Friday, April 10, 2009

தாய் மடி தேடிய கன்று

ஒரு கன்று
இன்னொரு கன்றின் அடியில்
மடி தேடி
முட்டிக் கொண்டிருந்தது,
கசாப்புக் கடை வாசலில்!!

-சுமஜ்லா

8 comments:

Mrs.Faizakader said...

மிகவும் அருமை சுமஜ்லா.

SUMAZLA said...

ஃபாயிஜா, ஒரு புத்திசாலியிடமிருந்து கிடைக்கும் பாராட்டு, விலைமதிப்பில்லாதது தான். உங்கள் ப்ளாகை பார்த்து நான் வியக்காத நாளே இல்லை. அவ்வளவு அருமை. TOP COMMENTATORS கூட உங்க ப்ளாகை பார்த்துத் தான் நான் போட்டேன்.

கே.ரவிஷங்கர் said...

சுமாஸ்லா,

முதன் முறை உங்கள் வலைக்குவருகிறேன்.outlook நன்றாகஇருக்கிறது.Mrs.Faizakaderஇன் வ்லை அட்டகாசம். ஹிம்...பெருமூச்சுதான்.

கவிதை நல்லா இருக்கு.உட்கருத்து வலியுள்ளது. அது ஹைக்கூவில் சேருமா?

நான் ஒரு ஹைக்கூ விரும்பி.தட்டுதடுமாறி ஏதோ கற்றுக் கொண்டேன். பார்க்க கவிதைகள் அதன் விதிகள்.

தயவு செய்து என வலைக்கு வாருங்கள்.ஹைக்கூ(?)நானும் எழுதியிருக்கிறேன்.
சாதா கவிதைகளும் படியுங்கள்.

கண்டிப்பாக கருத்துச் சொல்லுங்கள்.

வாழ்த்தலாம்/சாத்தலாம்.

ஹைகூக்கள்

http://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்

சாதா கவிதைகள்

http://raviaditya.blogspot.com/search/label/கவிதை

கே.ரவிஷங்கர் said...

சுமஜ்லா,

நன்றி வருகைக்கு.ஒரு சின்ன சந்தேகம். நீங்கள்
ஹைக்கூவின் விதிகள் பற்றிய பதிவு பார்த்தீர்களா? அது கிழே கிளிக் செய்தால் முதலில் வரும்.அதிலும் நிறைய ஹைக்கூ வரும்.

ttp://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்

ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் பின்னூட்டம் போட்ட ஹைக்கூ பதிவு ரொம்ப பழயது. அடுத்து
அதெல்லாம் பொய்க்கூ.

ஹைக்கூவில் வரவில்லை. நானே முட்டி மோதி ஒரு மாதிரி கற்றுக்கொண்டேன்.

விதி பற்றிய இரு பதிவுகளை படித்தீர்களா?
சொல்லுங்கள்.

//நான் எழுதியது ஹைக்கூ அல்ல, மாற்றி விடுகிறேன்.//

மன்னியுங்கள். அது இருந்துவிட்டு போகட்டும்.தயவு செய்து ஒன்றும் செய்யாதீர்கள்.
நான் ஒன்றும் ஹைக்கூ புலவன் அல்ல.

படித்தீர்களா சொல்லுங்கள். அது போதும்

நன்றி

சுஹைனா said...

படித்தேன் சகோதரரே! இவ்வளவு அருமையாக, ஹைக்கூவுக்கு இலக்கணம் எழுதியிருக்கிறீரே என்று வியந்தேன். எல்லாம் படித்து விட்டு தான் கீழே வந்தேன். அதில், ரத்தத்துடன் கலந்த தயிர் சாதம் என்னை மிகவும் பாதித்தது, அதனால், அதற்கு உடனே பின்னூட்டம் கொடுத்தேன்.

அது மட்டுமல்ல, உங்க எல்லா சிறுகதை மற்றும் கவிதைகளும் படித்தேன், சுவைத்தேன், இன்னமும் ஜீரணம் ஆகவில்லை.

மாற்றி விடுகிறேன் என்று நான் சொன்னது கவிதையை அல்ல. அதனால் தான் ஹைக்கூ என்பதை, ஹை! கூவுதே!! என்று மாற்றி விட்டேன்.

இனி இது போல் யாரும் எதுவும் சொல்ல முடியாதல்லவா?

மற்றபடி நான் மரபுக் கவிதை தான் அதிகம் எழுதுவேன். படித்தால் அதில் ஒரு ராகம் வரும்.

அதை சைடில் உள்ள அறுசுவையில் வெளியான கவிதை என்ற லின்க்கில் பார்க்கலாம்.

கவிதை கேட்க வாருங்கள் என்ற என் ப்ளாகில் அப்டேட் செய்கிறேன், என் வாய்ஸுடன். இப்போ குட்டீஸுக்கு லீவு என்பதால், பதிவு செய்ய முடியாதபடி, வீட்டில் எந்நேரமும் இரைச்சல். அதான் கொஞ்சம் பெண்டிங்.

கே.ரவிஷங்கர் said...

நன்றிகள் கோடி சகோதரி.

//ஹைக்கூவுக்கு இலக்கணம் எழுதியிருக்கிறீரே என்று வியந்தேன்//

நான் விதிக்கவில்லை.நெட்டில் படித்து தெரிந்துக் கொண்டது.அதைத்தான் எழுதினேன்.கடைசியாக
சுஜாதா எழுதியதும் படித்தது.எல்லாவற்றையும்
summarise செய்து எழுதியது.நான் எழுதவில்லை.

ஒன்று தெரியுமா சிலதுதான் உண்மையான ஹைகூக்கு நெருங்கிவரும்.

//அது மட்டுமல்ல, உங்க எல்லா சிறுகதை மற்றும் கவிதைகளும் படித்தேன், சுவைத்தேன், இன்னமும் ஜீரணம் ஆகவில்லை.//

Bonus? நன்றி. எப்போது என் வ்லைக்கு வந்தாலும்
என் பதிவைப் பற்றி ஒரு வரி(பூச்செண்டோ/கல்லோ) போட்டு விட்டு போய்விடுங்கள்.
ஊக்கமாவேன்.


நன்றி.


பல இடங்களில் படித்துத் தெரிந்து கொண்டது.

தமிழ்குறிஞ்சி said...

தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

subithaskavithaigal said...

ஏக்கத்தின் வலி.