Saturday, August 29, 2009

பதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்

டிப்ஸ் என்று எழுதினால், என்ன காசா என்கிறார்கள். இப்போ தில்லு முள்ளு என்று போட்டிருக்கிறேன், என்ன சொல்ல போகிறார்களோ தெரியவில்லை!


நான் சொல்ல போவதெல்லாம் தில்லுமுள்ளுகள் என்றாலும், யாரையும் அது பாதிக்காது, அதனால், அவை நல்ல தில்லு முள்ளுகள் எனலாம்.


உங்க ப்ரொஃபைல் வியூஸ் வேகமாக அதிகரிக்க வேண்டுமென்றால், ப்ரொஃபைலில் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி மாற்றுங்கள். புகைப்படத்தை பார்ப்பதற்காக நிறைய பேர் ப்ரொஃபைலை பார்வையிடுவார்கள்!


அடுத்தவர் இடுகையின் கீழ் கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணும் போது அதில் உங்க ப்ளாக் முகவரி தந்தால், அது லின்க்காக இருக்காது, இதை லின்க்காக தர HTML தெரியாதவர்களுக்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது,


உங்க போஸ்ட் எழுதும் விண்டோவில், Compose Modeல் கமெண்ட் எழுதி, லின்க் தந்து, போல்டு இடாலிக் எல்லாம் தந்து, இப்போ, EDIT HTML மோடுக்கு போய், அதை காப்பி செய்து, கமெண்ட் ஃபார்மில் பேஸ்ட் செய்தால், நீங்கள் விரும்பிய வண்ணம் லின்க் கிடைக்கும்.


உங்கள் பதிவில் தந்திருக்கும் அனைத்து லின்க்களும் தனி விண்டோவில் திறக்க செய்ய வேண்டுமா? அதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது!

Dashboard - Layout - Edit Html போய்

<head>


என்று இருப்பதற்கு கீழ்,

<base target='_blank' />


என்ற கோடிங்கை பேஸ்ட் செய்து சேவ் செய்து விடுங்கள். இப்போ, எல்லா சுட்டியும் ஆட்டோமேட்டிக்காக தனி விண்டோவில் திறக்கும்.


உங்க கமெண்ட்ஸில் ஸ்மைலி போட்டால், அது குறியீடாக தெரியாமல், ஸ்மைலி படமாக தெரிய வேண்டுமா?

Dashboard - Layout - Edit Html போய்
<head>
என்று இருப்பதற்கும் மேல்,

<script src='http://www.hotlinkfiles.com/files/2781038_stdla/sumazlasmiley.js' type='text/javascript'></script>

மேலே இருக்கும் கோடிங்கை பேஸ்ட் செய்து விடுங்கள். இது எம்பெடட் (பதிவுக்கு கீழ் இருக்கும்) கமெண்ட் ஃபார்மில் மட்டுமே வேலை செய்யும். தனிவிண்டோ கமெண்ட் ஃபார்மில் வேலை செய்யாது!


பதிவை ரீடரில் படிப்பவருக்கு நாம் விரும்பினால், முழுவதையும் தரலாம், அல்லது முதல் பத்தியை மட்டும் தரலாம். இதை செய்ய, DashBoard - Settings - Site Feed - Allow blog feeds - short என்று கொடுத்து விட வேண்டும். நம் எழுத்து பிடித்திருந்தால், நிச்சயம் நம் தளத்தை தேடி வருவார். நம் பேஜ் வியூஸும் அதிகரிக்கும்!


தமிழிஷ் போன்ற பிற திரட்டிகளில் நாம் விரும்பிய வாசகங்களை தருவது போல் அல்லாமல், தமிழ்மணத்தில், நம் பதிவின் முதல் மூன்று வரிகள் மட்டுமே தெரியும். இடையில் இருக்கும் வரிகள் தெரிய செய்ய, அவ்வரிகளுக்கும் மேல் இருப்பதை கட் செய்து, போஸ்டிங் பண்ணி, தமிழ் மணத்துக்கு அனுப்பி விட்டு, பின் மீண்டும் அதை பேஸ்ட் செய்து போஸ்ட் செய்ய வேண்டியது தான்!


பதிவின் தலைப்பு கவர்ச்சியாக இருந்தால், நம் பதிவு பலரால் படிக்கப்படும். உதாரணமாக ஒருவர் காம கதை என்று தலைப்பிட்டிருந்தார். ஆனால், அதில் அப்படி ஒன்றும் இல்லை. அவர் கொடுத்திருந்த பின் குறிப்பு : இக்கதையில் நிறைய கமாக்கள் (,,,,,,,,,) இருந்ததால், இதற்கு கமா கதை என்று பெயரிடலாம் என்று இருந்தேன், தவறுதலாக ஒரு சொல் பிழையாகி விட்டது!

இது எப்படி இருக்கு?!

-சுமஜ்லா.
.

43 comments:

க. தங்கமணி பிரபு said...

பயனுள்ள கருத்துக்கள்! காசு கிடைப்பதில்லை, நேர விர்யம் அதிகம், த்ட்டச்சு தெரியாமல் தேடிதேடி அடித்த என் ப்ளாக்குக்கு கைதட்டலும் காது நிறைய கேட்கவில்லை என்ற மனக்குறை போஷாக்கான ஹிட் கவுண்ட்டரால் ஈடு செய்யப்படட்டுமே! நல்ல எண்ணம்! வாழ்க வாழ்க!

பிரியமுடன்...வசந்த் said...

டிப்ஸ்களுக்கு நன்றி சகோ

♫சோம்பேறி♫ said...

Useful. Wil try. :-)

seemangani said...

''கோல்மால்'' எல்லாம் நல்ல இருக்கு அக்கா....
எனக்கு ஒரு டவுட் நாம ப்ளோகில் நண்பர்களின் தற்போதைய பதிவும் தெரிய என்ன செய்ய வேண்டும்.....
என் வலைப்பூக்கள் :க்கு கிழே இருப்பது போல்....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

done

NIZAMUDEEN said...

பதிவு நல்ல பதிவு.

அந்த 'கமா' சிறுகதையின்
சுட்டியைத் தரலையே!

Positive Anthony Muthu said...

தில்லு முல்லு பத்தி தில்லா எழுதியிருக்கீங்கப்பா. நன்றிகள்.

நிறைய எழுத வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

தங்கமணி பிரபு, பதிவுலகில் பொறுமையும், விடா முயற்சியும், நல்ல திறமையும் இருந்தால், நிச்சயம் பிரபலமாகலாம்....

நான் எழுதும் போது,அடுத்தவர் படித்து பாராட்ட வேண்டும் என்பதை விட, என் ஆத்ம திருப்திக்காக தான் எழுதுகிறேன் என்ற எண்ணத்துடன் தான் எழுதுவேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

வசந்த், உங்க பப்லு படம் சூப்பர்!

SUMAZLA/சுமஜ்லா said...

//எனக்கு ஒரு டவுட் நாம ப்ளோகில் நண்பர்களின் தற்போதைய பதிவும் தெரிய என்ன செய்ய வேண்டும்.....//

Gadgetsல் BlogList என்று ஒன்று இருக்கும் பாருங்கள். அதை க்ளிக் செய்து, விரும்பிய வலைப்பூவை இணைத்து கொள்ளுங்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

சுரேஷ் என்ன வித்தியாசமா அட்டெண்டன்ஸ் கொடுத்தீங்களா?

SUMAZLA/சுமஜ்லா said...

//அந்த 'கமா' சிறுகதையின்
சுட்டியைத் தரலையே!//

உங்க ஆர்வத்துக்காக இதோ: http://lathananthpakkam.blogspot.com/2008/06/blog-post_27.html

(நான் எப்போதுமே பொய் சொல்ல மாட்டேன். சின்ன வயதிலிருந்து அப்படி ஒரு பழக்கம்)

பீர் | Peer said...

ஸ்மைலி வேலை செய்யுது... மகிழ்ச்சி.

அந்த hotlinkfiles ல உங்க அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிட மாட்டீங்களே? :)

Ammu Madhu said...

நல்ல தகவல் சுமஜ்லா...உங்க டேக்(tag) சூப்பர்..அழகு தமிழில் எழுதி அசத்திடீங்க..

அன்புடன்,
அம்மு.

PEACE TRAIN said...

“நல்ல தகவல்"

SUMAZLA/சுமஜ்லா said...

//அந்த hotlinkfiles ல உங்க அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிட மாட்டீங்களே? //

மாட்டேன், ஆனால் more than one month அந்த ஃபைல் unused ஆக இருந்தால், அழிந்துவிடும்.

இவ்வளவு ஏன், அந்த ஃபைல் நேம் அப்படியே பிரவுசரில் கொடுங்க, http://.........sumazlasmiley.js என்று...

இப்போ, டவுன்லோட் கேட்கும்! அதை அப்படியே டவுன்லோட் செய்து, நோட் பேடில், .js என்ற எக்ஸ்டென்ஷனோடு, சேவ் செய்து கொள்ளுங்கள்.

இப்போ, உங்க அக்கவுண்ட்டில் அதை ஏற்றுங்கள்,.அவ்வளவு தான்!:-)

லதானந்த் said...

நன்றி

நட்புடன் ஜமால் said...

நல்ல டிப்ஸுங்கோவ்

நன்றி.

அன்புடன் அருணா said...

சூப்பர்.....பூங்கொத்து!

Indian said...

//அடுத்தவர் இடுகையின் கீழ் கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணும் போது அதில் உங்க ப்ளாக் முகவரி தந்தால், அது லின்க்காக இருக்காது, இதை லின்க்காக தர HTML தெரியாதவர்களுக்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது//

It is simple. Follow the below code.

==================================
*a href="www.google.com">என்னோட பதிவுக்கு வாங்க/a>

==================================
* க்கு பதிலாக < என மாற்றிவிடவும்.

என்னோட பதிவுக்கு வாங்க

என்று வரும்.

"www.google.com" க்கு பதிலாக உங்கள் வலைப்பதிவின் உரலைக் கொடுக்கவும்.

சென்ஷி said...

//
பதிவின் தலைப்பு கவர்ச்சியாக இருந்தால், நம் பதிவு பலரால் படிக்கப்படும். உதாரணமாக ஒருவர் காம கதை என்று தலைப்பிட்டிருந்தார்.//

காம கதை அப்படிங்கறது கவர்ச்சியான தலைப்பா?!
எகொசுஇ.

SUMAZLA/சுமஜ்லா said...

//காம கதை அப்படிங்கறது கவர்ச்சியான தலைப்பா?! //

இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி, அப்புறம் நான் எதாவது வில்லங்கமா பதில் தந்து பிரச்சினை ஆயிட போவுதுங்க :)

அது என்ன, எகொசுஇ ? கொஞ்சம் புரியற மாதிரி திட்டுங்களேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

இண்டியன்,

நான் சொன்னது Html தெரியாதவர்களுக்காக, இந்த வழியில் போல்டு இடாலிக் அண்டர் லைன் எல்லாம் தரலாம்!

கிளியனூர் இஸ்மத் said...

நீங்க சொன்னா மாதிரியே செஞ்சுட்டேன்...வாழ்த்துக்கள் டீச்சர்....நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

நீங்க சொன்னா மாதிரியே செஞ்சுட்டேன்...வாழ்த்துக்கள் டீச்சர்....நன்றி

சந்தனமுல்லை said...

:))

பழூர் கார்த்தி said...

பயனுள்ள டிப்ஸ்கள், நன்றி!!

பழூர் கார்த்தி said...

பயனுள்ள டிப்ஸ்கள், நன்றி!!

சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...

நல்ல உதவி மேடம்.

தங்கமணி

இடுகைக்கு வரும் எதிர்கருத்துகளை தாங்கும் பரந்த மனம் இருந்தால் எல்லாரும் படிப்பர் , பின்னுஉட்டம் இடுவர். அது இருக்கிறதா என்று கேட்டுகொண்டபின்னரே பதிவு எழுத வேண்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

என்னை இப்பவே டீச்சர் ஆக்கிட்டீங்க! நன்றி!

//இடுகைக்கு வரும் எதிர்கருத்துகளை தாங்கும் பரந்த மனம் இருந்தால் எல்லாரும் படிப்பர் , பின்னுஉட்டம் இடுவர். அது இருக்கிறதா என்று கேட்டுகொண்டபின்னரே பதிவு எழுத வேண்டும்.//

மிகவும் சரி! அதோடு, நல்ல எதிர்கருத்துகள் இருந்தால், பிரஸ்டிஜ் பார்க்காமல், அதை ஏற்று செயல்படுத்தும் மனபக்குவம் வேண்டும்.

Mrs.Faizakader said...

நேற்று உங்களின் இந்த பதிவை பார்க்காமல் விட்டுவிட்டேன். மிகவும் பயனுள்ள டிப்ஸ்

ஷ‌ஃபிக்ஸ் said...

பகிர்விற்க்கு நன்றி, முயற்சி செய்துடுவோம். தில்லு முல்லுள‌ "தில்ல" மட்டும் வச்சு!!

seemangani said...

நன்றி அக்கா....

blogpaandi said...

நன்றி :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உபயோகமான தகவல்கள்.. நன்றி மேடம்..!

மகேஷ் said...

பயனுள்ள தில்லுமுல்லுகள்.... நன்றி!

க. தங்கமணி பிரபு said...

///பதிவுலகில் பொறுமையும், விடா முயற்சியும், நல்ல திறமையும் இருந்தால், நிச்சயம் பிரபலமாகலாம்....///

நீங்கள் சொன்ன இவையெல்லாம் தேவையான அளவு உள்ள தொழில்முறை ஊடகவியலாளன் நான்! என் தேவைக்கான பிரபலமும் பாராட்டும் எனக்கு உள்ளன! எனினும் நான் உங்களுக்கு பின்னூட்டமிட்டிருக்கும் கருத்து நாம் சகஜமாக காணும் தொடக்ககால பதிவன்/கலைஞனின் அங்கீகார ஏக்கங்களுக்கு உங்கள் பதிவு ஒரு சிறந்த ஆறுதல் என்ற தகவலேயன்றி வேறல்ல! எனினும் நன்றியும் பாராட்டுக்களும்!!

பீர் | Peer said...

//SUMAZLA/சுமஜ்லா said...
... அது என்ன, எகொசுஇ ? கொஞ்சம் புரியற மாதிரி திட்டுங்களேன்.//

எகொசுஇ = என்ன கொடுமை சுமஜ்லா இது

மேலும் ட்விட்டர் / பதிவுலக சுருக்கெழுத்துக்கள் தெரிந்து கொள்ள... நீங்கள் வருகை தர வேண்டிய முகவரி,

http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_04.html அனுமதி இலவசம்...

ஹி.. ஹி.... விளம்பரம். ;)

SUMAZLA/சுமஜ்லா said...

பிரபு, நானும் பொதுவாக தான் கருத்து சொல்லி இருந்தேன்!

பீர் சார், உதவிக்கு நன்றி!

உங்க இடுகையை வாசித்தேன்...தசுகீவி

(தலை சுற்றி கீழே விழுந்து விட்டேன்)

Anonymous said...

விவிசி

விழுந்து விழுந்து சிரித்தேன்.

கிரி said...

//இது எப்படி இருக்கு?!//

ரொம்ப மோசமா இருக்கு

//சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
இடுகைக்கு வரும் எதிர்கருத்துகளை தாங்கும் பரந்த மனம் இருந்தால் எல்லாரும் படிப்பர் , பின்னுஉட்டம் இடுவர். அது இருக்கிறதா என்று கேட்டுகொண்டபின்னரே பதிவு எழுத வேண்டும்.//

வழிமொழிகிறேன்

SUMAZLA/சுமஜ்லா said...

கிரி,
உங்கள் வருகையை ட்விட்டர் மூலம் அறிந்து கொண்டேன்...

நீங்கள் வழி மொழிந்தது 100க்கு 100 சரி!

ஆரோக்கியமான விவாதம், எல்லா இடத்திலும் தேவை, பிளாகிங்கிலும்...அதோடு நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்து கொள்ளும் மனப்பக்குவமும்...

Muni barathy said...

எனது பதிவில் நீங்கள் வெளியிட்ட ட்ரிக்ஸை பயன் படுத்தியுள்ளேன்.

நன்றி

muni barathy