இந்த பதிவு, யூத்ஃபுல் விகடனின் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளிவந்துள்ளது.
நம்ம ப்ளாகை, எந்த நாட்டின் எந்த ஊரிலிருந்து, யார் எந்த பிரவுசரின் மூலம் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்? அதில் புதியவர் யார்? மீண்டும் மீண்டும் வருபவர் யார்? அவர்கள் எத்துணை பக்கங்கள் பார்க்கிறார்கள்? எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்? எந்த சோர்ஸில் இருந்து வந்தார்கள்? போன்ற அனைத்து விவரங்களையும் நமக்கு துல்லியமாக, அதுவும் இலவசமாகத் தருகிறது, கூகுள் அனாலிடிக்ஸ்.
பதிவர்கள் எல்லாரும், தங்கள் ப்ளாகில் ஏதோ ஒரு ஹிட் கவுண்ட்டர் வைத்திருப்பார்கள். ஆனா அது சும்மா கவுண்ட் மட்டும் தான் பண்ணும். அதுவும் துல்லியமானது என்று சொல்ல முடியாது. அதற்கு நமக்கு உதவுவது தான் கூகுள் அனாலிடிக்ஸ். இனி இதில் எப்படி கணக்கு துவங்குவது என்று பார்ப்போம்.
www.google.com/analytics என்ற தளத்துக்குப் போய், New User Sign Up லின்க்கைக் க்ளிக் செய்யுங்கள். இதில் உங்களுடைய gmail user id and password போதும். உங்க ப்ளாக் உடையது தான் வேண்டும் என்பது இல்லை. எந்த ஜிமெயில் ஐடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்போ, கீழே உள்ளது போல் வரும்.
மேலே காணும் விண்டோவில் தெரியும், sign up என்ற லின்க்கை க்ளிக் செய்யவும். அப்போ, கீழே காணும் விண்டோ திறக்கும். இதில் உங்க வெப்சைட் பெயர் கொடுங்கள். Account Name என்பதில் எதோ ஒரு பெயர் கொடுத்தால் போதும். நம்ம நாட்டின் பெயரையும் டைம் ஜோனையும் செலெக்ட் செய்து, continue கொடுங்கள்.
இப்போ கீழே காணும் பக்கம் திறக்கும். இதில் உங்க பெயர் மற்றும் ஏதோ ஒரு போன் நம்பர், நீங்கள் இருக்கும் நாட்டின் பெயர் கொடுத்து கண்ட்டினியூ கொடுங்கள்.
இப்போ, கீழே இருக்கும் விண்டோவின் கீழ், சிறிய பாக்ஸில் டிக் செய்து, Create New Account பட்டனை அழுத்துங்கள்.
இப்போ, கீழ் காணும் அடுத்த பக்கம் திறக்கும்.
மேலே தெரியும் விண்டோவில் இருக்கும் html code ஐ (கஷ்டமாக இருப்பதாக நினைக்க வேண்டும். இது நாம் ஒரு முறை செய்தால் போதும்) அப்படியே காப்பி செய்து கொண்டு Finish கொடுத்து விடுங்கள்.
இப்போ, http://www.blogger.com/ போய் நம்ம ப்ளாகின் லே அவுட்டில் Add a gadget க்ளிக் செய்து, அதில் Html/JavaScript செலெக்ட் செய்து, அதில் இந்த Code ஐ பேஸ்ட் செய்து சேவ் செய்து விடுங்கள்(தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம்). நம்ம ப்ளாகில் ஒன்றும் தெரியாது.
இது, நாம் எந்த டைம் ஜோன் செலக்ட் பண்ணி உள்ளோமோ அதை பொறுத்து, 24 மணி நேரத்துக்கு ஒரு முறை அப்டேட் ஆகும். ஒரு நாள் கழித்து அடுத்த நாள், www.google.com/analytics செல்லுங்கள். அதைத் திறந்த உடன், கீழ் காணும் விண்டோ தோன்றும்.
இதில் பாருங்கள், மஞ்சள் நிற முக்கோணம் தெரிகிறதல்லவா? அப்படியானால், இன்னும் 24 மணி நேரம் ஆகவில்லை, அல்லது நீங்கள் சரியாக Code install செய்யவில்லை என்று அர்த்தம். OK ஆகிவிட்டால், ஒரு டிக் மார்க் தோன்றும்.
இதில் பாருங்கள். Visits, Average time on Site, Bounce Rate, போன்றவை முகப்புப் பக்கத்திலேயே தெரிகிறது. இன்னொரு வெப் சைட்டுக்கு இன்னொரு அக்கவுண்ட் தேவை இல்லை. ஒன்றே போதும். கீழே, Add Website Profile என்பதைக் க்ளிக் செய்து முன்பு சொன்னது போல, எத்துணை தளங்கள் வேண்டுமானாலும் Add பண்ணிக் கொள்ளலாம்.
இதில், Reports என்று இருப்பதின் கீழ் View Reports என்று இருப்பதைக் க்ளிக் செய்தால், கீழ் காணும் விண்டோ ஓப்பன் ஆகும்.
மேலே காணும் பக்கத்தில், Site Usage, Visitors Overwiew, Map Overlay, Traffic Sources Overview, Content Over view என்று இருப்பதின் கீழ் இருக்கும் View Reports என்பதை க்ளிக் செய்து பார்த்தால், தெளிவான விவரங்கள் கிடைக்கும். அதிலும், வலது புற சைட் பாரில் இருக்கும் பல்வேறு ஆப்ஷன்களின் மூலம், Visitors Loyalty, Recency of Visit, Length of Visit போன்ற பல விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இனி, மும்பையிலோ, ஹைதராபாத்திலோ இருக்கும் உங்கள் நண்பன், ‘தினமும் உன்னோட ப்ளாகை படித்துவிட்டு தான் மறுவேலை’ என்று சொன்னால், அது உண்மையா பொய்யா என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம். நான் தினமும் கட்டாயம் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் பார்ப்பேன். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.
-சுமஜ்லா.
Tweet | ||||
24 comments:
மிகவும் நன்றி தகவலுக்கு
very good information. thanx....
ஏற்கனவே அறிந்த தகவல்தான் என்றாலும் விவரத்திற்க்கு நன்றி.
எந்தெந்த blogspot பார்த்தார்கள் என்பதற்கு லிஸ்ட் தருகிற மாதிரி இருக்கிறதா?
ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க!!!!நன்றீ!!
சுகைனா சூப்பரா விளக்கி இருக்கீங்க.
மிக்க நன்றி
c o o l.. gr8 post
உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் இந்த பண்பு சிறந்தது.பாராட்டுக்கள்.
தகவலுக்கு நன்றி. என்னோட blog இலும் இணைக்கப்போறன்
///ஏற்கனவே அறிந்த தகவல்தான் என்றாலும் விவரத்திற்க்கு நன்றி.///
நானும் ரொம்ப நாளா (ஒரு வருஷமா) இதை உபயோகப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனாலும் புது ப்ளாகர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் பயன்படுமே?!
//எந்தெந்த blogspot பார்த்தார்கள் என்பதற்கு லிஸ்ட் தருகிற மாதிரி இருக்கிறதா?
//
இருக்கிறது! எந்தெந்த ப்ளாக்ஸ்பாட், எந்த எந்த பதிவுகள், எத்துணை முறை பார்க்கப்பட்டன போன்ற விவரங்கள் கிடைக்கும். ஆனால் நம்முடைய ப்ளாக்ஸ்பாட் பற்றி மட்டுமே அறிய முடியும்.
இந்த பதிவை பாராட்டி பதிவு போட்ட எல்லாருக்கும் நன்றி!
இது குறித்து, மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.
நானும் இதைப்பற்றி விரிவாக ஒருமுறை எழுதியிருக்கிறேன். விரும்பினால் இதையும் படித்துக்கொள்ளுங்கள்.
http://www.honeytamilonline.co.cc/2009/02/google-analytics.html
உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் இந்த பண்பு சிறந்தது.பாராட்டுக்கள்
ரொம்ப நளா தேடிட்டு இருந்தேன்கா..
ந
ன்
றி
:-)
முதல்ல வாழ்த்துக்கள் பட்டாம்பூச்சி விருதுக்கு.....இது என் முதல் வருகைப்பா...இந்த பதிவை படித்தேன் நானும் பயன் பெறுவேன்..தங்களைப் பற்றி உழவன் வெகு சிறப்பாக பாராட்டியுள்ளார் அதான் ஓடி வாராமல் தேடி வந்தேன் தோழி.....ஒக்கேப்பா..இனி இடுகையிடும் போதெல்லாம் வருவேன்.....
//இருக்கிறது! எந்தெந்த ப்ளாக்ஸ்பாட், எந்த எந்த பதிவுகள், எத்துணை முறை பார்க்கப்பட்டன போன்ற விவரங்கள் கிடைக்கும். ஆனால் நம்முடைய ப்ளாக்ஸ்பாட் பற்றி மட்டுமே அறிய முடியும்//
பதிலுக்கு நன்றி.தகவல் பரிமாற்றத்தில்
ஏதோ குறை.
நான் கேட்ட கேள்வியின் சாரம்:
உதாரணமாக நேற்று நான் மற்றும் மேல் உள்ள ஐந்து பதிவர்கள் உங்கள் வலைப்பதிவை பார்த்தோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் googleanalytic கிழ்வருமாறு லிஸ்ட் கொடுக்குமா?
visitors:-
1.raviaditya.blogspot.com 11.00a.m
2.naanirakkappokiraen-aruna.blogspot.com/12.15p.m.
3.www.tamilnenjam.org 3.00p.m
4.tamiliniblog.blogspot.com/3.10pm
5.kadaikutti.blogspot.com/4.00pm
இதுதான் நான் கேட்டது.
கார்த்திக் உங்களுடைய விவரத்தைப் படித்தேன் நன்று.
ஃபெரோஸுக்கும் கடைக்குட்டிக்கும் நன்றிக்கு நன்றி!
முதல் வருகை புரியும் தமிழரசியை வருக வருக என்று வரவேற்கிறேன். தங்கள் ப்ளாக் பார்த்தேன். ‘பட்டினிக்கு பிறந்தோம்’ கவிதையை படித்ததும், மனதில் இனம் புரியாத சோகம். எளிய இனிய தமிழில், இவ்வளவு அழகாக அவலச்சுவையை சொல்ல முடியுமா என்று அயர்ந்து போனேன்.
ரவி சார், நான் சொன்னது என்னவென்றால், நான் ஒரு 10 ப்ளாக் ஸ்பாட் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் அத்துனை ரெகார்ட்ஸும் பார்க்கலாம் என்பது தான்.
நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது.
எந்த லின்க்கின் மூலம் வந்தார்கள் என்ற விவரம் தெரியும். அதாவது சிலர் Followers லிஸ்ட் மூலம் வந்திருப்பார்கள். சிலர், youthful vikatan மூலம் வந்திருப்பார்கள். சிலர், தமிழிஷ், மற்றும் தமிழ்மணம் இப்படி! referrer யார் என்பது தெரியும்.
ஒருவரது Blog List விட்ஜெட்டில் நம் ப்ளாக் இருந்து, அதை சுட்டி வந்திருந்தாலும் அது தெரியும்.
என்னுடைய ப்ளாகுக்கு, ஒரு சிலர், தங்கள் ப்ளாகில் லின்க் கொடுத்துள்ளார்கள், தமிழ்பிரியன் சார் உட்பட. இதை கூகுள் அனாலிடிக்ஸ் மூலமாகத் தான் தெரிந்து கொண்டு நன்றி சொன்னேன்.
மற்றபடி நீங்கள் கேட்பது போல லிஸ்ட் வராது. அதாவது, நீங்கள் தான் ரவி ஆதித்யா என்று சொல்லவேண்டுமானால் அதற்கு சிக்ஸ்த்சென்ஸ் வேண்டுமே?!
good post
ஆனா Wordpress analytic s இத விட நல்லாருக்கு
Good information,thxs sumazla!!
நன்றி சுமஜ்லா,
நான் உங்களிடம் எதிர்பார்த்தது கிழ் உள்ள ஒற்றை வரி பதில்தான்.
//நீங்கள் கேட்பது போல லிஸ்ட் வராது//
மீண்டும் நன்றி.
நன்றி தகவலுக்கு
ஒகே, எது எதுகோ சொல்றோம்.,
இதுக்கும் சொல்லுவோம்.....
வாழ்த்துக்கள்!!
//நான் உங்களிடம் எதிர்பார்த்தது கிழ் உள்ள ஒற்றை வரி பதில்தான்.//
பரவாயில்லை. தெளிவாகவும் விரிவாகவும் பதிலளிப்பது என் பழக்கம்.
நீங்கள் சொன்னதைப் படித்த போது எனக்கு ஒன்று தோன்றியது.
அதாவது, நான் உங்கள் ப்ளாகைத் திறக்கிறேன், உடனே அது, http://sumazla.blogspot.com என்று (நீங்கள் கேட்டது போல) பதிவு செய்து கொள்கிறது.
அடுத்த நாள் நான் ஆஃபிஸில் இருந்து, மீண்டும் திறக்கிறேன். என்னை ஒரு நிமிடம் உற்று நோக்கிய கம்ப்யூட்டர் மீண்டும், அதே போல பதிவு செய்கிறது.
இப்போ, ஆஃபிஸில் என் பக்கத்து சீட்டில் இருக்கும் இன்னொரு ப்ளாகர், என் ஸிஸ்டத்துக்கு வந்து, அவரும் பார்க்கிறார். கம்ப்யூட்டருக்கு ஒரே குழப்பம், இப்போ, யார் பேரை பதிவு செய்வது என்று!
மவுஸில் கை வைத்திருப்பவர் பெயரையா? இல்லை உற்று நோக்கிக் கொண்டிருப்பவர் பெயரையா? என்று!
டேக் திஸ் ஜோக் ஈஸிலி! ஓக்கே?!
நல்ல தகவல்.. நானும் இதை add பண்ணிக்கிடுறேன்.
ரொம்ப நன்றி சுகைனா.
நிறைய பேர் பார்வையிடுகிறார்கள், சில பேருக்கு பின்னூட்டம் கொடுக்க முடியல.ஆனால் இதன் மூலம் எத்தனை பேர் வந்துள்ளார்கள் என்று தெரிந்து கொண்டே, உங்கள் விளக்கமான பதிவுக்கு மிக்க நன்றி.
விவரத்திற்கும் பகிர்விற்கும் நன்றிகள்
Post a Comment