அது உயிர் பெறும் போது விதி வெல்லும்!
கனவுகள் கண்ணுள் நடை பயிலும்,
கண்ணிமை மூடி மனம் துயிலும்!
நரம்பின் நாளத்தில் நடனமிடும்...
இதயத்தின் ஆழத்தில் புதைந்துவிடும்!!
உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்,
அது உறக்கம் மறந்து விழிப்பு தரும்!
வசந்தம் வாசலில் வட்டமிடும்,
பருவம் பாதையில் வழி நடத்தும்!
அன்பாய் தழுவி அரவணைக்கும்...
இன்பத்தின் எல்லையில் இணைந்துவிடும்!!
உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்,
அது உள்ளத்தின் எழுச்சியில் உருகிவிடும்!
கடலலை போல எழுந்து வரும்,
கடமைகள் மறந்து கவிதை தரும்!
காதல் தழுவலில் கனிந்து விடும்...
மோகத்தில் தன்னை இழந்து விடும்!!
உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,
அது உரிமையுடனே ஆட்கொள்ளும்!
தனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்,
தவிப்பினில் புதிய துடிப்பு வரும்!
அமைதியில் நெஞ்சம் தடுமாறும்...
அனுதினம் அதற்கு மனம் ஏங்கும்!!
-சுமஜ்லா
Tweet | ||||
12 comments:
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
உணர்வுகளின் கவிதை வரிகள் அருமை அக்கா....
உணர்வுகள் வாழ்வின் உண்மை சொல்லும்....
வாழ்த்துகள் அக்கா....
உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,
அது உரிமையுடனே ஆட்கொள்ளும்!
தனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்]]
மிக அருமை.
உணர்வுகளைப் பற்றி உணர்ந்து எழுதியிருப்பதால் உணர்வுகளுடன் படிக்க முடிகிறது. மிகவும் அருமை..
//அமைதியில் நெஞ்சம் தடுமாறும்...
அனுதினம் அதற்கு மனம் ஏங்கும்!!//
எப்படி அம்மா இத மாதிரி சிந்திப்பு? ரூம் போட்டு யோசிப்பீங்களா?
அட!!
உணர்வுப்பூர்வமாய் எழுதியுள்ளீர்கள் என்று நான்
உணர்கிறேன்.
ரமேஷ் விஜய்,
சீமான்கனி,
ஜமால்,
அரங்கபெருமாள் அண்ணா,
திரவிய நடராஜன் அண்ணா,
அருணா,
நிஜாம் அண்ணா
உங்கள் எல்லாரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
ரூம் போடாத(!) ஏகாந்த தனிமையில் தான் இது போன்ற கவிதைகள் பிறக்கும்:)
//கடலலை போல எழுந்து வரும்,//
உங்கள் எழுத்தின் அமைதி போலே
நோன்பு எப்படி போய் கொண்டிருக்கிறது?
பீஸ் ட்ரைன்,
நோன்பு நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. இன்று என் மகனும் நோன்பு வைத்துள்ளான். நாளை அம்மா வீட்டில், இந்த வருடம் போகும் ஹாஜிகளுக்கான ப்ரோக்ராம். நான் போவேன்.
அங்கு எப்படி?
இங்கு நல்லபடி போகிறது.மகன் தொடர்ந்து பிடிக்கிறான்,மகள் ஒரு நோன்பு மட்டும் வைத்தாள்.ஹாஜிகளாகப் போகும் புதிய குழந்தைகளுக்கு என் சலாம் சொல்லி,துவா செய்ய சொல்லவும்,நன்றி சகோதரி.
Post a Comment