மனம்நிறையும் இளம்பிறையும்
தினம் ஓத திருமறையும்
வளம் சேர இறைநெறியும்
வகுத்தளித்த ரமலானே!
பதினோரு மாதங்கள்
மதியாவும் மயங்கிநிற்க,
கதிமோட்சம் தந்திடவே
உதித்ததிந்த ரமலானே!
விழிதிறந்து, விழித்திருந்து
புசித்திடாமல் பசித்திருந்து,
நனிசிறக்க தனித்திருக்க,
இனித்திருக்கும் ரமலானே!
மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே,
ஏந்தல்நபி(ஸல்) வகுத்தளித்த,
சாந்தியோடு சமாதானம்
ஏந்திவரும் ரமலானே!
மாசுபட்ட மனஅழுக்கை
தூசுதட்டி தூய்மையாக்க,
நீசரெல்லாம் நேசராக்க
வாசம்வீசும் ரமலானே!
ஜக்காத்தோடு சதக்காவும்,
நிக்கா ஆகா குமர்க்குதவி,
இக்காலத்தில் ஈந்துதவ
இறைவன்தந்த ரமலானே!
இல்லார்க்கு உள்ளோர்கள்
எல்லாரும் வழங்கிடவே,
பொல்லாத செயல்விட்டு
பேணிகாக்கும் ரமலானே!
ஷைத்தானை விலங்கிட்டு
வைத்தானே என்னிறைவன்,
துய்க்காமல் பசியுணர
செய்கின்ற ரமலானே!
சொர்க்கத்து சுகந்தம்பெற,
பர்க்கத்து அதிகப்பட,
நிர்க்கதியாய் நிற்பவர்க்கும்
நிலைகாட்டும் ரமலானே!
ஈதுதனை தந்திடவே,
சூதுதனை வென்றிடவே,
மாதமதில் மாணிக்கமாய்
மாட்சிபெற்ற ரமலானே!
சேதமின்றி மனிதம்காக்க,
நீதமான நாதமாக,
வேதமெனும் போதம்தந்து
ஓதசெய்த ரமலானே!
பொருள்துறக்க மனம்இனிக்க,
இருள்விலக்க புகழ்சிறக்க,
அருள்சுரக்க மலர்மணக்க
உருவெடுத்த ரமலானே!
வந்திடுவாய், பெருநாளை
தந்திடுவாய், அருளெனக்கு
சிந்திடுவாய், வரவேற்க
முந்துகிறேன் ரமலானே!
கரமேந்தி இறையோனை,
சிரம்தாழ்த்தி வணங்கிடவே,
வரவேற்பு தருகின்றேன்
வருக எங்கள் ரமலானே!
தருக அருள் இறையோனே!!
-சுமஜ்லா.
.
.
Tweet | ||||
27 comments:
முதன் முதலில் பின்னூட்டமிட வேண்டும் என்ற எனது நீண்ட நாளைய ஆசை நிறைவேறியது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது ரமளான் முபாரக்.
//கரமேந்தி இறையோனை,
சிரம்தாழ்த்தி வணங்கிடவே,
வரவேற்பு தருகின்றேன்
வருக எங்கள் ரமலானே!
தருக அருள் இறையோனே!!//
என்று தங்களைப் போலவே இனிய ரமளானை வரவேற்கிறேன்.
'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும்,தெளிவான சான்று கொண்டதாகவும்;(நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர் ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே எவர் அம்மாதத்தை அடைகிறாரோ,அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்...............
அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை......'
(2;185)
உங்கள் குடும்பத்தாற்கு எனது ரமலான் வாழ்த்துக்கள்
சுஹைனா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
ரமலான் சிறப்பை கவிதையாக அழகாக சொல்லி விட்டீர்கள்
அனைவருக்கும் ரமலான் முபாரக்
http://jaleela-duwa.blogspot.com/2009/08/blog-post_17.html
ரமாலான் துஆ
http://allinalljaleela.blogspot.com/2009/08/blog-post_3247.html
ரமாலான் துஆ
சிறப்பான வரிகள் கொண்டு
கவி பாடி விட்டீர்கள்
--------------------
அனைவருக்கும் ரமழான் முபாரக்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
கவிதை வரிகள் மிகவும் அருமை
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183).
ரமலான் வாழ்த்துக்கள்
சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் உலகளாவிய கட்டுரைப் போட்டி
விதிமுறைகள்:
1. கட்டுரைகள் 3 முதல் 6 பக்கத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும், தட்டச்சு செய்திருந்தால் 1200-1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
2. தட்டச்சு (Typing) செய்யப்பட்ட கட்டுரையின், எழுத்துருவும் (Font) ஈமெயில் மூலமாகவோ, நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
3. கட்டுரையை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க விரும்புபவர்கள் மூடிய உறையிலிட்டு, முழுமையான முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும்
4. பிற கட்டுரைகளிலிருந்து தொகுக்காமல், சொந்தமான ஆக்கங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும், புரட்சிகரமான கருத்துகள், புதுமை ஆக்கங்கள், ஆகியவை மார்க்கத்திற்கு முரண் இல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும, கட்டுரைகள் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.
5. கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டிய முகவரி/இடங்கள்:
a. இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாய்யியா. (Jeddah, K.S.A)
b. துறைமுக நூலகம் – துறைமுகம் (Jeddah, K.S.A)
c. suvanam@gmail.com
d. P.O. Box No. 32628, Jeddah 21438, Saudi Arabia.
6. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: ரமளான் பிறை 25, 1430H.
7. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.
8. தமிழில் எழுத தெரிந்த அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்
9. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு).
10. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக கலந்துகொள்ள அனுமதி இல்லை
11. ஒருவர் பல தலைப்புகளில் கட்டுரை சமர்பிக்கலாம்
12. ஒரே தலைப்பில் பலர் கட்டுரை எழுதியிருந்தால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற கட்டுரை மட்டுமே சுவனப்பாதையில் பிரசுரிக்கப்படும்.
13. ஒரே தலைப்பில் பலர் கட்டுரைகள் எழுதி முதல் மூன்று பரிசுக்களுக்கோ, அல்லது ஆறுதல் பரிசுக்களுக்கோ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
14. பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
தலைப்புகள்:
1. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி
2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா?
3. தனிக்குடித்தனம் தரமானதா?
4. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா?
5. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?
6. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை
7. தஃவாவில் பெண்களின் பங்கு
8. பெண்களும் உடற்பயிற்சியும்
9. அழகு சாதனப் பொருட்கள் – ஒர் ஆய்வு
10. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)
11. பத்திரிக்கை தர்மம்
12. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி
13. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)
14. கல்வியில் கணினியின் பங்கு
15. செல்ஃபோன் சிந்தனைகள்
16. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – ஓர் ஆய்வு
17. தவணைமுறை வியாபாரங்கள் – ஓர் ஆய்வு
18. முதல் உதவி மருத்துவங்கள்
19. மருத்துவமும் மனோதத்துவமும்
20. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்
21. இறைவனின் அருட்கொடை – ஃபைபாஸ் சர்ஜரி
22. டென்ஷன் ஆவது ஏன்?
23. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு
24. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்
25. தனிமனித வழிபாடு – ஓர் ஆய்வு
26. கற்காலத்தை நோக்கி மனிதன்
27. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)
28. ஷியாயிசம் ஓர் ஆய்வு
29. ஈராக் – ஒரு வரலாற்றுப் பார்வை
30. சவுதி அரேபியா – ஒரு வரலாற்றுப் பார்வை
31. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)
32. கிரிக்கெட்
33. ஷேர் மார்க்கெட்
34. வியாபாரமும் வட்டியும்
35. அரசியலும் நபி(ஸல்) அவர்களும்
36. குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்
37. புறம், கோள் மற்றும் அவதூறு
38. தர்ஹா வழிபாடு மார்க்கமா? – ஓர் ஆய்வு
39. வீரமும் உமர் (ரலி) அவர்களும்
40. பொறுமையும் அபூபக்ர் (ரலி) அவர்களும்
41. உழைத்து உண்ணுதல்
42. அரசாங்க உயர் பதவிகளில் தமிழக முஸ்லிம்கள் இடம்பெறாதது ஏன்? தீர்வு என்ன?
43. அரசிடமிருந்து நமக்குள்ள முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள வலுவான ஒரே தலைமையின் கீழ் எல்லா முஸ்லிமகளும் அணிதிரள வழி என்ன?
44. பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதேன்?
45. அரசியலில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதேன்?
46. நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை
47. குர்ஆன் இறக்கப்பட்டதின் நோக்கம்?
48. மாற்று மதத்தாருக்கு நாம் அளிக்கும் பங்களிப்பு
49. பொறுமையின் அவசியம்
50. நட்பு
சகோதரி நீங்களும் பங்கு பெறலாமே?
ங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது ரமலான் மாத சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
-சென்ஷி
வழக்கம் போல் அருமை...
ரமலான் வாழ்த்துகள் அக்கா மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்...
நம் நண்பர்கள் அனைவருக்கும் ....
சகோதரிக்கும் குடும்பத்தாருக்கும் இனிய ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்
வாழ்த்தளித்த அனைத்து நல்ல உள்ளங்களும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ, என்னிறையை இருகரமேந்தி இறைஞ்சுகிறேன்! இறைவன் போதுமானவன்!
//சகோதரி நீங்களும் பங்கு பெறலாமே?//
முயற்சி செய்கிறேன் நண்பரே! 50 தலைப்பிலும் எழுத வேண்டும் என்பது தான் என் ஆவல்! ஆனால், எந்த தலைப்பில் எழுதுவது என்று யோசித்து யோசித்தே நாட்கள் போய்விடக்கூடும்! :-)
புனித இரமலான் வாழ்த்துக்கள்.
-வித்யா
Just read your mail too, will back via email:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
உங்கள் குடும்பத்தாற்கு எனது ரமலான் வாழ்த்துக்கள்
சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் உலகளாவிய கட்டுரைப் போட்டி..
இத்தனை தலைப்புகள் தேவையில்லை என எண்ணுகிறேன். இதற்குப்பதிலாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்றே சொல்லியிருக்கலாம். தலைப்புகள் குறைவாக இருந்தால்தான் அந்தத் தலைப்புகளுக்குள் ஒன்றை மிக எளிதில் தேர்ந்தெடுக்கலாம். இவ்வளவு தலைப்புகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே மிக கடினம்.
ராஜாகிரியாரே,
முதல் பின்னூட்டம் இட வேண்டும் என்ற உங்கள் அன்பும் ஆர்வமும் கண்டு அகமகிழ்கிறேன்!
இவ்வினிய மாதத்தில் நற்செயல் புரிவதிலும் முந்த இறைவன் அருள் புரியட்டும்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்
(குட்டிஷ்கள் கிட்டயும் சொல்லிடுங்க)
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
Happy Ramadan.
May Allah give us, peaceful and healthy life.
Take care.
நல்ல கவி வரிகள்....
உயர்ந்த அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்ள பிரார்த்தனை செய்வோம்
அனைவருக்கும் இனிய ரமலான் நல வாழ்த்துக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.
நேரம் கிடைக்கும்போது ரமலான் நோன்பிற்கான காரணங்களையும், சிறப்புக்களையும் எழுதுங்கள் சகோதரி.
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
வாழ்த்து சொன்ன யாவரின் நாட்டங்களையும் தேட்டங்களையும், இவ்வினிய மாதத்தில் எல்லாம் வல்ல நாயன் நிறைவேற்றி வைப்பானாக! ஆமீன்!
Post a Comment