புதுசா ப்ளாகர் டெம்ப்ளேட் உருவாக்கற ஒரு முயற்சியில் இறங்கினேன். அது எந்த அளவுக்கு சரியா வரும்னு தெரியல. இதோ முதன்முதலா ஒரு டெம்ப்ளேட் உருவாக்கி இருக்கிறேன். இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தடுத்து, இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணலாம்னு இருக்கேன். நல்ல ஐடியா வெச்சிருக்கவங்க, சொல்லுங்க.
சீனரீஸ், போட்டோஸ் அனுப்பினா, அதையும் டெம்ப்ளேட்ல போட்டுத் தரேன்(டைம் கிடைக்கும் போது). இதுல கீழே உருவாக்கியவர் பேர் ஊரெல்லாம் வராது, அதனால, பார்த்தா நீங்களே உருவாக்கிய லுக் கிடைக்கும். முதல்ல, ஒரு ஸ்பேர் ப்ளாக்ல ட்ரை பண்ணிப் பாருங்க. பிடிச்சிருந்தா, சொல்லுங்க.
தமிழ் ப்ளாகுக்கென்றே சில டெம்ப்ளேட் உருவாக்கணும்னு ஆசை. அதாவது, தமிழர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில்!! போட்டோஸ் நெட்டுல சுட்டா, நம்ம தமிழர்கள், சண்டைக்கு வந்திருவாங்களோனு பயம். அதான்!!
முதலில், கீழே இருக்கும் VIEW HTML CODE லின்க்கை க்ளிக் செய்தால் கிடைக்கும் Codeன் மீது மவிஸை வைத்து, Ctrl+A, Ctrl+C கொடுத்து, DASHBOARD --- LAY OUT --- EDIT HTML போய், அந்த html code மீது மவுஸ் வைத்து, Ctrl+A, Ctrl+V கொடுங்கள். இப்போ, html codeன் கீழே, //Edit this page (if you have permission) Google Docs -- Web word processing, presentations and spreadsheets. //இவ்வாறு தோன்றும். இதை delete பண்ணி விட்டு, save செய்யுங்கள். அவ்வளவு தான்.
VIEW HTML CODE
இந்த டெம்ப்ளேட் சேம்பிள் பார்க்க இங்க சுட்டுங்க: முதல் டெம்ப்ளேட்(தனி விண்டோவில் திறக்கும்).
-சுமஜ்லா.
Tweet | ||||
24 comments:
உண்மையில் உங்களது பதிவுகள் பிரமிக்க வைக்கின்றது!
சென்ஷி said...
உண்மையில் உங்களது பதிவுகள் பிரமிக்க வைக்கின்றது!
பெரிய ரிப்பீட்டேய்
குரங்கு வாலோட இருக்குற மாதிரி எனக்கு ஒரு டெம்ப்ளெட்!
உங்களை இது வரை சுஜ்மலா..என்று நினைத்துஇருந்தேன்... இன்று தான் பார்த்தேன்.. சுமஜ்லா..என்று...
தொடரட்டும் நும் பணீ..
உஙகள் பதிவு நல்லா இருக்கு
பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துகள்
சென்ஷி said...
உண்மையில் உங்களது பதிவுகள் பிரமிக்க வைக்கின்றது!
S.A. நவாஸுதீன் said... பெரிய ரிப்பீட்டேய்
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
உஙகள் பதிவு நல்லா இருக்கு
கலையரசன் said...
பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்!!
திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்
எல்லாருக்கும், என் நட்பு கலந்த நன்றிகள்!
பேரரசர் இப்பவாவது மாற்றிக் கொண்டாரே?!
இது எம் குடும்ப உறுப்பினர்களின் கூட்டுப் பெயர்.
என் பெயர் சுஹைனா மஜ்ஹர்.
எம் பிள்ளைகள் லாஃபிரா லாமின்.
உழவன் கிற பேருக்கு ஏத்தமாதிரி ஒரு சீட்டு (டெம்பிளேட்) எடுத்துப் போடுங்க :-))
முதலில் கேட்ட வால்பையனுக்கு முதலில்! அடுத்து சொல்லேர் உழவருக்கு! ஏனா, அது பாதி கிணறு தாண்டி இருக்கு!
கேட்பவர், 2columnஆ 3 columnஆ என்று சொன்னால், சவுகரியமாக இருக்கும்!
எனக்கு ஒரு 3-Column உள்ளது போட்டு கொடுங்களேன். என் பசங்க போட்டோ Background-ல வர்றமாதிரி. நீங்க ஓகே சொன்னீங்கன்னா நான் போட்டோ அனுப்பி வைக்கிறேன்.
எனக்கு ரெண்டு காலம் போதும்!
பேக்கிரவுண்டில் குரங்கு வாலுடன்,
மேலே இருக்கும் லோகோ அப்படியே இருக்கலாம்னு நினைக்கிறேன்!
மற்றபடி உங்கள் விருப்பம்!
முதலில் ஒரு விஷயம். டெம்ப்ளேட் என்பது, ஹெடர், ஃபூட்டர், பாடி என்பது. இதில் ஹெடரும் ஃபூட்டரும் ஸ்டேட்டிக், அதாவது வளராது. ஆனால், நடுவில் இருக்கும் பாடி பார்ட் வளரும். அதாவது போஸ்ட் நீளத்துக்கு தக்கபடி, தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஆனால், டிசைனிங்கில் இது தக்கனூண்டு தான் இருக்கும். repeat command மூலம் வேண்டும் அளவுக்கு வளர்ந்து கொள்ளும்.
இது ஏன் சொல்கிறேன் என்றால், போஸ்டின் பேக்கிரவுண்டில், நாம் நினைத்தது போல் போட முடியாது. மற்றபடி சைடில் வேணா போடலாம். அது, 2 காலமுக்கு மட்டுமே!
வால் பையனுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கவலைப்படாதிங்க. அழகா போட்டுத் தரேன்.
எனக்கு, ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.
நவாஸ் உங்களுக்கும் போட்டுத் தருகிறேன். பசங்க போட்டோ, சின்ன ஃபைலா அனுப்புங்க.
என் ஈமெயில் இல்லாவிட்டால், மின்னஞ்சல் லின்க் மூலம் ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள்.
ஆனா ஒன்னு, ஒரு டெம்ப்ளேட்டுக்கு அதிகபட்சம் 10 நாட்கள்.(சீக்கிரம் வேலை முடிந்தால், சீக்கிரம்) சோ, வரிசைப்படி செய்து தருகிறேன்.
//வால் பையனுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கவலைப்படாதிங்க. அழகா போட்டுத் தரேன்.//
நம்ம ஈரோடு செங்குந்தர்ல தான் ஒன்பதாவது வரைக்கும் படிச்சேன்!
அதுக்கு மேல படிச்சா ஸ்கூல் உருப்பட்டுரும்னு முடிவிபண்ணி எனக்கு டீ.சி கொடுத்துட்டாங்க!
அதாவது நான் என்ன சொல்லவறேன்னா எனக்கு இந்த சின்ன சின்ன மேட்டர்லாம் புரியாது,
இந்த இன்ஸாட், பிரிதிவி மாதிரி செயற்கைகோள் பத்தி என்ன டவுட்டு வேணும்னாலும் கேளுங்க உவனே சொல்லுவேன்!
ஹிஹிஹி
நீங்க என்ன பண்ணி கொடுத்தாலும் சரி!
அட, நீங்க செங்குந்தர்னா, நான் கலைமகள் மெட்ரிக். எங்க கலைமகள், மேதைகளை உருவாக்குகிற ஸ்கூல் தெரியுமோ?!
நானும் ஸ்கூல் போய் படிச்சது, பத்தாப்பு வரைக்கும் தாங்க. அப்புறம் +2 கூட தபால் வழியில் தான். +2 ரிசல்ட் அன்னிக்குத் தாங்க நான் மிஸ்ஸ மிஸ் பண்ணினேன். அதாவது மிஸஸ் ஆனேன்.
//அட, நீங்க செங்குந்தர்னா, நான் கலைமகள் மெட்ரிக். எங்க கலைமகள், மேதைகளை உருவாக்குகிற ஸ்கூல் தெரியுமோ?! //
கலைமகளுக்கும், செங்குத்தருக்கும் ஒரே ரோடு தான் இடையில், ஆனால் போட்டியில் நீங்கள் கடலளவு தூரம்.
உங்களால மார்க் தான் வாங்க முடியும், கடைக்கு போகாமயே முட்டை வாங்குற பசங்க நாங்க!
இப்போ சொல்லுங்க மேதை யாரு?
//இப்போ சொல்லுங்க மேதை யாரு?//
இப்போ சொல்லுங்க போதை யாரு?
i cant upload your template please help
hello suresh, dont upload it. just copy and paste it in the Edit Html section of your blog, deleting the old content. But before deleting, just copy and paste it in notepad for backup.
suresh, click the download link and the code will open in new window. Now follow the procedure.
There was a fault in uploading. Thank you for making me know of it.
சுஹைனா உங்கள் திறமையை என்னன்னு சொல்வது சும்மா இந்த டெஸ்ட் பிளாக் போட்டு டிரை பண்ணி பார்த்தேன்.
ரொம்ப சூப்பரா இருக்கு.
நாலு பிளாக் போட்டு வைத்துள்ளேன் ஆனால் எல்லாத்தையும் ஒன்னா இதில் வரவழைக்கனும்.
மெதுவா அப்பரம் டைம் கிடைக்கும் போது எனக்கு புதுசா போட்டு கொடுங்கள்.
அப்பரம் மெயில் பண்றேன்.
அக்கா, உங்களுக்கு இல்லாமலா?
எப்படி வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். அரபி எழுத்துக்கள் வருவது போல கூட போடலாம்.
இது போட்டோ ஷாப்பில் போட்டேன்,. அவ்வளவு நீட்டாக வரவில்லை. கோரல் டிராவில் போட்டால், நீட்டாக வரும்,. இன்னும் ஒரு வாரத்தில் கோரல் டிரா கற்றுக் கொண்டு போடலாம் என்று இருக்கிறேன்.
ஹலோ அக்கா,
நான் உங்களுடைய வலை பதிவை பார்தேன்,மிகவும் அருமை....நான் எனது ஊர் வெளிநாட்டு வாழ் மக்களுக்காக ஒரு பதிவை தொடங்கி இருக்கிறேன்.www.srivaimakkal.blogspot.com இதில் home பேஜ் இல் இருந்து log in செய்ய முடியவில்லை.மேலும் எனக்கு ஒரு சிறப்பான template உருவாக்கிதரவும்.
மிக்க நன்றி .
கே.ஆசிப் மீரான்
சிங்கப்பூர் .
Post a Comment