Saturday, May 1, 2010

எழுதி வைக்க நேரமில்லையே!


வானத்திலே நிலவிருக்கு,
கவியூறும் சுவை எனக்கு,
எழுதி வைக்க நேரமில்லையே!!

தோட்டத்திலே மலரிருக்கு,
எழுதப்படா கவியிருக்கு,
பதிந்து வைக்க காலமில்லையே!!

மொட்டைமாடி தனிமையிலே,
வெட்டவெளி நோக்கையிலே,
வேகமாக நினைவு நகருதே!!

வட்டமாக புத்தகங்கள்,
திட்டமாக இடம்பிடிக்க,
காண அதைக் கனவு கலையுதே!!

பதிவுலகம் வர ஆசை,
பதில் கூறும் மனவோசை,
படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!!

இணையத்தில் ‘லாக்’(log) ஆனால்,
படிப்பிங்கு ‘லாக்’ (lock) ஆகும்,
கடிவாளம் பிடித்து இழுக்குதே!!

தேர்வு தரும் சுமையெனக்கு,
படித்துக் களைத்த இமையிருக்கு,
வேறெதிலும் நாட்டமில்லையே!!

படிப்பென்னும் துணை நமக்கு,
எதிர் காலம் அதிலிருக்கு,
அதனால், மன வாட்டமில்லையே!!

நண்பர்களுக்கு,

தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால், பல பின்னூட்டங்கள், சந்தேகங்களுக்கு பதில் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

நான் நல்ல முறையில் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற வேண்டிக் கொள்ளுங்கள்...! தேர்வு முடிந்த பின், மீண்டும் பழைய வேகத்துடன் பதிவுலகிற்கு வருவேன்....! அது வரைக்கும் பை...பை...!!

-சுமஜ்லா.

14 comments:

  1. வாழ்த்துக்கள், எல்லாம் நன்மையாகவே நடந்திட இறைவனின் உதவி என்றென்றும் நிலைக்கட்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நாங்களும் தொடர்ந்து வருவோம்;
    நீங்களும் தொடர்ந்து தருக!
    அப்புறம்...
    வாழ்த்துக்கள்,
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உங்களுக்கு தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அக்கா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் சுஹைனா.கவிதை அருமை.

    ReplyDelete
  6. வேலையும் ரெடியா? அட, மிக்க மகிழ்ச்சி சுமஜ்லா!! மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிவுலகம் எப்பவும் இங்குதான் இருக்கும்; எங்கேயும் போகாது. பரிட்சைகளை நல்லவிதம் எழுதிவிட்டுப் பின் வாருங்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்
    வாழ்க்கையில் முன்னேற.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அம்மா..

    ReplyDelete
  9. இன்ஷா அல்லாஹ், யாவும் நல்லபடியா முடிச்சிட்டு வாங்க ...

    ReplyDelete
  10. தங்களது ஈமெயில் முகவரி தர இயலுமா?

    lathananth@gmail.com எனும் எனது ஈமெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.

    ReplyDelete
  11. வாழ்த்தளித்து என்னை உற்சாகப்படுத்திய நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அக்கா,.

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.