Friday, July 3, 2009

நீ சோகம் கொள்கையில்...


சீறிப் பாய்கிறாய், எனைக் கண்டு ஓடி ஒளிகிறாய்,
ஊரில் உலகிலே நம்மைப் போல் யார் உளர் என் அன்பே?

வேரில் வெந்நீரை நீயும் ஊற்றிச் செல்லாதே
நாறிப் போய்விடும் பொழப்பு நாற்றம் கொண்டிடும்!

காலன் நம்மிடம் நெருங்கும் காலம் உள்ளவரை
ஆலவிழுது போல் நம் காதல் தழைத்தே ஓங்கிடும்!

காலம்கடக்கலாம் தலையில் நரைகள் தோன்றலாம்-மிக
ஆழமானது எனில் நம் காதல் தானது!

நீ சோகம் கொள்கையில் நான் ஆறுதல் தந்திடுவேன்
பூப்போல உன்னையே என்நெஞ்சில் தாங்குவேன்!

தீப் பட்ட இடத்திலே நான் தேனைத் தடவுவேன்,
பா மாலை பாடியே ஒரு தாய் போல் மாறுவேன்!

ஒரு ராஜா மகனாக நீ உலகாளும் வரம் வேண்டும்,
இரு ரோஜா மலர் போல நாம் மணத்தைத் தர வேண்டும்!

கருவிழியாள் அன்புக்கு தலை குனிந்திட வேண்டுமடா
சிறு குழந்தை போல் என்றும் எனைச் சுற்றிட வேண்டுமடா!

அந்த, உலகத்திலே நம்மையன்றி யாருமில்லை,
எந்த கவலையுமே அங்கு இல்லை இல்லையில்லை!

பந்தம் பாசமெல்லாம் நம் இருவர் இடையே தான்
உந்தன்மடி சாய நாம் சொர்க்கம் காண்போமே!!

-சுமஜ்லா

7 comments:

*இயற்கை ராஜி* said...

thangal pathivu..tmilmalar ithalil veliyaki ullathu..
vivarangalukku
iyarkai09.blogspot.com paarkavum

SUMAZLA/சுமஜ்லா said...

ஏற்கனவே பார்த்து விட்டேன். நன்றி!

Anonymous said...

காதல் பேசும் அத்தனை வார்த்தைகளையும் கவிதையில் பேசியிருக்கீறீர்கள் ரொம்ப நல்லாயிருக்குப்பா....வாழ்த்துக்கள்

SUFFIX said...

//சீறிப் பாய்கிறாய், எனைக் கண்டு ஓடி ஒளிகிறாய்,
ஊரில் உலகிலே நம்மைப் போல் யார் உளர் என் அன்பே?//

இது தான் கண்ணாமூச்சி விளையாட்டோ?

SUFFIX said...

//இரு ரோஜா மலர் போல நாம் மணத்தைத் தர வேண்டும்!//

இரு ரோஜா மலர்....ஜோரான வரிகள்

SUMAZLA/சுமஜ்லா said...

//காதல் பேசும் அத்தனை வார்த்தைகளையும் கவிதையில் பேசியிருக்கீறீர்கள் ரொம்ப நல்லாயிருக்குப்பா....வாழ்த்துக்கள்//

நன்றிப்பா! இது போல இன்னும் பல கவிதைகள் உள்ளது. போடலாமா வேண்டாமா என்ற ஒரு சிறு தயக்கம் உள்ளது. காரணம் வாசகர்கள், என் வாழ்வோடு அதை இணைத்து நினைத்து விடுவார்களோ என்று தான்!

ஷஃபி சின்னப் பிள்ளைங்க மட்டும் தான் கண்ணாமூச்சி விளையாடனுமா?

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு காதலின் ஆழத்தை(அது எத்தனை வயதானாலும்) அழகா சொல்லிருக்கீங்க‌