Saturday, November 7, 2009

நாகப்பட்டினமே

நாகப்பட்டினம் என்ற ஊர் பெயர் வரும்படி சினிமாப்பாடல் இருக்கா என்று நண்பரொருவர் கேட்க, அப்படி இல்லையென்று இதோ ஒன்றை நானே உருவாக்கினேன். அவரவருக்கு விருப்பமான மெட்டு போட்டுக் கொள்ளுங்கள்.

பல்லவி

சிப்பியுண்டு முத்துமுண்டு சிந்தையள்ளும் கடலுமுண்டு
நாகப்பட்டினமே - எங்க
நாகப்பட்டினமே!

உப்புமுண்டு மீனும் உண்டு மிதவை ஏற மார்க்கமுண்டு
மரத்தை கட்டணுமே - மச்சான்
மரத்தை கட்டணுமே!!

அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம்
கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம்
கரையும் தெரியல - பிழைக்கும்
வழியும் புரியல...
(சிப்பியுண்டு)

சரணம்

சேர்த்து வெச்ச கஞ்சி தண்ணி, நெத்திலி மீனு கருவாடு
சோத்த எல்லாம் தின்னுபுட்டு சோக்கா போன கடலுக்குள்ள,

போயி ரெண்டு வாரமாச்சு,
பாத்த விழி பூத்து போச்சு

கருகமணி பொன்னுனக்கு கைவளவி கொண்டு வாரேன்
என்று சொல்லி ஏங்க வெச்சு கடலுக்குள்ள போன மச்சான்

ஊழிக்காத்து அடிக்கையிலே
ஊனும் உயிரும் நடுங்குதைய்யா

நீ பத்திரமா திரும்பிவர
பாவி மனசு துடிக்குதைய்யா - இந்த
பாவி மனசு துடிக்குதைய்யா!
(சிப்பியுண்டு)

தலைவாழ இலைபோட்டு, அழகழகா விருந்து வைக்க
தலைகாணி சுகத்தை விட்டு தடம் பார்த்து விழிச்சிருக்கேன்.

காலடியின் சுவட்டிலெல்லாம்
உன் சுவடை தேடி நிக்கேன்

மலைபோல அலைவந்தா மனதெல்லாம் நனையுதைய்யா
காஞ்சு போன கருவாடா உள்மனசு சுருங்குதைய்யா

கைவளவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே,
மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா.

(சிப்பியுண்டு)

-சுமஜ்லா.

19 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு முயற்சி...

அப்படியே அதிராம்பட்டினமுன்னு போட்டு படிச்சாலும் - நிலை இதே தான்

நட்புடன் ஜமால் said...

கைவளவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே,
மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா]]

துவக்கத்திலேயே இந்த நிலை வருவதில்லை - என்ன செய்ய ...

குப்பன்.யாஹூ said...

One song is there, Rojaa prabudeva vivek acted,

chidambaram, seerkaazi, kumbokonam, naru naru naagappatanm.

un panam panam en panam panam

panam panam panam

க.பாலாசி said...

//நாகப்பட்டினமே//

நாகப்பட்டிணமே....

//அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம்
கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம்
கரையும் தெரியல - பிழைக்கும்
வழியும் புரியல...
(சிப்பியுண்டு)//

பாடல் நன்றாக இருக்கிறது.

Jaleela Kamal said...

ஓ நீங்களே பாடல் உருவாக்கி விட்டீங்களா, மற்றவர்கள் பாடியதும் நல்ல இருக்கு.

Jawahar said...

மேடம், என் ஊர் நாகப்பட்டினம் என்பதை இங்கே பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

thiyaa said...

நல்லாயிருக்கு வாழ்த்துகள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா இருக்குங்க .

asiya omar said...

நாகப்பட்டினமே -பாடல் அருமை.
கைவளவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே,
மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா
இந்த வரிகள் அப்படியே ஒட்டிக்கொண்டது.சுஹைனா ப்ளாக்கர் மத்தியில் புரட்சியை ஏற்படுத்திவிட்டு கொஞ்சநாளாக புதிதாக ஒன்றும் காணோம்னு நினைச்சேன்,வந்திட்டீங்களா?இப்ப தடுக்கி விழுந்தால் ப்ளாக் தான்,எங்கே நேரம்,ஆனால் உங்கள் ப்ளாக் மட்டும் தவறாமல் வந்து செல்கிறேன்.

வடுவூர் குமார் said...

எங்க ஊருக்காக ஒரு பாட்டா? நன்றாக இருக்கு.

கோவி.கண்ணன் said...

:)

பாட்டு இருக்குங்க !

உடித் நாராயணம் பாடிய பாடல் ஒன்று

"நாகப்பட்டினம் கப்பல் தரையில் முட்டியதான்னு" பாடலின் இடையில் வரும்.

நினைவு படுத்தி மீண்டும் பின்னூட்டுகிறேன்

கோவி.கண்ணன் said...

Song: Ithunundu Muthathil
Singer: Udit Narayan, Sowmya Rao

ithunundu muthathila ishtam irukka?
illa english muthathila kashtam irukka?
inch inch mutham vaikka ishtam irukka?
illa french mutham vaipathilae kashtam irukka?
kaNNulae kathi saNdai kaiylae kambu saNdai
kannathil mutha saNdai vaRRiya vaRRiya?
mothathil indha saNdai nikkaadha kuthu saNdai
othaikku othaiya nee vaRRiya vaRRiya?
hey nee nee nee nee ennoada ishtam
hey nee nee nee nee illaamal kashtam
(thunundu muthathila...)

rombavum methu methunnu onnoada vaLaivu neLiva evan senchaan
eppavum thuru thurunnu en maela thurumbu paNNa evan senchaan
aathaadi athar kaadu angangae poothiruchu
kaathaaru vandha vaegam kaadellaam pathikkichu
hey vai vai vai vai en maela kai vai
hey mai mai mai mai nee dhaanae aaNmai

(ithunundu muthathila...)

paLingu iduppoaram unnoada kozhuppu saththu koopidudhu
kozhuppu saththellaam unnoada meesai vandhu saapidudhu
yaazhpaanam yaanai thandham ean maela muttiyadhu
nagapattinam kappal ippo karaiyil lesa thattiyadhu
hey salsa salsa aLavedu muzhusa
hey gunsa gunsa odhukidu naisa

(ithunundu muthathila...)

சீமான்கனி said...

அட அருமையா இருக்கே....அருமையா எழுதி இருக்கீங்க ...
வழக்கம் போல தூள்...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ said...

நல்லாருக்கு...

அப்படியே எங்க "பரங்கிப்பேட்டை" குறித்தும் ஒரு பாட்டை தட்டி விடுங்களேன்...

-பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
www.ulamaa-pno.blogspot.com
www.mypno.com
www.mypno.blogspot.com
www.ppettai.blogspot.com
www.infopno.blogspot.com
www.khaleel-baaqavee.blogspot.com
www.khaleelbaaqavee.blogspot.com
www.parangipettai.com
www.parangi.com
www.portonovo.in
www.news-portonovo.blogspot.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்று...

Jaleela Kamal said...

சுஹைனா நீங்கள் போட்டுள்ள ஹஜ் பதிவிற்கே எத்தனை அவார்டு வேண்டுமானாலும் கொடுக்கலாம், அது இல்லாமல், கவிதை , கட்டுரை, கதை என்றும் கலக்கலான பதிவுகள், புதிய பிலாக்கர்ஸ்க்கு எத்தனை விளக்கங்கள். ஆங்கில மொழிபெயர்பு, இன்னும் ஏராளம் எதன்னு சொல்லுவது, அதற்கெலலம் இது ஒரு சின்ன விருது தான்.
மிக்க‌ ந‌ன்றி இவ்வ‌ள‌வு பிஸியிலும் வ‌ந்து ப‌தில் போட்ட‌மைக்கு. ப‌டிப்பெல்லாம் ந‌ல்ல‌ போகுதா. சாயிபு வீட்டு ச்ச‌ரித்திர‌ம் என்ன ஆச்சு?

உங்க‌ள் ஹ‌ஜ் ப‌திவு லிங்கை என் டிப்ஸ் ப‌குதியில் கொடுத்து இருக்கேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

//கைவளவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே,//
மொதல்லையே சொல்லுறது

//மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா]]//


எல்லா பொண்ணுக்கும் உள்ள துடிப்பு,

அக்கா,அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால், என்ன உங்க ஊர் ஞாபகமா?

அட, ஜவஹர் நீங்கள் நாகப்பட்டினமா?

நன்றி ஜலீலாக்கா, ஆசியா அக்கா...நான் உங்களைக் காணோம் என்று பார்த்தால்...நீங்கள் என்னைத் தேடினீர்களா????

வேறு பாடலை சுட்டிக் காட்டிய கோவி.கண்ணனுக்கும், குப்பன் யாஹூவுக்கும் நன்றி!

ஜலீலாக்கா...இந்த வாரம் சாயபு வீட்டு சரித்திரம் போடுகிறேன்...

அப்புறம், நிஜாம் அண்ணா, சீமான் கனி, பாத்திமா ஜொஹ்ரா, கலீல் பாகவீ எல்லோரும் நலமா???

வடுவூர் சார் நீங்களும் நாகப்பட்டினமா???

கவி அழகன் said...

நல்ல பாட்டு வாழ்த்துக்கள்