Tuesday, September 8, 2009

நீ வாடும் போது...


நீ வாடும் போது மருந்தாவேன்,
நீ கூடும் போது விருந்தாவேன்,
நீ தேடும் போது விளக்காவேன்
நீ பாடும் போது சுதியாவேன்!

வாசமுல்லைப் பூவாவேன்,
வைரமணிச் சுடராவேன்,
பேசும் பொம்மை போலாவேன்!
பைத்தியம்போல் காதல்கொள்வேன்!!

லைலாவைத் தேடிய மஜ்னு அங்கே,
மஜ்னுவை நாடும் லைலா இங்கே,
காணும் பொருளில் ஆசைமுகம்,
தூணும் துரும்பும் அவனுருவம்!

வசந்த காலக் கனவுகளில்
வந்தவன் எந்தன் மன்னவனே!
கசிந்து உருகி காதலிக்கும்
மங்கையின் மனதை யாரறிவார்?

பாதச் சுவட்டில் உந்தன்முகம்,
பச்சை மரத்தில் உந்தன்நிறம்!
காதல் கொண்ட மஜ்னுவுக்கு
கண்டது எல்லாம் லைலாவாம்!

நீ வாடும் போது மருந்தாவேன்,
நீ கூடும் போது விருந்தாவேன்!
நீ தேடும் இன்பத் தேவதையாய்,
கை போடும் போது அணைத்திடுவேன்!!

-சுமஜ்லா
.
.

25 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//காணும் பொருளில் ஆசைமுகம்,
தூணும் துரும்பும் அவனுருவம்!//

காதல் ரசம் சொட்டுகிறது....

நட்புடன் ஜமால் said...

good love ...

கவிக்கிழவன் said...

வசந்த காலக் கனவுகளில்
வந்தவன் எந்தன் மன்னவனே!
கசிந்து உருகி காதலிக்கும்
மங்கையின் மனதை யாரறிவார்?

மிகவும் நன்றாக உள்ளது

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பைத்தியம்போல் காதல்கொள்வேன்!!//

-பிரமாதம்!

துபாய் ராஜா said...

காதல்
காதல்
காதல்
ஒவ்வொரு வரியிலும்
காதல் உருகி வழிகிறது.

ஜனகன் said...

நல்ல கவிதை.
இறுதி வரிகள் வரை உயரிய காதலின் மகத்துவம் உச்சாநியாய் இருந்தது.
but
//நீ தேடும் இன்பத் தேவதையாய்,
கை போடும் போது அணைத்திடுவேன்!!//
இவ்வரிகள் இல்லாமலிருந்தால் சுகம்.

ஜனகன் said...

மன்னிக்கவும் நண்பியே.
உமது இறுதி வரிகளின் உள்ளர்த்தம் புரியாது எனது விமர்சனத்தைப் பதிந்து விட்டேன்.

உங்களது கவிதை என் மந்தி வருடி விட்டது.

உமது கவிப்பணி மென்மேலும் வளர்க.

ஜனகன் said...

மன்னிக்கவும் நண்பியே.
உமது இறுதி வரிகளின் உள்ளர்த்தம் புரியாது எனது விமர்சனத்தைப் பதிந்து விட்டேன்.

உங்களது கவிதை என் மனதை வருடி விட்டது.

உமது கவிப்பணி மென்மேலும் வளர்க.

SUMAZLA/சுமஜ்லா said...

ரசித்து படித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

பொதுவாக காதல் கவிதைகளை எழுதியவரின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி படிக்கக்கூடாது...

நண்பர் ஜனகனுக்கு,
இது ஒரு காதலி காதலனை பார்த்து சொல்வது! இந்த அர்த்தத்தில் தவறு காண முடியாது! மனித வாழ்க்கையின் ஆதாரமே காதல் தானே! எங்கே காதல் மறுக்கப்படுதோ(திருமணத்துக்கு முன்போ, பின்போ) அங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது!

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// லைலாவைத் தேடிய மஜ்னு அங்கே,
மஜ்னுவை நாடும் லைலா இங்கே,
காணும் பொருளில் ஆசைமுகம்,
தூணும் துரும்பும் அவனுருவம்!

வசந்த காலக் கனவுகளில்
வந்தவன் எந்தன் மன்னவனே!
கசிந்து உருகி காதலிக்கும்
மங்கையின் மனதை யாரறிவார்?

பாதச் சுவட்டில் உந்தன்முகம்,
பச்சை மரத்தில் உந்தன்நிறம்!
காதல் கொண்ட மஜ்னுவுக்கு
கண்டது எல்லாம் லைலாவாம்! ////


சூப்பர் கவிதை

காதலின் அனுபவம் ரொம்ப சூப்பர்

Porkodi (பொற்கொடி) said...

collegela ukkandhu lecturerku theriyama ezhudinadha? romba ilamaiya irukku sumazla! :)))

Unknown said...

சுமஜ்லா,

///பைத்தியம்போல் காதல்கொள்வேன்!!///

இந்த ஒன்றிருந்தால் போதும் வாழ்க்கையில் வேறெல்லா வளங்களும் தானே வந்துவிடும்!


///கசிந்து உருகி காதலிக்கும்
மங்கையின் மனதை யாரறிவார்?///

இந்தக் கேள்வி மனதைக் கவ்வுகின்றது

அன்புடன் புகாரி

அரங்கப்பெருமாள் said...

அருமையான காதல் கவிதை. வரிகள் அனைத்தும் அருமை.

'மேலும்,உங்கள் நாயன் ஒரே நாயன்;அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன்,நிகற்ற அன்புடையோன்.(2:163)'

அப்பறம் ஒரு விஷயம்,

படிக்கும் போது காதல்,கத்தரிக்காய் அப்படியெல்லாம் பேசக்கூடாது.படிப்பில் கவனமா இருக்கணும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கவிதைகள் அருமை.
அண்ணனின் குரான் quoting அருமை.
//படிக்கும் போது காதல்,கத்தரிக்காய் அப்படியெல்லாம் பேசக்கூடாது.படிப்பில் கவனமா இருக்கணும்.//
உங்கள் கரிசனமும் வெளிப்படுகிறது.

S.A. நவாஸுதீன் said...

காதல் காதல் காதல். வழிந்தோடுகிறது. நல்ல கவிதை சகோதரி.

SUFFIX said...

மென்மையான காதல் வரிகள்!! ரசித்தேன்.

அன்புடன் மலிக்கா said...

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
காதல் உணர்வுகளை ரசித்தேன்

Unknown said...

காதலை சொல்லும் கவிதை மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
எஸ்.ஏ.இபுறாஹிம்.

மந்திரன் said...

சினிமா பாடல் எழுத நீங்க முயற்சி செய்யலாம் ..
காதலை எழுத கோடி பேர் இருகிறார்கள் ...
நீங்கள் கொஞ்சம் மாறி எழுதுங்களேன் ..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அக்கா காலேஜ் எப்டி போகுது ?------ கொஞ்சம் வொர்க் அதா blog வரமுடியல.அப்டியே
கூகிள் addsence language என்ன கொடுக்கவேண்டும் english-english கொடுத்தா disabled வருது .

SUMAZLA/சுமஜ்லா said...

உங்க எல்லார் கமெண்ட்ஸும் மிகவும் ரசித்து படித்தேன்!

முக்கியமாக, அரங்க பெருமாள் அண்ணன் எழுதிய,
//படிக்கும் போது காதல்,கத்தரிக்காய் அப்படியெல்லாம் பேசக்கூடாது.படிப்பில் கவனமா இருக்கணும்.//

இந்த வரிகளை படித்து சிரித்து சிரித்து......... செம்ம காமடி! நன்றி அண்ணா!

SUMAZLA/சுமஜ்லா said...

பொற்கொடி,

இதெல்லாம் காலேஜில் எழுதியது இல்லப்பா...லாங் பேக்...ஒரு ரெண்டு மூணு வருஷம் முன்னாடி! என் எல்லா டைரிகளிலும், இது போல நிறைய எழுதி வெச்சிருக்கேன்!

SUMAZLA/சுமஜ்லா said...

பீஸ் ட்ரைன்,

அரங்க பெருமாள் அண்ணா சொன்னது போல, இறைவனை லைலாவாக நினைத்து, நிறைய பேர் இறைக்காதல் கவிதைகள் எழுதி உள்ளனர்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சினிமா பாடல் எழுத நீங்க முயற்சி செய்யலாம் ..//

அது ஒன்னு தான் பாக்கி!

(அல்லது)

அது ஒன்னாவது பாக்கி இருக்கட்டுங்க!

SUMAZLA/சுமஜ்லா said...

கிருஷ்ணா, காலேஜில் ஃப்ரீ பீரியடே இல்லை...அதான் எனக்கு வருத்தம்...

ஆட்சென்ஸ், நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது! தமிழ் ப்ளாகுக்கு அனுமதி கிடைப்பதில்லை...ஆங்கிலத்தில் உள்ள தளத்துக்கு அனுமதி வாங்கி, பின் அந்த லைசன்ஸை தமிழ் தளத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம்!