ஆசைக்குரியவர்: என்றென்றும் என்னவர் மட்டும்.
இலவசமாய் கிடைப்பது: நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய விருதுகள்.
ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
உலகத்தில் பயப்படுவது: சொன்னால், என் வீக்னெஸ் அம்பலமாகிவிடும்.
ஊமை கண்ட கனவு: ஒரு நாள் நான் Ph.D., செய்து டாக்டரேட் வாங்கணும்!
எப்போதும் உடனிருப்பது: செல்போன், பேனா, பென் டிரைவ், டைரி, குட்டி டிக்ஸ்னரி!
ஏன் இந்த பதிவு: அம்மு அழைத்ததால்...
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.
ஒரு ரகசியம்: அவர் தூங்கியபின், மீண்டும் நான் நெட்டுக்கு வருவது...
ஓசையில் பிடித்தது: தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்....பாடல் வரிகள்.
ஔவை மொழி ஒன்று: எண் எழுத்து இகழேல்.
(அ)ஃறிணையில் பிடித்தது: கணினி.
(அம்மு, இதே பதிவை ஆங்கிலத்தில் போட்டிருந்தார், நான் கொஞ்சம் வித்தியாசமாக தமிழில் மாற்றி விட்டேன்)
அவரவர்க்கு பிடித்த கேள்வியை போட்டு கொள்ளலாம், ஆனால் அகர வரிசையில் வர வேண்டும். நான் அழைக்கும் நால்வர், நட்புடன் ஜமால், சீமான்கனி, ஜலீலா அக்கா, பீர்!
தற்சமயம், நண்பர் பீர் அவர்கள் பதிவுலக விடுப்பில் இருப்பதால், நான்கோடு ஐந்தாவதாக நண்பர், க.தங்கமணி பிரபுவையும் அழைக்கிறேன்.
-சுமஜ்லா.
Tweet | ||||
18 comments:
அலெக்சா ரேட்டிங் பயங்கர ஸ்பீடா ஏறிட்டு இருக்கு சுஹைனா வாழ்த்துக்கள்
அவங்க ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியதை தாங்கள் தமிழில் மொழிபெயர்த்து அசத்திட்டீங்க
நன்றி வசந்த்! நான் அந்த விட்ஜெட்டையே தூக்கிரலாம்னு நினைத்து கொண்டிருந்தேன்!
நீங்களெல்லாம் ரெண்டு லட்சத்தி சொச்சத்துல இருக்கீங்க:)
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
அக்கா எல்லாமே சூபரா எழுதிறீங்க . ரொம்ப படிச்சிருக்கீங்கன்னு நெனைக்கிறேன் .
அப்படியே இதையும் படிச்சி எதாச்சு சொல்லுங்க அக்கா ...
http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_28.html
நிச்சயமா எழுதுறேன்.
நான் இப்ப பதிவுலக லீவில் இருக்கிறதால, கொஞ்ச டைம் வேணும்.
அலக்ஸா பத்தி சொல்லுங்க.
http://www.yusufislam.org.uk/
A FOR ALLAH
B FOR BOOK
ETC.........
YOU WILL LIKE IT.CHECK IT OUT.
என்னை அழைத்ததற்கு நன்றி , முடிந்த போது போடுகிறேன்.
ஒரு ரகசியம்: அவர் தூங்கியபின், மீண்டும் நான் நெட்டுக்கு வருவது...]]
ஹா ஹா ஹா
உங்க நேர்மை பிடிச்சிருக்கு பாஸ் ...
---------------
எம்மையும் அழைத்துள்ளீர்கள், இந்த முறை நான் உங்களை அழைக்க எண்ணியிருந்தேன் - பதிவு போடுவதில் நான் பிந்திவிட்டேன்.
:)
ஒரு ரகசியம்: அவர் தூங்கியபின், மீண்டும் நான் நெட்டுக்கு வருவது...
எல்லா வீட்டிலும் இது தான் ரகசியம் போலும்
//ஒரு ரகசியம்: அவர் தூங்கியபின், மீண்டும் நான் நெட்டுக்கு வருவது...//
நானும் உங்களை மாதிரிதான் சுகைனா.
அகரவரிசையில் கேள்வி பதில் நல்லாயிருக்குப்பா.
ஐ அக்கா எல்லாம் அருமையா எழதி இருக்கீங்க...
உங்கஅளவுக்கு எழுத முடியாது அக்கா . என்னையும் அழைத்ததற்கு நன்றி
நிச்சயமா எழுதுறேன்.
ரெண்டு நாளா காலையில் இருந்து நைட் வரை இங்கு பவர் கட்! ரிப்பேர் வேலை நடக்குது! யாருக்கும் பதில் போட முடியவில்லை!
'அ'கர வரிசை நல்லாயிருக்கு.
எப்போதும் உடனிருப்ப'வை' என
பன்மையில் போடலாம். செல்போன்,
பென் டிரைவ், டைரி, டிக்ஷ்னரி என்று
'ஆ'ங்கிலத்தில் போட்ட நீங்கள்
பேனா என்பதன்
'இ'ங்கிலீஷ் பதம்
(போட) மறந்து விட்டீர்களோ?
பென், பென் ட்ரைவ் இரண்டுக்கும் குழப்பம் வரக்கூடாதில்ல, அதான்...
அலெக்ஸா எவ்வளவுக்கெவ்வளவு கம்மியோ, அவ்வளவுக்கவ்வளவு பேமஸ் என்று அர்த்தம். இதை இங்கே செக் பண்ணலாம்: www.popuri.us
நெட் பில்லப் பார்த்தபின்பும் தூக்கம் வருதா :-))
நல்லா எழுதியிருந்தீங்க சுகைனா.. எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அடடா
ஆச்சர்யம்!
இணையம்
ஈஸியானதா?
உனக்கும்
ஊருக்கும்
எனக்கும் கூட
ஐயம் தீர
ஒன்று விடாது
ஓசையில்லா சேவையாய்
ஔடதம் நீக்கும்
அக்திலார்
சுமாஜ்லா
செய்வது
சிறிய பதிவன்று
சீரிய சேவை!
வாழ்த்துக்கள் சுமஜ்லா!!
(மன்னிக்க, தாமதமானாலும் தடையாயிடக்கூடாதுன்னு உங்க அழைப்புக்கு இப்போதைக்கு ஒரு பின்னூட்டம் ! பிறபாடு வர்றேன் பாருங்க.... அது கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம் - கலா மாஸ்டர் தலைமையில்லாம, ஆனா ஏவிஎம்ல பெரிசா செட்டு போட்டு!!)
அட!அட!அட! பின்னூட்டத்திலேயே அகரவரிசையா??? பின்னி எடுத்திட்டீங்க தங்கமணி பிரபு!
Post a Comment