழி :)

    ReplyDelete
  10. ஜ்யோவ்ராம்சார், தங்கள் கருத்துக்கு நன்றி!

    உங்கள் பெயரும், ப்ளாக் பெயரும் வித்தியாசமாக, யுனீக்காக இருப்பதால், கொஞ்சம் ஈஸி ரகம் தான்.

    ReplyDelete
  11. ப்ளாக் அட்ரசை மாத்தமுடியுமான்னு தெரியல .முடிஞ்சா நானும் அட்ரசை சுருக்கிடலாம்னுதான் இருக்கேன்.

    ReplyDelete
  12. எப்படியெல்லாமோ சிந்திக்கிறீங்க

    அருமை அலசல்.

    ReplyDelete
  13. எப்படியெல்லாமோ சிந்திக்கிறீங்க

    அருமை அலசல்.

    ReplyDelete
  14. //ஸ்ரீ said...
    ப்ளாக் அட்ரசை மாத்தமுடியுமான்னு தெரியல .முடிஞ்சா நானும் அட்ரசை சுருக்கிடலாம்னுதான் இருக்கேன். //
    Blogger முகவரிகளை மாற்றலாம்...

    ReplyDelete
  15. நல்ல கருத்து அக்கா...என் அட்ரசை மாத்தனுமா ???முடயுமா??
    அனல் எனக்கு என்னவோ ganifriends.ஒ. கே னு தோனுது....
    உங்கள் ஆலோசனை சொல்லுங்க அக்கா...நன்றி...

    ReplyDelete
  16. ப்ளாகின் முகவரி மாற்றலாம். அது பற்றிய என் இடுகை இங்கே: http://sumazla.blogspot.com/2009/07/blog-post_08.html

    ஆனால், ஓரளவுக்கு நம்ம ப்ளாக் பிரபலமாகிவிட்டால், மாற்றாமல் இருப்பது நல்லது. அப்படி மாற்றினால், பழைய பெயரில் ஒரு ப்ளாக் புதிதாக உருவாக்கி, அதில், சிறிய ஒரு பதிவின் மூலம், பழைய வாசகர்களுக்கு புது முகவரி பற்றி அறிவித்து, ரீ டைரக்‌ஷன் செய்யலாம்.

    சீமான்கனி, நீங்க மாற்ற வேண்டாம். இதுவே ஓக்கே தான்.

    ReplyDelete
  17. அடடா, இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கிறது தெரியாமல் போய்விட்டதே. இடுகைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் போவதுண்டு, ஆனால் சிலநேரங்களில் பின்னூட்டம் இட்ட இடுகையைத் திரும்பிப் படிக்க வலைத்தளம் செல்லவேண்டுமெனில் பெயர் நினைவில் இருந்தால் நன்றாக இருக்கும்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. என் ப்ளாக் கண்டுபிடிக்க ரொம்ப ஈஸின்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி!

    ஆனா பாருங்க என் பெயரில் இன்னும் ரெண்டு ப்ளாக் இருக்கு!

    ஒன்னு தெரியாம பண்ணது, இன்னொனு வேணுமின்னே பண்ணது!

    ReplyDelete
  19. நான் இதுவரை எந்த ப்ளாகிற்கும் அட்ரஸ் பாரில் முகவரி அடித்து சென்றதில்லை. ஏதாவதொரு லிங்க் தான். பெரும்பாலும் ரீடர். நல்ல பதிவா இருந்தா,
    பின்னூட்டம் கூட ரீடர் வழியாதான் போய்தான் போடுவேன். தேவையான பின்னூட்டங்களுக்கு Follow up போட்டிருப்பேன்.

    திரட்டிகள் பக்கம் கூட எப்பவாவது தான் தலைகாட்டுவது.

    ReplyDelete
  20. இதெல்லாம் ரொம்ப ஈஸி ரகம். மறப்பதே இல்லை.

    shiyamtamil.blogspot.com

    its very ஈஸி

    ReplyDelete
  21. என்னோட ப்லோக் பேரு
    www.nilakkalam.blogspot.com

    ReplyDelete
  22. வாலு, இதுக்கெல்லாம் தேங்க்ஸா? நான் மனதில் பட்டதை சொன்னேன், அவ்வளவு தான்.

    ReplyDelete
  23. பீர்,

    நானும் திரட்டிகளுக்கு அதிகம் போவதில்லை, எப்பவாவது தான். வாரம் ஒரு முறை ரீடரில் படிப்பேன். ஆனா, அப்போ யாருக்கும் பின்னூட்டம் இட மாட்டேன். தனியா தான் போவேன்.

    ReplyDelete
  24. //இதெல்லாம் ரொம்ப ஈஸி ரகம். மறப்பதே இல்லை.

    shiyamtamil.blogspot.com

    its very ஈஸி//

    இது சைக்காலஜிக்கல் அப்ரோச்! ரொம்ப புத்திசாலி நீங்க!

    ReplyDelete
  25. சங்கர்ராம், kaalamக்கு ஒரு a வா, ரெண்டு a வானு சில சமயம் குழம்பும்.

    ReplyDelete
  26. ஒரு நாளைக்கு ஒரு ப்லோக் எழுதுவதே ரொம்ப கஷ்டமா இருக்கு... நீங்கஎழுதுறதோடல்லாம பின்னூட்டம் போடுறவங்களுக்கு பதிலும் எழுதிடுறீங்களே... உங்களை நிச்சயம் பாராட்டணும்...

    ReplyDelete
  27. //நீங்கஎழுதுறதோடல்லாம பின்னூட்டம் போடுறவங்களுக்கு பதிலும் எழுதிடுறீங்களே... உங்களை நிச்சயம் பாராட்டணும்...//

    ஒரு சிலரெல்லாம், செடிக்கு உரமிட்டு வளர்ப்பது போல பின்னூட்டம் வளர்ப்பார்கள். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். நானெல்லாம் ரொம்ப ரொம்ப கம்மிங்க!

    என்னமோ, லீவ் நாள்ள மட்டும், இப்படி, மற்றபடி, சந்தேகம்னா பதில் தருவேன், இல்லாட்டி, பொதுவா ஒரு நன்றியோட சரி!

    ReplyDelete
  28. அதுக்குத்தான் என் வலைப்பூவிற்க்கு ஷார்ட்கட் http://menporul.co.cc/
    போட்டுட்டேன். தற்காலிக முகவரிதான்.
    நண்பர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  29. எப்படிலாம் சிந்திக்கிறீங்க,நல்ல அலசல் சுகைனா.

    ReplyDelete
  30. சுஹைனா ஓவ்வொரு பிளாக் பற்றியும் நச் தகவல் , இவ்வள‌வு பிஸியிலும் உட‌னே ப‌திவு போட்டு விட்டீர்க‌ள். நான் குறிப்பு நிற‌ய‌ வைத்து கொன்டு போட‌ நேர‌ம் கிடைக்க‌ல‌.
    இந்த‌ ஐடி வைத்த‌தும் இப்ப‌ என‌க்கு ரொம்ப‌ ஈசியாக‌ இருக்கு.

    ந‌ன்றி சொன‌னால் சொல்லி கொண்டே போக‌னும் அத‌ற்கு முடிவு கிடையாது.


    எனக்கு சில பேருடைய பிலாக் கிளிக் செய்து அவர்களுக்கு பின்னூட்டம் கொடுக்க போன எது அவர்களுடையதுன்னு தெரியாமலே நிரைய விட்டு போய் விட்டது.

    ReplyDelete
  31. என் வலைப்பூவில் NIZAM என்பது
    பாப்புலரான பெயர்தான்.
    (நிஜாம் பாக்கு;
    ஹஜ்ரத் நிஜாமுத்தீன். (நீங்ககூட
    போய் வந்தீங்களே, டெல்லி
    அருகே!)

    அப்புறம் பக்கம் என்று 'க்', 'க'
    என்று ஈரெழுத்துக்கள் தமிழில்
    போடுகிறோமே, அதை மனதில்
    வைத்து இரண்டு K போட்டேன்.

    முதல் நாள் எனது பின்னூட்டத்திற்கு
    பதிவர் தரும் பதில் என்ன என்று
    மறுநாள் போய் பார்த்து விடுவேன்.

    சுவையான அலசல்.

    ReplyDelete
  32. //சாய் சிர்டிதாசனோட//

    பேர் தப்பு.

    ஷீரடி சாய்தாசன்.

    இதுதான் சரி.

    ReplyDelete
  33. avvvvvv... sumazla, enna yen aatathuku sethukala indha psotla? :(((

    just kidding, blog post intro mattum theriya naan exacta engerndhu padichen nu ninaivu illa, span class = "fullpost" nu search pannunga ekachaka links varum. quite simple :)

    ReplyDelete
  34. //நான் பொதுவாக, யாராவது என் பின்னூட்டத்தில் லின்க் தந்தால், உடனே சென்று பார்ப்பேன், நன்றாக இருந்தால், பின்னூட்டமும் இட்டு வருவேன் //

    அடடா...என் பிளாக்கில் இதுவரை நீங்கள் பின்னூட்டமிடாததற்கு காரணம் நல்லா இல்லாததுதானா?? நானும் 2 வருஷமா நல்லா எழுததான் பாக்குறேன்.பட் முடியல. பச் :(

    ReplyDelete
  35. //நான் பொதுவாக, யாராவது என் பின்னூட்டத்தில் லின்க் தந்தால், உடனே சென்று பார்ப்பேன், நன்றாக இருந்தால், பின்னூட்டமும் இட்டு வருவேன் //

    அடடா...என் பிளாக்கில் இதுவரை நீங்கள் பின்னூட்டமிடாததற்கு காரணம் நல்லா இல்லாததுதானா?? நானும் 2 வருஷமா நல்லா எழுததான் பாக்குறேன்.பட் முடியல. பச் :(

    ReplyDelete
  36. அக்கா,உங்க கருத்துக்கு நன்றி,டானிக் சாப்ட்ட மாதிரில்ல இருக்கு,காரணம்,அட நீங்களே போய் பார்த்துக்கோங்க. எப்படி என் பிளாகை மற்ற திரட்டிகளில் இணைப்பது,கொஞ்சம் எனக்கு ஈமெயில் பண்ணுறீங்களா?

    ReplyDelete
  37. இவ்ளோ விஷயத்த ரூம் எதுவுமே போடாமல் யோசித்ததற்கு வாழ்த்துக்கள்...சுமஜ்லா...

    என்னோட ரெண்டு ப்ளாக்ஸ் என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் பார்த்துட்டு சொல்லுங்க...

    www.jokkiri.blogspot.com

    www.edakumadaku.blogspot.com

    ReplyDelete
  38. நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி. மாற்றிவிடுகிரேன். அப்புறம் நீங்கள் கொடுத்திருக்கும் என்னுடை ஐடி syednavas - ல் d-missing. சேர்த்துவிட்டால் நன்று.

    ReplyDelete
  39. தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் அனைத்தும் தேதி வாரியாக சேகரிக்கப்படுகின்றன. அங்கு சென்று உங்கள் எந்த பின்னூட்டத்திற்கும் லிங்க் மூலம் சென்று அதற்கு பதிலை பதிவர் தந்திருக்கிறாரா என்று எப்போது வேண்டுமானாலும் பார்க்க இயலும். ஆனாலும், கமெண்ட் ஃபாலோ அப் தான் மிகச்சுலபமான வழி. :)

    ReplyDelete
  40. எழுத்து பிழைகளை எல்லாம் திருத்தி விட்டேன்!

    பாத்திமா ரோஜா, திரட்டிகளுக்கு போய் பார்த்தால், விவரம் இருக்கும்!

    அப்துல்லா, நீங்க லின்க் தரலையே!

    நவாஸ், சாய்தாசன் மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  41. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை!!! அபிஅப்பான்னு நான் யோசிச்சு எல்லாம் வைக்கலை. என் மனைவி என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க. நான் கிரியேட் செஞ்சுகிட்டு இருக்கும் போது அவங்க கிட்ட இருந்து போன் வந்தது. அப்போ அபிஅப்பான்னு கூப்பிட்டங்களா அப்படியே அதே பேரை வச்சுட்டேன்.

    எங்க ஸ்கூல் பிளாக் பேர் கூட ஸ்கூல் பேயரின் சுருக்கம் தான்.

    dbtrnhss.blogspot.com

    நல்ல பகிர்வு!!!

    ReplyDelete
  42. //முன்னாடி ஷஃபி கூட http://www.shafiblogshere.blogspot.com/ நு அவர் ப்ளாக் பேரிலேயே, shafiblogshere அப்படினு பேர் வெச்சிருந்தார். சீக்கிரமா அது எனக்கு மனதில் பதிந்து விட்டது. ஆனா, இப்ப மாத்திட்டார்//

    ஆமாம் சகோ, shafiblogshere ரொம்ப நீளமா இருக்கிற மாதிரி தோண்றியது, அதான் 'ஷ‌ஃபிக்ஸ்' னு மாத்திட்டேன். கோடிட்டு காட்டியதற்க்கு நன்றி.

    ReplyDelete
  43. என் ப்ளாக் முகவரி குழப்ப ரகம்னு சொன்னமைக்கு நன்றி :-)
    யோசிக்காம செய்யாம 5 10 நிமிடத்துல ஆரம்பிச்சது. ப்ளாக் ஆரம்பிச்சதே ஒரு விபத்துதான்னு வைச்சிக்கோங்களேன்.

    ReplyDelete
  44. பொதுவாக பிளாக் பேர் வைக்கும் பொது 5 அல்லது 6 எழுத்துகளில் வைத்தால் ஞயாபகம் வைக்க மிக எளிதாக இருக்கும் ...
    எப்படி எங்க பிளாக் பேரு ?

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள்..
    சமுதாய தகவல் களஞ்சியம்...
    lalpetexpress@gmail.com
    http://lalpetexpress.blogspot.com/

    ReplyDelete
  46. சுமஜ்லா. நான் ஜெயந்தி (ஜேமாமி) நாம 'அறுசுவை' கெட் டு கெதர்ல சென்னையில் கீதாஞ்சலி ஹோட்டலில் சந்தித்திருக்கிறோம். மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களை 'தமிழ்க் குடும்பத்தில்' படித்திருக்கிறேன்.
    'என் எழுத்து இகழேலா' - இகழறமாதிரியா இருக்கு. புகழத்தான் வார்த்தை இல்லை. நேற்றுதான் சீதாலட்சுமி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் ப்ளாகைப் பற்றி சொன்னார்கள். நான் கூட ப்ளாக் ஆரம்பித்திருக்கிறேன். 'மணம்மனம்வீசும்' என்று. http://manammanamviisum.blogspot.in/2012_05_01_archive.html
    ஆனால் ஒரு தப்பு செய்து விட்டேன். இன்றுதான் உங்கள் ப்ளாகைப் பார்த்தேன். பார்த்தபிறகு தொடங்கி இருக்கலாம். முடிந்தால் என் ப்ளாகிற்கு வந்து பார்த்து உங்கள் மேலான ஆலோசனைகளை சொல்லுங்கள்.
    மிக்க நன்றி

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.