Sunday, August 2, 2009

நலங்கு பாடல் - வசீகரா

என்லாஃபிரா கண்நெஞ்சினிக்க - மென்
புன்னகையை பூக்களாய் தூவும்.
தலைமகள் நன்நலங்கினிலே - பொன்
மின்னலொளி பாதையில் சேரும்.

தேன் வாழ்த்துக்களும் பாட்டுக்களும் இந்நலங்கால் தானே!
வாழ்ந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் நல்மனதால் தானே தான்!

பொறுமையின் சுடரொளி கலைமானே
கலர்பூக்களோடு கிரீடம், உன் பாதைக்கு புதுப் பூக்கள்
இருவிழி மின்ன அன்பில் என்னை வெல்வாய்
அதை உணர்ந்த பின்பு கண்ணே
மனம் நிறைந்தே தான் வழிந்தோடும்.

கண்ணோடு கதை பேசி கனி வார்த்தை சொல்ல வர வேண்டும்.
கண்மணியின் விளையாட்டில் கதையாவும் சொல்லி தர வேண்டும்.

என்லாஃபிரா கண்நெஞ்சினிக்க - மென்
புன்னகையை பூக்களாய் தூவும்.
தலைமகள் நன்நலங்கினிலே - பொன்
மின்னலொளி பாதையில் சேரும்.

தேன் வாழ்த்துக்களும் பாட்டுக்களும் இந்நலங்கால் தானே!
வாழ்ந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் நல்மனதால் தானே தான்!

முழுநிலா உதித்ததும் உனைப் பார்த்து
உன்மேனி ஒளியால் வெட்க நீ ஜொலிப்பாயே அது புதுமை!
இறைவனின் மறையருள் மணம்வீச
இந்நாளிலே கண்ணே நீ மகிழ்வாயே அது இனிமை!

மானே உன் மனம் போல நல்லெண்ணம் யாவும் நிறைவேறும்
மாதவத்தால் நீயுதித்தாய் நிறைவான நலங்கு அரங்கேறும்.

என்லாஃபிரா கண்நெஞ்சினிக்க - மென்
புன்னகையை பூக்களாய் தூவும்.
தலைமகள் நன்நலங்கினிலே - பொன்
மின்னலொளி பாதையில் சேரும்.

தேன் வாழ்த்துக்களும் பாட்டுக்களும் இந்நலங்கால் தானே!
வாழ்ந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் நல்மனதால் தானே தான்!

ஒரிஜினல் பாட்டு இதோ:

வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

No comments: