என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய்!!
வான் வெளியிலே நிலவாக வந்தாய்!
தேன் துளியதன் சுவையொன்று தந்தாய்!!
என் மடியினில் துயில் கொள்ள வந்தாய்!
உன் மொழியினில் தேன் கலந்து தந்தாய்!!
மா மனிதனாக என் மனதை கவர்ந்தாய்!
பூ மனத்தை வீசி என்னை கவர்ந்து இழுத்தாய்!
சாய்ந்த என்னை தோளில் தாங்கி அணைத்தாய்!
காய்த்து கனிந்து சுவைக்க இசைய பறித்தாய்!!
பூத்துக் குலுங்கும் பூவும் காதல் கொள்ளும்!
சேர்த்து அணைக்க பூவை உள்ளம் துள்ளும்!!
விழிகள் பேசும் கதைகள் கோடி கண்ணா!
துளிகள் சேர்ந்து வெள்ளமாகும் மன்னா!!
இளம் பிறையுமங்கு பௌர்ணமியாய் மாறும்!
நம் இளமை அங்கு ஊஞ்சல் கட்டி ஆடும்!!
-சுமஜ்லா
.
Tweet | ||||
15 comments:
பலே, மிக நன்று!
இனிய கவிதை. வார்த்தைகளை நன்றாக கோர்த்து இருக்கிறீர்கள்.
அதே சமயம் மிக நீளமாக இல்லாமல் 'நச்' என்று இருப்பதும் அருமை.
//பூத்துக் குலுங்கும் பூவும் காதல் கொள்ளும்!
சேர்த்து அணைக்க பூவை உள்ளம் துள்ளும்!!//
இக்கவிதையால் 'துள்ளாத மனமும் துள்ளும்...!!!
கலக்கிட்டீங்க போங்க... காதலில் மூழ்கி...... அருமை.
nice - darlingboy
கவிதை எளிமையாகவும் இனிமையாகவும் ...
ஜமால், ராஜகிரியார், நிஜாம் அண்ணா, அரங்கலண்ணா, நன்றி!
இனி, ஒன் டே ஒன் தான்!
காலேஜ் முதன் முதலா போகும் போது, கொஞ்சம் ப்ளாக் போஸ்ட் யூத்ஃபுல்லா இருக்கட்டுமேனு தான் இந்த கவிதை...ஹி...ஹி...
எல்லாருக்கும் நான் போயிட்டு வரேங்க!
hahaha.. romba youthful thaan ponga.. :) unga thalainagar sutrula padichen romba nalla ezhudi irukinga chinna chinna details ellam!
//இளம் பிறையுமங்கு பௌர்ணமியாய் மாறும்!
நம் இளமை அங்கு ஊஞ்சல் கட்டி ஆடும்!!//
மச்சான் கொடுத்து வச்சவரு.அக்கா,கலக்கிட்டீங்க.
-------------------------------
2:32
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.
-------------------
அழகிய காதல் மொழிகள், மென்மையான சொற்றொடர். நல்லா இருக்குங்க.
சுமஜ்லா...
தற்போதுதான் முதன் முதலாக உங்கள் வலை தளத்திற்கு வருகை தருகிறேன்...
வரவேற்பே, ஒரு காதல் மழையாய் இருக்கிறது... அதுதான் உங்களின் "என் கனவில் வந்தவன்" பதிவை சொல்கிறேன்...
காதல் ரசம் சொட்டுகிறது உங்களின் வரிகளில்...
கொடுத்து வைத்தவர் அவர் தானே....
அழகான காதல் கவிதை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
நேரமிருப்பின் என் வலை தளங்களின் பக்கமும் வந்து போகலாம்...
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
உங்கள் உள்ளக்கிடக்கைகளை அழகாக எளிய இனிய எழுத்துக்களில் கொண்டுவருகிறீர்கள்.
மொழி சிலருக்கு கைகட்டி சேவகம் புரிமுமென்பார்கள். அது உங்களுக்கும்.
தொடரவும்.
தங்கள் ஹஹ் தொடரை அனுபவித்து வாசித்தேன். விரைவில் பின்னூட்டுவேன்.
நன்றிங்க எல்லாருக்கும்...
நிறைய கவிதைகள் இது போல இருக்கு என்னிடம், சில காதல் பற்றி, சில ஊடல் பற்றி, சில கூடல் பற்றி...
ஆனா, இதெல்லாம் என் லைஃப்னு எல்லா கவிதையும் சொல்ல முடியாது...ஆனாலும், மனதில் இருப்பது தான் வெளியே வரும் என்பதும் நிஜம்...
நன்றி கோபி உங்கள் முதல் வருகைக்கு!
யோகன், நேரம் கிடைக்கும் போது, என் எல்லா கவிதைகளையும் வாசித்து பாருங்கள்.
இப்போ தான் காலேஜ் போய் வருகிறேன். என் அனுபவத்தை பதிவாக போடுகிறேன்.
பயம் -- சிறுகதை
http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_7843.html
அக்கா பதிவு சீக்கிரம் போடுங்க ..இனிக்கு நா தா பஸ்ட்
அருமையான அழகான காதல் கவிதை..
வார்த்தைகளை அழகாய் செதுக்கி இருகீங்க அக்கா....
காதல் வழிந்து அள்ளி பருக சொல்ல்கிறது கவிதை....
வாழ்த்துகள்....
வாழ்த்தியமைக்கு நன்றி! கடுமையான தலைவலி!
ஏற்கனவே எழுதிவைத்த சாயபு வீட்டு சரித்திரம் இப்போ போடுகிறேன்.
காலேஜ் அனுபவம், தலைவலி விட்டதும்...
அரை நாள் காலேஜ் போயிட்டு
வந்திட்டீங்களா? ப்ரொபஸர்களுக்கு
எல்லாம் நல்லா பாடம் சொல்லிக்
கொடுத்தீங்களா? தோழி, தோழர்கள்
என்ன சொல்றாங்க?
Post a Comment