Monday, November 23, 2009

குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே...

கண்மணியே கண்மணியே
உன்னைத்தானே கொஞ்சிடுவோம்
விளையாட ஓடி வா நீ!
(கண்மணியே)

மஞ்ச பூமேனியே அன்பு லாஃபுகண்ணே
உன்னை அன்போடு அணைத்து கொள்வோம்!
(கண்மணியே)

இது இசையல்ல வரும் பாட்டல்ல,
இது என்றென்றும் உன்வாழ்வில் இருக்கட்டும்!
கருவிழியாலே உன் மொழியாலே
சில நேரங்கள் சட்டென்று மகிழ்வூட்டும்!

பெண்ணே... கண்ணே...
பூமேனி தன்னோடு தாங்கி வரும் பெண்ணே
பொன்மாலை பூக்கூட உன்னை வாழ்த்தும் கண்ணே
உன் குறும்பின் அழகில் எல்லைகளேது
எந்நாளும் சிரிப்புண்டு!
(கண்மணியே)

இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு
பிஞ்சுக்கை நெஞ்சோடு தீண்டிட வந்தவள் யாரு
உனைக் கொஞ்சி கொஞ்சி உன்னழகை வியக்கிறேன்
இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு?

பெண்ணே... கண்ணே...
பூமாரி உன்மீது என்றும் பொழிய வேண்டும்
ஊரார்கள் உனைவாழ்த்தும் அழகை ரசிக்க வேண்டும்!
அட வசந்தம் வீசிட வேண்டுமே
நல் தென்றல் காற்றோடு!
(கண்மணியே)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்
(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்

பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு

பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)

8 comments:

அரங்கப்பெருமாள் said...

நான் தான் அப்பமே சொன்னேன்ல, நல்ல எழுதுரிங்கப் பாட்டு,திரைக்கவிஞர்களுக்கு வச்சிராதீன்க வேட்டு,ஆனாலும் உங்களுக்குத்தான் என் வோட்டு.

சின்ன சந்தேகம்

//லாஃபுகண்ணே//

இது கொஞ்சம் புரியல..

அரங்கப்பெருமாள் said...

அதில் எழுத்துப் பிழை இருப்பதால் மீண்டும்...

நல்ல எழுதுறீங்கப் பாட்டு,
திரைக் கவிஞர்களுக்கு வச்சிராதீங்க வேட்டு
ஆனாலும் உங்களுக்குத்தான் என் வோட்டு.

asiya omar said...

சுஹைனா பாடலை அசைபோட வைத்து விட்டீர்கள்,எப்படி இப்படி பாடல் இட்டுகட்டுகிறீர்கள்?அருமை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்குங்க அக்கா....

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அரங்க பெருமாள் அண்ணா! சினிமாவுக்கு பாட்டா???ஐய்யோ!

லாஃபிரா என்பது என் மகளின் பெயர். அதை சுருக்கி நாங்கள் லாஃப் அல்லது லாஃபு என்று செல்லமாக அழைப்போம். அது தான் லாஃபுகண்ணே என்று எழுதியிருப்பதன் அர்த்தம்!

நன்றி ஆசியா அக்கா...இந்த பாடல் எல்லாம் இப்ப எழுதியது அல்ல...அந்தந்த சந்தர்ப்பங்களில் எழுதி அந்தந்த வருட டைரியில் சேமிக்கப்பட்டிருப்பவை! எல்லாவற்றையும் இதில் தொகுப்பாக்கி விட வேண்டும் என்று அவ்வப்போது ஒவ்வொன்றாக போட்டு வருகிறேன்!

தம்பி கிருஷ்ணாவுக்கும் நன்றி!

சீமான்கனி said...

அருமை அக்கா...
ரஹ்மான் பாட்டுல இது எனக்கு ரெம்ப பிடிக்கும் ....
உங்கள் எழுத்துல இது இன்னும் அழகாய் இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு...
கலக்கல்ஸ்....
சினிமாக்கு பாட்டுலாம் வேண்டாம்...

thiyaa said...

அருமை

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை