மாணிக்கமாம் முகமதுவை
சாதகமாய் மணமுடிக்க
சம்மதத்தை வேண்டியந்த
மாதவரும் குடும்பத்திலே
பெரியராம் அபுதாலிபிடம்,
தூதுவிட்டார், துயரம் விட்டார்
இனிய நாளில் மணம்முடித்தார்.
முகமதுக்கு இருபத்தைந்து வயது,
கதிஜாவின் வயதோ நாற்பது!
இவரை எங்ஙனம் ஏற்பது?
என தயங்கவில்லை முகமது!
ஏற்றிட மலர்ந்தது கதிஜாவின் முகமது!!
ஐநூறு தினார் தங்ககாசும்
இருபது பெண் ஒட்டகையும்
என மஹர் கொடுத்து மணம்முடித்தார்,
மனிதர் குல புனிதர் நபி!
செவிலித்தாய் ஹலிமாவையும்
நன்முறையில் உபசரித்து,
பரிசாய் பல கால்நடையும்,
அன்பளிப்பாய் உவந்தளித்தார்.
பெண்ணினத்தின் கண்மணியாய்,
வியனுலக நன்மலராய்
ஒருமித்த தாம்பத்யம் - என
ஒழுகி நின்றார் கதிஜாவும்!!
காஸிம், அப்துல்லாஹ்
என்ற இரு ஆண்மக்களும்,
ஜைனப், ருகையா
உம்முகுல்தூம், பாத்திமா,
என்று நான்கு பெண்மக்களும்,
கதிஜாவின் மணிவயிற்றில்
உதித்து வந்த கண்மணிகள்.
ஆண்மக்கள் இருவருமே,
இறப்பெய்த சிறுவயதில்,
பெண்மக்கள் நால்வருமே,
சிறப்பாக வாழ்ந்தனரே!
விக்கிரக வணக்கமும்,
வீணான பழக்கமும்
மது அருந்துவதும்,
மாதரை முயங்குவதும்
சூதில் மூழ்கியும்,
தீதில் திளைத்தும்
மக்கா நகர மக்கள்
இருந்த நிலைகண்டு
வருத்தம் மிக கொண்டார் நபி!!
மனசாட்சியும்,
அறிவாராய்ச்சியும்,
காட்டிய வழியில்
நாட்டங்கள் கொண்டார்!
பரம்பொருள் கருணையை
சிரமதில் கொள்ள,
பெருவழி காண
அருந்தவம் புரிந்தார்!!
அழகிய ரமலான் மாதத்தில்,
பழகிய ஹீரா குகை சென்று,
விலக்கிட உணும் உறக்கங்களும்,
துலங்கிட்டார் தவத்தின் பயனாக!
நான்கு உயர் கோத்திரத்தார்,
அந்நாளில்,
யாங்கு காபாவை புனரமைக்க,
ஹஜ்ருல் அஸ்வத் புனிதகல்லை,
அதனிடத்தில் இனிதாய் பொருத்த,
தக்க நபர் யாரென்று,
சிக்கல் மிகக் கொண்டனரே!!
முற்றியது சண்டை!
பிடித்து கொண்டனர் சிண்டை!!
பிறந்திட ஓர் விடிவு!
எடுத்தனர் நல்ல முடிவு!!
முதல்வராய் காபாவரும்,
புதல்வர் புகல்வதை கேட்க,
கோத்திரத்தார் யாவருமே
காத்திருந்தனர் காபாவில்!!
வந்தார் முகமது!
தந்தார் முடிவது!!
போர்வையில் கல்லைவைத்து
சேர்த்தெடுத்து செல்லசொல்ல,
தீர்வையில் அகமகிழ்ந்து
ஓர்மையாய் செய்தனர் மக்கள்!!
நல்லவரில் நாயகரை
சண்டை தீர்த்த நல்லவரை,
புனித கல்லை பதித்து தர
இனிதுடனே இயம்பி நிற்க,
அங்கந்த கல்லைதம்
செங்கரத்தால் பதித்தாரே!
அங்கமெல்லாம் பேருவகை
அந்த மக்கள் பெற்றனரே!!
-சுமஜ்லா.
(வளரும்)
Tweet | ||||
13 comments:
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு(கொடையாக)கொடுத்துவிடுங்கள்.அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பு அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக,மகிழ்வுடன் புசியுங்கள். (4:4)
//முதல்வராய் காபாவரும்,
புதல்வர் புகல்வதை கேட்க,
கோத்திரத்தார் யாவருமே
காத்திருந்தனர் காபாவில்!!
வந்தார் முகமது!
தந்தார் முடிவது!!
போர்வையில் கல்லைவைத்து
சேர்த்தெடுத்து செல்லசொல்ல,
தீர்வையில் அகமகிழ்ந்து
ஓர்மையாய் செய்தனர் மக்கள்!!
//
நல்லா சொல்லியிருக்கீங்க..!
வாளின் முனையில் இஸ்லாம் பரவியது என்ற கூற்றைப் பொய்யாக்கிய நிகழ்வு அது.
எல்லா தருணங்களில் நபி முஹம்மது (ஸல்) (இயன்ற வரை) அவர்கள் போரைத் தவிர்த்திருக்கிறார்கள் தம் புத்திக்கூர்மையால்.
//முதல்வராய் காபாவரும்,
புதல்வர் புகல்வதை கேட்க,
கோத்திரத்தார் யாவருமே
காத்திருந்தனர் காபாவில்!!
வந்தார் முகமது!
தந்தார் முடிவது!!//
அழகான வரிகள் அக்கா..ரசித்தேன்....
வழக்கம் போல் கவிநயம் கலந்த நபி வரலாறு...அருமை...
beautiful.
same story, bible kooda solludhulla?
உங்கள் ப்லோகுக்கு புதியவன்.
நல்ல கவிதை
//முற்றியது சண்டை!
பிடித்து கொண்டனர் சிண்டை!!//
வாலித்தனமான இது போன்ற வரிகளை தவித்திருக்கலாம்.
அருமையான இடுகை வாழ்த்துகள்
அன்பு சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வழக்கம்போலவே இவ்வாண்டும் இனித்திருக்க வாழ்த்துக்கள்
நினைவில் வைத்து, பிறந்த நாள் வாழ்த்தளித்த இனிய சகோதரன் வசந்த்துக்கு நன்றி! நன்றி! நன்றி!
அருமை...
assalamu alaikum., i need your help to promote my blogs., so can you teach me., and pls notice what kind of way is suits for you to teach me-thanking you .
this is sharfudeen ( 32) from coimbatore.
வாழ்த்துகள் சகோதரி.
thank you vellinila for keeping trust in me! no teaching is necessary for this. just read through all my articles under the heading technical! and ask your doubts in comments section and i will help you!
நன்றி ஜமால்!
சகோதரி உங்கள் எழுத்து நடை இயல்பாக இருக்கிறது.அதிலும் இந்த கவிதை அருமை.உங்கள் எழுத்து பணி சிறப்பாக தொடர வாழ்த்துகளும் துவாவும்
Post a Comment