Wednesday, June 17, 2009

கவலையும் உவகையும்



“என்னை எல்லாரும்
உதைத்தே சாவடிக்கிறாங்க”
கவலைப்பட்டது ஸ்கூட்டர்.
“உனக்கு பரவாயில்லை,
என்னை மிதிமிதி என்று
மிதிக்கிறார்களே?!”
‘உச்’ கொட்டியது
சைக்கிள்.

சின்னப்பையன் தமிழ்பாடம்
மனனம் செய்துகொண்டிருந்தான்,
“மதியாதார் தலைவாசல்
மிதிக்காதே!”

என்னமோ புரிந்தது போல
இருந்தது சைக்கிளுக்கு,
“அட! எல்லாரும் என்னை
ரொம்ப மதிக்கிறார்கள்
போல் இருக்கிறதே?!”

-சுமஜ்லா

7 comments:

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா எங்கேர்ந்துதான் இந்த மாதிரி யோசனை எல்லாம் வருதோ. நல்லா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

ஹா.. ஹா.. :-) ரூம் போட்டு யோசிப்பீங்களோ.
ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரை ரசித்தேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

ஹேண்டில்பாரை நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன். ஒரு கவிஞருக்கு புரியாததல்ல. படத்தை மாற்றி விட்டேன்.

நசரேயன் said...

நல்ல கற்பனை

ப்ரியமுடன் வசந்த் said...

கற்ப்பனையோ
கற்ப்பனை

SUMAZLA/சுமஜ்லா said...

போன மாதம், பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த போது தோன்றிய கற்பனை இது!

SUFFIX said...

//போன மாதம், பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த போது தோன்றிய கற்பனை இது!
//

பரவாயில்லையே பஸ்ஸில் போகும்போதுகூட யோசிப்பீங்களா?