Sunday, September 13, 2009

குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...

உள்ளத்திலே ஒரு கவலையில்லாமல்
உறங்கிடு ஆரிராரோ! - கண்ணே
செல்லத்துடன் உன்னை கொஞ்சிடுவோமே!
ஆரோ ஆரிராரோ! ஆரோ ஆரிராரோ!

பாசத்தின் முன்னே மரகதங்கூட
மதிப்பு தெரிவதுண்டோ?
பாசத்தின் முன்னே மரகதங்கூட
மதிப்பு தெரிவதுண்டோ?
நேசத்தின் செயலால் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?!
மாற்றம் காண்பதுண்டோ?!

(உள்ளத்திலே)

கால்களினாலே வெண்மதிபோலே
தவழ்ந்து வர வேண்டும்!
கால்களினாலே வெண்மதிபோலே
தவழ்ந்து வர வேண்டும்!
உந்தன் புன்சிரிப்பாலே மலர்களைப் போலே
காட்சி தரவேண்டும்!
காட்சி தர வேண்டும்!

(உள்ளத்திலே)

கானக்குயில் போல மழலை மொழி பேசி
என்றும் உறவாடுவாய்!
கானக்குயில் போல மழலை மொழி பேசி
என்றும் உறவாடுவாய்!
உயர் பாசம் பெரிதென்று வாழும் நல்வாழ்வில்
அன்பு வழி கூறுவாய்!
அன்பு வழி கூறுவாய்!

(உள்ளத்திலே)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?
மாற்றம் காண்பதுண்டோ?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா?
கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? - இரு
கைகளில்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?
காதல் தரவில்லையா?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன் உயர்
மானம் பெரிதென்று வாழும் குலமாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்
வாழ்வின் சுவை கூறுவேன்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

18 comments:

Unknown said...

மிகவும் அழகான தாலாட்டு பாட்டு.என் மகளுக்கு இந்த வரிகளை பார்த்து பாடி(படித்து) காட்டுகிறேன். அவள் சிரிக்கிறாள் ..
ரொம்ப நல்லாயிருக்கு..

Jaleela Kamal said...

சுஹைனா அருமையான மெட்டு போட்டு தயாரித்து இருக்கீங்க.

ரொம்ப அருமை

Jaleela Kamal said...

சுஹைனா அருமையான மெட்டு போட்டு தயாரித்து இருக்கீங்க.

ரொம்ப அருமை

நட்புடன் ஜமால் said...

உயர் பாசம் பெரிதென்று வாழும் நல்வாழ்வில்
அன்பு வழி கூறுவாய்!]]

அருமை வரிகள்.

கவிக்கிழவன் said...

நல்ல இருக்குதுங்கோ

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எங்க அக்கா எப்பவுமே சூப்பெரா தா எழுதுவாங்க . எப்படி அக்கா காலேஜ் போகுது , இந்தவாரம் ஒரு சந்தோசமான விஷயம் இருக்கு உங்ககிட்டதா முதலில் சொல்லணும் நு வந்து சொல்லிட்டேன் அது என்னனு நீங்களே தெரிஞ்சிக்கிவீங்க ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மெட்டுக்கும் வார்த்தைகளுக்கும்
வெகு பொருத்தம்.

R.Gopi said...

காலையில் வந்தவுடன் குழந்தை தாலாட்டு பாடல் படித்ததில்... இப்போ ஆஃபீஸில் சுகமாக உறக்கம் வருகிறது...

அருமை சுமஜ்லா... அதுவும் தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்... பாடலை ஒட்டியே இது இருப்பது மேலும் சிறப்பு...

வாழ்த்துக்கள்...

R.Gopi said...

காலையில் வந்தவுடன் குழந்தை தாலாட்டு பாடல் படித்ததில்... இப்போ ஆஃபீஸில் சுகமாக உறக்கம் வருகிறது...

அருமை சுமஜ்லா... அதுவும் தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்... பாடலை ஒட்டியே இது இருப்பது மேலும் சிறப்பு...

வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா said...

மொட்டுகளுக்கு
மெட்டுக்கள் போட்டது
அருமை

இப்னு அப்துல் ரஜாக் said...

சின்ன மொட்டுக்கு
கிடைத்த
நல்ல மெட்டு.
(மொட்டு-குழந்தை)

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

SUFFIX said...

குழந்தைகளுக்கு தாலாட்டு மிகவும் அவசியம், ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் இது குறைந்து கொண்டே வருகிறது, தங்களுடைய பதிவுகளில் பல பாடல்கள் இட்டுள்ளீர்கள், அது பலருக்கு உதவியாக இருக்குமென நினைக்கின்றேன்.

S.A. நவாஸுதீன் said...

http://syednavas.blogspot.com/2009/09/blog-post_10.html

ஒரு எட்டு வந்து பாருங்க

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அக்கா என்ன பதில் போடவே இல்லை . என் ப்லோக் வந்து பாருங்க அது என்ன விஷயம் என்று புரியும் .......

SUMAZLA/சுமஜ்லா said...

இடி இடித்து, எங்க வீட்டு சிஸ்டத்தில் டிஸ்ப்ளே அவுட். சோ, அம்மா வீட்டிலிருந்து போடும் அவசர பதிவு இது. சிஸ்டம் வந்ததும், அனைவரின் ப்ளாகையும் பார்க்கிறேன். புது போஸ்ட்டிங்கும் போடுகிறேன்.

Anonymous said...

நல்லாயிருக்கு தாலாட்டு,...

இப்னு அப்துல் ரஜாக் said...

கடப்பாசி,வட்டில் அப்பம்,பொரிச்ச ரொட்டி ரெடியா?பெருநாளைக்கு?பெருநாள் எப்போ,அக்கா?