Thursday, August 13, 2009

நூலகமும் நூலாக்கமும்


முதன் முறை புத்தக திருவிழாவுக்கு போகும் போது, என்ன நினைத்தேனோ, சொன்னேனோ, அது நாலாவது முறையாக போன போது, எனக்கு உறுதியானது.

ஈரோட்டில் வருடம் ஒரு முறை நடக்கும் புத்தக திருவிழா, இந்த வருடமும், மக்கள் சிந்தனை பேரவையினரால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் நிறைவு விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் வந்திருந்தார்.

நான் முதன்முறை போனபோது, இரவு நேரம். பெரிய பேனர் நம்மை வரவேற்கிறது. வெளியே ஸ்டால் நம்பரும், ஸ்டால் பெயரும் இண்டெக்ஸ் ஆக எழுதி வைத்திருந்தார்கள். போவதற்கு ஒரு வழி, வருவதற்கு ஒரு வழி ஆக இரண்டு வழியை கயிற்றால் பிரித்திருந்தார்கள். முதல் நாள் வலது புறம் நுழைந்து இடது புறம் வந்தால், அடுத்த நாள் இடது புறம் நுழைந்து வலது புறம் வரும் விதமாக, காவலர்கள் மாற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே நுழைந்ததும், புத்தகம் படிக்கும் காந்தியடிகளின் சிலை நம்மை வரவேற்கிறது.

நாங்கள் ஒரு சில ஸ்டால்கள் மட்டும் பார்க்க முடிந்தது. அதற்குள் எல்லாம் மூடி விட்டார்கள். சரி, பிரிதொரு நாள் போகலாம் என்று வந்து விட்டேன்.

அதே போல மீண்டும் சென்றேன். நிதானமாக சுற்றி வந்தோம். படிப்பவர்களை விட எழுதுபவர்கள் அதிகமாக இருப்பது போல் தோன்றியது. அனைத்து முக்கிய பதிப்பகங்களின் ஸ்டால்களும் இருந்தன. புத்தக ஸ்டால்களுக்கு இடையே, சி.டி.க்கள் விற்பனையும், பள்ளிகளுக்கு தேவையான அறிவியல் உபகரணங்கள் விற்பனையும் நடந்து கொண்டிருந்தன.
்நான் விரும்பி வாங்கிய நான்கு கணினி சம்பந்தபட்ட புத்தகங்கள்:

1. எஸ். தணிகை அரசு எழுதிய ‘ஜாவா ஸ்க்ரிப்ட்’ (நர்மதா பதிப்பகம்)விலை:100

2. ராஜமலர் எழுதிய ‘ஏ எஸ் பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள்’(நர்மதா பதிப்பகம்)விலை:130

3. பாக்கியநாதன் எழுதிய ‘PHP 5 & MY SQL’ (கண்ணதாசன் பதிப்பகம்)விலை:90

4. க.ஸ்ரீதரன் எழுதிய ‘Flash - எனும் நுண்கலை நுணுக்கம்’(நர்மதா பதிப்பகம்)விலை:150

அதோடு, சுராவின் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதியை(விலை 220) வாங்கினேன்.

புத்தக திருவிழாவில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவிகிதம் தள்ளுபடி உண்டு.

சுற்றிலும் ஸ்டால்கள் போட்டு, நடுவில் திறந்தவெளி அரங்கில், மேடை போட்டு, தினமும் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.


தினமும் பகல் நேரத்தில், அனைத்து பள்ளிகளும் குழந்தைகளை பேருந்தில் அழைத்து வந்தனர். அதனால் பகலிலும் விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருந்தது.

நான் மூன்றாவது முறையாக, ஒரு குறிப்பிட்ட பப்ளிஷர்ஸ் ஓனரை குறிப்பிட்ட காரணத்துக்காக பார்க்க சென்றிருந்தேன். சரியாக நான் கிளம்பி போகவும், என் மகள் அங்கே பள்ளியின் சார்பாக வந்திருக்கிறாள். ஜஸ்ட் மிஸ்!

மீண்டும் நான்காவது முறையாக என் தாயாரை அழைத்து சென்றேன். அவர், சமையல், உடல்நலம், மருத்துவம் சார்ந்த சில நூல்களை வாங்கினார்.

முதன் முறை போன போது, நான் என்னவரிடம் சொன்னேன், இறைவன் நாடினால், அடுத்த வருடம் என்னுடைய புத்தகமும் இங்கே இருக்கும் என்று!

ஆம், இறைவன் நாடி விட்டான்! இப்பொழுது, யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸுக்காகவும், கண்ணதாசன் பதிப்பகத்துக்காகவும் நான் இரண்டு நூல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டது. அதோடு, இதை முடித்ததும், இன்னும் சில நூல்கள் எழுதுவதற்கும், டிரேன்ஸ்லேஷன் ஒர்க் செய்வதற்கும் கமிட் செய்துள்ளேன். அதன் விளைவாகத்தான், எனது ஆங்கில கவிதைகளை சோதனை முயற்சியாக மொழிபெயர்த்து பார்த்தேன்.

யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், ஷாஜஹான் பாய் அவர்கள், என் எழுத்தால் கவரப்பட்டு, வரும் ஞாயிறன்று, கவிக்கோ அப்துர்ரஹ்மானுடனான என் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறார். உழைப்புக்கேற்ற நற்கூலி இறைவன் கையில் தான் உள்ளது. எல்லாமும் எதுவும் அவன் நாடியது தானே நடக்கும்?!

-சுமஜ்லா.
.

21 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் சுஹைனா

அரங்கப்பெருமாள் said...

வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்த்துள்ளான், அதனை நிறைவேற்றியும் உள்ளான்.

"நிச்சயமாக உங்கள் முயற்சி பலவாகும்(92:4)"

நட்புடன் ஜமால் said...

java, asp, php, flash

போதுமாங்க ... :)

-------------------------


வாழ்த்துகள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

வாழ்த்துகள் சகோதரி !

இப்னு அப்துல் ரஜாக் said...

வாழ்த்துகள் சகோதரி !

ஊர்சுற்றி said...

எழுத்தாளரே,வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

அப்பறம்,
கவிக்கோவை சந்திக்கப் போகிறீர்களா!!!
அதுக்கும் ஒரு வாழ்த்து. எனது, தோழி ஒருத்தி மூலமாகத்தான் அவரது கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அத்தனையும் அருமை.

குறிப்பாக சுட்டுவிரல், காக்கைச்சோறு - கடைசியாக 'பித்தன்' என்று ஒன்று. எல்லாமே சமூகத்தின் அவலங்களை நன்றாக அலசுபவை. அவருக்கு ஒரு வாசகனாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

Thangamani Prabu said...

நல்ல பதிவு! எழுதியவக்கு நன்றியும், இனி வரப்போகும் உங்கள் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்களும்!!

வால்பையன் said...

//இப்பொழுது, யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸுக்காகவும், கண்ணதாசன் பதிப்பகத்துக்காகவும் நான் இரண்டு நூல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.//

சொல்லவேயில்லை!
ரைட்டு பிரியாணி கன்ஃபார்ம்!

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஸ்டார்ஜன்,

நன்றி அரங்கண்ணா, உங்க திருவசன குறிப்புக்கும்...

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால்,

பின்ன நாங்கள்ளாம் கம்ப்யூட்டர் படிச்சவங்க இல்லையே, எப்படி கத்துக்கறதாம்????

SUMAZLA/சுமஜ்லா said...

ஊர்சுற்றி வரும் போது கவிக்கோவை பற்றி அறிந்து கொண்டீர்களோ?

நான் அவர் எழுத்துக்களை அவ்வளவாக வாசித்ததில்லை...

SUMAZLA/சுமஜ்லா said...

தங்கமணி பிரபு, உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

//ரைட்டு பிரியாணி கன்ஃபார்ம்//

சந்தோஷம், எப்ப விருந்து வைக்க போறீங்க?

சரவணன் said...

///அதோடு, இதை முடித்ததும், இன்னும் சில நூல்கள் எழுதுவதற்கும், டிரேன்ஸ்லேஷன் ஒர்க் செய்வதற்கும் கமிட் செய்துள்ளேன்.///

கலக்குங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சுஹைனா.....

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் சுஹைனா!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முன்பே கேட்டிருந்தேன், "தங்கள் தொடர் புத்தகமாக
எப்போது வரும்?" என்று... அந்த நேரம் வந்துள்ளது.

முன்பே எனக்கு மெயிலில் சொல்லியிருந்தீர்கள்,
''கவிக்கோவுடன் சந்திப்பு பற்றி முடிவாகியுள்ளது,
அதைப் பிறகு அனைவருக்கும் அறிவிக்கிறேன்''
என்று... அந்த நேரம் வந்துள்ளது.

தங்கள் பதிவு படித்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
வளர்க... வளர்க... வளர்க...

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றிங்க! இங்க செம்ம மழை இடி, சிஸ்டம் ஆஃப் பண்ணபோறேன்.

வால்பையன் said...

இங்கேயும் தான்!

Natraj said...

வாழ்த்துக்கள். உங்களுடைய எழுத்துக்கள் வித்யாசமாக உள்ளது. நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும்.

நடராஜ், சவுதி அரேபியா

SUMAZLA/சுமஜ்லா said...

நடராஜ், உங்க இதமான கருத்துக்கு மனம் கனிந்த நன்றி!