Monday, June 29, 2009

வலைப்பூவுக்கு புது சட்டை


நாம சில நேரம் நினைப்போம், நம்ம ப்ளாகுக்கு, ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பேர் இருந்தால் நல்லா இருக்குமே என்று! ஆனா, அதுக்கு காசு கொடுத்து, டொமைன் வாங்க வேண்டும் என்று விட்டு விடுவோம். இதோ, ஒரு ஃப்ரீ டொமைன் நேம்.

என் புது ஸ்கூட்டியின், ஹெட் லைட் டூமில் மேல், http://www.sumazla.blogspot.com/ என்று எழுதியவுடன், மிக நீளமாக இருந்தது. அதிலும், www என்று போடக்கூடாது, http மட்டும் தான் போட வேண்டும் என்று என் சகோதரன் சொல்லிக் கொண்டிருந்தான். அதனால், இதற்கு வேறு பெயர் வைக்க நினைத்த போது தான் இந்த வசதியை அறிந்து கொண்டேன்.

இப்போ என் ப்ளாக் பேர், http://www.sumazla.tk/ (click to open in new window) . பாருங்க இது ரொம்பவும் சின்னதா இருக்கு! யாரிடமாவது சொல்லவும் எளிமையா இருக்கு!!

இந்த வசதியை நமக்கு இலவசமாக dot.tk என்ற வலைதளம் தருகிறது. இது முற்றிலும் இலவசம். அட்வர்டைஸ்மெண்ட்ஸ் கூட கிடையாது. ஒரே ஒரு நிபந்தனை. 90 நாட்களில், குறைந்த பட்சம் 25 முறையாவது, நம் தளம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு தான்.

இதில் ananymous ஆகவும் ஒரு நொடியில் பதிவு செய்யலாம். அல்லது, மின்னஞ்சல் முகவரி கொடுத்தும் செய்யலாம். ananymous ஆக பதிவு செய்தால், நாம் விரும்பும் போது மாற்றங்கள் செய்ய முடியாது. அதோடு, மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிந்திருந்தால், நாம் அத்தளத்துக்கு சென்று, எவ்வளவு முறை திறக்கப்பட்டிருக்கு என்ற விவரங்கள் பெறலாம்.

நீங்கள் அத்தளத்துக்கு செல்லாமலே பதியலாம். கீழே இருக்கும் வீடியோவை ஒரு முறை சொடுக்கிப் பாருங்கள். நாலே ஸ்டெப்பில், உங்க ப்ளாகுக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா புதுப்பெயர் ரெடி.



மேலே இருப்பது தெரியாவிட்டால், கீழே இருப்பதைக் கிளிக் பண்ணியும் போகலாம்.


இந்த பதிவு பிடிச்சிருந்தா, ஓட்டுப் போட்டுட்டுப் போங்க! அதோடு, உங்க புது ப்ளாகின் முகவரியை பின்னூட்டத்தில் கொடுங்க!

-சுமஜ்லா.

34 comments:

SUFFIX said...

கலக்கல்ஸ்!! இதோ இப்பவே மாத்திடுறோம்.

SUFFIX said...

போட்டாச்சு புது ஷர்ட் : www.shafiahmedm.tk

SUMAZLA/சுமஜ்லா said...

ஒக்கே ஷபி! பின்னூட்டத்தில் புது பெயர் தருபவர்களுடைய எல்லா ப்ளாகுக்கும், ஒரு விசிட் போய், பிடித்திருந்தால், பின்னூட்டமும் போட்டு வரப் போகிறேன்.

Menaga Sathia said...

வாவ் சூப்பர்,நானும் மாத்திட்டேனே!!ரொம்ப ஷார்ட்டா நல்லாயிருக்கு.இன்னும் இதுபோல் நிறைய எழுதுங்க சுமஜ்லா,நன்றி,நன்றி!!என் முகவரி www.sashiga.tk

Menaga Sathia said...

//நாம் அத்தளத்துக்கு சென்று, எவ்வளவு முறை திறக்கப்பட்டிருக்கு என்ற விவரங்கள் பெறலாம்.//
எப்படி பார்ப்பது,நான் பார்த்தேன் எனக்கு தெரியல சொல்லுங்கப்பா..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஒக்கே ஷபி! பின்னூட்டத்தில் புது பெயர் தருபவர்களுடைய எல்லா ப்ளாகுக்கும், ஒரு விசிட் போய், பிடித்திருந்தால், பின்னூட்டமும் போட்டு வரப் போகிறேன்.//
நல்ல யோசனையா இருக்கே.. இதோ நானும் இப்போவே மாத்தபோறேன்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

http://rajpakkangal.tk/
என்னோட புது தளம்.. நன்றி...

SUMAZLA/சுமஜ்லா said...

மேனகா, www.dot.tk போய் விவரங்கள் பெறலாம். உங்க ப்ளாக் பார்த்து பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

குறை ஒன்றும் இல்லை !!!

உங்க புது ப்ளாகில் குறை ஒன்றும் இல்லை. டெம்ப்ளேட் அருமை. ஆனா, மஞ்சள் எழுத்து கொஞ்சம் கண்ணைக் கூச வைக்குது.

SUMAZLA/சுமஜ்லா said...

ராஜகிரியாரே, உங்க ப்ளாகில் பின்னூட்டமிட முயன்றேன். முடியவில்லை.

Anonymous said...

உங்கள் புது சட்டை நல்ல இருக்கு சூப்பர்

நாகா said...

நன்றி சுமஜ்லா அவர்களே. சற்று முன்னர்தான் உங்கள் இடுகையைப் பார்வையிட்டு என் வலைப்பூவின் முகவரியையும் மாற்றம் செய்தேன். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து இது போன்று பயனுள்ள இடுகைகளை எழுதுங்கள், எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

சென்ஷி said...

சூப்பர்! இது எப்படி டூப்ளிகேட் மாதிரி செயல்படுமா??

நீங்க சொன்னதை வச்சு புதுசா ஆரம்பிச்சுருக்கேன். ஆதரவு தாரீர் தாரீர் தாரீர் :)

http://senshe.tk/

இது நம்ம புது வூடு

S.A. நவாஸுதீன் said...

புதுசு புதுசா சொல்றீங்க. இது நல்லா இருக்கும் போல இருக்கே. முயற்சி பண்ணி பார்த்துடுவோம். அப்புறம் ஒரு சின்ன டவுட். இதுல register பண்ணிட்டா ரெண்டு url-ம் வொர்க் பண்ணும் இல்ல

சென்ஷி said...

சோதனை பின்னூட்டம்

S.A. நவாஸுதீன் said...

http://syednavas.tk/

இது புதுசா பால் காய்ச்சின வீடு. ரொம்ப நன்றி சகோதரி

சென்ஷி said...

http://podian.blogspot.com/2008/07/blog-post_14.html

இச்சேவையின் மூலம் இலவச டொமைன் நேம் பெறுவதனால் வைரஸ் வருவதாகவும், நம் தகவல்கள் பறி போகும் வாய்ப்பு இருப்பதாகவும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

நமக்கு வேண்டாமென்றால் அத்தளத்தை அழிக்க வழியுண்டா?

-சென்ஷி

வால்பையன் said...

டெம்ப்ளெட் நல்லாயிருக்கு!

நாம ஒரே ஊர்காரங்ககிறதால,
பிரியாணிக்கு மட்டும் மறந்துறாதிங்க!

ஹிஹிஹிஹி

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்கள் புது சட்டை நல்ல இருக்கு சூப்பர்//

தேங்க்யூ மயில்.

//தொடர்ந்து இது போன்று பயனுள்ள இடுகைகளை எழுதுங்கள், எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.//

இந்த பலத்தால் தான் நான் எழுதி வருகிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

இதுல ரெஜிஸ்டர் பண்ணிட்டா, 2 url ம் நிச்சயமா ஒர்க் பண்ணும்.

//இது புதுசா பால் காய்ச்சின வீடு//

ஒருத்தர் டீ ஆத்துறார்(கடைக்குட்டி) ஒருத்தர், பால் காய்ச்சுறார். விட்டா, ஒரு வலையுலக டீ ஸ்டாலே திறந்திடுவீங்க போலிருக்கே?!

SUMAZLA/சுமஜ்லா said...

சென்ஷி அவர்களுக்கு,

//சூப்பர்! இது எப்படி டூப்ளிகேட் மாதிரி செயல்படுமா??//

இது ஒரு url ரீடைரக்‌ஷன் தான். தாங்கள் சொன்ன பக்கத்தை இப்போ தான் நானும் படித்தேன். அது நண்பர்களுக்கு இடையே நடந்த விவாதம் தான், தவிர, உண்மை நிலை என்று யாரும் கண்டறியவில்லை.

இதனால், வைரஸ் வரவோ, தகவல் பறிபோகவோ வாய்ப்பில்லை என்பது என் கருத்து. காரணம், நாம் அதன் மூலமாக அப்லோட் செய்யவில்லை. இது வெறும் டொமைன் நேம் மட்டுமே.

தாராளமாக, உங்க வலைப்பூ முகவரியை அழிக்கலாம். நீங்கள், உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிந்திருக்க வேண்டும். அப்படியானால், லாக் இன் செய்து அழிக்கலாம், மாற்றலாம்.

அதோடு, இது போல், webalias.com வழங்கும் இன்னொரு சேவையை என்னுடைய இன்னொரு வணிக ரீதியான வலைதளத்துக்கு ஒரு வருடத்துக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன். அதனால், எனக்கு எந்த வித இடைஞ்சலும் வந்ததில்லை.

SUFFIX said...

என்னமோ பிள்ளைங்கலுக்கு புதுசா பேர் சூட்டுர மாதிரி ஒரே அலப்பரயா இருக்கு....ஃபீலிங்க்ஸ்

sarathy said...

நானும் மாத்திட்டேன்..

நன்றி சுமஜ்லா (அக்கா).
சற்று முன்னர்தான் உங்கள் பதிவை பார்த்து என் வலைப்பூவின் முகவரியையும் மாற்றம் செய்தேன்.

www.sarathy.tk

thanks a lot...

cheena (சீனா) said...

அரிய தகவலுக்கு நன்றி - முயற்சிக்கிறேன்

"உழவன்" "Uzhavan" said...

நல்லா R&D பண்ணுறீங்க..

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றிங்கோ

நாமும் முயற்சி செய்தாச்சு


புது முகவரி

priyamudanprabu said...

நன்றிகள் பல


http://www.priyamudan-prabu.blogspot.com/

இது இப்போ

http://www.priyamudanprabu.tk/

ஆபுத்திரன் said...

உங்கள் இடுகையைப் பார்வையிட்டு எங்கள் வலைப்பூவின் முகவரியையும் (www.rajadmk.blogspot.com)மாற்றம் செய்ய முயன்றோம். அப்போது www.rajadmk.tk என்று மாற்று பெயர் கொடுத்துவிட்டு next கொடுத்தேன். ஆனால், வேலை செய்யவில்லை. இன்று முயன்றபோது www.rajadmk.tk என்ற பெயர் பதியப்பட்டுவிட்டது என்று வருகிறது. www.rajadmk.tk இந்த முகவரியில் சென்றால் Related searches:என்ற தொடர்பே இல்லாத ஒரு பக்கம் வருகிறது. இந்த தவறு ஏன் நடந்தது காரணம் என்ன?
(www.rajadmk.blogspot.com) என்ற வலைப்பூ மத்திய அமைச்சர் ஆ.இராசாவுக்காக நடத்தப்படுவது. www.rajadmk.tk என்றுள்ள தொடர்பே இல்லாத பக்கத்தை அழிக்க முடியாதா? உங்கள் விளக்கத்தை a.raasaa@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும் நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சம்பந்தபட்ட நிறுவனங்களைத்தான் கேட்க வேண்டும். எழுத்துக்களை மாற்றிப் போட்டு முயன்று பாருங்கள்.

சீமான்கனி said...

ஐ சுப்பர் ,அருமை அண்ணே....
நானும் ட்ரை பண்ணறேன் ...
நன்றி...
வாழ்த்துகள்

SUMAZLA/சுமஜ்லா said...

எப்படா நாம் அர்த்தநாரி ஆனோம் என்று யோசித்து கொண்டிருந்தேன், நல்லவேளை என்னுடைய இன்னோர் இடுகையில் மாற்றிக் கொண்டீர்!

Anonymous said...

நம் தளங்களுக்கு திரட்டிகளின் வழிதான் வருகிறார்கள்... அப்ப புது முகவரியை நாமே உட்கார்ந்து 25 முறை அடித்தால்தான் உண்டு!

SUMAZLA/சுமஜ்லா said...

புது முகவரியை திரட்டிகளுக்கு தரலாமே?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றிங்க!

வாங்க...


http://www.nizampakkam.tk/