ஏறாது பில்லென்று,
பட்டம் பகலில்
எரிந்த மின்விளக்கை
டப்பென அணைத்த,
டீன்-ஏஜ் மகன்,
“நாம கட்டாவிட்டாலும்
கவர்ன்மெண்ட் காசு
வீணாக்கக் கூடாது!”
வேதாந்தம் பேசினான்!
அன்றிரவு தன்னறையில்
விளக்கணைக்க அவன் மறக்க,
“இது மட்டும் சரியா” என
தட்டிக் கேட்ட தாயிடம்,
பட்டென சமாளித்தான்,
“அதுக்கென்ன செய்வது?
தெருவிளக்குக் கூடத்தான்
விடிய விடிய எரியுது!
அதுவும்
கவர்ன்மெண்ட் காசு தானே?!”
-சுமஜ்லா.
Tweet | ||||
12 comments:
நான் தான் ஃப்ர்ஸ்ட்!!
ஹா ஹா.. நல்லா காட்சிப் படுத்தி இருக்கீங்க...
இத குசும்புன்னு சொல்ரதா...சேலஞ்சுன்னு சொல்ரதா, இந்த வயதில் எந்த அறிவுரையும் 'அறு உரையாக' தோனும்.
எளிய கவிதை நடை.
நானும் இங்கே வந்து ஏதோ கற்றுக்கொள்கிறேன். நன்றிங்க
தேங்க்ஸ் முதல் கமெண்ட் தந்த ஷஃபிக்கும், எனக்கு ஓட்டுப் போட்ட கடைக்குட்டிக்கும்!
நல்ல சமாளிப்புஃபிகேசன்
சாரி ஒரு வோட்டுதான் போட முடிஞ்சுது.
தேங்க்யூ நவாஸ்!ஓட்டு அது இதுனு நாம எல்லாம் அரசியல்வாதிங்க ரேஞ்சுக்கு ஆகி விட்டோம் பார்த்தீங்களா?
என்னது ஓட்டா...இங்கேயுமா ஸ்டார்ட் பன்னிட்டாங்களா? இது புதுசாவுல இருக்கு. சரி..சரி போக போக நம்மளும் இந்த அரசியல் கத்துக்குவோம்னு நினைக்கிறேன்.
அது என்ன விமர்சித்து விட்டு அல்லது வோட்டு ...........
ரெண்டுல ஒன்னு பண்ணினா போதுமா, இல்ல ரெண்டும் வேணுமா
ஹா ஹா ஹா. சும்மா தமாஷு
அல்லது - தூக்குங்க இதை
அரசியல் இல்லை இது, அரசி இயல். அதாவது, எந்த ஒரு பெண் ப்ளாகரும் இந்த துறையில் அரசியாக இருக்க விரும்பும் இயல்(நான் என்னைச் சொல்லலைப்பா)
நவாஸ், இப்ப ஓக்கேவா பாருங்க.
சுமஜாச்சி! சூப்பர்! முனாஃப் காக்கா சொன்னரு "டேய் விடுங்க்கடா என் மொவ சிரிக்க சிரிக்கவும் எழுதும். எப்ப பார்த்தாலும் கம்பியூட்டரை பார்த்துகிட்டு'
இது குசும்பு இல்லே நாங்க சமாளிஃபிகேஷன் என்று சொல்லுவோம்
ரொம்ப குசும்புதான்.. அட உங்களுக்கு இல்லைங்க..அந்தப் பயலுக்கு :-)
சிம்ளி சூப்பர்ப்...
மேடம்.. தமிழ்மண பரிந்துரைக்கான வாக்களிக்கும் சுட்டியை எப்படி வலையில் இணைப்பது??
Post a Comment