Thursday, August 13, 2009

சுய அலசல் - என்னைப் பற்றி நானே...

இதுவும், பள்ளி நாட்களில் என்னைப் பற்றி நானே எழுதிய ஆங்கில கவிதையின் மொழிபெயர்ப்பு தான். Plumed Poems புத்தக தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

SELF REALISATION

MY CHARACTER
I am not afraid of anybody-
Whom so ever or what so ever may it be.

MY DESIRES
If one or two I can count,
But it rises upto a mount.

MY WAY
Our thoughts lead to deeds, its what I say
As I am the monarch of all I survey.

MY ATTITUDE
I cannot be quiet and calm
Even under the threat of a bomb.

MY SPEECH
I some times blabber and stammer,
Inspite of my wish for it to be clear.

MY DISPOSITION
My wings shall be broken before I start to fly,
As life is what we make it, I will not cry.

MY SORROW
I am not a mad to be sad,
My sorrow is that I am always glad.

MY TEACHER
She is good, if I am good,
Unless when I spoil her mood.

MY PARENTS
They give me what I want or lack,
I dont know how to pay them back.

MY FRIENDS
As they wish, they come and go
And do help me in my woe.

MY FAVOURITE
I do not know how to describe it
For, I do love its every bit.

MY LIFE
It may be too short, or too lengthy
God! to live through it, let me be healthy.

MY ENJOYMENT
I find enjoyment in enjoying life
Unless when it will be cut by KNIFE.

MY DEATH
I am not afraid to go to God
But ashamed to be barehanded before Lord.

MY DEPARTURE
I shall depart with content and smile,
Let my name be in every man's file.

MY SOUL
When I turn out to be nothing
No more will my soul cling.

MY ACCOMPANIST
When I think of it my heart to bleeds,
For all that accompanies, is only my deeds.

MY KINGDOM
I shall be rewarded according to my wisdom
And shall be provided with my own kingdom.

MY GOD
No words to speak and no claims to ask
As he is with me from dawn to dusk.

I AM NONE
Then there will be no more 'MY'
For I dont know whether I can even smile and cry.

-SUMAZLA


சுய அலசல்


என் குணம்
யாரைக் கண்டும் எவரை கண்டும் அச்சமென்பதில்லையே
போரை பிணியை கண்டதாலே மிச்சமெதுவுமில்லையே


என் ஆசைகள்
ஒன்றா இரண்டா இருக்குது ஆயிரம்
எண்ணிலடங்கா சிகரத்தின் உயரம்


என் வழி
கண்ணின் காட்சியின் வண்ணங்களே,
செயலாய் மாறுது நல்லெண்ணங்களே!


என் செயல்
கழுத்துக்கு கத்தி வந்த போதும் பேசுவேன்
அநியாயம் நடப்பது கண்டால் ஏசுவேன்!


என் பேச்சு
நன்றாக இருக்க வேண்டுமென்ற ஆசையை மீறி,
சிலபோது இறைத்து விடுகிறேன் சொற்களை வாரி!


என் நிலை
பறப்பதற்கு முன்பே சிறகொடிக்கப்பட்ட பறவை,
வாழ்க்கை நம்கையில் என்பதால் வராது அழுகை!


என் சோகம்
துன்பங்களையெல்லாம் தாண்டி வந்திடும் வேகம்,
அப்போதும் சிரிப்பு என்பது தான் என் சோகம்!!


என் ஆசிரியை
ஒழுங்காக இருக்கும் வரை போதிப்பார் வேதம்
ஒழுங்கற்று நடந்தால், எனக்குத்தான் சேதம்!


என் பெற்றோர்
தெரியாததெல்லாம் எனக்கு தெரிய செய்தீர்
தாய்ப்பால் கடனடைக்க ஒரு வழியும் சொல்வீர்!


என் நட்பு
வருவார்கள் போவார்கள் அது அவர்கள் இஷ்டம்
சோகம் தீர்க்க ஆளின்றேன் எனக்குத்தான் நஷ்டம்!


என் அன்புக்குரியது
சொல்லத் தெரியாமல் சொல்கிறேன்,
அதன் ஒவ்வொரு இணுக்கையும் ரசிக்கிறேன்!!


என் உயிர்
மிகபெரியதோ, மிகசிறியதோ கவலையை விடு
இறைவா ஆரோக்கியம் மட்டும் குறையாமல் கொடு!


என் மகிழ்ச்சி
மகிழ்ச்சியாய் வாழ்வது தான் என் மகிழ்ச்சி
வாழும் வரை இதற்காகத்தான் என் முயற்சி!


என் இறப்பு
என் முடிவுக்காக ஒருபோதும் வருந்தவில்லை
வெறுங்கையோடு ஏகன் முன் நிற்பது தான் பெருங்கவலை!!


என் பிரிவு
திருப்தியோடும் புன்னகையோடும் இறப்பேன்,
மாமனிதர் வரிசையில் என்றென்றும் இருப்பேன்!


என் ஆத்மா
நான் நானாகவே இல்லாத போது
என் ஆத்மாவுக்கு அங்கே வேலையேது?


என் உடன்வரவு
இதை நினைத்தால், நெஞ்சில் கொட்டுகிறது ரத்தம்,
உடன் வருவதோ, என் நற்செயல்களின் மொத்தம்!!


என் சொர்க்கம்
இறைவனிடம் எங்ஙனம் செய்வேன் தர்க்கம்,
என் தகுதிக்கு தக்கவாறு தருவான் சொர்க்கம்!!


என் இறைவன்
பேச ஒரு வார்த்தையில்லை, கேட்க ஒரு கேள்வியில்லை,
கேட்காமலே தருவதால், அவனை விட்டால் நாதியில்லை!!


நான் இல்லை
இனி, ‘என்’ என்ற வார்த்தைக்கு பொருளேது?
நான் சிரித்தழ முடியுமா என்பது கூட தெரியாது!!!


-சுமஜ்லா.

8 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முதலில் ஆங்கிலத்தில் எழுதியதற்குப் பாராட்டுக்கள்!
அடுத்து அதன் பொருள் மாறாமல் சுவைபட
மொழி மாற்றியதற்கு பாராட்டுக்கள்!

அமுதா கிருஷ்ணா said...

"ஒழுங்காக இருக்கும் வரை போதிப்பார் வேதம்
ஒழுங்கற்று நடந்தால், எனக்குத்தான் சேதம்!"

மிக சரியான வரிகள்..நன்றாக இருக்கிறது சகோதரி..

இப்னு அப்துல் ரஜாக் said...

MY WAY
Our thoughts lead to deeds, its what I say
As I am the monarch of all I survey.
என் வழி
கண்ணின் காட்சியின் வண்ணங்களே,
செயலாய் மாறுது நல்லெண்ணங்களே!

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

MY WAY
Our thoughts lead to deeds, its what I say
As I am the monarch of all I survey.
என் வழி
கண்ணின் காட்சியின் வண்ணங்களே,
செயலாய் மாறுது நல்லெண்ணங்களே!


எனக்கு இதை படித்தவுடன் ஞாபகம் வந்தது,நபிகள் நாயகத்தின் இந்த அமுத மொழிதான்.

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நிஜாம் அண்ணா, உங்க பாராட்டுக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

அமுதா கிருஷ்ணா, நீங்கள் ஒரு ஆசிரியை, அதனால், அதன் அருமை உணர்ந்திருக்கிறீர்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

அமுதா கிருஷ்ணா, நீங்கள் ஒரு ஆசிரியை, அதனால், அதன் அருமை உணர்ந்திருக்கிறீர்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

பீஸ் ட்ரைன்,
உங்கள் மூலமாக ஒரு புது ஹதீஸ் தெரிந்து கொண்டேன், நன்றி!