தான் கண்டிட்ட கொடியதோர் கனா
அதனால் மனதில் பலப்பல வினா - எனினும்
செயலாக்க மகனுடன் சென்றார் மினா.
இரு குன்றுக்கு இடையிலான இடம்
பலியிட தேர்ந்தெடுத்த மடம்
மனதினில் கொண்டார் திடம்.
செல்ல மகனை
பள்ளத்தாக்கில்
படுக்க வைத்தார்.
துள்ளத் துடிக்க
பலியிட நினைத்தார்.
ஓங்கினார் கத்தியை - கத்தியோ
இழந்தது தன் சக்தியை.
பணிய மறுத்தது
பலிவாள் - கழுத்தை
அறுக்க வில்லையே
உடைவாள்.
இறைவன் அசரீரியால்
அறிவித்தான்.
குர்பானி நிறைவேறியதென
தெரிவித்தான்.
பகரமாக ஆடொன்றை
தரிவித்தான்.
அதைப் பலியிடுமாறு
புரிவித்தான்.
சோதனை செய்வது
சோதிக்க - நற்
போதனை தருவது
போதிக்க - இதை
உணர்ந்தார்
இபுராஹிம் நாயகர்,
இஸ்லாத்தை பரப்பினார்
அந்த போதகர்.
சிறிது காலத்தில்
அன்னை ஹாஜரா
உயிர் நீத்தார்.
நாட்கள் செல்ல செல்ல
மைந்தன் இஸ்மாயில் - அத்
துயர் தீர்த்தார்.
நபி இஸ்மாயில் பின்
மணம் முடிக்க
நாடினார்.
அரபுப் பெண்ணொருத்தியைத்
தேடினார்.
அமாலக கோத்திரத்து
உமரா என்ற பெண்ணை
மணம் முடித்து
கூடினார்.
பாலஸ்தீனம் சென்று,
மக்கா திரும்பிய இப்ராஹிம்,
மகனைக் காணச் சென்றார் - மறு
மகளைக் கண்டு நொந்தார்.
உபச்சாரம் தெரியாத மட்டி - உமரா
மண்டையோ களிமண் தொட்டி.
வாசற்படியை மாற்றும்படி
சூசகமாக சொல்லிச் சென்றார்.
சொல்லியது மனையையல்ல
மனைவியை என்று
புரிந்து கொண்டார்
புத்திரர்.
உமராவை விடுத்து
ஜிர்ஹம் கோத்திரத்து
ஸைதாவை மணந்தார்
அந்த சத்தியர்.
தனயன் செயல்கண்டு
மனத்திருப்தி
மிகக் கொண்டார் தந்தை.
மறுமகளை குணவதியாய்
கண்டதனால்
குளிர்ந்தது அவர் சிந்தை.
இந்த
பெண்மணியின் மணிவயிற்றில்
எழுபதாம் தலைமுறையில்,
கண்மணியாய் உதித்தவர்தான்
பெருமானார் முஹமது நபி(ஸல்).
(வளரும்)
-சுமஜ்லா
Tweet | ||||
4 comments:
///உபச்சாரம் தெரியாத மட்டி - உமரா
மண்டையோ களிமண் தொட்டி.///
;-)
நல்ல ரசக் கலவை!
ஒரு நீண்ட கதையை உங்கள் கவிநடையில் அழகாகச் சுருக்கிக் கூறியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
பிருந்தா
எப்பங்க என் கவிதையை நீங்க விகடன் ல பாத்தீங்க? எனக்கே தெரியாதே.. அச்சுல வந்தா காசு தராங்கன்னும் .. இணையத்துல வந்தா கிடையாதுன்னும் கேள்விபட்டேன்..
பிருந்தா & தமிழ்பிரியருக்கு நன்றி!
முத்துலெட்சுமி-கயல்விழி,
அட, அப்ப அது நீங்க இல்லையா? எனக்கு ஒரே குழப்பமா இருக்குங்க.
Post a Comment