Saturday, February 6, 2010

குழந்தை பாடல் - கண்ணே கலைமானே

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
லாஃபிரா பொன்மயிலே!
ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்...
ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம்
ஆரிராரோ ஓ ஆரிரோ!

பாசம் கொண்டோம் பண்பினை வளர்த்தோம்
பைங்கிளி உனை நாம் கருத்தினில் நிறைத்தோம்!
நீயொரு பிள்ளைகனி - லாஃபிரா
பாத்திமா செல்லகிளி
வசந்தங்கள் வாழ்த்தும் நேரமிது
வாழ்வினில் சேரும் காலமது!

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
லாஃபிரா பொன்மயிலே!
ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்...
ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம்
ஆரிராரோ ஓ ஆரிரோ!

வாழும் வாழ்வில் வளங்கள் காண்பாய்
வாழ்த்தும் பாடலில், மகிழ்ச்சியில் திளைப்பாய்
உணர்வில் உயிராய் நீ - என்றென்றும்
உள்ளத்தில் நிறைந்திடுவாய்!
கண்ணே உன் முகத்தில் கவிதைகளே!
காண்கின்ற கண்கள் ஒரு கோடியே!!

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
லாஃபிரா பொன்மயிலே!
ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்...
ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம்
ஆரிராரோ ஓ ஆரிரோ!

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என்றும் என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

1 comment:

மதுரை சரவணன் said...

nalla aariraaro . thaalattum ungkalukku vaalththukkal.