Wednesday, August 26, 2009

மவுஸ் ரைட் க்ளிக் இயங்காமல் செய்ய...

பதிவுலகில், என் பதிவை அப்படியே காப்பி பண்ணி போட்டு விட்டார்கள் என்று பலரும் வருத்தப்படுவதை கேட்கலாம். இதை தடுக்க சுலபமான வழி ஒன்று இருக்கிறது.

பொதுவாக, காப்பி பேஸ்ட் செய்ய, மவுஸின் வலது புற பட்டனை அழுத்துவார்கள். வலது புற பட்டன், நம் ப்ளாகில் இயங்காமல் தடுப்பதன் மூலம், இவ்வாறு காப்பி செய்வதை தடுக்கலாம்.

கீழே இருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டை, அப்படியே காப்பி செய்து, Dashboard - Layout - Add a gadget - HTML/JavaScript போய் பேஸ்ட் பண்ணி சேவ் செய்து விடுங்கள். அவ்வளவு தான்.


<script language="JavaScript"><!--//Disable right mouse click Scriptvar message="Copyright!";////////function clickIE4(){if (event.button==2){alert(message);return false;}}function clickNS4(e){if (document.layersdocument.getElementById&&!document.all){if (e.which==2e.which==3){alert(message);return false;}}}if (document.layers){document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS4;}else if (document.all&&!document.getElementById){document.onmousedown=clickIE4;}document.oncontextmenu=new Function("alert(message);return false")// --></script>


இப்போ, யாராவது, உங்க ப்ளாகில் வலது க்ளிக் செய்தால், “CopyRight" என்ற மெஸேஜ் வரும். கீ போர்டு மூலம் Ctrl+A, Ctrl+C செய்வதை தடுக்க, கோடிங், இங்கே: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_27.html

இவ்வசதியை என் ப்ளாகில் நான் செய்யவில்லை. காரணம் செய்தால், இந்த கோடிங்கெல்லாம் நீங்கள் காப்பி செய்ய இயலாது என்ற நல்ல எண்ணம் தான்.

-சுமஜ்லா.
.
.

31 comments:

  1. தகவலுக்கு மிகவும் நன்றி சுகைனா..நல்ல பயனுள்ள பதிவு...இதோ என் ப்ளாகிலும் இணைத்துவிடுகிறேன்...

    ReplyDelete
  2. பயனுள்ள இடுகை,என் ப்ளாகில் இணைத்துவிட்டேன்.நன்றி சுகைனா!!

    ReplyDelete
  3. தலைவரே சுட்டா சுட்டுட்டு போகட்டும் விடுங்க.......!

    ReplyDelete
  4. //என் ப்ளாகில் நான் செய்யவில்லை. காரணம் செய்தால், இந்த கோடிங்கெல்லாம் நீங்கள் காப்பி செய்ய இயலாது என்ற நல்ல எண்ணம் தான்.//


    அது மட்டுமல்ல தல

    உங்களுக்கு பின்னூட்டமிட உங்கள் தலத்தைவிட்டு வெளியேறித்தான் பின்னூட்டமிட முடியும்.

    இரண்டாவது பின்னூட்டம் என்பதே இருக்காது

    அதிலும் மேற்கோள் காட்டமுடியாது. உங்களின் இன்னொரு பதிவினை திற்க்க முயற்சிக்கும் போதும் இந்தப் பக்கத்தினை மூடிவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

    ஸ்னாப் சாட் மூலம் காப்பி அடிப்பதையும் தடுக்க இயலாது.

    இந்த முறையில் நமக்கு இழப்புகள் தான் அதிகம் என்று எனக்குத்தோன்றுகிறது

    எனவே காப்பி யடிப்பதை கண்டறியும் வழி ஏதாவது தெரிந்தால் சொல்லித்தாருங்கள். என் தளத்தில் நான் செய்திருக்கும் பல தொழில்நுட்பங்கள் உங்களைப் போன்றவர்கள் பதிவுகளின் மூலம் சொல்லிதந்தவைகளே..,

    ReplyDelete
  5. பதிவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் கீ-போடு ctrl-c வேலை செய்கிறது. கவனியுங்கள், ஸ்கிரிப்டை திருத்தி முயற்சித்து பாருங்கள்.

    ReplyDelete
  6. பின்னூட்டமிட முடியாது என்பது சரியல்ல. தாராளமாக பின்னூட்டமிடலாம். மேற்கோள் காட்ட முடியாது என்பதும் தவறு, ctrl+c கொடுத்தால் வேலை செய்யும். ஆனால், மவுஸ் ரைட் க்ளிக் மட்டும் வேலை செய்யாது. காப்பி அடிப்பதை கண்டறியும் வழி இருக்கிறது. www.tynt.com போய் பாருங்கள்.

    ReplyDelete
  7. ஒரு பழமொழி சொல்வாங்க,
    'ஊருக்குத்தான் உபதேசம்'னு.
    அதுமாதிரி, மத்தவங்களுக்கு
    ஐடியா குடுக்குற நீங்களே
    அத செய்ய மாட்டேன்றீங்களே!
    (இந்தக் கடிதம் பாராட்டு
    மடல்தான், சந்தேகம் வேண்டாம்.)

    ReplyDelete
  8. நான் செய்தால், நீங்கள்ளாம் இப்படி பாராட்ட மாட்டீங்களே?!

    பொதுவா, சமையல் குறிப்பு, அழகு குறிப்பு, டிப்ஸ், போன்ற தளங்களுக்கு இது பயன்படும்.

    ஜலீலாக்கா இது பற்றி அடிக்கடி புலம்பியதால் தான் இதை வெளியிட்டேன்.

    ReplyDelete
  9. நன்றி சுஹைனா என் குறிப்பு எல்லா சைட்டிலும், பிளாக்கிலும் காப்பியாகி உள்ளது.குறிப்பை பார்த்ததும் நான் கண்டு பிடித்து விடுவேன்.யார் எதிலிருந்து எடுத்தார்க்ள் என்று.

    ReplyDelete
  10. நன்றி அக்கா....
    அக்கா...அப்போ நம்ம blog la...நமக்கும் ரைட் க்ளிக் வேலை செய்யாதா????

    ReplyDelete
  11. நீங்க பிளாக்கர்களின் லீகல் அட்வைசர்னு சொல்லலாமா...

    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  12. நான்கூட இதைப்போல ஒரு பதிவு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டிருந்தேன். அதனை இங்கே காணலாம்.

    ReplyDelete
  13. Ctrl+C ,Ctrl+V மூலம் செய்யமுடியுமே சகோதரி

    ReplyDelete
  14. செய்யலாம்...செய்யலாம்...ஏதோ, எனக்கு தெரிந்ததை சொல்லி கொடுத்தேன்...

    அபூ அப்ஸர், நீங்க வேற லீகல் அட்வைஸர் விருதை உருவாக்கிறாதிங்க!...

    ReplyDelete
  15. சீமான்கனி, உத்து பார்த்து, இது நாமளா இல்லை வேறாளானு தெரிஞ்சிக்கிற அளவுக்கு இன்னும் ப்ளாகருக்கு அறிவு வளரலை!

    ReplyDelete
  16. Lilypie

    Lilypie
    Tuesday, August 25, 2009
    கல்வி விற்பனைக்கு
    பொதுவா கல்வி இன்னிக்கு வியாபாரம் ஆயிருச்சுன்னு சொல்வாங்க! அதை சாட்சியோட போன ஞாயிறு தினத்தந்தியில் பார்த்தேன்!
    //



    நீங்கள் சொன்ன தளத்திலிருந்து காப்பி அடித்து இங்கு பேஸ்ட் செய்தது. கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. இந்த கோடிங்கெல்லாம் நீங்கள் காப்பி செய்ய இயலாது என்ற நல்ல எண்ணம் தான்.]]

    நல்ல எண்ணம் - வாழ்க.

    -----------------------

    ctrl+c இல்லாமலே காப்பி அடிக்க முடியும் ...

    ----------------------

    தடுக்க வேறு வழிகள் உள்ளன
    மறுக்கா தெரிஞ்சிகிட்டு வாறேன்.

    ReplyDelete
  18. Just ctcl+c and ctrl+v enough

    Thanks,
    Murali.K

    ReplyDelete
  19. செலக்ட் பண்ணுவதை தடுப்பதற்கும் உண்டு. அதையும் இதனுடன் இணைத்தால் யாரும் பிரதி எடுக்கவும் முடியாது. பிரதி எடுப்பதற்கு செலக்ட் பண்ணவும் முடியாது.

    ReplyDelete
  20. செலக்ட் பண்ணுவதை தடுப்பதற்கும் உண்டு.]]

    இந்த முறையை தான் நானும் சொல்ல வந்தேன்

    கோடிங் இன்னும் கிடைக்கலை

    அநேகமா நீங்களே தேடி எடுத்து எங்களுக்கு சொல்லி குடுத்துடுவீங்க

    இப்பவே நன்றி.

    ReplyDelete
  21. //ctrl+c இல்லாமலே காப்பி அடிக்க முடியும் ...//

    //Just ctcl+c and ctrl+v enough//

    //நீங்கள் சொன்ன தளத்திலிருந்து காப்பி அடித்து இங்கு பேஸ்ட் செய்தது. கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.//

    எனக்கும் இதெல்லாம் தெரியும். முதலில் யாரும் மவுஸை தான் உபயோகிப்பார்கள். அப்போ காப்பி ரைட் என்று வந்தால், விட்டு விடுவார்கள்.

    சரி, இப்போ யாராவது காப்பி பேஸ்ட் செய்யுங்க பார்க்கலாம். முடியாவிட்டால் சொல்லுங்கள், நான் கோடிங் தருகிறேன். ஆனால், எனக்கு முப்பது ஓட்டு போட வேண்டும் :-)

    ReplyDelete
  22. //பொதுவா கல்வி இன்னிக்கு வியாபாரம் ஆயிருச்சுன்னு சொல்வாங்க! அதை சாட்சியோட போன ஞாயிறு தினத்தந்தியில் பார்த்தேன்!



    -லாஃபிரா

    Posted by Lafira Lamin at 4:07 PM
    5 comments//

    எந்த கோடிங்கும் உபயோகிக்காமல் காப்பி செய்துள்ளேன்.

    ReplyDelete
  23. http://veggiecookbooks.blogspot.com/
    என்னுடைய இந்த சமையல் குறிப்பு பதிவிற்கு சென்று பார்த்தல், copyscape என்ற ஒரு ஆரஞ்சு கலர் பாக்ஸ் தெரியும்.(http://www.copyscape.com/) இந்த லிங்கில் சென்று உங்களுக்கும் அப்படி ஒரு பாக்ஸ் create செய்து கொள்ள முடியும். காபிஸ்கேப் இணையதளத்தில் உங்கள் வலைப்பூவின் link-கை கொடுத்து தேடினால், உங்கள் content எங்கெல்லாம் copy செய்யப்பட்டு இருக்கு என்று தெரியும். அவர்களுக்கு அதிக பட்சமாக ஈமெயில் அனுப்பி உங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கலாம். அவ்வளவுதான்.

    "திருடனா பார்த்து திருந்தா விட்டால், திருட்டைத் தடுக்க முடியாது".

    அப்படியும் முடியா விட்டால், http://nisiyas.blogspot.com/2009/08/blog-post.html இந்த link-கில் இருக்கும் கவிதை போல படமாக மாற்றி வெளியிடலாம்.


    -வித்யா (http://vidhoosh.blogspot.com/)

    (உங்கள் பெயர் சுமஜ்லா என்றே என் மனதில் தங்கி விட்டது சுகைனா. சுகைனா என்ற பெயர் மிகவும் அழகாக இருக்கிறது.)

    ReplyDelete
  24. சுகைனா vannakam

    if you make any code modification your scripts..

    many way to easy to copy paste anything have many sites

    thanks for your idea

    but is it is only basic user internet affected but well known people have many idea...

    F.C.Kadhar
    Karaikkal

    ReplyDelete
  25. பொதுவா காப்பி பேஸ்ட் செய்பவர்கள் கத்து குட்டிகள் தான். விவரம் தெரிந்தவர்களுக்கு சுய அறிவு இருக்கும் போது ஏன் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்?

    வித்யா...நீங்கள் சொன்னது மிகவும் சரி!

    ஆனானப்பட்ட மைக்ரோசாஃப்டின் விஸ்டாவுக்கே பைரஸி பண்ண கண்டு பிடிச்சு இருக்காங்க. நாமெல்லாம் எம்மாத்திரம்?

    ஏதோ நமக்கு தெரிந்ததை சொல்லி தருகிறோம்.

    (சுஹைனா என்பது என் பெயர் என்பது, இப்போ தான் தெரிந்ததா உங்களுக்கு? :-)

    ReplyDelete
  26. எழுதிய வண்ணம் கண்டு மிகவும் ரசித்தேன், அதுவும் கடைசி வரிகள் அற்புதம்.

    ReplyDelete
  27. http://thamizmani.blogspot.com/2009/08/blog-post_25.html

    ReplyDelete
  28. வணக்கம்...

    உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  29. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.