Monday, June 1, 2009

பிளாக் எழுதுபவர்களுக்கு...


இதை தங்கள் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி!

போன வாரம் எனக்கு ஒரே தொல்லைங்க! என்னன்னா, என் ப்ளாகில் எந்த லின்க்கை க்ளிக்
பண்ணினாலும், கீழே காணும் operation aborted எர்ரர்!

OK கொடுத்தால், Page Cannot be Displayed என்று வந்து விடுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எதேச்சையாக இதுக்கு ஒரு வழி கண்டுபிடித்தேன். ப்ளாகின், லே அவுட்டில், edit html பகுதிக்குப் போய், கீழ்கண்ட ஸ்கிரிப்ட்டை நீக்கி விட்டேன். விட்டது தொல்லை.

<script type="text/javascript"> BLOG_CMT_createIframe('<data:post.apprpcrelaypath/>', '<data:post.communityid/>'); </script>

ஆனால், என் ப்ளாகில், கமெண்ட் ஆப்ஷன் வேலை செய்யவில்லை. மீண்டும், இந்த code கொடுத்தால் கமெண்ட் வேலை செய்கிறது, ஆனால் எர்ரர் வருகிறது. சரி என்று settings போய் comments டேப்பின் கீழ், embeded below post என்பதற்கு பதில், popup window என்பதை செலக்ட் செய்தேன். இப்போ, popup window ல் கமெண்ட் ஆப்ஷன் வேலை செய்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், சமீபத்தில், பல ப்ளாகுகள் delete ஆகி இருக்கின்றது. அப்படி எதாவது ஆகி விட்டால், என்ன செய்வது? எப்படி போஸ்ட் எல்லாம் எடுப்பது?

நாம் போஸ்ட் செய்யும் போது நமது போஸ்ட்டை ஈமெயில் மூலம் வர செய்து கொண்டால், retrive செய்வது சுலபமாக இருக்கும். அதற்கு, settings tabல், Email&Mobile என்ற tab ல், Blog send address என்னும் பாக்ஸில், உங்க மெயில் ஐடியை கொடுத்து விடுங்கள். இப்போ, இனிமேல் செய்யும் எல்லா போஸ்ட்டிங்கும், இந்த ஈமெயிலுக்கு வந்து விடும். சரி, இதுவரை, போஸ்ட் பண்ணியதை எப்படி சேமிப்பது? அதற்கும் வழி இருக்கிறது!

சுலபமான வழி இதோ!

Settings Tab ன் கீழ் இருக்கும், Basic என்ற sub tab ன் கீழ், Export Blog, Import Blog, Delete Blog என்று இருக்கும். அதில், Export Blog என்பதை க்ளிக் செய்யுங்கள். பயப்பட வேண்டாம், இதனால், உங்க ஒரிஜினல் ப்ளாகுக்கு ஒன்றும் ஆகாது. இப்போ கீழே காணும் விண்டோ தோன்றும்.

இதில், Download Blog என்பதை க்ளிக் செய்து, Save செய்து கொள்ளுங்கள். அது XML file ஆக Save ஆகி விடும். இந்த ஃபைலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ, உடனே நீங்க Duplicate Blog Create பண்ணலாம். அல்லது, ப்ளாக் delete ஆகி விட்டால், பிறகும் இந்த ஃபைலை கொண்டு செய்யலாம். எப்படி செய்வது?

புது ப்ளாக் ஒன்று உருவாக்குங்கள். அப்பொழுது, கீழ்கண்ட விண்டோ தோன்றும் போது, கீழே Import your Blog என்ற தலைப்பின் அருகில், Import Blog Tool என்று இருப்பதை க்ளிக் செய்தால், XML file அப்லோட் செய்ய கேட்கும்.
ஏற்கனவே Save செய்து வைத்துள்ள ஃபைலை அப்லோட் செய்யுங்கள். இப்பொழுது, எல்லாவற்றையும் போஸ்டிங் செய்யட்டுமா? அல்லது draft ஆக Save செய்யட்டுமா? என்று கேட்கும். விரும்பிய ஆப்ஷனைக் கொடுத்தால், புது ப்ளாக் பழைய போஸ்டிங்குடன் உருவாகிவிடும்.

என்னுடைய Spare Blog பார்க்க. இதில், நான் எல்லா போஸ்டிங்கையும் draft ஆக வைத்திருக்கிறேன்.

-சுமஜ்லா.

28 comments:

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

சிந்தா மணி said...

சுப்பருங்க

கிரி said...

எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது..ஆனால் மற்ற உலவிகளில் சரியாக உள்ளதால் சரி என்று விட்டு விட்டேன்..

உங்கள் தகவலுக்கு நன்றி ..

இதை விரைவில் மைக்ரோசாப்ட் சரி செய்யும் என்று நம்புகிறேன்

டிவிஎஸ்50 said...

உங்களின் இந்த இடுகை மூலம் பிளாக்கரில் வருகின்ற இந்த பிழையை அறிந்து கொண்டேன். அறிய செய்தமைக்கு மிக்க நன்றி. எனக்கும் இந்த பிழை வந்தது. பெரும்பாலான பிளாக்குகளுக்கு இந்த பிழை வருகிறது.

இதனை எப்படி சரி செய்வது என்று ஒரு இடுகை எழுதி உள்ளேன். அதற்கான லிங்க்

Bleachingpowder said...

operation abort error எனக்கும் ஒரு வாரமா உயிர எடுக்குது. இப்பொ நெருப்பு நரிக்கு மாறீட்டேன். ஆனா நெருப்பு நரியில font அவ்வளவு தெளிவாயில்ல

Bleachingpowder said...

operation abort error எனக்கும் ஒரு வாரமா உயிர எடுக்குது. இப்பொ நெருப்பு நரிக்கு மாறீட்டேன். ஆனா நெருப்பு நரியில font அவ்வளவு தெளிவாயில்ல

ஆ.ஞானசேகரன் said...

எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு அதனால் இப்பொழுது Firefox பயன்படுத்துகின்றேன்..

கலையரசன் said...

எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு..
இப்போ நீங்க சொன்னது போல செய்தேன்..
நன்றி..

அன்புடன் அருணா said...

அப்பாடா!! இப்போதான் எனக்கு நிம்மதியாயிருக்கு...நான் ஏதோ என் வலைப்பூ மட்டும் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுதோன்னு நினைச்சுக்கிட்டு அதை மாற்றி இதை மாற்றி ஏதோதோ பண்ணிக்கிட்டு இருக்கேன்.....இது பொதுவான பிரச்னைன்னா சரி ஏதாவது தீர்வு வரும்!
இங்கே பாருங்க!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/

VANJOOR said...

எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது..


உங்கள் தகவலுக்கு நன்றி ..

சென்ஷி said...

பயனுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி!

ஜுர்கேன் க்ருகேர்..... said...

thanks

Gowripriya said...

மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி

SUMAZLA/சுமஜ்லா said...

யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில், இந்த பதிவை இணைத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

டிவிஎஸ்50, பிளீச்சிங் பவுடர்னு, எப்படியெல்லாம் ரசனையா பேர் வெச்சிருக்காங்க பாருங்க!

எனக்கு எல்லாரும் நன்றி தெரிவிச்சு இருக்கிங்க, அதுக்கு நான் எப்படி மறுபடியும் நன்றி சொல்ல? அதுனால, கொஞ்சம் மாத்தி சொல்கிறேன், தேங்க்ஸ்!

எஸ்க்புளோரர் தவிர வேறு எந்த உலவியிலும் இந்த பிரச்சினை வருவதில்லை என்பது உண்மைதான்.
நாம பயர் பாக்ஸ் பயன்படுத்தினாலும், நம்ம வாசகர்கள் பயன்படுத்தனுமே?

டிவிஎஸ்50 சொன்னது போல, பக்கத்தின் கீழ் பகுதிக்கு ஃபாலோவர்ஸ் லிங்க்கை கொண்டு போய் விட்டால், பிரச்சினை தீர்கிறது. இதை இதே பிரச்சினை உள்ள, http://hajvilakkam.blogspot.com என்ற என்னுடைய இன்னொரு ப்ளாகில் டெஸ்ட் செய்து பார்த்தேன். சரியாகி விட்டது.

எனக்கு தமிழிஷில் நிறைய ஓட்டளித்து, முகப்புப் பக்கத்தில் வரவைத்த எல்லா நண்பர்களுக்கும் நன்றிங்க!

த.ஜீவராஜ் said...

பயனுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி!

//யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில், இந்த பதிவை இணைத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!//


வாழ்த்துக்கள் நண்பரே

நசரேயன் said...

நல்ல தகவல்

SUMAZLA/சுமஜ்லா said...

ஜீவா சார்! வாழ்த்தியமைக்கு நன்றி!

///நல்ல தகவல்/// ஆமாங்க நானும் நிறைய ஃபோரம்களில் தேடி கிடைக்காமல், கடைசியாக சொந்த முயற்சியில் ஒரு தற்காலிக தீர்வு கண்டுபிடிச்சேன்.

Anbu said...

சுப்பருங்க

" உழவன் " " Uzhavan " said...

நன்றிகளும் வாழ்த்துக்களும்!

Shafi Blogs Here said...

நான் இந்த ப்லொக் ஏரியாவுக்கு புதுசுங்க...உங்க டிப்ஸ் எல்லாத்துக்கும் சல்யூட்டுங்க.

Mrs.Menagasathia said...

சூப்பர் + வாழ்த்துகள் சுகைனா!!

SUMAZLA/சுமஜ்லா said...

அட மேனகா! அங்க உங்க பிரியாணியை பார்த்து, நாவில் நீர் ஊற ஓட்டுப் போட்டு விட்டு, இங்கு வந்து பார்த்தால், நீங்க எனக்கு ஓட்டு போட்டிருக்கீங்க! தேங்க்ஸ்ங்க!

சஃபி சார் எல்லாம் அனுபவம் தான். நானும் சீரியஸா ப்ளாகிங் செய்ய ஆரம்பித்து, நான்கு மாதம் தான் ஆகிறது. நீங்களும் சீக்கிரம் கத்துக்குவிங்க!

Jaleela said...

ம்ம்ம் கலக்குங்க கலக்குங்க‌ சுகைனா.

//யுத்ஃபுல் விகடன் குட் பிளாக் பகுதியில் இனைத்துள்ளதற்கு வாழ்த்துக்கள்.//

ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க, என் போல பிளாக் பற்றி சரியா தெரியாதவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

பொன்மலர் said...

good post.

http://ponmalars.blogspot.com

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, யூத்புல் விகடனில் வரும், என்னுடைய இரண்டாவது பதிவு இது. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது!

பொன்மலருக்கும் நன்றி!

நல்ல வாசகர்கள் இருப்பதால் தான், எழுத ஆர்வமே வருகிறது.

Prema said...

nanree

VISARA said...

romba nalla seithi.enakkum intha maathiri troble vanthathu ..

நேசன்..., said...

Your post deserves to come in Youthful Vikatan.Congrats & Keep going!.....