Thursday, June 25, 2009

பரிசு பணம்


“மம்மி! உங்க ஸ்கூட்டியை ஒருநாளைக்கு நான் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறேன் மம்மி; நிறைய பேர் கொண்டு வராங்க!”

“நீ வேணா பாரு நைன்த் ஸ்டூடண்ட்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க! எல்லாரும் லெவென்த் ட்வெல்த்தா தான் இருக்கும்!”

இனிய இரவுப் பொழுதில் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்தேன். தூங்கி வழியும் கண்களோடு என் குட்டி பையன், இஷ்டமே இல்லாமல் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தான்.

அப்பத்தான் ‘இம்சை’ அரசர் எழுதியிருந்த கமெண்ட்டை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொண்டேன். இதோ:

//56. &&& தாய்மை &&& : சுமஜ்லா
கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!
என்னுடைய மதிப்பெண் 70 / 100//

பரிசு கிடைக்காவிட்டாலும் பரிசு கிடைத்தது போன்ற சந்தோஷத்தோடு, கேட்டேன்,

“சொல்லுங்க! யாருக்கு என்ன வேணும் இந்த பணத்துல?”

மகள்: “எனக்கு இது கூட பணம் போட்டு ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுங்க”

இது எப்படி இருக்குது? பத்து ருபாயைக் கொடுத்து எனக்கு ஒரு லேப்டாப் வாங்கிக் கொடுன்னு சொல்றா மாதிரி!

என்னவர்: “என்கிட்ட, நீ காசு கேட்காம இருந்தினாலே போதும்”

இதுவும் ஒரு வகை எஸ்கேப்பிஸம் தானே!

“சரிங்க மம்மி! நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” மகள் கேட்டாள்.

“நானா... வந்து ரம்ஜானுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான இருக்குது! அதுக்கு எனக்கு ஒரு சேலை வாங்கிக்குவேன்!... இல்லாட்டி, டாடிக்கு கூட பணம் போட்டு ஒரு செல்போன் வாங்கிக் கொடுப்பேன்!... இல்லாட்டி, பையனுக்கும் உனக்கும் புது ஸ்கூல் பேக்!... இல்லாட்டி, தோட்டத்துல சின்னதா ஒரு தாமரைக்குளம் கட்டுவேன்!... இல்லாட்டி.....”

“போதும் மம்மி! போதும்! கண்ணாடி வியாபாரி கற்பனை பண்ணுன மாதிரி இருக்குது! செல்போன் டாடிக்கு வேணாம் மம்மி, எனக்கு வாங்கிக் கொடுங்க!”

“இல்லமா, டாடிக்கு புதுசு வாங்கிட்டா, டாடியோட பழைய செல்போன் உனக்குத் தான்.”

“அப்ப, டாடிக்கே வாங்கிக் கொடுங்க! டாடி... மம்மிக்கிட்ட மறக்காம உங்களுக்கு ஒரு செல் வாங்கிக் கொடுக்க சொல்லிடுங்க டாடி! வேற எதுவும் வாங்கிட போறாங்க!”

வழக்கமா, எனக்கு மேல வாயடிக்கிற என் பையன், கடைசி வரை வாயே திறக்காமல் எழுதிக் கொண்டிருக்க,

“உனக்கு என்னடா செல்லம் வேணும்?” பாசத்துடன் கேட்டேன்.

“எனக்கு தூங்க விட்டா போதும். எனக்கு இப்ப அவசர அவசரமா தூக்கம் வருது”

இந்த பதிலைக் கேட்டவுடன், எல்லாரும் அவசர அவசரமாக சிரிக்க ஆரம்பித்தோம்; நீங்களும் தானே?!

-சுமஜ்லா.

7 comments:

S.A. நவாஸுதீன் said...

குட்டீஸ் கமெண்ட்ஸ் எப்பவுமே ஸ்பெஷல் தாங்க. விமர்சனம் நானும் படித்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

“உனக்கு என்னடா செல்லம் வேணும்?” பாசத்துடன் கேட்டேன்.

“எனக்கு தூங்க விட்டா போதும். எனக்கு இப்ப அவசர அவசரமா தூக்கம் வருது”

குட்டீஸ் கமெண்ட்ஸ் எப்பவுமே ஸ்பெஷல் தாங்க.

Menaga Sathia said...

//என்னவர்: “என்கிட்ட, நீ காசு கேட்காம இருந்தினாலே போதும்”//இங்கையும் அதான் நடக்குது.

குட்டி பையன் கமெண்ட்ஸ் சூப்பர்!!

துபாய் ராஜா said...

//ரம்ஜானுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான இருக்குது! அதுக்கு எனக்கு ஒரு சேலை வாங்கிக்குவேன்!... இல்லாட்டி, டாடிக்கு கூட பணம் போட்டு ஒரு செல்போன் வாங்கிக் கொடுப்பேன்!... இல்லாட்டி, பையனுக்கும் உனக்கும் புது ஸ்கூல் பேக்!... இல்லாட்டி, தோட்டத்துல சின்னதா ஒரு தாமரைக்குளம் கட்டுவேன்!... இல்லாட்டி.....”//

ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

கடைக்குட்டி said...

ஹா ஹா..

வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா...

அப்போ இந்தத்தம்பிக்கும் அந்தப் பணத்துல ட்ரீடா??? ஹய்யோ ஹய்யோ:-)

அன்புடன் அருணா said...

எங்களுக்கும் ஏதாவது ப்ளான் பண்ணுங்க!

SUMAZLA/சுமஜ்லா said...

நவாஸுதீன், மேனகா, நீங்கள் சொல்வது போல, குட்டீஸ் கமெண்ட்னால, பரிசு கிடைக்காட்டியும் கிடைத்த சந்தோஷம்.

துபாய் ராஜா, உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி! இறைவன் போதுமானவன்!

//அப்போ இந்தத்தம்பிக்கும் அந்தப் பணத்துல ட்ரீடா??? //

//எங்களுக்கும் ஏதாவது ப்ளான் பண்ணுங்க!//

நானே வராத 1500 ருபாய்க்கு, ஒன்னரை லட்சத்துக்கு பட்ஜெட் போட்டு வெச்சிருக்கேன். இதுல, பங்கு கேட்க வேற ஒரு கூட்டமே காத்திருக்கும் போலிருக்கே! ஹா! ஹா!