சுஹைனா என்ற என் பெயருடன், மஜ்ஹர் என்ற என்னவர் பெயர் சேர,அத்துடன் இனிய செல்வங்கள், லாஃபிரா மற்றும் லாமின் ஆகியோரின் கூட்டுப் பெயர் தான் சுமஜ்லா.
பிடிக்குமா பிடிக்காதா என்பதை விட சற்றும் பொருத்தமில்லாத பெயர், காரணம் இதன் அர்த்தம் அமைதியானவள். என் பெயரைவிட ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய், சுஹைனூ என்று இழுத்தபடி அவர் கூப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.
என் முழுப்பெயர் ஆசியா சுஹைனா ஷிஹ்னாஸ்.
பள்ளியில் என்னை பலரும் ஏஷியா என்று தான் கூப்பிடுவார்கள்(ஆங்கில ஸ்பெல்லிங்கின் உச்சரிப்பால்).
ஷிஹ்னாஸ் என்றால் இன்னிசை என்று அர்த்தம். ஆனா, அந்த பெயர் எனக்கு மறந்தே போய்விட்டது.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பத்து நாட்களுக்கு முன் பல் பிடிங்கிய பின்!
நமக்காக அழுகிறோமோ இல்லையோ, நம் அன்புக்குரியவரிடம் ஆறுதல் தேடி அழுவது தான் அதிகம்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து, தலையெழுத்து இரண்டில் ஏதாவது ஒன்று தான் நன்றாக இருக்குமாம். எனக்கு என் தலையெழுத்தில் தான் அக்கரை.
4.பிடித்த மதிய உணவு என்ன?
நான் சமைப்பதைத் தவிர எதுவாக இருந்தாலும்...
அம்மா செய்யும் கத்திரி முருங்கை உருளைக் கூட்டு ரொம்ப பிடிக்கும்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
யார் எவர்னு தெரியாமயே போய் வலிய பேசி, சினேகம் பிடிக்கும் வாயாடிங்க நான்!
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கொட்டும் அருவிநீருக்கும் நீட்டியிருக்கும் பாறைக்கும் நடுவே ஒரு வெற்றிடம் இருக்குமே, அங்கே மறைந்து நின்று குளிக்க ரொம்ப பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர் ஆணா பெண்ணா என்று...! (ஒரு எச்சரிக்கை உணர்வு தான்)
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது - எதுவுமே முடியாது என்று நினைக்காமல் இருப்பது...
பிடிக்காதது - முடியாத ஒன்றுக்காக முயற்சி செய்வது...
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது: ஒரு கர்ச்சீப் வாங்க போனால் கூட என்னை உடன் அழைத்துச் செல்வது...
பிடிக்காதது: கோபம் வந்தால் மூன்று நாளைக்கு மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வது...
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பள்ளி நாட்களின் நட்புள்ளங்களும் ஆசிரியைகளும்...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சிவப்பு நிற சுங்குடி சேலை(எனக்கு தாலி கட்ட அவர் வீட்டில் வாங்கிய பாரம்பரிய சேலை, என்றாவது ஒரு நாள் உடுத்துவேன்! இது எனக்கு ரொம்ப பிடிக்கும்; எத்துணை பட்டுக்கள் இருந்தாலும், இதன் மதிப்பு தனிதானே?!)
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பார்த்துக் கொண்டிருப்பது: மானிட்டரை...
கேட்டுக் கொண்டிருப்பது: லொட லொட பேன் சத்தம், லுஹருக்கான பாங்கொலி!
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தங்க நிறம்
14.பிடித்த மணம் ?
ப்ரூட் மஸ்க் செண்ட்டின் மணம். திருமணம் ஆன புதிதில் இது அவர் அடிக்கடி போடுவார். இந்த வாசனை எங்கு நுகர்ந்தாலும், அவ்வினிய நாட்களின் நினைவு வரும்.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
முனைவர் ரா. குணசீலன் - இவரின் தமிழ்பற்று பிடிக்கும்!
பாயிஜா காதர் - இவரின் கைவேலைப்பாடுகள் அழகோ அழகு!
ஷஃபி - நம்ம சிஷ்யர் என்பதால் மட்டுமல்ல, கவிதையில் குருவையும் மிஞ்சி விட்டார் என்பதால்!
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
மேனகா - இவங்க ரெஸிப்பியை விட இவங்க போடும் போட்டோஸ் நாவூற வைக்கும். இவங்க சாஃப்ட் கேரக்டர் பிடிக்கும்.
17.பிடித்த விளையாட்டு?
அவரோடு விளையாடும் எந்த விளையாட்டும், குறிப்பா ஷட்டில் காக், தாயக்கரம்(ஆனா, தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவங்க சொன்னதால், இது இப்போது விளையாடுவதில்லை), திருமணம் ஆன புதிதில், வித்தியாசமாக பெட் வைத்துக் கொண்டு, விடிய விடிய அவருடன் கார்ட்ஸ் விளையாடியது!
18.கண்ணாடி அணிபவரா?
சில சமயம் ஸ்கூட்டி ஓட்டும் போது, வெய்யிலுக்கு மட்டும், ஆட்டோமேட்டிக் க்ளாஸ் அணிவேன்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பெண்கள் சப்ஜெக்ட், செண்டிமெண்ட் டாபிக்ஸ்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
பொதுவாக, ஒரு படத்தை மூன்று மணி நேரம் அமர்ந்து பார்க்க எனக்கு பொறுமை இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, வாழ்நாளில் இதுவரை எந்த தியேட்டருக்கும் போய் படம் பார்த்ததில்லை.
21.பிடித்த பருவ காலம் எது?
வசீகரா பாடலின் வரியில் வரும், “ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்” தரும் குளிர் காலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கடைசியா புரட்டியது டெலிபோன் டைரக்டரி.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்பவாவது என் பையன் மாற்றினால் தான்...
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - அவர் வீட்டுக்கு வரும்போது, தூரத்திலேயே கேட்கும் பைக்கின் ஓசை!
பிடிக்காத சத்தம் - சூழ்நிலையின் அமைதியைக் கெடுக்கும் டி.வி.வால்யூம்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வெளிநாட்டில் - ஹஜ் பயணம்.
உள் நாட்டில் - சிம்லா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கிறது, முடியாத ஒன்றைக்கூட என் பேச்சு திறமையினால் சாதிப்பது...
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சொல் வேறு, செயல் வேறாய் நடப்பது...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
டென்ஷன்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சிம்லா, தாஜ்மஹால்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
என் கணவரின் ஆசைப்படி இருக்கவேண்டும் என்று...
31.கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
எழுதிக் கொண்டிருக்கும் போது(டைப்பிக்கொண்டிருக்கும் போது) யாரும் பக்கத்தில் இருக்கக் கூடாது. ஆனால், எழுதிய பின் முதல் ஆளாய் அவருக்குத் தான் படித்துக் காண்பிப்பேன்.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கையின் எந்த விஷயத்திலும் 100 சதவித திருப்தி ஏற்பட்டு விட்டால், அந்த விஷயத்தில், நம் முன்னேற்றம் அத்துடன் தடை பட்டு விடும், என்பது என் கருத்து.
33.உங்களுக்கு பிடித்த ஒன்று?
மற்றவரிடம் இருந்து, வித்தியாசமாக, தனித்துவமாக இருக்க வேண்டும். அட, அதுக்காகத்தாங்க, இந்த 33 வது கேள்வியே?!
(ஆனா, இதை எழுதும் போது, ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. ஒரு பைத்தியம் கிணற்றருகே அமர்ந்து கொண்டு, முப்பத்தி ரெண்டு, முப்பத்தி ரெண்டு என்று சொல்லிக் கொண்டிருந்ததாம். ஒருவர் அதனருகே சென்று, ஏன் முப்பத்தி ரெண்டு, முப்பத்தி ரெண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டாராம். உடனே, இவரையும் தூக்கி கிணற்றுக்குள் போட்ட அந்த பைத்தியம், இப்போ, முப்பத்தி மூன்று முப்பத்தி மூன்று என்று எண்ண ஆரம்பித்ததாம்” எல்லாம் சரி, இதை எழுதிய நான் பைத்தியமா? இல்லை இதைப் படிக்கும்....)
-சுமஜ்லா.
Tweet | ||||
31 comments:
கொட்டும் அருவிநீருக்கும் நீட்டியிருக்கும் பாறைக்கும் நடுவே ஒரு வெற்றிடம் இருக்குமே, அங்கே மறைந்து நின்று குளிக்க ரொம்ப பிடிக்கும்.
]]
இரசிச்சி சொல்லியிருக்கீங்க ...
இரசிக்கும்படியான பதில்கள்
33 வச்சியளே ஆ...
எனக்கு 33 ரொம்ப பிடித்திருக்கு... என்ன பண்ணலாம்...
-- வித்யா
அனைத்து பதில்களும் அருமை சுகைனா!!33 வது கேள்வியும்,பதிலும் சூப்பர்ர்ர் அப்போ இதை படிக்கும் நாங்கள்.....
//இரசிக்கும்படியான பதில்கள்
33 வச்சியளே ஆ...//
நன்றி ஜமால்! என் வாசகர்களைப்போய் பைத்தியம்னு சொல்வேனா? அது நான் தாங்க!!!
//எனக்கு 33 ரொம்ப பிடித்திருக்கு... என்ன பண்ணலாம்...//
ஒன்னும் பண்ணாதிங்க! முக்கியமா, அந்த கிணற்றுப்பக்கம் மட்டும் போயிறாதிங்க!
//அனைத்து பதில்களும் அருமை சுகைனா!!33 வது கேள்வியும்,பதிலும் சூப்பர்ர்ர் அப்போ இதை படிக்கும் நாங்கள்.....//
மேனகா, நண்பர் ஜமாலுக்கு சொன்ன, அதே பதிலை படித்துக் கொள்ளவும்.
(இப்படி எதாவது கோக்கு மாக்கா எழுதி, எனக்கு வருகிற பின்னூட்டத்தையெல்லாம் கெடுத்துக் கொள்கிறேனோ?!)
தமிழ்மண்த்திற்கு வந்தே நீண்ட நாட்கள் ஆகிறது.... இன்று வந்து பார்த்தால் நீங்க, மேனகாசத்யா, ஃபாயிஜா மேடம் எல்லாம் இங்கே...
உங்கள் பதில்களும் அருமை..
அட, நம்ம தமிழ் குடும்ப தர்ஷினியா? ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா, உங்களை என் ப்ளாகில் பார்க்க! பொதுவா, இன்னொரு தளத்தில் நம்ம ப்ளாகைப் பற்றி சொல்வது, சரியான முறையல்ல என்பதால், நான் யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை. ஆனாலு, நிஜாம் அண்ணா, நீங்க எல்லாரும் எப்படியோ கண்டு பிடிச்சு வந்திட்டீங்க! சபாஷ்!
என்ன தர்ஷினிக்கு சபாஷ் போட்டதோட,
எனக்கும் சேர்த்து சபாஷ் போட்டுட்டீங்களே,
சபாஷ்! (இது உங்களுக்கு!)
//முடியாத ஒன்றைக்கூட என் பேச்சு திறமையினால் சாதிப்பது...//
அப்படியா!
எங்க சொல்லுங்க
தெரியும் என்ற சொல்லுக்கு எதிர்சொல் என்ன?
????????????
வா...ல் பையன் !
ஒரு பழம், அதை பக்குவப்படுத்தியபின்,
பதப்படுத்தியபின் (சமைத்தபின் அல்ல)
காயாக மாறுமே...
எங்கே சொல்லுங்க!
ஊறுகாய்!
சரக்கடிக்க ஸ்பெஷல் சைடிஷே அதான்!
எங்கிட்டயே கேட்கலாமா?
ஸ்பெஷல் சைட் டிஷை விடுங்க...
ஆர்டினரி சைட் டிஷ் எதுங்க???
சுகைனா.. தாங்களை பற்றி ஓரளவேனும் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி...
உங்க அவரை உங்களை விட நேசிப்பது சந்தோஷம்
33 கேள்வி ஒன்று தயார்செய்து அதை விளக்கிய விதம் அருமை......
//அப்படியா!
எங்க சொல்லுங்க
தெரியும் என்ற சொல்லுக்கு எதிர்சொல் என்ன?
????????????//
தெரியாது என்று நான் சொல்ல மாட்டேன் என்று உங்களுக்கு தெரியாதா?
//சுகைனா.. தாங்களை பற்றி ஓரளவேனும் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி...//
நன்றி அபூஅஃப்ஸர்!
//உங்க அவரை உங்களை விட நேசிப்பது சந்தோஷம்//
பொதுவா எல்லாப் பெண்களும் அப்படித்தானே?!
அது சரி, முப்பத்தி இரன்டோட இன்னொன்று சேர்ந்துருச்சா உங்கள சொல்லவில்லை அந்த ஒன்றைச்சொன்னேன்!!, பதிலகள் இயற்க்கையாக இருந்ததது. பைக் சத்தம்..அடடா!! நிச்சயமாக அவர் நன்றாகவே ரசித்திருப்பார்
இப்போ என்னையும் மாட்டி விட்டுடீங்களா!! யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது போலிருக்கு. பொறுப்புடன் பதிலளிக்க முயற்சி செய்கின்றேன்.
//பைக் சத்தம்..அடடா!! நிச்சயமாக அவர் நன்றாகவே ரசித்திருப்பார்//
ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தவர், ஏழெட்டு வருடம் முன்பு, முதன் முதலாய் பைக் வாங்கியபோது, ஒவ்வொரு முறை அவர் போகும் போதும், வரும் போதும், பால்கனியின் நின்று (அப்போது மாடியில் குடியிருந்தோம்) பார்த்து ரசித்து, மனம் முழுதும் நிரப்பிக் கொண்டு தான் உள்ளே வருவேன்! அது ஒரு கனாக் காலம்.
//இப்போ என்னையும் மாட்டி விட்டுடீங்களா!! யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது போலிருக்கு. பொறுப்புடன் பதிலளிக்க முயற்சி செய்கின்றேன்.//
ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி, ஷபி! உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
//இப்போ என்னையும் மாட்டி விட்டுடீங்களா!! யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது போலிருக்கு. பொறுப்புடன் பதிலளிக்க முயற்சி செய்கின்றேன்.//
ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி, ஷபி! உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//
என்னோட EMBA அசைன்மென்ட் கூட இதுவும் ஒரு அசைன்மென்ட், கொஞ்சம் டைம் கொடுங்க சகோதரி.
மிகவும் யதார்த்தமான எளிமையான பதில்கள். அருமையாக இருக்கிறது. வித்தியாசமான வரவேற்பும், வழியனுப்புதலும் கண்டேன், மகிழ்ந்தேன்.அருமை.
பதில்கள் வித்தியாசமாக ரசிக்கும்படி உள்ளன. அருவி பற்றிய வரிகள் அருமை.
//என்னோட EMBA அசைன்மென்ட் கூட இதுவும் ஒரு அசைன்மென்ட், கொஞ்சம் டைம் கொடுங்க சகோதரி.//
மெதுவா பதில் சொன்னாலும், தெளிவா அழகா பதில் சொல்வீங்கன்னு தெரியும் ஷஃபி!
//மிகவும் யதார்த்தமான எளிமையான பதில்கள். அருமையாக இருக்கிறது. வித்தியாசமான வரவேற்பும், வழியனுப்புதலும் கண்டேன், மகிழ்ந்தேன்.அருமை.//
எவ்வளவு அழகாக பாராட்டுகிறீர்கள். நெகிழ்ச்சியான நன்றிகள்!!!
//பதில்கள் வித்தியாசமாக ரசிக்கும்படி உள்ளன. அருவி பற்றிய வரிகள் அருமை.//
நன்றி நவாஸ், தொடர்ந்து என் ப்ளாகை படித்து, விமரிசிப்பதற்கு!!!
இதோ இங்கே, தங்களின் வேண்டுகோளுக்கு இனங்க, என்னைப் பற்றி 32ல்: http://shafiblogshere.blogspot.com/2009/07/32.html
சுஹைனா ஒரு விஷயத்துக்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.சில சமயம் சில செயல்களால் என்னவருடன் கோபித்துக் கொண்டு எரிச்சலடைவேன்..அதன் பின் உங்கள் ப்லாகுக்கு வந்தால் எல்லா கோபமும் பறந்து விடும்..வாழ்க்கையை அனுவனுவாக நீங்கள் ரசிக்கும் விதமும் ஆயுள் முழுக்க புதுமணத்தம்பதிகளாக வாழும் உங்கள் மனமும் மிகவும் பிடித்திருக்கிறது.இப்பொழுதெல்லாம் எதாவது சின்ன ஒரு வருத்தம் வந்தாலும் உங்களை நினைத்துக் கொண்டால் என் வருத்தம் பறந்து விடுகிறது.
ஜோக் அடிக்காதிங்க தளிகா! நாங்களும் அடிக்கடி டூ விட்டுக்குவோம். பாருங்க, எனக்கு பிடிக்காதது கூட, அவர் மூன்று நாளைக்கு மூஞ்சியை தூக்கி வெச்சிக்கிறதுன்னு சொல்லியிருக்கேன்.
ஆனாலும், உங்க வருத்ததை போக்கும் மருந்தா இருந்திருக்கேன்னு நினைச்சா, ஹேப்பியா இருக்குப்பா!
வாழ்க்கையை அணுஅணுவா ரசிக்கிறதுன்னு சொல்றிங்களே, அது வேணா 100% உண்மை. இது எனக்கு மட்டுமல்ல, எல்லா கவிஞர்களுக்கும் பொருந்தும்.
Post a Comment