Saturday, June 13, 2009

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்...

தற்சமயம், 6 வயதாகும் மகன், லாமின், அவனது ரெண்டரையாவது வயதில், அவனுடைய கணினி திறமைக்காக, பல பத்திரிக்கைகளில் சொல்லப்பட்டான். L.K.G. லீவில் MS Office கேர்ஸ் MICE ல் முடித்தான். U.K.G. லீவில், E-Office கோர்ஸ், Aptechல் படித்தான்.

அதி மேதாவி போல அவனை நடத்தியது பிடிக்காமல், போன வருடம் பள்ளி மாற்றி விட்டேன். புது ஸ்கூலில் அவனைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. இருந்தாலும், எப்படியோ தெரிந்து கொண்டு, போன குழந்தைகள் தினம் அன்று அவனுக்கு குழந்தை மேதைக்கான கப் கொடுத்து கவுரவித்தார்கள். தற்போது, அவன் படிப்பு பாதிப்பதால், அவனை கம்ப்யூட்டரில் அமர நான் அனுமதிப்பதில்லை. விட்டால் நெட்டில் புகுந்து சாட்டிங் வரை போய் விடுவான்.

அவனுக்கு அப்போ வயது 2.25. ஒரு நாள் கம்ப்யூட்டரில் டெஸ்க்டாப் வால்பேப்பர் மாற்றப்பட்டிருந்தது. யார் மாற்றியது என்று எனக்குப் புரியவில்லை. கடைசியாக, சரியாக பேச்சு கூட வராத என் மகனைக் கேட்டால், அநாயசமாக மாற்றிக் காண்பிக்கிறான். பெரிய மனிதன் போல, மவுஸைக் கையாளுவதைப் பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியம்.

பவர்பாயிண்ட் பேசிக்ஸ் ஓரிரு நாட்களில் கற்றுக் கொண்டான். நான் சிஸ்டமில் உட்காரும் போது, அவன் என் மடியில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்து பார்த்து பழகி விட்டான் என்று புரிந்தது. இப்போ ஆறு வயதில் செய்வது ஒரு பெரிய விஷயமே இல்ல. ஆனால், பேசக் கூட சரியாக பழகாத, ரெண்டேகால் வயதில், விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் முழுவதையும் லாவகமாக கையாளுவது கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அவனைப் பற்றி 1-15 அக்டோபர் 2006 சுட்டி விகடனில் வந்தது கீழே:

அவனைப் பற்றி, 6/9/2006 தேதியிட்ட, தினமலரில் வெளிவந்தது கீழே:

22/7/2006 தேதியிட்ட தினதந்தி இளைஞர் மலரில் வெளியானது கீழே:

5/9/2006 ல் THE HINDU வில் வெளியான கட்டுரையின் புகைப்படம் கீழே:

இதில் தினமலர் தவிர மற்ற மூன்றும், ஆன்லைன் எடிசனிலும் வெளியாகி இருந்தது. அதில் ஹிண்டு தவிர மற்ற இரண்டு லின்க்களும் தற்சமயம் இல்லை. ஹிண்டுவின் லின்க் இதோ:

http://www.hindu.com/2006/09/05/stories/2006090510700400.htm
-சுமஜ்லா.

24 comments:

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். இத்தகைய திறமை எல்லாம் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் என்றுதான் சொல்லவேண்டும்.

கண்ணு பட்டுடப் போகுது. பிள்ளைக்கு மிளகா சுத்திப் போடுங்க சுமஜ்லா. எங்க அம்மம்மா இப்படித்தான் சொல்லுவாங்க

வினோத் கெளதம் said...

பெரிய ஆளை வருவாங்க உங்க பையன்..:)

தேவன் மாயம் said...

உங்களைப்போல் 10 மடங்கு இருப்பான் போல!
மேதைதான்!!

தேவன் மாயம் said...

மிக அரிய சக்தி இது!
மிகவும் நல்ல முறையில்
பயன்படுத்தவும்!!
பெரிய விஞ்ஞானியாக
வரும் வாய்ப்புகள் உள்ளது!!

Thamiz Priyan said...

ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும்.. மகிழ்ச்சியா இருக்கு!
நான் ஏற்கனவே இதை பார்த்துட்டேனே...
லாமினுக்கு இறைவன் இன்னும் அறிவையும், ஆற்றலையும் அளிக்க வாழ்த்துக்கள்!

லதானந்த் said...

வாழ்த்துக்கள்

கடைக்குட்டி said...

புகழனைத்தும் இறைவனுக்கே...

எது நடந்தாலும் அவனாலேன்னு நெனச்சா நமக்கு பெருமையும் கவலையும் ஏன் ???

நீங்களும் இறைவனை மட்டுமே நினைப்பவராக இருக்க விழைகிறேன்

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய தமிழ்பிரியருக்கும், லதானந்த் சாருக்கும் நன்றி!

//எது நடந்தாலும் அவனாலேன்னு நெனச்சா நமக்கு பெருமையும் கவலையும் ஏன் ???

நீங்களும் இறைவனை மட்டுமே நினைப்பவராக இருக்க விழைகிறேன்//

அரஃபாத் சார்! நீங்கள் சொல்வது உண்மை தான். பெருமை என்று ஒன்று வந்திருந்தால், அது 2006 லேயே முடிந்து விட்டது. தற்சமயம், நான் இதை ஒரு தகவலாகவே சொன்னேன்.

தன் மன்(ள்) கிறுக்கியதையும், வெட்டியதையும், ஒட்டியதையும் கூட, சில ப்ளாக்களில் தாய்மார்கள், பெருமையாக, சுவையாக சொல்லும் போது, நாம் இதை நம் சக தோழர்களாகிய ப்ளாகர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தான் இந்த பதிவு!

ஒருவரின் திறமையை, வெளிப்படுத்தினால், அதற்கு பெயர் பெருமையா? அப்போ ப்ளாகில் எழுதுவது கூட பெருமைக்கா? இறைவனை மட்டுமே 24 மணி நேரமும் யாராலும் நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? இது தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

SUFFIX said...

வாழ்த்துக்கள் அம்மனி, நீங்கள் கொடுத்த ஊக்கம் தான் இவ்வாறு சாதிக்கத்தூன்டியிருக்கும். KEEP IT UP..!!

கடைக்குட்டி said...

அய்யய்யோ.. நான் சொன்னது உங்கள காயப் படுத்தி இருந்தா மன்னிக்கவும் :..


தெளிவு படுத்திவிடுகிறேன் அக்கா...

அல்ஹம்துலில்லாஹ்
(புகழனைத்தும் இறைவனுக்கே...) அப்டீன்னு சொன்னது உங்க மழலை செல்வத்திற்காக...

//
எது நடந்தாலும் அவனாலேன்னு நெனச்சா நமக்கு பெருமையும் கவலையும் ஏன் ???

நீங்களும் இறைவனை மட்டுமே நினைப்பவராக இருக்க விழைகிறே

//

இது ஒரு சமுதாயப் பார்வையுடன் சொல்லப்பட்டது.

கண்டிப்பாக தமி மனிதத் தாக்குதல் இல்லைக்கா...



//ஒருவரின் திறமையை, வெளிப்படுத்தினால், அதற்கு பெயர் பெருமையா? அப்போ ப்ளாகில் எழுதுவது கூட பெருமைக்கா?//

நீங்கள் தவறாகப் புரிந்துள்ளீர்கள் அக்கா...

.

கடைக்குட்டி said...

ஒரு வேளை என் கருத்து இந்த இடத்திற்க்கு பொருந்தா விட்டால் மன்னிக்கவும்

அதனை நீக்கி விடவும் :-)

என்னை உங்கள் மனதிலிருந்து நீக்க வேண்டாம் ... :-)

கடைக்குட்டி said...

//இறைவனை மட்டுமே 24 மணி நேரமும் யாராலும் நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? //

ஆனால் ஏனக்கா முடியாது ???

நமக்கு பசிக்கிறது.. பசி என்னும் அழகிய உணர்வைத் தருபவன் அவன்...

மூச்சு விடுகிறோம்... அந்தக் காற்று நாம் சம்பாதிப்பதா??

அவந்தானேக்கா நம்மை 24 மணி நேரமும் வழி நடத்துகிறான்..

நாம் அவனை நம்மையும் அறியாமல் பின்பற்றுகிறோம். நினைத்துக் கொண்டிருக்கிறோம்...

என் கருத்தைப் பதிவு செய்யவே சொன்னேன்.. இதில் தர்க்கத்திற்க்கு இடமில்லை...

அன்புடன்
கடைக்குட்டி :-)

SUMAZLA/சுமஜ்லா said...

கோபமெல்லாம் ஒன்றுமில்லை.
//என்னை உங்கள் மனதிலிருந்து நீக்க வேண்டாம் ... :-)//

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? அக்கா என்று சொல்லி விட்ட பிறகு தம்பியை யாராவது வெறுப்பார்களா?

நானும் பாரம்பரியமிக்க இஸ்லாமிய பாசறையிலிருந்து வந்தவள் தான்.

Unknown said...

கண்டிப்பாக பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயமே. குட்டிப்பையனுக்கு பாராட்டுகள்.

கணினியில் ஆர்வமாக இருப்பவரை படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக கணினி பக்கமே செல்ல விடாமல் ஒரு சராசரி பெற்றோர் செய்யும் தவறை நீங்களும் செய்ய வேண்டாம். வருங்காலத்தில் அவர் ஒரு மேதையாக வரக்கூடும், அதற்கு பள்ளிப்பாடம் ஒரு தடையாக அமைந்துவிட வேண்டாம். தவறான வழியில் செல்லாதவாறு வழிநடத்தினால் போதுமானது.

Jaleela Kamal said...

சுகைனா அதியசயம் ஆனால் உண்மை.
உங்கள் சுட்டி பையனுக்கு என் வாழ்த்துக்கள்,
உங்களை விட இரண்டு மடங்கு சுறு சுறுப்பு தான் போங்க.சும்மாவா சொன்னாஙக் அம்மா எட்டடினா குட்டி 16 அடி என்று, கலக்குங்க கலக்குங்க குட்ம்பத்தேடு கலக்குங்க.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

Jaleela Kamal said...

சாரி எழுத்து பிழை
//வருங்கால எழுத்தாளர்களேகலக்குங்க கலக்குங்க குடும்பத்தோடு கலக்குங்க //

Jaleela Kamal said...

சாரி எழுத்து பிழை
//வருங்கால எழுத்தாளர்களேகலக்குங்க கலக்குங்க குடும்பத்தோடு கலக்குங்க //

Jaleela Kamal said...

சாரி எழுத்து பிழை
//வருங்கால எழுத்தாளர்களேகலக்குங்க கலக்குங்க குடும்பத்தோடு கலக்குங்க //

Anonymous said...

என் தோழியின் மகன் என இனி நானும் பறைச்சாற்றிப் பெருமை பேசிக் கொள்வேன்....அவனுக்கு மிகச் சிறந்த எதிர்க்காலம் இருக்கு என்பது இப்போதே வெளிச்சமாகி விட்டது.....விளையும் பயிர் முளையிலேயே தெரியும்......வாழ்த்துகிறோம் அவன் வாழ்வாங்கு வாழ......

நசரேயன் said...

தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி, உங்க பையன் நிச்சயம் பெரிய ஆளா வருவார்

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி!
தமிழரசி, என்னை தோழியாக ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

பிரமிப்பாகவும். மகிழ்வாகவும் உள்ளது. பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி!
எதிர்காலத்தில் மிகப் பெரும் சாதனையாளனாக வர வாழ்த்துக்கள்

Joe said...

ஆச்சர்யமாக உள்ளது. உங்கள் மகன் பெரியளவில் சாதிக்க வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி, ஜோ, உங்க அன்பான வாழ்த்துக்கு!