ஃபாலோ பண்ணினா கண்டிப்பா மறக்க மாட்டோம், மறந்தாலும் எடுத்துக்கலாம். ஆனா, எனக்கு சில சமயம் ரீடரை ஓப்பன் செய்ய சோம்பலாக இருக்கும். ரீடரில் படித்தால் ஈஸி தான், ஆனா, நல்ல இடுகைக்கு பின்னூட்டம் இட, நாம அவங்க ப்ளாகுக்கு தான் போகணும்.அதனால், நேரடியாவே போயிடுவேன்.
இதுல ஒரு சின்ன பிரச்சினை என்னன்னா, பின்னூட்டத்துக்கு ப்ளாக் ஆத்தர் தரும் பதில்! பலரும் ரொம்ப சின்சியரா பதில் தருவாங்க; ஒரு சிலர், மொத்தமாக சேர்த்து ஒரே பதில், நான் கூட சில சமயம் அப்படித்தான். ஒரு சிலர் பதிலே தர மாட்டாங்க. இதெல்லாம் பிரச்சினை இல்லை. ஆனா, பின்னூட்டம் இட்ட எத்துணை பேர்,மீண்டும் வந்து, ஆத்தர் அதுக்கு பதில் தந்திருக்காரானு பார்க்கிறாங்க???
நான் சில சமயம் பார்ப்பேன், பல சமயம் பார்ப்பதில்லை - பார்க்க ஆசை தான், ஆனா ப்ளாக் பேர் மறந்து போயிரும். ஃபாலோ அப் மெயில் கூட செட் பண்ணிக்கலாம். அப்படி கொடுத்தா, அது, நம்ம ப்ளாக் உடைய ஈமெயிலுக்கு தான் வரும். நான் அந்த மெயிலை ஓப்பன் செய்வதே இல்லை. ஏனா, அது ப்ளாகுக்காகவே பிரத்யோகமா வெச்சிருக்கற ஐடி, மற்றபடி ஜிடாக் எல்லாம் வேற ஐடியில...
(கீழே நான் தந்திருக்கும் எல்லா ப்ளாக் முகவரிகளும் தனி விண்டோவில் திறக்கும்)
சிலர் ப்ளாக் பேரிலேயே ப்ரொஃபைல் பேரும் வெச்சிருப்பாங்க. அப்ப, எனக்கு அவங்க ப்ளாக பார்ப்பது ஈஸியா இருக்கும். முன்னாடி ஷஃபி கூட http://www.shafiblogshere.blogspot.com/ நு அவர் ப்ளாக் பேரிலேயே, shafiblogshere அப்படினு பேர் வெச்சிருந்தார். சீக்கிரமா அது எனக்கு மனதில் பதிந்து விட்டது. ஆனா, இப்ப மாத்திட்டார்.
வேற பேர் வெச்சிருக்கவங்க ப்ளாகுக்கு போக, ப்ரொஃபைல் பார்க்கணும். அதுல நாலைந்து ப்ளாக் போட்டிருக்கும். எது மெயின் ப்ளாகுன்னு ஒவ்வொன்னா ஓப்பன் செய்து பார்க்கணும். நான், இதுவரை, டெம்ப்ளேட் உருவாக்கம் போன்ற பல காரணங்களுக்காக நாமகரணம் சூட்டி வெச்சிருக்கற ப்ளாக் எண்ணிக்கை மொத்தம் 39. மொத்தத்தையும் என் ப்ரொஃபைலில் போட்டு வைத்தால், தலை சுத்தி போய், யாருமே என் ப்ளாகுக்கு வர மாட்டாங்க.
www.itsjamaal.com/, www.giriblog.com/ இப்படி ஷார்ட் பேர் மனசுல ஈஸியா பதிஞ்சிருது. ஆனா, சமீபத்தில், ப்ளாக் தொடங்கிய நிஜாம் அண்ணாவோட ப்ளாக், http://nizampakkam.blogspot.com/ இதுல, nizam க்கு z ஆ, j ஆ, pakkam என்பதற்கு ஒரு k வா ரெண்டு k வா அடிக்கடி குழப்பம் வருது.
நேத்து லதானந்த் சார், பின்னூட்டம் போட்டுட்டு போயிருந்தார், அவர் ப்ளாக் அட்ரஸ் தெரியும். ஆனா, இதே மாதிரி ஸ்பெல்லிங் குழப்பம். t போடற இடத்துல d போட்டு தேட, இனி, பிரவுசிங் ஹிஸ்டரியில், ஒவ்வொரு முறையும் தப்பான அட்ரஸ் வந்து எரிச்சல் படுத்தும்.
தம்பி சீமான் கனியோட ப்ளாகுக்கு seemangani.blogspot.com னு அன்னிக்கு போட்டு பார்க்க வரல. அப்புறம் ப்ரொஃபைல் பார்த்து, http://www.ganifriends.blogspot.com/ என்ற சரியான முகவரி கண்டு பிடித்தேன்.
ஆனா, இது எல்லாத்தையும் விட, என்னை அடிக்கடி தலை சுத்த வைக்கிற மெகா ஹிட் ப்ராஜக்ட் ஒன்னு இருக்குது, அது தான் சீரடி சாய்தாசனோட, http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/ அநேகமா தமிழ் பதிவுலகில் நீண்ட பேர் உடைய ப்ளாகின் சொந்தகாரர் இவராதான் இருக்கும். ஆனா, நல்ல பயனுள்ள தொழில்நுட்ப இடுகைகள்.
ப்ளாகின் பெயரும், நம் பெயரும் ஒன்றாக இருப்பதால், இந்த மாதிரி பிரச்சினை இல்லை. அதுக்கு தான் நான் ஆரம்பித்திலிருந்தே sumazla னு ப்ரொஃபைல் பேர்ல, ப்ளாக்ல ரெண்டுலயும் போட்டுட்டு வந்தேன். அதிலும் ஒரு நாள் பாருங்க, ஒருத்தர், சுமாஷ்லா அப்படீனு தமிழ்படுத்தி இருந்தார். அப்புறம் என்னடா இது வம்புனு, ரெண்டு மொழியிலயும் போட ஆரம்பித்தேன்.
ஜலீலா அக்காவும், நிறைய நிறைய ப்ளாக்ஸ் வெச்சிருந்தாங்க. அதுல சிலதுல ஹைஃபன் வேற வரும். என்னால் ஞாபகம் வெச்சிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது, ஒரு நாள், நானே கேட்டு வாங்கி, எல்லாத்தையும் ஒன்னா இணைச்சு கொடுத்திட்டேன். அதுக்கு நானே, http://allinalljaleela.blogspot.com/ அப்படீனு பேரும் வெச்சேன். அக்காவுக்கு ரொம்ப சந்தோஷம்.
கிருஷ்ணாவும் அப்படித்தான். தன் பேருக்கும் ஊருக்கும் சம்பந்தமே இல்லாம, http://saidapet2009.blogspot.com/ னு வெச்சிருக்கார். ஒவ்வொரு முறையும் ப்ரொஃபைல் பார்த்து தான் போவேன்.
நண்பர் நவாஸுதீனோட ப்ளாக் பேர், http://syednavas.blogspot.com இது கூட ஒன்றிரண்டு தடவையில் மனசுல பதிஞ்சிருச்சு. ஆனா, அவரோட ப்ரொஃபைலில ரெண்டு மனவிலாசம் வெச்சிருப்பாரு, எது ஒரிஜினல் மனவிலாசம்னு குழப்பம் வரும். மனவிலாசம்1, மனவிலாசம்2 அப்படீனு வெச்சா, புண்ணியமா போகும்.
அதே மாதிரி முத்துலட்சுமியின் ப்ளாக் சிறுமுயற்சி, அதுக்கு c வருமா, s வருமா அப்படீனு சில சமயம் குழப்பமாயிரும். http://sashiga.blogspot.com/ , http://abiappa.blogspot.com/ , http://tvs50.blogspot.com/ , http://valpaiyan.blogpspot.com/ இதெல்லாம் ரொம்ப ஈஸி ரகம். மறப்பதே இல்லை. ஏனோ, http://jaihindpuram.blogspot.com/ கூட நான் மறப்பதில்லை.
http://tamiluzhavan.blogspot.com/, http://gunathamizh.blogspot.com/ , http://ezhuthoosai.blogspot.com/ எல்லாம் ஸ்பெல்லிங் குழப்ப ரகம். என் தம்பிக்கு ஒரு சைட் நான் உருவாக்கும் போது, http://www.majesticcircle.com/ என்பதை சஜ்ஜஸ்ட் செய்தேன். அவன் வேணாம் ரெண்டு C ஒன்னா வந்தா, குழப்பம் வரும் என்று சொல்லி விட்டான். பிறகு, தான் J கிடைக்காமல், http://www.magesticpoint.com/ என்று பெயர் வைத்தேன்.
peacetrain என்னும் நண்பர், http://peacetrain1.blogspot.com/ என்று வைத்திருக்கிறார். சமயத்தில் இந்த 1 போடாமல் நான் தேடி தோற்றதுண்டு. http://vadakaraivelan.blogspot.com/ என்ற பெயர் சற்று பெரிதாக இருந்தாலும், எனக்கு ஒரு போதும் பெயர் குழப்பம் வந்ததில்லை. இதில், d, th குழப்பமோ, ரிப்பிடிஷனோ இல்லாதது தான் காரணம்.
நான் பொதுவாக, யாராவது என் பின்னூட்டத்தில் லின்க் தந்தால், உடனே சென்று பார்ப்பேன், நன்றாக இருந்தால், பின்னூட்டமும் இட்டு வருவேன். ஆனா, மீண்டும் போவேனா தெரியாது.
ஒரு சிலர் எனக்கு தமிழிஷ்ல ஓட்டு போடறவங்க, அவங்க ப்ளாக் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, அவங்க தமிழிஷ் ப்ரொஃபைலில் அவங்க ப்ளாக் பேர் இருக்காது. அதோட, அங்க வேற மாதிரி பேர் வெச்சிக்கிறாங்க.
இன்னும் நிறைய நண்பர்களின் ப்ளாகுகள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா, கட்டுரை ரொம்ப பெரிசா போவுது.
கஷ்டமான பேர் வெச்சிருக்கவங்க, ப்ரொஃபைல் பெயரும் அதே மாதிரி வெச்சுக்கிட்டா, என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு ஈஸியா இருக்கும்!
சிலர், நல்ல பெயர் கிடைக்காமல் அல்ல பெயர் சூட்டி விடுகிறார்கள். ஆனால், சற்று கற்பனை திறனோடு, மூளையை கசக்கினால், எளிய பெயர் கிடைக்கும். கிடைக்காதவர்கள், இலவச ஐடியாவுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.
என் இடுகை முற்றிலும் என் சொந்த கருத்து தான்.
-சுமஜ்லா.
.
Tweet | ||||