Wednesday, July 1, 2009

சில்லரை


ஒரு பக்கக் கதை


சுதா, பெட்டிக்கடையின் முன்பு நின்றிருந்தாள்.

“அண்ணா! கால் கிலோ கத்தரிக்காய் கொடுங்க!”

“ரெண்டார்ருவா சில்லரை இருக்காம்மா!”

“இல்லையே” என்றபடி, பத்து ருபாய் தாளை நீட்டினாள், சுதா.

மீதி, ஏழு ருபாயும் ஒரு ஹால்ஸ் மிட்டாயும் கொடுத்தார் கடைக்காரர்.

“எட்டணா சில்லரை இல்லையா? பிள்ளைங்க இத சாப்பிடறதும் இல்ல” முனங்கியபடியே, வாங்கிக் கொண்டாள்.

அடுத்த நாள், முட்டை வாங்கப் போனாள்.

“நாலு முட்டை கொடுங்க” பத்து ருபாயை நீட்டினாள்.

“விலை ஏறிப்போச்சு! ரெண்டே முக்கால் ருபா ஒரு முட்டை. இன்னும் ஒரு ருபா கொடுங்க. சில்லரையா கொடுங்க. முழு நோட்டா கொடுத்து, உசிர வாங்காதிங்க!”

“இந்தாங்க! இது நீங்க கொடுத்தது தான்” காசுக்கு பதில், எடுத்து நீட்டினாள் இரண்டு ஹால்ஸ் மிட்டாய்களை.

-சுமஜ்லா.

12 comments:

S.A. நவாஸுதீன் said...

“இந்தாங்க! இது நீங்க கொடுத்தது தான்” காசுக்கு பதில், எடுத்து நீட்டினாள் இரண்டு ஹால்ஸ் மிட்டாய்களை.

குசும்புடன், நெத்தி அடி

SUFFIX said...

"Tit for Tat"

SUFFIX said...

இன்னக்கி கடைக்கு போனபோது, இப்படி செய்யனும்னு தோன்றியிருக்கும், ஆனால் முடியாது, அதுதான் பதிவுல போட்டுடீங்க..ஹீ...ஹீ!!

Unknown said...

கதை நல்லா இருக்கு.காரணம் வித்தியாசமான திருப்பம்.

SUMAZLA/சுமஜ்லா said...

இன்னிக்கு தோணல. ஆனா, அடிக்கடி தோணும். எட்டணாவுக்கு ஓக்கே, ஒரு ருபாய்க்குக் கூட ஓக்கே, ஒருமுறை ஒரு பேக்கரியில், 2 ருபாய்க்கு சாக்லேட் கொடுக்க, எனக்கு கோபமே வந்து விட்டது.

Jaleela Kamal said...

அது சரி இப்ப இரண்டு ரூபாயிக்கும் சாமானை கொடுத்து கணக்கை முடிக்கிறார்களா? என்னவோ சும்மா தந்த மாதிரி.


அதுவும் மீன் மார்கெட்ல மாட்டுனீங்கனா அவ்வளவு தான் //ஐய்ய சில்லர மாதின்னு வாமே/ என்பார்கள்/

முனைவர் இரா.குணசீலன் said...

அதக் காடைக்காரர் வாங்கினாரா?இல்லயா? னு சொல்லவே இல்லையே....
இது போன்ற அனுபவம் எனக்கும் பலமுறை நேர்ந்ததுண்டு........
அவர்களிடம் அடுத்தமுறை அந்த மிட்டாயைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என நான் நினைத்ததுண்டு......
சின்ன கதை ...
அழகிய திருப்பம்...
சமுதாயச் சிக்கல்....

ம்ம் நன்றாகவுள்ளது தொடர்க....

ஈரோடு கதிர் said...

பஸ்சில் 50 பைசா சில்லறை தராத
நடத்துனரிடம் எதை திருப்பித்தருவது...

இராஜகிரியார் said...

//கதிர் said...

பஸ்சில் 50 பைசா சில்லறை தராத
நடத்துனரிடம் எதை திருப்பித்தருவது...//

சபாஷ்..!! சரியான கேள்வி...

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. கலக்கல்ங்க.. ஆனாலும் உலகத்துலேயே 2 ரூபாய்க்கு பதில் சாக்லேட் வாங்குனது நீங்க ஒருத்தராத்தான் இருக்கும் :-)

வால்பையன் said...

திருடா,திருடி படத்துல சில்லரைக்கு பதிலா சிகரெட் கொடுப்பான் கடைக்காரன் அந்த ஞாபகம் வந்துருச்சு!

அன்புடன் அருணா said...

:)