தன் பிள்ளைகள் செய்யும் குறும்புகளைப் பதியலாமா? அதை எல்லாரும் ரசிப்பார்களா? என்று இங்கே சூடா விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது, நம்ம மக்களைப் பற்றி வேண்டாம், அவர்கள் சொன்ன கதையையாவது பதியலாம் என்று எனக்கு தோணிச்சு.
போன வாரம், எல்லா பிள்ளைகளும், ஆளுக்கொரு கதையும் ஜோக்கும் சொந்தமாக எழுதிக் கொண்டு வரும்படி வகுப்பில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் 13 வயது மகள் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை நான் மொழி பெயர்த்திருக்கிறேன், படியுங்கள்:
என் மகள் எழுதிய கதை:
ரகு, ஆபீஸ் முடிந்து தாமதமாக வீடு திரும்பினான். அவன் மனைவி, அவனை வெளியே அழைத்துச் செல்லும்படி, நச்சரித்தாள். சலிப்பாக ஷாப்பிங்கையும் முடித்து விட்டு வந்து படுத்தான்.
அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது; அதாவது, நமக்கு நேரமே பற்றவில்லையே, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டான்.
கடவுள் அவன் முன் தோன்றி இனி ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்று வரம் தந்து மறைந்தார்.
வழக்கம் போல ஒரு நாளைக்கு 9 மணி நேரம் ஆபீஸ் போனான். நிறைய ஓய்வு கிடைத்தது. ஆனால், ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிட்டான். இரண்டு மடங்கு நேரம் தூங்கினான்.
இப்படியாக, செலவு எகிறி, அவன் சம்பளம் 15 நாட்களில் தீர்ந்து விட்டது. அவன் கடவுளிடம் இரு மடங்கு சம்பளம் கேட்டான்; அதற்கு கடவுள், இரு மடங்கு வேலை செய்ய வேண்டும் என்று சொல்ல, ஒத்துக் கொண்டான் ரகு.
அப்போ கடவுள் சொன்னார், 48 மணி நேர நாளில் இரு மடங்கு உழைப்பதும், 24 மணி நேரத்தில் ஒரு மடங்கு உழைப்பதும் ஒன்று தான் என்று.
ரகு, தன் தவறை உணர்ந்தான். அப்போ, அவன் மனைவி காபியுடன் எழுப்ப, அவனுடைய கனவை எண்ணி சிரித்துக் கொண்டே, இனி ஒரு போதும் நேரமின்மைக்காக குறைபடமாட்டேன், என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
இது என் மகள் எழுதிய ஜோக்:
கடவுள், சைத்தானுக்கு தண்டனை தருவதற்காக மின்சார நாற்காலியில் உட்காரச் சொன்னாராம். அதற்கு சைத்தான் சொன்னதாம், “கொஞ்சம் பொறுங்க எலக்ஷன் முடியட்டும்” என்று! (எலக்ஷன் முடிந்தால் பவர்கட் ஆரம்பித்து விடுமே)
எப்படிங்க?! எதிர்காலத்து பிளாகர் உருவாகிட்டு இருக்காரோ?! (இது கூட தப்புனு யாராவது கச்சை கட்டிக்கிட்டு வந்திருவாங்களோனு எனக்கு பயமா இருக்குங்க!)
-சுமஜ்லா.
Tweet | ||||
18 comments:
சுமஜாச்சி மகளா கொக்கா? சூப்பர். அதுவும் அந்த ஜோக் வெரி நைஸ்! என் வாழ்த்துக்கள்!
நல்லா இருக்கு.
வாவ்! கலக்கி இருக்காங்களே! வாழ்த்துக்கள்!
Hi
My daughter Has an talent show on july 7th .anyone help me on this.pls guide me on this.different or creative sollungo
//இது என் மகள் எழுதிய ஜோக்:
கடவுள், சைத்தானுக்கு தண்டனை தருவதற்காக மின்சார நாற்காலியில் உட்காரச் சொன்னாராம். அதற்கு சைத்தான் சொன்னதாம், “கொஞ்சம் பொறுங்க எலக்ஷன் முடியட்டும்” என்று! (எலக்ஷன் முடிந்தால் பவர்கட் ஆரம்பித்து விடுமே)
எப்படிங்க?! எதிர்காலத்து பிளாகர் உருவாகிட்டு இருக்காரோ?! (இது கூட தப்புனு யாராவது கச்சை கட்டிக்கிட்டு வந்திருவாங்களோனு எனக்கு பயமா இருக்குங்க!)//
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
கலக்குறாங்க
ஜோக் சூப்பர் சுகைனா,மகளுக்கு வாழ்த்துக்கள்.
//புலிக்கு பிறந்தது பூனையாகுமா?//கலக்குங்க..
வருங்கால எழுத்தாளினி வாழ்க
என் மகளுக்கு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் தேங்க்ஸ்ங்க!
அப்பப்ப எதாவது சொல்லி, இத ப்ளாகில போடுங்கன்னு சொல்லுவா. நான் ரொம்ப சைல்டிஷா இருக்குனு சொல்லிருவேன். இது கொஞ்சம் நல்லா இருந்தது. அதான் அவ ஆசைப்படி போட்டேன்.
அவளும் இந்த பின்னூட்டமெல்லாம் படித்தாள். ரொம்ப சந்தோஷப்பட்டாள்.
கதையும் சூப்பர், காமெடியும் சூப்பர்
அட்டகாசமான கதை. வாழ்த்துக்கள் உங்கள் செல்ல மகளுக்கு.
அன்புத் தோழியே.. உங்களின் எழுத்தாற்றலைப் பாரட்டும் விதமாகவும், மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் உங்களூக்கு பட்டம்பூச்சி விருதை அளிக்கலாம் என எண்ணுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் தானே?
ஹா ஹா புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
அம்மா பொண்ணும் சேர்ந்து கலக்குங்குங்கள்.
ரொம்ப அருமையா இருக்கு/ ஜோக்கும் தான்
///கதையும் சூப்பர், காமெடியும் சூப்பர்///
நீங்கள் சொன்னதை என் மகளிடம் சொல்லி விட்டேன்.
உழவன், உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.
ஜலீலாக்கா, ரொம்ப தேங்க்ஸ். இன்று (13.6.2009) 13வது பிறந்தநாள். பிறந்த நாள் அன்று உங்கள் எல்லாரின் வாழ்த்தும் அவளுக்குக் கிடைத்த பரிசு. மிகவும் சந்தோஷப்பட்டாள்.
அம்மாடியோவ்.......குடும்படத்தோட வந்து பட்டைய கிளப்புராங்கடோய்!! சூப்பரோ சூப்பர்.
தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை.அறிவான குழந்தைகள்.
கதை மிக நன்று
ஷஃபி, ஆசியா அக்கா, சுரேஷ், உங்க எல்லார் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க!
கதை வெகு அருமை
ஆனால் சார் பிளீஸ்
இதை பார்த்துட்டு முடிஞ்சா உங்க ஜோக்குக்கு சிரிங்க
http://www.youtube.com/watch?v=3EcvcfTbHLM
கதை வெகு அருமை
ஆனால் சார் பிளீஸ்
இதை பார்த்துட்டு முடிஞ்சா உங்க ஜோக்குக்கு சிரிங்க
http://www.youtube.com/watch?v=3EcvcfTbHLM
Post a Comment