Friday, November 20, 2009

மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...

///"மதில்சுவர்கள் ஒரு காரணத்திற்காகவே இருக்கின்றன. நம்மை வெளியில் நிறுத்துவதற்காக அவை இல்லை. நாம் எவ்வளவு தீவிரமாக (எப்படியெல்லாம்) சிலவற்றை பெற விரும்புகின்றோம் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கவே அவை இருக்கின்றன. சில நேரங்களில், ஊடுருவ இயலாத சுவர்கள் சதைகளால் ஆனவை." ///

///"The Brick walls are there for a reason.... They are not to keep up us out. The brick walls are there to give us a chance to show how badly we want something"
The following line has to be added in middle of thier kavithai
" Sometimes the most impenetrable walls are made of flesh"///

தோழி தந்த மேற்கண்ட வாசகத்துக்காக எழுதிய கவிதை!

முதலில் ஒரு தமிழ் கவிதை, அப்புறம் ஆங்கில வார்த்தை விளக்கத்துக்கு ஒரு ஆங்கில கவிதை!

மதில் சுவரெல்லாம் தடைசுவரல்ல...

வேதனை வருவது தாண்டிடவே
சோதனை வருவது சாதனைக்கே!
பாதையில் குறுக்கிடும் தடைக்கல்லும்
மோதிட தூளாய் சிதறிடுமே!

மதில் சுவரென்பது மறைப்பல்ல,
பதில் தெரியாத புதிரல்ல,
அதில் தாண்டுவதென்பது நிர்பந்தம்,
இதில் யாருக்கு என்ன சந்தேகம்?!

நடக்காதிருக்கும் வரை தானே,
அட, ஆசை என்றது பெயர் கொள்ளும்;
தடங்கல் தாண்டும் உத்வேகம்,
உடன் ஜெயத்தை நமக்கு தந்திடுமே!

தேவையின் தன்மையை உணர்த்திடவே
சேவை செய்யும் மதில் சுவர்கள்,
பாவை யென் தோழி தயவினிலே
யாவையும் தெளிவாய் சொல்லிடுதே!

சுவருக்கு பின்னே சுகந்தங்களே,
கலர் கலரான கனவுகளே,
தாண்டும் ஆசையை நமக்குள்ளே
விதைத்தது அந்த நினைவுகளே!

கற்பனைக் குதிரையில் நாமேறி
கற்சுவர் தன்னை தாண்டிடலாம்;
தாண்டிட இயலாவிட்டாலோ,
குடைந்தொரு ஓட்டை போட்டிடலாம்!

ஆனால் மானிட மனச்சுவரோ
தானாய் திறந்தால் தானுண்டு!
வீணாய் எத்தணை தடைச்சுவர்கள்
போனால் முட்டும் தசைச்சுவர்கள்!

இறுகிப் போன இதயத்திலே
உதிரத் துளியும் காய்ந்திடுமோ?
கறுகிப் போன கனவுகளால்
கனியும் இப்போ கசந்திடுமோ?!

Now, to give justice to capture the originality, I sketch the portrait in English also!

Beyond the Brick walls.

End of a desert, some brick walls stand
...On the other side, our cherishing dreams,
Ill-worn heart, after long desert sand -
...Dreams should come true, so it gleams!

Walls are not there to stop our progress,
...Nor are they to frustrate us -
But to make us understand the need for success,
...just as we welcome the cheering nimbus!

Why should I write, why should I?
...It gives me happiness, fame and name;
Samething in crossing the brickwalls high-
...Just for the need of winning the game.

We never fully know how badly we need
...the love, the wisdom or some kind message!
Until it sprouts out breaking the seed
...Smashing the wall and crossing the passage!

Sometime the impenetrable walls are made of flesh,
...Pleading and begging truly has no impact;
No knife or hammer can knock out that mesh
...Beyond that bloods are drained in fact!

- சுமஜ்லா

5 comments:

சீமான்கனி said...

me the 1st...

சீமான்கனி said...

//இறுகிப் போன இதயத்திலே
உதிரத் துளியும் காய்ந்திடுமோ?
கறுகிப் போன கனவுகளால்
கனியும் இப்போ கசந்திடுமோ?!//

நிஜமாகவே படிக்கும்போது புது உற்சாகம் பிறக்கிறது...

அருமை அக்கா...உங்களுக்கு தேர்வுகளே தேவையில்லை அக்கா...

SUMAZLA/சுமஜ்லா said...

I st என்று பெருமைப்பட்டு, என்னையும் பெருமைப்பட(தங்களைப் போன்ற ரசிகர் கிடைத்ததற்கு) வைத்ததற்கு நன்றி சீமான்கனி!

//அருமை அக்கா...உங்களுக்கு தேர்வுகளே தேவையில்லை அக்கா...//

அப்படியே கொஞ்சம் சத்தமாக எங்கள் யூனிவர்சிடி காதில் விழுறாப்புல சொன்னா, படிக்கிற வேலையாவது மிச்சம் :))

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை அக்கா...உங்களுக்கு தேர்வுகளே தேவையில்லை அக்கா...

உண்மைதான்,எங்கள் அக்கா ஜீனியஸ்