Tuesday, July 28, 2009
இடுகைக்கு சுலபமான லின்க்
நாம ப்ளாக்ல எல்லா இடுகைகளையும் புதியவர்கள் படிக்க, Blog Archive எனப்படும் லின்க் கொடுத்திருப்போம். அதில் பார்த்தா, அந்த மாத பதிவுகள் மட்டும் நீண்டு இருக்கும். முந்தய பதிவுகள் எல்லாம் சுருண்டு இருக்கும். இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது.
முதலில், Dashboard - Lay Out - Add a gadget போய், அதில் labels என்று இருப்பதை க்ளிக் செய்யவும். இப்போ கீழ் காணும் விண்டோ தோன்றும்.
இதில் title என்னும் இடத்தில், Contents அல்லது ‘உள்ளே உள்ளவை’ போன்ற ஏதேனும் ஒன்று கொடுக்கவும். அடுத்து, show number of posts per label என்று இருப்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்து விட்டு, save செய்யவும்.
இனி, ஒவ்வொரு முறை நாம் போஸ்டிங் போடும் போதும், போஸ்ட் விண்டோவின் கீழ் இருக்கும், Labels for this post: என்று இருக்கும் இடத்தில், நம்முடைய போஸ்ட்டின் தலைப்பை கொடுத்து விட வேண்டும். அவ்வளவு தான்!
இருங்க, இன்னொரு வேளை இருக்கிறது. இப்போ, சைடு பாரில் உங்க போஸ்ட்டின் தலைப்பு தெரியும். அதை சுட்டினால், அந்த போஸ்ட் திறக்கும். ஆனால், மேலே கீழ் காணும் ஒரு மெஸேஜ் தெரிந்து நம்மை இம்சை படுத்தும்.
இதை நாம் வராமல் செய்து விடலாம். சற்று கவனமாக படியுங்கள்.
Dashboard - Layout - Edit Html போய், Expand widgets என்று இருக்கும் சிறிய பாக்ஸை டிக் செய்து கொள்ளுங்கள். இப்போ, மேலே மெனுபாரில் இருக்கும் edit ல் உள்ள find on this page செலெக்ட் செய்து, அதில் hfeed என்று கொடுத்து, தேடுங்கள். இப்போ, உங்க html ல் உள்ள hfeed என்ற வார்த்தையை அது தெரிவு செய்து கொடுக்கும்.
அதன் கீழே பாருங்கள்; கீழ்கண்ட கோடிங் தெரியும்.
<b:include data='top' name='status-message'/>
<data:defaultAdStart/>
அதை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக கீழே இருப்பதை பேஸ்ட் செய்து விடுங்கள்.
அவ்வளவு தான். இப்போ உங்க லேபிளே உங்க இடுகைக்கான லின்க் ஆகிவிடும்.
சரி, இப்போ, இந்த லின்க்கை க்ளிக் செய்தால், அதே விண்டோவில் தான் திறக்கும். நமக்கு தனி விண்டோவில் திறக்க வேண்டுமென்றால்... கவலைப்படாதீர்கள் அதற்கும் வழி இருக்கிறது.
மேலே சொன்னது போலவே, Edit Html - Expand widgets போய், மெனு பாரின், edit menuவில் இருக்கும் find என்பதில், data:label.url என்று அடித்துத் தேடுங்கள்.
இப்போ, கீழ் கண்டவாறு இருக்கும்.
இதை கீழ் கண்டவாறு மாற்றி விடுங்கள்.
இனி, உங்க லேபிள் தனி விண்டோவில் திறக்கும்.
சரி, எல்லாவற்றிற்கும் லேபிள் மூலம் லின்க் கொடுத்தாச்சு. நிறைய போஸ்டிங் போடும் போது, இது அனுமார் வால் போல வளர்ந்து கொண்டே போகிறது; என்ன செய்வது? வேறென்னங்க, இங்கே சைடு பாரில் நான் போட்டிருப்பது போல, லேபிளுக்கு ஒரு டிராப் டவும் மெனு (இழு நீள் சுட்டி) போட்டால், முடிந்தது. அதுவும் சுலபம் தான். மேலே படியுங்கள்.
அதே edit html - expand widgets, போய் கொள்ளுங்கள். இப்போ, label1 என்று போட்டு தேடுங்கள். கீழே காணும் கோடிங் கிடைக்கும்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<data:title/>
</b:if>
<b:loop values='data:labels' var='label'>
<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<data:label.name/>
</b:if>
(<data:label.count/>)
</b:loop>
</select>
<b:include name='quickedit'/>
</b:includable>
</b:widget>
இதை தூக்கிவிட்டு, இதற்கு பதிலாக கீழே இருப்பதை பேஸ்ட் செய்து விடுங்கள்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<data:title/>
</b:if>
<select onchange='location=this.options[this.selectedIndex].value;' style='width:200px'>
<option>Labels</option>
<b:loop values='data:labels' var='label'>
<option expr:value='data:label.url'><data:label.name/>
</option>
</b:loop>
</select>
<b:include name='quickedit'/>
</b:includable>
</b:widget>
இதில், கொட்டை எழுத்தில், Labels என்று இருக்கும் இடத்தில், உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுங்கள். அது தான் உங்கள் இழுநீள்சுட்டியில் முதலாவதாக தெரியும். அதோடு, 200 என்று இருக்கும் இடத்தின் வேல்யூவை மாற்றிப் போட்டுக் கொண்டால், இழுநீள்சுட்டியின் அகலம் மாறுபடும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்குங்க. அது தான் உங்க டெம்ப்ளேட்டை பேக் அப் எடுத்துக் கொள்வது. பயந்துறாதிங்க. ரொம்ப ஈஸி. Edit Html போய், Expand widgets கொடுத்து, எல்லா கோடிங்கையும் காப்பி பண்ணி, ஒரு நோட் பேடில் சேவ் செய்து கொள்ளுங்கள். இது எப்பொழுதும் இருக்க வேண்டும். ஏதாவது தவறு நேர்ந்து விட்டால், மீண்டும் இதைத் தூக்கி அதில் போட்டால், பழையபடி உங்க டெம்ப்ளேட் திரும்ப கிடைத்து விடும். எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு முன்னும், சக்ஸஸ்புல்லாக செய்து முடித்த பின்னும், இந்த நோட் பேடில் இருக்கும் காப்பியை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
-சுமஜ்லா.
10 comments:
S.A. நவாஸுதீன் said...
புதுப்புது நல்ல விசயங்களும், தகவல்களும், விளக்கங்களும் கொடுத்துகிட்டே இருக்கீங்க. பாராட்டுக்கள் சகோதரி.
வால்பையன் said...
மற்றதற்கு நன்றி!
You might also like:
இந்த லிங்க் எப்படி கொடுக்குறது!
இனியா said...
நான் புதிது உங்கள் பிளாகில் பல நிறைய நல்ல தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்.. எனக்கு ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும்.
அப்துல்மாலிக் said...
புது பதிவர்களுக்கு தேவையான போஸ்ட் நன்றி
SUMAZLA/சுமஜ்லா said...
பாராட்டுக்கு நன்றி!
வால்பையன், LinkWithin என்று இருப்பதை க்ளிக் செய்தால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.
இனியாவின் இனிய வரவுக்கு நன்றி!
Anonymous said...
யப்பா
ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லிட்டு
கலக்குறீங்க
வாழ்க! மற்றும் நன்றி.
SUMAZLA/சுமஜ்லா said...
நண்பர் ஜமாலுக்கு,
இது போன்ற தகவல்கள் ஆங்கில தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதை, நான் தொகுத்து வைத்திருந்தேன், என் உபயோகத்துக்காக. அதைத்தான் அவ்வப்போது வெளியிடுகிறேன். மற்றபடி, எனக்கு கோடிங் எல்லாம் எழுதத் தெரியாது.
அன்புடன் அருணா said...
அசத்தல்!!! பூங்கொத்து!
NIZAMUDEEN said...
இதற்கு எனது கருத்து:
பதிவர்களுக்கு பயன் தரும் குறிப்பு.
கண்ணகி said...
நன்றி. சுமஜலா..உங்கள் டெக்னிக்கல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது..