Monday, August 31, 2009

காதல் பரிசு


கண்ணா, உன் மேனியிலே நான் கோலமிட்டேன் செழுங்கவிதை
கவிதையின் கருவாக நீ விதைத்திட்டாயே ஒரு விதை!

நம் அழகு ரோஜாவில் நாம் காண்போம் புது உலகம்
நம் காதற் பூமலர என்னுள் கனிந்திட்ட புதுத் திலகம்.

வசந்த வாசலிலே சுகந்தம் தரும் வரவு
கவலை மறந்தோட கொஞ்சும் பால் நிலவு.

மரத்தில் தொட்டிலிட காற்றில் அசைந்தாடும்
கனவில் தொட்டிலிட கருவாய் உருவாகும்!

மழலை முகம் கண்டு வீசிடுமே பூங்காற்று
மடியில் தவழ்ந்திடவே தென்றலொரு தாலாட்டு!

எங்கோ, கருங்குயிலின் மிதந்து வரும் சங்கீதம்
மெல்லிய தாலாட்டாய் என் கண்மணியின் காதோரம்!

மாம்பழச்சிட்டாக செம்மதுரப் பாலூறும்
மாதுளை இதழோரம் நல்மழலைத் தேனூறும்!

நம்மிருவரில் கொஞ்சமாய் சேர்ந்து அவ்விதயம்
நினைவு ததும்பிடவே சொர்க்கமாய் ஓர் உதயம்!

நலமாக, வளமாக மலர் தூய உறவு
நினைவோடு நடைபோட பிஞ்சுப் பூஞ்சிறகு!

இனிய நினைவுகளில் திகட்டும் ஒரு நினைவு,
இதமாய் இணைந்து வர நனவாகும் நம் கனவு!!

-சுமஜ்லா
.
.

15 comments:

நட்புடன் ஜமால் said...

அழகு பரிசு

அழக-கழகாய் வரிகளில்

:)

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால்... உங்களுக்கு பின்னூட்ட புலி என்று விருது தருகிறேன்!!!! (எப்படி நான் பதிவு போடுவது உடனுக்குடன் தெரிகிறது?)

Mrs.Faizakader said...

அண்ணனிடம் அனைவரும் கேட்டும் ஒரே கேள்வி இது தான்..;-)

அனைத்து வரிகளும் மிகவும் அருமையாக இருக்கு

கவிக்கிழவன் said...

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்
ஜமால்... உங்களுக்கு பின்னூட்ட புலி என்று விருது தருகிறேன்!!!!

NIZAMUDEEN said...

அழகு; அழகு; கவிதை அழகு!

SUMAZLA/சுமஜ்லா said...

அழகென்று சொன்னவர்களுக்கு அகம் கனிந்த நன்றிகள்...

யாதவன், நீங்க அந்த வாக்கியத்தை, காப்பி பேஸ்ட் தான செய்தீங்க! ஜமால், காப்பி கேட்ஸ் பதிவுக்கெல்லாம் வர மாட்டார்! :)

பிரியமுடன்...வசந்த் said...

சுஹைனா உங்களுக்கு பதிவுலக புலி விருது தருகிறேன் இடுகைகள் அடுத்தடுத்து அசராமல் வருகிறதே,,,

எப்டிங்க நானும் எவ்ளோதான் யோசித்தாலும் ரெண்டுநாள் ஆகுது ஒரு இடுகைக்கு....


கவிதையில்

//எங்கோ, கருங்குயிலின் மிதந்து வரும் சங்கீதம்
மெல்லிய தாலாட்டாய் என் கண்மணியின் காதோரம்!//

இந்தவரிகள் பிடித்தது.......

seemangani said...

//கண்ணா, உன் மேனியிலே நான் கோலமிட்டேன் செழுங்கவிதை
கவிதையின் கருவாக நீ விதைத்திட்டாயே ஒரு விதை!//
தொடக்கமே அழகாய் எழுதி இருக்கீங்க அக்கா....
கலக்கல்.....

SUMAZLA/சுமஜ்லா said...

//சுஹைனா உங்களுக்கு பதிவுலக புலி விருது தருகிறேன் இடுகைகள் அடுத்தடுத்து அசராமல் வருகிறதே,,,

எப்டிங்க நானும் எவ்ளோதான் யோசித்தாலும் ரெண்டுநாள் ஆகுது ஒரு இடுகைக்கு....//

காதை கொடுங்க ஒரு ரகசியம்...என் ப்ளாகில் டிராஃப்ட்ஸாக நிறைய சேமித்து வைத்துள்ளேன்...ஒன்றுமே டைப் செய்யாவிட்டால் கூட ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் :)

தினம் ஒன்று என்ற கணக்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், சில சமயம் இரண்டு வந்து விடுகிறது!

ஒரே நாளில் இரண்டு இடுகைகள் போடும் போது, சிலது சிலரின் பார்வைக்கு படாமலே போய் விடுகிறது.

ஒரு கவிதை, ஒரு கட்டுரை, ஒரு டெக்னிக்கல், ஒரு ஹிட் இப்படி ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறேன். இன்னும் பகிரங்கமாக சொல்ல முடியாத பல ரகசியங்கள்.

ஆனால், எல்லாம் உழைப்பு தான்!

அப்புறம், வசந்த் & சீமான்கனி உங்கள் பாராட்டுக்கு நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

வசந்த, உங்க கற்பனைக்கு முன்னால், நானெல்லாம் கால் தூசி!!!!

கிளியனூர் இஸ்மத் said...

குழந்தை மாதிரியே கவிதை மென்மையாக இருக்கிறது....

அபுஅஃப்ஸர் said...

எப்படிங்க இவ்வளவு தொடர்ந்து பதிவு போட்டுக்கிட்டே இருக்கீங்க, அதுலேயும் எதுவுமே மொக்கையும் இல்லே...

நான் பதிவு போட்டு 15 நாலாச்சி...

நல்லாயிருக்கு குழந்தைக்கு கவிப்பாடும் தாலாட்டு

அடிக்கடி பின்னூட்டமிடாததற்கு வருந்துகிறேன்

PEACE TRAIN said...

//மாம்பழச்சிட்டாக செம்மதுரப் பாலூறும்
மாதுளை இதழோரம் நல்மழலைத் தேனூறும்!//

அல்போன்சா மாம்பழம்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி இஸ்மத்!

//எப்படிங்க இவ்வளவு தொடர்ந்து பதிவு போட்டுக்கிட்டே இருக்கீங்க, அதுலேயும் எதுவுமே மொக்கையும் இல்லே...//

அட, இப்பத்தாங்க, தம்பி ஷபி, காலேஜ் போறதுனால, மொக்கை போட ஆரம்பிச்சிட்டீங்கன்னு பின்னூட்டத்தில சொன்னார்....

ஆனா, நீங்க சொல்றத கேட்க சந்தோஷமா இருக்கு!

//அடிக்கடி பின்னூட்டமிடாததற்கு வருந்துகிறேன்//

அதனால என்னங்க, அவங்கவங்க வேலைப்பளு அவங்கவங்களுக்கு தான் தெரியும்.

//அல்போன்சா மாம்பழம்//

மழலை செல்வம் என்றும் தெவிட்டாத இன்பம்!

" உழவன் " " Uzhavan " said...

நல்லா பாட்டு எழுதுறீங்க