Friday, June 26, 2009

டெம்ப்ளேட் மாற்றம்


ஏற்கனவே வந்திருக்கும் வாசகர்கள், என் டெம்ப்ளேட்டில் இருக்கும் மாற்றத்தை கவனித்து இருப்பீர்கள். கண்ணை உறுத்தாத சாஃப்ட் கலரில், அழகியலோடு வடிவமைக்க வேண்டும் என்று வடிவாக்கினேன்.

யார் வேண்டுமானாலும், சுலபமாக, டெம்ப்ளேட்டில் மாற்றங்கள் செய்யலாம். இதுக்கு பெரிய அளவில் html ஓ, java வோ தெரிய வேண்டியதில்லை. எப்படினு சொல்கிறேன், கேளுங்கள்.

ஆக்சுவலா பார்த்தா, நான் Two Column டெம்ப்ளேட்ல தான் ஸ்டார்ட் பண்ணினேன். அப்புறம் கொஞ்ச நாளுல இடம் பற்றவில்லை. ஆனா அந்த டெம்ப்ளேட் ரொம்ப அழகா இருந்தது. அதை விடவும் மனமில்லை. என்ன செய்வதுன்னு யோசிச்சப்ப தான், ஒரு 4 column டெம்ப்ளேட்டை கொஞ்சமாக ஆல்ட்டர் பண்ணி, பழைய படத்தை இதில் வரவழைத்தேன்.

பழைய டெம்ப்ளேட்:

புதிய டெம்ப்ளேட்:

இப்போ அது கொஞ்சம் போரடிக்க, அத்தோடு, வலைச்சரம் என்னும் தமிழ் வலைப்பூ கதம்பத்தில், ஸ்ரீமதி அவர்கள், குறிப்பிட்டிருந்த ஈரமான நினைவுகள் ப்ளாகின் கலர் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொண்டது! அதனால், என் ப்ளாக் கலரை மாற்ற முடிவு செய்தேன்.

Default Templates ஆன Minima, Rounders ல் மாற்றம் செய்வது போல், அவ்வளவு சுலபமாக, டவுன்லோடட் டெம்ப்ளேட்டில் background colour மாற்ற முடியாது. ஆனால், கொஞ்சம் போட்டோஷாப் தெரிந்திருந்தால் போதும், நிறைய வித்தைகள் பண்ணலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெம்ப்ளேட்டில், பொதுவாக, header, body, footer ஆகிய மூன்றுக்கும் மூன்று .jpg image இருக்கும். Lay out ல் Edit html போய், header, body, footer ஆகிய section ல் இருக்கும், image ஐ, காப்பி பண்ணி, நம் browserல் பேஸ்ட் பண்ணினால், அந்த image பார்க்கலாம். அதை அப்படியே save பண்ணிக் கொள்ளுங்கள்.

இப்போ, அந்த இமேஜை போட்டோ ஷாப்பில் திறந்து வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். விருப்பப்பட்டால், உங்கள் புகைப்படம் கூட அதில் போட்டுக் கொள்ளலாம். இப்போ, அதை மீண்டும் .jpg ஃபைலாக சேமித்து, http://www.photobucket.com/ போன்ற ஏதோ ஒரு தளத்தில் அப்லோட் செய்து விடுங்கள். அத்தளம் கொடுக்கும் லின்க்கை, காப்பி செய்து, Edit Html பகுதியில், முன்பிருந்த imageக்கு பதிலாக பேஸ்ட் செய்துவிட்டால், வேலை முடிந்தது.

முக்கியமாக இவ்வேலையை செய்வதற்கும் முன், உங்கள், html code முழுவதையும் காப்பி செய்து, notepadல் சேவ் செய்து கொள்ளுங்கள். ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால், சுலபமாக, பழையபடி கொண்டு வந்து விடலாம்.

நானும் அவ்வாறு தான் செய்தேன். பழைய படத்தை, brush tool கொண்டு அழித்து விட்டு, புதிய படத்தை ஒட்ட வைத்தேன். fill tools உதவியால், கலர் மாற்றினேன். கீழே footer ல் ஒரு பூ ஒட்ட வைத்தேன். body இமேஜில், குட்டியூண்டு பூ ஒன்று வைத்து, headerன் இடது புறம், லேஸ் ஒட்டவைக்க வேலை முடிந்தது.

செய்து பார்த்து சொல்லுங்கள். சந்தேகமிருந்தால், கேளுங்கள்.

-சுமஜ்லா.

9 comments:

கடைக்குட்டி said...

தொழில்நுட்ப பதிவா???

கலக்குறீங்க அக்கா... :-)

இப்போ நேரமில்ல.. பின்னொருநாள் உபயோகப் ப்டுத்திட்டு சொல்றேன் :-)

Anonymous said...

உங்கள் டெம்ப்ளேட் நன்றாக உள்ளது...தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிங்க அக்கா..

வால்பையன் said...

நானும் ஈரோடு தாங்க!
கருங்கல்பாளையத்தில் இருக்கிறேன்!

"உழவன்" "Uzhavan" said...

சும்மா பூந்து விளையாடுறீங்க :-)

SUFFIX said...

மிக்க நன்றி அக்கா!! நானும் முயற்சி செய்கிறேன்!!இப்பொ இல்லைப்பா, நேரம் கிடைக்கும்பொழுது தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

" உழவன் " " Uzhavan " said...

//சும்மா பூந்து விளையாடுறீங்க :-)//

எல்லாம் பொழப்பத்த நாசவன் கதை தான்.(நாசவர்கள் மன்னிக்கவும்)!

"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் said...
//இப்போ நேரமில்ல.. பின்னொருநாள் உபயோகப் ப்டுத்திட்டு சொல்றேன் :-)//

கடைக்குட்டி said...
//இப்பொ இல்லைப்பா, நேரம் கிடைக்கும்பொழுது தான்.//

பொறுமையா செய்யுங்க. இதுக்கு ரொம்ப பொறுமை வேணும். பாதியில விட்டுட்டா, அப்புறம் நம்ம ரீடர்ஸ் பாடு தான் திண்டாட்டம்.

அதனால, தனியா ஒரு ப்ளாக் உருவாக்கி, அதில் எல்லாம் ஷேப் பண்ணி, அப்புறமா, இதில் இம்ப்ளிமெண்ட் பண்ணுங்க. உஷார்! அந்த ப்ளாக், உங்க ப்ளாக் லிஸ்ட்ல வராத மாதிரி, உங்க ப்ரொஃபைலில் போய், uncheck பண்ணிடுங்க.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வணக்கம்.. நல்ல பதிவுங்க. எனக்கு ஒரு சந்தேகம். நான் இந்த புது சட்டய மாத்துனா என் பின் தொடருபவர்கள் கேட்ஜெட் அழிந்துவிடுமா?

அப்புறம் ஒரு சின்ன நெருடல். நான் அந்த குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவன் இல்லை என்றாலும் அந்த ஜாதி சம்பந்தப் பட்ட வார்த்தை சரியில்லை. அதை மாற்றிவிடுங்களேன். நம்ம ஊரில் அது சாதாரண வழக்கு வார்த்தையாக இருக்கலாம் ஆனாலும்........

SUMAZLA/சுமஜ்லா said...

புது சட்டையை மாத்துனா, followers கேட்ஜெட் போய்விடும். Lay out, Add a gadget போய் மீண்டும் கொண்டுவந்தால், அதே பழைய ஃபாலோவர்ஸோடு வந்துவிடும்.

நான் சாதி பேரைச் சொல்லலைங்க, தொழில் பேரைத்தான் சொன்னேன். அதை மாற்றுவது ப்ளாகில் முடியாது. வேண்டுமானால், அந்த பின்னுட்டத்தையே அழிக்கணும்.

priyamudanprabu said...

பயனுள்ள பதிவு
நன்றி

மேலும்
என்னுடையது 2 column டெம்ப்ளேட்டை
எப்படி 4 column டெம்ப்ளேட்ஆக ம்மாற்றுவது??