Sunday, September 6, 2009

உங்க கமெண்ட் தனித்து தெரிய

ஒரு சிலருடைய ப்ளாகில் நீங்கள் இதை கவனித்து இருக்கலாம். அதில் பதிவரின் கமெண்ட் மட்டும் தனித்து தனி கலரில் தெரியும்! அதை நீங்களும் உங்கள் ப்ளாகில் சுலபமாக வர செய்யலாம். மேலே படியுங்கள்.

இந்த வசதி, தனி விண்டோவில் கமெண்ட் தெரியும் போது தெரியாது. ஆனால், ‘embeded below post' ஆப்ஷன் கொடுத்திருந்தால் தெரியும்.

இதை செய்ய, Dashboard – Lay Out – Edit html போய், Expand widgets என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பொதுவாக, நம் ப்ளாகின் html code ல் கை வைக்கும் முன்பாக அதை பேக் அப் எடுத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் என்றால், html code முழுவதுமாக Copy செய்து ஒரு நோட் பேடில் Paste பண்ணி, Save செய்து கொள்ள வேண்டும். நம்மை அறியாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், நம் டெம்ப்ளேட்டை சரி செய்ய, இந்த பேக் அப்பை உபயோகித்துக் கொள்ளலாம். இப்போ, பேக் அப் எடுத்து வைத்து கொண்டீர்களா? இனி, கீழ் காணும் கோடை தேடுங்கள்.

<b:if cond='data:comment.isDeleted'><data:comment.body/><b:else/>
<data:comment.body/>
</b:if>

இப்போ, இதற்கு பதிலாக, இதை அழித்து விட்டு, கீழ்காணும் கோடை பேஸ்ட் செய்யுங்கள்.

<b:if cond='data:comment.isDeleted'><data:comment.body/><b:else/><b:if cond='data:comment.author == data:post.author'>

<data:comment.body/>

<b:else/>
<data:comment.body/>
</b:if></b:if>

இதில், color என்று இருக்கும் இடத்திலும், background color என்னும் இடத்திலும் உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு கலருடைய ஹெக்ஸ் கோடும் போட்டுக் கொள்ளலாம்.

இப்போ, உங்கள் கருத்துரை மட்டும், மற்றவரிடமிருந்து தனித்து தெரியும்.

-சுமஜ்லா.

30 comments:

1. நன்றி சுஜ்மலா..

ReplyDelete
2. நல்ல தகவல். சுமஜ்லா.
நோன்பு முடிந்த பின்பு தான் உங்கள் ப்ளாகில் கொடுத்த டிப்ஸ் எல்லாம் பார்த்து என் ப்ளாகில் மாற்றனும்.

ReplyDelete
3. கமெண்ட் தனித்துத் தெரிய...
என்ன செய்யலாம் என்று...
யோசனை செய்து கொண்டிருந்தேன்.

அருமையான தகவல்.

ReplyDelete
4. சுஹைனா ரொம்ப நல்ல தகவல், இப்ப சுத்தமா நேரமே இல்லை, நோன்புக்கு பிறகு தான் உங்கள் அனைத்து பிலாக் டிப்சையும் பயன் படுத்தி பார்க்க உள்ளேன்.

ReplyDelete
5. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ReplyDelete
6. "யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

ReplyDelete
7. ரொம்ப நாளாக இருந்த சந்தேகம்...நன்றி சகோதரி

ReplyDelete
8. நானே கேட்ட்கனும்னு இருந்தேன் நீங்களே போட்டுடிங்க நன்றி அக்கா...

ReplyDelete
9. அக்கா ...என் நிஜ பெயரே அதன் அக்கா...ஏன் கேட்டிங்க???

ReplyDelete
10. இல்ல, சீமான் என்பது, வசதியை குறிக்கும் தமிழ் மொழி சொல்...அதான் கேட்டேன்.

ReplyDelete
11. நானும் மாத்திட்டேன்...
நன்றி...

ReplyDelete
12. கலக்கிட்டீங்க அக்கா

ReplyDelete
13. அதிகமான ஓட்டுக்களால், எனக்கு ஆதரவளித்து, இவ்விடுகையை வெற்றி பெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

சந்தில் சிந்து பாடுவது போல கிடைக்கும் இடைவெளியில் இப்பதிவு.

ReplyDelete
14. அக்கா நீங்க டீச்சருக்கு படிக்க கல்லூரி போரீங்கதான்,ஆனாலும்,எங்க எல்லாருக்கும் (பிளாக் நடத்துனருக்கெல்லாம்)ஏற்கனவே டீச்சரா ஆகிட்டீங்க,தகவல் எல்லாம் சூபெர்,உங்கள மத்திய தகவல் மந்திரியாக்குனா இந்தியா நம்பர் ஒண்ணா ஆகிவிடும்..

ReplyDelete
15. அன்புள்ள சகோதரிக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் (முன்கூட்டியே சொல்வதற்கு காரணம் சும்மா ஒரு ஐஸ் வைப்புதான்)
நான் வலையுலகத்திற்கு புதியவன் ஆனாலும் உங்களது தொழில் நுட்பம் சார்ந்த இடுகைகள் எல்லாவற்றையும் ஏற்கனவே படித்துள்ளேன் சரி இப்போது விடயம் இது தான் கருத்துரை என்பதை சொடுக்கும் போது புதிய சாளரம் தோன்றுகின்றது அவ்வாறில்லாமல் ஒவ்வொரு இடுகையின் கீழும் கருத்துரை பெட்டி ஒன்றை வைப்பதற்கான வழி ஒன்றை கூறுங்கள் அந்த கருத்துரைப்பெட்டியுடன் ஸ்ய்மிலி இருந்தால் இன்னும் நல்லது.
தாங்கள் நோன்பு காலத்தில் இருப்பதால் சிரமத்திற்கு மன்னிக்கவும் நேரம் இருக்கும் போது இது பற்றி குறிப்பிடுங்கள்

ReplyDelete
16. கடைசியில் நம்ம வலைப்பூவை அம்போன்னு விட்டுடீங்களே சகோ,,,பரவால்ல ,,,,புத்தகம் வெற்றி பெற வாழ்த்துகள்....

ReplyDelete
17. //உங்கள மத்திய தகவல் மந்திரியாக்குனா இந்தியா நம்பர் ஒண்ணா ஆகிவிடும்..//

இதெல்லாம் உங்களுக்கே, டூ மச்சா தெரியலையா? :)

ReplyDelete
18. சுதர்ஸன், Dashboard - settings - comments போய், embedded below post கொடுத்தால், நீங்கள் விரும்பும் வண்ணம் கிடைக்கும்... ஸ்மைலி பற்றி ஏற்கனவே பதிவு போட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கேட்பது போல, கருத்து பெட்டியில் ஸ்மைலி தோன்ற செய்யலாம். அது குறித்து நேரம் கிடைக்கும் போது தருகிறேன்.

நன்றி ரகுநாதன்! கவலை வேண்டாம்.. சி.டி. சப்மிட் செய்தாச்சு. அடுத்த எடிசனில் இணைத்து விடலாம்...

ReplyDelete
19. நன்றி என்று கூறி உங்களை பிரிக்க விரும்பவில்லை ஆனாலும் என்னையும் ஒருவனாக மதித்து உடனே பதிலளித்த உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப......... நன்றி
நீங்கள் கூறியபடி செய்து பார்த்தேன் ஆனால் வேலை செய்யவில்லை முடிந்தால் உதவி செய்யுங்கள்

ReplyDelete
20. முயற்சித்தேன், எழுத்து கலர் மட்டும் மாறியது. தங்களது பதிவில் உள்ளது போல் தனித்து தெரியவில்லை,

சரி செய்ய வாய்ப்பு உள்ளதா

நன்றியும், வாழ்த்துக்களும்

ReplyDelete
21. //ஆனால் வேலை செய்யவில்லை முடிந்தால் உதவி செய்யுங்கள்//

சில டெம்ப்ளேட்டுகளுக்கு வேலை செய்வதில்லை...அது ஏன் என்று எனக்கே தெரியவில்லை...என்னுடையதிலும் இந்த பிரச்சினை இருக்கு!

ReplyDelete
22. //முயற்சித்தேன், எழுத்து கலர் மட்டும் மாறியது. தங்களது பதிவில் உள்ளது போல் தனித்து தெரியவில்லை,

சரி செய்ய வாய்ப்பு உள்ளதா//

தனித்து என்றால் எப்படி? நான் என்னவோ கோடிங் மூலம் ஒரு கட்டம் போட்டு வைத்தேன். அது என்னவென்று மறந்து விட்டது, நெட்டில் தேடி செய்தேன்...அந்த கட்டத்தை சொல்கிறீர்களா?

பேக் கிரவுண்ட் கலரின் கோடிங்கையும் மாற்றுங்கள்! அப்போது, உங்க கமெண்ட்டுக்கு மட்டும் தனி கலரின் பேக் கிரவுண்ட் தெரியும். அதாவது, அடிக்கப்பட்ட பெயிண்ட்டின் மேல் எழுதியது போல இருக்கும்!

ReplyDelete
23. நன்றி சுமஜ்லா.. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்..... என்னுடைய பிளாக்கை மெருகூட்ட உங்கள் பதிவுகள் உதவியாக இருக்கிறது.....

மேலும் உங்களிடம் ஒரு விளக்கம்...

உங்கள் பதிவில் கமெண்ட் கொடுத்திருப்பவர்களுடைய கமெண்டுகளை ஹைட் ஆகாமால் ஓப்பனாக காட்டும்படி செய்திருக்கிறீர்கள் என் தளத்தில் கமெண்ட்ஸ் ஆட்டோ ஹைடு ஆகிறது இதற்க்கு நான் என்ன செய்யவேண்டும்

ReplyDelete
24. This comment has been removed by the author.

ReplyDelete
25. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

ReplyDelete
26. பிற பதிவர்களால் சொல்லப் பட்ட இதே தலைப்பிலான உதவிக் குறிப்பை செயல் படுத்தி பார்த்த போது, வராத பின்னூட்டம் மாற்றம், தங்கள் பதிவின் படி மாற்றம் செய்த போது, மாற்றம் கை கூடியது. நன்றி

அன்புடன்
muni barathy
http://muneespakkam.blogspot.com/

ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.