முத்து முத்து பூவே முத்தம் தரும் பூவே
வெண்ணிலவு போலே வெளிச்சம் தர வேண்டும்
கண்ணின் மணியாக கொஞ்சி விட வேண்டும்!
(சின்ன)
கவலைகளை மறந்து செல்லக்கிளி உன்னை
அன்பு செல்லும் வழியில் அரவணைக்க வேண்டும்!
மேகங்களின் மழையாய் மகிழ்ச்சி தர வேண்டும்
சோகங்களையெல்லாம் விட்டு விட வேண்டும்!
ஆரிராரோ என்று அணைத்து பாட வேண்டும்!!
(சின்ன)
புத்தம் புது வாழ்வில் புன்னகைக்கும் உறவே
நித்தம் நித்தமிங்கு நினைவிலாடும் வரவே!
பெற்றவர்கள் மகிழ்ந்து போற்றுகின்றோம் கண்ணே,
சுற்றம் போற்றி வாழ வாழ்த்துகிறோம் கண்ணே!
கல்புகனியாக வளர்ந்திடுவாய் மணியே!
(சின்ன)
-சுமஜ்லா
ஒரிஜினல் பாடல் இதோ:
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை
(சின்ன)
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை
(சின்ன)
சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை
(சின்ன)
.
Tweet | ||||
6 comments:
இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு போல
வாழ்த்துகள்.
இன்னும் ஒரு நாற்பது அம்பது இருக்கு...இந்த பாடல் கேட்டகிரில! ஒட்டுக்கா போட்டா போரடிச்சிரும்...அதான் போட மேட்டர் இல்லாத போது, அல்லது யோசிக்க டைம் இல்லாத போது, ஒவ்வொன்னா..
போடுங்கோ போடுங்கோ போட்டுகிட்டே இருங்கோ
நாங்க இரசிச்சிகிட்டே இருக்கோம்
//போடுங்கோ போடுங்கோ போட்டுகிட்டே இருங்கோ
நாங்க இரசிச்சிகிட்டே இருக்கோம்//
ரிப்பீட்டு!! மெகா கலெக்ஷன்ஸ் இருக்காக்கும்!! தாலாட்டு பாடல் தொகுப்பு போன்ற ஒன்றை நீங்கள் அச்சில் கொண்டு வரலாமே?
நல்ல வார்த்தைகளை தேடி எடுத்து போட்டு இருக்க அக்கா பாடி பாத்த கரேக்ட்ட மச் ஆகுது...
ஒரு சி.டி. யா போட்டு கெட்டகாலம் போல...
நல்லக்கு ....
எல்லாமே தாலாட்டு பாட்டு இல்லைங்க! ஒவ்வொன்னும் ஒரு விதம்!
உறவுகளின் திருமணத்துக்கு எழுதி தந்த வாழ்த்து பாடல்கள் தான் அதிகம்! அடுத்தவர் படிக்க வேண்டும் என்பதை விட, அதை ஒரு தொகுப்பாக்க வேண்டும் என்று தான் ப்ளாகில் போட்டு வருகிறேன்.
Post a Comment