Sunday, July 5, 2009

எளிய மேஜிக்


எந்த இடத்திலும், யாரும் செய்யக் கூடிய எளிமையான மேஜிக் இது. இதற்கு தேவை ஒரு கர்சீப் மற்றும் சற்றே பெரியதான் சேஃப்டி பின் ஒன்றும் மட்டுமே.
முதலில், ஒரு கர்சீப் ஓரத்தில், சேஃப்டி பின்னை கோர்த்து பூட்டிக் கொள்ளுங்கள்.
பின் படத்தில் காட்டியபடி மடக்குங்கள்.
பின் மீண்டும் ஒரு முறை, இது போல மடக்குங்கள்.
இப்போ, கர்சீப்பின் நுனியை மேல்புறமாக தூக்கி விடுங்கள்.
இடது கையால், கர்சீப்பை அழுத்தியபடி, வலது கையால், சேஃப்டி பின்னின் பின்புறம் பிடித்து, சற்றே வேகமாக உருவுங்கள். அட, பூட்டியிருந்த பின் எவ்வளவு அழகாக வெளியே வருகிறது பாருங்கள்!
செய்து பாருங்கள், சுலபமாக அருமையாக வரும். சேஃப்டி பின் கொஞ்சம் பெரியது தேவை இதற்கு.
சொன்னதும், படத்தில் செய்து காட்டியிருப்பதும், என் மகள்.
-சுமஜ்லா.

16 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

very nice blog.pls visit my blog and give your feedback.thanks


http://peacetrain1.blogspot.com/

சென்ஷி said...

:-))

செய்முறை விளக்கம் நல்லாயிருக்குது. ஆனா கர்ச்சீப் கிழிஞ்சுடுச்சுன்னா என்ன செய்யறது?!

நல்ல பதிவு. இதைப்போலவும் தொடருங்கள்.

S.A. நவாஸுதீன் said...

புதுசு புதுசா ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க. ஹ்ம்ம். உங்க மகளும் உங்களை மாதிரியே புத்திசாலிதான். வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

உங்களின் மாம்பலத்தில் திருநாமம் பார்த்து, படித்தபோது மெய் சிலிர்த்துப் போனேன். எல்லா புகழும் இறைவனுக்கே

SUFFIX said...

இன்னக்கி இந்த மேஜிக்கை வீட்டுல போட்டுற வேண்டியதுதான்.

"உழவன்" "Uzhavan" said...

உங்களுக்கு தெரியாத கலைனு ஒன்னு எதுவுமே இல்ல. கிரிக்கெட்லதான் ஆல்ரவுண்டர் பார்த்திருக்கேன். ஆனா, ப்ளாக்ல ஒரு ஆல்ரவுண்டரை இப்பதான் பார்க்கிறேன் :-)
வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

என்ன உழவன், என்னென்னமோ சொல்றீங்க?! எனக்கு தெரியாத கலை ஒன்னு இருக்கே? சமையல் தான். ஹி..ஹி.. சும்மா சொன்னேன்.

SUFFIX said...

//என்ன உழவன், என்னென்னமோ சொல்றீங்க?! எனக்கு தெரியாத கலை ஒன்னு இருக்கே? சமையல் தான். ஹி..ஹி.. சும்மா சொன்னேன்.//

இப்பவெல்லாம் சமையல் கலையைவிட ரெஸ்டாரன்ட் பேர ஞாபகம் வச்சு, சுவை, ரகம் வாரியா சொல்லுவதையே ஒரு கலைன்னு நினைக்கிறாங்க!!

SUMAZLA/சுமஜ்லா said...

கரெக்ட் ஷபி! எனக்கு பிடிச்சது, ஈரோடு பிருந்தாவன் ரூஃப் கார்டன்ல, பட்டன் நாண், பனீர் மக்கன்வாலாவும் மஷ்ரூம் சில்லியும் சாப்பிடுவது. என் மகளுக்கு அடையார் ஆனந்தபவனின் தயிர் பூரியும் தந்தூரி பிஸ்ஸாவும். என் மகனுக்கு சோலா பூரி...அவருக்கு, இட்லி பொங்கல், ரவாரோஸ்ட்! இப்படி ரகம் ரகமாய். ஆனால், பர்ஸிலும் வயிற்றிலும் இடம் வேண்டுமே.

"உழவன்" "Uzhavan" said...

//என்ன உழவன், என்னென்னமோ சொல்றீங்க?! எனக்கு தெரியாத கலை ஒன்னு இருக்கே? சமையல் தான். ஹி..ஹி.. சும்மா சொன்னேன். //

ஹலோ.. சும்மாதான் சொன்னீங்களா இல்லையானு உங்க வீட்டுக்காரர்தான் சொல்லனும். ஐயோ பாவம் அந்த மனுசன் என்ன கஷ்டப்படுறாரோ.. நீங்க சொல்லக்கூடாது :-)

SUFFIX said...

மேலே ஒரு மினி மெனு கார்டே மேசைக்கு வந்துருச்சு. இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு?

SUMAZLA/சுமஜ்லா said...

ஷஃபி கொஞ்சம் முன்னால தெரிஞ்சிருந்தா, நாங்க போன வருஷம் ஹஜ்ஜுக்கு வந்தப்ப, ஜித்தா வந்து உங்க மனைவி கையால் சாப்பிட்டு இருக்கலாம்.

அப்புறம் ரோஸ் சைஸ் சின்னது பண்ணிவிட்டேன். பார்த்தீர்களா?

நவாஸுக்காகவும் டெம்ப்ளேட் போட்டாச்சு!

SUFFIX said...

//ஷஃபி கொஞ்சம் முன்னால தெரிஞ்சிருந்தா, நாங்க போன வருஷம் ஹஜ்ஜுக்கு வந்தப்ப, ஜித்தா வந்து உங்க மனைவி கையால் சாப்பிட்டு இருக்கலாம்.//

அதுக்கு என்ன? அடுத்த முறை போட்டு விட்டால் போச்சு, எங்க வீட்டு அம்மனியும் மெனு ஸ்பெஷலிஸ்ட் தான், ஹீ..ஹீ. உஙக விசிட் அப்போ ஏதாவது புதுசா அயிட்டம் செஞ்சு சேம்ப்லிங் டெஸ்ட் பன்னிடுவோம்.

//நவாஸுக்காகவும் டெம்ப்ளேட் போட்டாச்சு!//

பார்த்தேன்!! ம்ம்ம் நல்லா இருக்கு, என்னவோ செய்றீங்க‌

வால்பையன் said...

ஜூப்பருங்க!

jinna kooththaanallur said...

நண்பரே உங்க வலைப்பதிவை இன்றுதான் முதன் முறையாக பார்கிறேன் படிச்சிகிட்டே இருக்க தோணுது ரொம்ப அருமையா இருக்குது உபயோகமாவும் இருக்குது blog spot லேயே இவ்ளோ நுணுக்கமா பண்ண முடியுமான்னு உங்க blog ஸ்போட் பார்த்த பிறகு தான் தெரியுது. உங்க பேருதான் புரியல.

SUMAZLA/சுமஜ்லா said...

நண்பர் ஜின்னாவுக்கு,
வருகைக்கு நன்றி!
என் கிறுக்கல்கள் பகுதியில், முப்பத்தி ரெண்டா? முப்பத்தி மூன்றா? என்று ஒரு பதிவு இருக்கும் பாருங்கள். அதில் என் பெயர் காரணம் உட்பட எல்லா விவரங்களும் இருக்கும்.