Wednesday, July 1, 2009

இலவச டெம்ப்ளேட் 2


இலவச டெம்ப்ளேட் 1 ஐத் தொடர்ந்து, இதோ இரண்டாவது!

இது வால்பையன் கேட்டதற்காக உருவாக்கியது. யார் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது வேண்டுபவருக்கு உருவாக்கித் தருகிறேன்.

அடுத்தடுத்த டெம்ப்ளேட்டுகளில் தவறுகள் எல்லாம் சரி செய்து இன்னும் நன்றாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதலில், கீழே இருக்கும் VIEW HTML CODE லின்க்கை க்ளிக் செய்தால் கிடைக்கும் Codeன் மீது மவிஸை வைத்து, Ctrl+A, Ctrl+C கொடுத்து, DASHBOARD --- LAY OUT --- EDIT HTML போய், அந்த html code மீது மவுஸ் வைத்து, Ctrl+A, Ctrl+V கொடுங்கள். இப்போ, html codeன் கீழே, //Edit this page (if you have permission) Google Docs -- Web word processing, presentations and spreadsheets. //இவ்வாறு தோன்றும். இதை delete பண்ணி விட்டு, save செய்யுங்கள். அவ்வளவு தான்.

VIEW HTML CODE

இதன் சேம்பிள் பார்க்க இங்கே சுட்டவும்:
வால்குரங்கு(தனி விண்டோவில் திறக்கும்)

-சுமஜ்லா.

9 comments:

Anonymous said...

ரொம்ப சூப்பரா இருக்கு. வாலுக்கு இத விட அருமையா அமையாது..
அப்படியே மயிலுக்கும் ஒன்று செய்து தாருங்கள். என் டெம்ப்ளேட்டில் followers இல்லை.முடிஞ்ச அதையும் சேர்த்து தாங்க. நன்றி.

Menaga Sathia said...

//வாலுக்கு இத விட அருமையா அமையாது..//ரிப்பீட்ட்ட்
ரொம்ப நல்லாயிருக்கு சுமஜ்லா!!

asiya omar said...

வாலுன்னா வாலு செம வாலு,சுப்பர் சும்ஜ்லா.

Jaleela Kamal said...

ஹா ஹா சுஹைனா என்னத்த சொல்ல வால் பையனுக்காக இத்தனை வாலா

சூப்பர்

SUMAZLA/சுமஜ்லா said...

உங்க எல்லோர் பாராட்டுக்கும் ரொம்ப தேங்க்ஸ்ங்க.
வால்பையன் தான் குரங்கு வாலோட ஒரு டெம்ப்ளேட் கேட்டார். அதான் இப்படி!
டெம்ப்ளேட் வேண்டுபவர்கள், 3 காலமா, 2 காலமா, உங்க லைக்கிங் என்னனு சொல்லுங்க. அதோட, மின்னஞ்சல் லிங்க் மூலமா ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்க. அப்பத்தான் உங்க டேஸ்ட்டுக்கு உருவாக்க முடியும்.

மயிலுக்கு,
ஃபாலோவர்ஸ் லின்க் என்பது டெம்ப்ளேட்டில் வருவது அல்ல. உங்க லே அவுட் போய், Add a Gadget மூலமாக கொண்டு வரலாம், சுலபமாக.

ப்ளாக் சம்பந்தமாக யாருக்கு என்ன சந்தேகம்னாலும் கேளுங்க. தெரிந்தவரை சொல்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

வாலுக்கு ஏத்த வாலு. ரொம்ப நல்லா இருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

வலைப்பதிவுகளில் பனி கொட்டுவது போல சில பதிவர்கள் வைத்திருக்கிறார்களே அதற்கு எதாவது ஜாவா ஸ்கரிப்ட் உள்ளதா?

வால்பையன் said...

ரொம்ப நன்றிங்க!

சடுல இருக்குற விட்கெட்டுல்லாம்
பேக் அப் எடுத்துட்டு மாத்திடுறேன்

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்யூ நவாஸ்!

வலைப்பதிவு - பனி கொட்டல் - ஹார்டீன் தூவல் எல்லாம் ஜாவா ஸ்க்ரிப்ட் வேலை தான். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஏன், html கூட முழுதும் தெரியாது. நான் இதுவரை computer class போய் எந்த கோர்ஸும் படித்ததில்லை. எல்லாம் வெட்டல் ஒட்டல் வேலை தான்.

இந்த சைட் போய் பாருங்கள். www.sparklette.com இதில் ஸ்விட்ச் போட்டால் லைட் எரியும். இது போல கொண்டுவர, ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். முடியுமா தெரியவில்லை!