DREAM ANGEL
A hand shook my shoulder with love;
It is kind and is soft as a dove.
I turned my face and smiled,
My happiness could not be filed.
I wanted to have a look at him,
I couldn't see clearly as it was dim.
He had two wings on his back,
He had better knowledge which I lack.
Taking me in his arms,
He did cross many a farms.
He embraced me by my hip,
And flew and flew without a slip.
I cannot tell you what happened then,
For he flew over a dark den.
He passed a valley and a stream,
But everything was only a dream.
When I woke up the next day,
I shared this news with gay.
Everybody mocked me,
Telling that he was my 'would be'
I could not consider him as an angel alone,
My cries for him changed my voice and tone.
Though only for a while, he played his part,
That thought in my heart stands apart.
-Sumazla
சொப்பன சுந்தரன்
அன்னத்தை போல மென்கரம் ஒன்று
கன்னத்தை தட்டி எழுப்பிய தன்று!
முகத்தில் புன்னகை சூடினேன்,
அகத்தில் இன்பத்தை நாடினேன்!
இருளோடு என்னை கவர்ந்திழுத்தார்,
அருளோடு உடன்வர எனையழைத்தார்.
பின்புறம் இரண்டு சிறகுகள் பார்த்தேன்
என்னிடமில்லா அறிவையும் கண்டேன்.
கோர்த்தார் கரமென் இடுப்பினிலே
பறந்தார் பலபல இடங்களிலே!
சேர்த்தே அணைத்தார் முகத்தோடு
பார்த்திட நிறைந்தார் அகத்தோடு!
அப்புறம் நடந்தது ரகசியம் தான்,
எப்புறம் திரும்பினும் அதிசயம் தான்!
மனைநிலம் ஆறுகள் கடந்திட்டார்.
கனவினில் கால்களின் தடமிட்டார்!
சொப்பனம் முடிந்து கண்விழித்தேன்,
இக்கதை மகிழ்வுடன் பகிர்ந்திட்டேன்.
தாலிக்குரிய தங்கமகன் - என
கேலிகள் பலரும் செய்தனரே!
தேவனாய் நினைக்கவும் முடியவில்லை!
தேடி அலைந்திடவும் சக்தியில்லை!!
சிறுபொழுதே என்னிடம் பங்கிட்டார்!
நினைவலையில் என்றென்றும் தங்கிட்டார்!!
-சுமஜ்லா.
Tweet | ||||
10 comments:
அருமையான கவிதை. ஆங்கிலம் மற்றும் அதன் மொழிபெயர்ப்பு இரண்டும் அருமை.. தலைப்புக் கச்சிதம்.
'இவவாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தைக் கற்றுக் கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும்,யாஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான்...' (12:6)
கவிதை கனவு பலித்தது. மச்சான் மாட்டிக்கொண்டார். :))
இப்படியாக உங்கள் கனவில் வந்தவர் யாரெனத்
தெரியவில்லை. ஆனால் எதுகை, மோனை
என்று அருமையாய் கவிதை!
'கனவுக் கதாநாயகன்' என்றும் தலைப்பிடலாம்.
(இந்தத் தலைப்பில் இனிமேல்கூட எழுதலாம்.)
தலைப்பே விதமாத்தான் இருக்கு.
கவிதையை பற்றி நான் சொல்லிட இன்னும் என்ன இருக்கு ...
//சேர்த்தே அணைத்தார் முகத்தோடு
பார்த்திட நிறைந்தார் அகத்தோடு!
அப்புறம் நடந்தது ரகசியம் தான்,
எப்புறம் திரும்பினும் அதிசயம் தான்!
மனைநிலம் ஆறுகள் கடந்திட்டார்.
கனவினில் கால்களின் தடமிட்டார்!//
அழகான காதல் வரிகள்....
//தேடி அலைந்திடவும் சக்தியில்லை!!//
தேடாமல்
கிடைதிட்டாரே...
சரிதானே அக்கா....
யப்பா, எத்துணை பேர் கிளம்பியிருக்கீங்க, இப்படி போட்டு கொடுக்க....
இதெல்லாம் ஜஸ்ட் கற்பனை கவிதை...அவ்ளோ தான்! நிஜமல்ல:)
அப்பவே ராஜகுமாரன் குதிரைல வந்தாரா? :)))
நல்லாயிருக்கு...
//தேடாமல்
கிடைதிட்டாரே...
சரிதானே அக்கா....//
எப்படி கிடைத்தார் என்ற சுவையான விவரத்தை இன்னொரு நாள் பதிவிடுகிறேன்.
//அப்பவே ராஜகுமாரன் குதிரைல வந்தாரா? :)))//
அவருக்கே இரண்டு இறக்கைகள் இருக்கும் போது குதிரை எதுக்கு??????
I FIND A DREAM POEM HERE,
IT WIND TO SCREAM EVERYWHERE,
PEACE AND LOVE,
PEACE AND LOVE
Post a Comment