Monday, December 21, 2009

ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்

பதிவர் சந்திப்பில் நிஜமாகவே நான் கலந்து கொள்வேன் என்று சிறிதும் நினைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள். நேற்று அவசர அவசரமாக சுடச்சுட விவரங்கள் தர வேண்டும் என்று பதிவிட்டதால், சில சுய விவரக் குறிப்புகளைத் தர முடியவில்லை.

நான் கொஞ்சம் நாட்களாக பதிவுலகில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை, காரணம் என்னுடைய படிப்பு என்பது என்னுடைய ரெகுலர் வாசகர்களுக்குத் தெரியும்.

ஒரு நாள் கதிர் சார் அவர்கள், இது குறித்து எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். பிறகு தான் எனக்கு இப்படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதே தெரிந்தது.

அவருக்கு போன் செய்த போது, இடம் இன்னமும் முடிவாகவில்லை, முடிவானபின்பு மெயிலில் தெரிவிப்பதாக சொன்னார். சரி, இது பற்றி எழுதியிருக்கும் இடுகைகளைப் படிக்கலாம் என்று அலசினேன்...! அதில் வாலும், இன்னும் ஒருவரும் எழுதியிருந்த இடுகைகளைப் படித்த போது, ‘சிகப்பு கம்பள வரவேற்பு’, ‘திராட்சை ரசம்’ போன்ற வார்த்தைகளைப் படித்து சற்று பின் வாங்கி விட்டேன் என்பது தான் உண்மை!

அதனால், அது பற்றி அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை....! அதோடு, போன வாரம், தொண்டைவலி, காய்ச்சல்! அப்போது தான் கதிர் அவர்கள், இது பற்றி என்னுடைய ப்ளாகில் ஒரு இடுகை எழுதி, இதை என் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த சொன்னார். நான் அந்த இடுகையும் எழுதவில்லை. அதற்குக் காரணம், அவ்வாறு இடுகையிட்ட பின்னர், நானே செல்ல முடியாத சூழ்நிலை வந்தால், எனக்கு அது பெரும் ஏமாற்றமாக இருக்கும். அதோடு, போன வாரத்தில், என்னவரோடு சிறு ஊடல் வேறு! அவ்வாறு இருக்கையில், இது பற்றி அவரிடத்தில் மூச்சு கூட விடவில்லை(மூஞ்சியைத் தூக்கி வைத்திருக்கும் போது, மூச்சாவது பேச்சாவது?).

என்னவர் அனுமதி பெறாமல், நான் எக்காரியத்திலும் இறங்க மாட்டேன். அதனால், இது பற்றி அதிகம் எந்த ஒரு பரபரப்பும் என்னிடம் இல்லை. அப்போதான் கதிர் எனக்கு மெயில் செய்திருந்தார். கூட்டத்தில் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். நான் என்ன சொல்வது? வருவதே இங்கு நிச்சயமில்லை, அங்கு பேசுவதாவது? நான் என் உடல் நிலை சரியில்லை(உண்மையில் மனநிலையும் தான் சரியில்லை) சரியானவுடன் மெயில் செய்கிறேன் என்று பதிலிட்டேன்.

பிறகு, மீண்டும் எனக்கு போன் செய்தார் கதிர். அதில், ‘சிகப்பு கம்பள வரவேற்பு’ பார்த்து பயந்து விட்டேன் என்று கூறினேன். அது போன்ற விஷயங்கள் இருக்காது, ரொம்பவும் டீசண்ட்டாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று உறுதியளித்தார். அதன் பிறகு தான் சனிக்கிழமை, இவ்விழா பற்றி அவசர அவசரமாகக் கட்டுரையிட்டேன்.

இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்பட்டு, அதே சூழ்நிலையில் வாழ்க்கைப்பட்டிருக்கும் என் போன்ற பெண்களால், டிரிங்க்ஸ் என்ற வார்த்தையைக் கூட ஜீரணிக்க முடியாது. எந்த ஒரு சைட்டில் அது பற்றி எழுதிகிறார்களோ, அந்த ப்ளாகையே நான் டோட்டலாக ஒதுக்கிவிடுவது வழக்கம். எங்கள் குடும்பத்திலோ, நெருங்கிய உறவு வட்டத்திலோ, யாருக்கும் அதன் வாடை கூட பிடிக்காது என்பதும் ஒரு காரணம்.

ஆக, ஒரு நான்கு நாட்கள் ஆயிற்று. ஊடலுக்கு பின்னால் கூடல் என்ற பழமொழிக்கேற்ப, சமாதானம் ஆனபின் எப்போதும் கொஞ்சம் அன்பு ஜாஸ்த்தியாகத் தானே இருக்கும். இங்கேயும் அவ்வாறிருக்க, அட, இது தான் சாக்கு என்று அவரிடம் மெதுவாக சொன்னேன், சனிக்கிழமை மாலை. சொன்னதும் ஒப்புக் கொண்டதோடு, தானும் வருகிறேன் என்று சொன்னது தான் இமாலய ஆச்சரியம். பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதை தான்.

சந்தோஷத்தோடு, நான் கிளம்ப முற்படுகையில், கதிர், ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக தயாரிப்புடன் வர சொன்னார். பேசுவது ஈஸி தான். ஆனா, நம் கருத்துக்களை ஐந்து நிமிடத்துக்குள் முடிப்பது ரொம்பவும் கஷ்டம். ஒரு பேப்பரில் சில குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அதில் முக்கியமான விஷயங்களைக் கூற முடியவில்லை.

ஞாயிறு காலை, ஒரு திருமணத்துக்குப் போய் விட்டு, 12 மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்பினேன். ஒரு சிறு தூக்கம் போடலாமென்று படுத்தால்....ம்...ஹூம்...மனசுக்குள்ள ஒரு பரபரப்பு தொத்திக்கிச்சு....!

என்னை பேசச் சொல்லி இருக்காங்கன்னு அவர்கிட்ட மெதுவா சொன்னேன்...எனக்கு பயம் வேற, எங்கே வேண்டாம்னு சொல்லிடுவாரோ என்று! ஆனா, அவரோ காசுவலாக எடுத்துக் கொண்டார். நான் எந்த அளவுக்கு ப்ளாக் பைத்தியமென்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், சந்தோஷமாக என்னோடு ஒத்துப் போனார். பில்டர்ஸ் அசோசியன் ஹால் செல்ல, வழி சொல்லி, ரூட் எல்லாம் போட்டுக் காண்பித்தார். மறக்காமல் கேமரா எடுத்துக் கொள் என்று சொல்லியதோடு, பேட்டரிகளை சார்ஜ் போட்டு வைத்தார்.

மாலை 3.30 மணி இருக்கும் நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் மகன் நானும் வருவேன் என்றான். இவனை அழைத்துப் போனால், திடீரென்று பாதியில், வீட்டுக்கு போகலாம் என்று அடம் பிடித்தாலும் பிடிப்பான், அதனால், நீங்கள் தனியாக உங்கள் வண்டியில் வந்துவிடுங்கள், நான் முதலில் போகிறேன், அவன் அடம் பிடித்தால், நீங்கள் திரும்ப அழைத்துப் போக வசதியாக இருக்கும் என்றேன்.

கிளம்பும் அவசரத்தில் நான் இருந்த போது, ‘இரு...இரு...இன்னிக்கு தேதி இருபது. நெட்டில் வாட் ரிட்டர்ன் ஃபைல் பண்ணனும்...பண்ணிட்டு போகலாம்’ என்றார். நானோ, மணியைப் பார்த்தால், நாலுக்கு 5 நிமிடம் தான் இருந்தது. எப்போதும், எங்கேயும் சரியான நேரத்தில் போவது என் பழக்கம். தாமதமாக போவதை நான் வெறுப்பேன். இருந்தாலும்...சரி என்று அவருக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, ரிட்டர்ன் ஃபைல் செய்து விட்டு, ‘நீங்கள் பையனை ரெடி பண்ணி கூட்டிட்டு வந்திருங்க’ என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

நான் முன்னால் போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அங்கே ஏதாவது ஹாட் டிரிங்க்ஸ் பார்ட்டி நடந்து கொண்டிருந்தால், அப்படியே திரும்பி விடலாம். அப்படி இருக்க, ஏன் அவரும் வேஸ்ட்டாக வர வேண்டும் என்று நினைத்தேன்.

போனா, நிறைய தலைங்க...முன்னாடியே நின்று டீ குடிச்சிட்டு இருந்தாங்க! எனக்கு மட்டும் பர்தா காரணத்தால், அறிமுகமே தேவைப்படல!

அப்புறம் என்ன நடந்ததுன்னு போன பதிவுல படிச்சிருப்பிங்க!

சில விஷயங்கள் மட்டும் நச்சுனு மனசுல நிற்கிறது!

என்னை பேசச்சொன்ன போது, டெக்னிக்கலா ரொம்ப டீப்பா போயிட்டேன். மொத்தத்தில் நம் பதிவுகளை பின்னூட்டத்தோடு சேவ் செய்து வைத்துக் கொள்ள எக்ஸ்ப்போர்ட் ப்ளாக் ஆப்ஷனை பயன் படுத்திக்கலாம் என்பதை சொன்னேன்.

முக்கியமா, நான் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் போனது, டெக்னிக்கல் சமாச்சாரங்களை தவறாக சிலர் பயன்படுத்துவது பற்றி! இங்கே கூட, ஈமெயில் போஸ்ட்டிங் ஐடியை என்னுடைய ஃபீட்பர்னர், ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனில் கொடுத்திருக்கிறார் ஒருவர். அதன் மூலமாக நான் பதிவிடுவது அனைத்தும் அவருடைய ப்ளாகில் ஆட்டோமேட்டிக்காக ரீபப்ளிஷ் ஆகிக் கொண்டிருக்கிறது. http://asainayagi.blogspot.com/ என்பது தான் அந்த ப்ளாக். இது போல இன்னும் சிலர் அனுமதியில்லாமல் அத்துமீறி டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறார்கள். இது பற்றி ப்ளாகரிடையே விழிப்புணர்வு வேண்டும்.

நேற்று காலை கூட எனக்கு மின்னஞ்சல் லின்க் மூலமாக ஒரு ஈமெயில் வந்தது. அதில்... 'Dont think too proud of yourself' என்று பெயரில்லாத அன்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் யார் என்று அதற்கு பிறகு நான் கண்டுகொண்டாலும், ஏன் அவருக்கு விளம்பரம் தேடித் தர வேண்டும் என்று அதை இங்கு குறிப்பிடவில்லை. அனானிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, இதை நான் சொன்னதற்கு, லதானந்த் அவர்கள், ‘இவ்வாறு அனுப்பி இருப்பதே உங்களுக்கு பெருமை தான், இதற்கு ஏன் கவலைப் படுகின்றீர்கள்’ என்றார்.

மொத்தமாக நான் சொன்னது, அனானிக்கள் திட்டும் அளவுக்கு நான் பதிவிடுவதில்லை. சினிமா, அரசியல், பாலிடிக்ஸை எல்லாம் நான் தொடுவதில்லை. இதையெல்லாம் விட்டு விட்டால், பதிவிட என்ன இருக்கும் என்று கூட சிலர் நினைக்கிறார்கள். நம்முடையது எல்லாம் கிரியேடிவ் லிட்டரேச்சர் வகை தான். தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பது, அடுத்தவரை தாக்கி பதிவிடுவது எல்லாம் எனக்கு பிடிக்காத விஷயங்கள். அப்படியும் ஒரு சில அனானிக்கள் எழுதுவதுண்டு. அவர்களுக்கு நான் எப்போதும் பதிலிடுவதில்லை. அந்த பின்னூட்டத்தை அப்படியே தூக்கி விட்டு போய்க்கொண்டே இருப்பேன்.

பரிசல்காரன், ரொம்ப டீசண்ட்டாக இருந்தார். நல்லதொரு குடும்பத்தில் பிறந்து நல்லபடியாக வளர்க்கப்பட்டிருக்கிறார் என்று எனக்கு தோன்றியது. வால் பையன் உண்மையில் சிறு பையன் என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்று அங்கு பார்த்துத் தெரிந்து கொண்டேன். முருக.கவி என்ற பெயரில் எழுதும் கவிதாராணி என்னும் பி.வி.பி. பள்ளியில் ஒர்க் பண்ணும் தமிழ் ஆசிரியையை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

வெயிலான் என்ற பேரைக் கேட்டாலே, இனி அவர் சொன்ன சேனைகிழங்கு என்னும் அனானி தான் நினைவுக்கு வரும். ஒருவர் தம் ப்ளாகுக்கு அப்பன் என்று பெயர் வைத்திருக்கிறேன், இனி தான் எழுதணும் என்றார். தண்டோரா அவர்கள் பட்டையடித்து(நெற்றியில் இடுவதுங்கோ) வந்திருந்தார். அவரும் என்னை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிறைய புது பதிவர்கள், அதில் பல பேர் பேசவே இல்லை.

அமீரகத்து அன்பர்கள் சொன்னது ‘உங்க ப்ளாக் அங்க நல்லா ரீச் ஆகி இருக்கு! எல்லாருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். பொதுவா முஸ்லிம் லேடீஸ் யாரும் அதிகமா எழுதறது இல்ல. ஜஸீலா, ஹுசைனம்மா இப்படி ரெண்டு மூன்று பேர் இருக்காங்க, ஆனாலும், இந்த மாதிரியான கூட்டங்களுக்கு, ஜஸீலாவைத்தவிர யாரும் வருவதில்லை. இங்க, நீங்க, அதுவும், இந்தியாவில இருந்து ஒரு பெண் இந்தளவுக்கு எழுதறீங்கன்னா, அது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இப்ப, நீங்க பிஸியா இருக்கறதுனால, எப்பலாம் டைம் கிடைக்கிறதோ, அப்பலாம் எழுதுங்க, நீங்க விட்டு விட்டு பதிவு போட்டாலும், உங்க வாசகர்கள் தேடி வந்து படிப்பாங்க. அதுவும், நீங்க போடற டெக்னிக்கல் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருக்கு’ இவ்வாறு சொன்னார்கள். மனம் நிறைவாக இருந்தது.

எனக்கு முதலில், சற்று நேரம் வரை வால் பையன் யார் என்று தெரியவில்லை. அவர் ஈரோடு என்பதும், அவர் பெயர் அருண் என்பதும் எனக்குத் தெரியும். அவரவர் தம்மை அறிமுகம் செய்து கொண்ட போது, இவர் தம் பெயரைச் சொல்லாமல், என்னைப் பற்றி என் நண்பர் சொல்வார் என்று கூறி விட்டார். நண்பரும் எதுவும் சொல்லவில்லை. பிறகு, பார்த்தால், கசமுசாவென்று இடையிடையே அவர் பேசிக் கொண்டே இருந்தார். எனக்கு சத்தியமாக அவர் தான் வால்பையன் என்று தெரியவில்லை.

நான் மேடையில் அப்போது அமர்ந்திருந்தேன். யார் இந்த அதிகப்பிரசங்கி? ஏன் இவரை உள்ளே விட்டு வைத்திருக்கிறார்கள்? என்ற எண்ணம் ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது. அதே சமயம், எல்லாரும் இங்கே இருக்கிறார்களே, வால்பையன் மட்டும் ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் கழித்து, இவர் தான் வால்பையன் என்று தெரிந்த போது, இந்த உண்மை கடைசிவரை தெரியாமலே போயிருக்ககூடாதா... என்று தான் எனக்குத் தோன்றியது.

கடைசியில், ரம்யாவிடம் மெயில் ஐடி கேட்ட போது, என்னிடம் ரொம்பவும் சுவாதீனமாக, என்னிடம் இருக்கிறது, உங்களுக்கு சேட்டிங்கில் தருகிறேன் என்றார் வால்பையன். இதில் காமெடி என்னவென்றால், வால்பையன் ஐடியே எனக்குத் தெரியாது. அவரிடம் மட்டுமல்ல, யாரிடமும் நான் சேட்டிங் செய்வதே இல்லை. ரொம்ப க்ளோஸாக இருக்கும் ப்ரெண்ட்ஸ் அதுவும் லேடீஸ் என்றால், ஆடிக்கொரு முறையாக நலம் விசாரித்துக் கொள்வோம் அதோடு சரி!

மற்றவர்கள் எல்லாரும், அவர்கள் பர்சனல் லைஃப் எப்படியும் இருக்கலாம்...புட்டி, குட்டி என்று எந்த மாதிரியும் இருக்கலாம்... ஆனால், ஒரு அரங்கத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார்கள். அதுவே மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

ஒரு மணி நேரம் இருந்து விட்டு கிளம்பி விட வேண்டும் என்று சென்றவள், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து, விருந்தும் சாப்பிட்டு வந்தது, உண்மையில் அந்த சூழ்நிலையில் மனம் ஒன்றியதால் தான். கிளம்பி வரவே மனமில்லை. என்னமோ, நம் உறவுகளையே பார்த்தது போல இருந்தது. பதிவு என்னும் குடும்பத்தில் நாமெல்லோரும் அங்கத்தினர் தானே?!!

பதிவர் சந்திப்பால் என்ன பயன் என்று ஒரு பேச்சு வந்தது. நிறைய பேரை பதிவுலகத்துக்கு வர வைக்கணும். பதிவிடாதவர்களையும் பதிவிடத் தூண்டணும் என்று பேசினார்கள். உண்மை தான். என்னுள் உறங்கிக் கொண்டிருந்த பதிவர், விழித்திருக்கிறார். மீண்டும் பழையபடி பதிவிட வேண்டும் என்ற ஆர்வம் இது போன்ற விழாவால் தானாகவே உண்டாகிறது.

கடைசிவரை மச்சானும் பொறுமையாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்து, எல்லாவற்றையும் ரசித்தார். சில பதிவர்கள் அவரிடம் வந்து, உங்க மனைவி நல்லா எழுதறாங்க, அவங்கள ஊக்கப்படுத்துங்க என்று சொன்னார்கள். அனானி பற்றிய விவாதத்தில், மனைவியே தன் கணவனுடைய பதிவில் அனானியாக பின்னூட்டமிடுவார் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு என்னவர் பெரிதும் ரசித்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கென்னமோ சந்தேகமாக இருக்கிறது, என்னைத் திட்டி பதிவிட்ட ஓரிரு அனானியும் இவராக இருக்குமோ என்று?!!

49 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

பாவா ஷரீப் said...

//என்னைத் திட்டி பதிவிட்ட ஓரிரு அனானியும் இவராக இருக்குமோ என்று?!! //
மச்சான் சாச்சுபோட்டாங்க மச்சான்

அமர பாரதி said...

அருமையான விவரிப்பு சுமஜ்லா. நானும் ஈரோடுதான். கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

கனியிருப்ப காய் கவர்ந்தற்று...ன்னு வேண்டாத விஷயங்களை விட்டு தள்ளுங்க....

சீமான்கனி said...

அழகான ஒரு பகிர்வு அக்கா...படித்து முடிக்கும்போது..
நானும் அங்கு இருந்துருக்கலாம் என்ற ஏக்கம் வந்து விடுகிறது...வாழ்த்துகள் அக்கா...படிப்பு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு அக்கா...???

இரா. வசந்த குமார். said...

அன்புள்ள மேடம்...

அந்த 'திராட்சை ரசம்' பதிவர் அடியேன் தான். எழுதிய பதிவில் கிண்டல் தெரியாமல் போய் விட்டதெனில் அது என் தவறே! மன்னிக்கவும். நன்றிகள்.

அப்பாவி முரு said...

//என்னைத் திட்டி பதிவிட்ட ஓரிரு அனானியும் இவராக இருக்குமோ என்று?!!//

இருக்கும் இருக்கும்

cheena (சீனா) said...

அன்பின் சுமஜ்லா

அருமையான விவரிப்பு - பதிவர் சந்திப்பு நல்ல முறையில் நடந்தது. தங்களின் தொழில் நுட்ப உரை அருமை - பல தகவல்கள் - சந்திக்க - பேச வேண்டுமென நினைத்தேன் - ஏனோ இயலவில்லை.

நல்வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

பதிவர் சந்திப்பில் உங்களின் பங்கும் இருந்தது குறித்து மகிழ்ச்சி.

சுவாரஸியமாக இருந்தது இடுகை..!!

நிறைய விஷயங்கள் சொல்லாமலே தவிர்த்திருக்கலாமே !!

முனைவர் இரா.குணசீலன் said...

திவு என்னும் குடும்பத்தில் நாமெல்லோரும் அங்கத்தினர் தானே?!!//

உண்மைதான் வலைப்பதிவர் குடும்பத்தில் நாம் ஒவ்வொருவரும் அங்கத்தினர்கள் தாம்..

கலந்துகொண்ட எல்லோருக்கும் இந்த உணர்வு வந்திருக்கக்கூடும்..

கிரி said...

சுமஜ்லா நல்லா விரிவா எழுதி இருக்கீங்க வெளிப்படையாக! உடன் உங்கள் ஆதங்கம் மற்றும் எதிர்பார்ப்புகளையும்.

அனானி பற்றி எழுதி இருந்தீர்கள்! நீங்கள் ஏன் அனானி ஆப்சன் வைத்து இருக்கிறீர்கள்... உங்களை போன்றவர்கள் (பெண்கள்) இதை தவிர்ப்பது நலம்..சில மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.

நாடோடி இலக்கியன் said...

நிகழ்வுகளைஅருமையா தொகுத்திருக்கீங்க.

சில விஷயங்கள் நீங்க நினைத்தை அப்படியே சொல்லியிருந்தாலும் சங்கடங்கள் கருதி தவிர்த்திருக்கலாம் சகோதரி.

க.பாலாசி said...

//பதிவு என்னும் குடும்பத்தில் நாமெல்லோரும் அங்கத்தினர் தானே?!!//

உண்மைதான்....

நல்ல தொகுப்பு....

சொல்லரசன் said...

நாங்கள் அந்த அரங்கத்தில் சொல்லநினைத்து நட்பின் காரணமாக சொல்லமுடியாமல் போன கருத்தை நீங்கள் எழுதியதற்கு வாழ்த்துகள்.

வால்பையன் said...

//வாலும், இன்னும் ஒருவரும் எழுதியிருந்த இடுகைகளைப் படித்த போது, ‘சிகப்பு கம்பள வரவேற்பு’, ‘திராட்சை ரசம்’ போன்ற வார்த்தைகளைப் படித்து சற்று பின் வாங்கி விட்டேன் என்பது தான் உண்மை!//

மறைமுகமாக சொன்னாலும் புரிஞ்சிகிட்டிங்களே!

//வால் பையன் உண்மையில் சிறு பையன் என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்று அங்கு பார்த்துத் தெரிந்து கொண்டேன். //

ரெண்டு முடி நரைச்சிருந்தா உடனே வயசாகி போச்சுன்னு அர்த்தங்களா!?
நான் உண்மையிலேயே உங்களை விட சிறுபையன் தான், வயதிலும், அறிவிலும்!

வால்பையன் said...

உங்க வீட்டுகாரர்கிட பிரியாணி கேட்டேன், அதை எழுதாமல் விட்டுடிங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள் சிறப்பாக உரையாற்றியது அறிந்து மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.. கடைசியிலே சொன்னீங்களே ..\\ எனக்கென்னமோ சந்தேகமாக இருக்கிறது, என்னைத் திட்டி பதிவிட்ட ஓரிரு அனானியும் இவராக இருக்குமோ என்று?!!// ஹஹஹா நல்ல கதை.. நேரம் தான் அவருக்கு..

S.A. நவாஸுதீன் said...

சந்திப்பு சிறப்பாக அமைந்தது ரொம்ப சந்தோசம்.

ஹுஸைனம்மா said...

//ஜஸீலா, ஹுசைனம்மா இப்படி ரெண்டு மூன்று பேர் இருக்காங்க, ஆனாலும், இந்த மாதிரியான கூட்டங்களுக்கு, ஜஸீலாவைத்தவிர யாரும் வருவதில்லை.//

எனக்குத் தெரிந்து நடந்த முதல் கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன், அதுகுறித்துப் பதிவும் எழுதியிருக்கிறேன். அமீரகத்திலிருந்து வந்த செந்திலையும் அந்தக் கூட்டத்தில் சந்தித்துப் பேசினேனே, மறந்துவிட்டாரா?

//அ.மு.செய்யது said...
நிறைய விஷயங்கள் சொல்லாமலே தவிர்த்திருக்கலாமே !!//

ஏன், நடந்ததைத்தானே சொல்கிறார்?

Kumky said...

நல்ல தொகுப்பு,
சகோதரி.. சுற்றிலும் சுவர் எழுப்பிக்கொள்ளாமல் அதிகம் வாசியுங்கள்...சில பதிவர்களின் பதிவுகளில் நீங்கள் சங்கடப்படும் சில விஷயங்கள் அவ்வப்போது தலைகாட்டும்..ஆனாலும் பெரும்பான்மையாக நல்ல விஷயங்கள் எழுதப்படும்...அதற்காக பதிவரையே புறக்கணிக்க கூடாதல்லவா..

தொடர் வாசிப்புக்கு தங்கள் கணவரையும் வற்புறுத்தலாம்...
அநேக தகவல்களை தெரிந்து கொள்ளவும்,
உங்களுக்கே அனானி கமெண்ட் போடவும் அவருக்கு உபயோகமாய் இருக்ககூடுமல்லவா..

அப்துல்மாலிக் said...

பதிவர் சந்திப்பில் கலந்து தெளிவைடைந்தது சந்தோஷம், அமீரகத்திலும் பெண்பதிவர்கள் கலந்துக்கொண்டார்கள்.. இது ஒரு சிறு மாற்றமே.. தொடருங்கள்

பீர் | Peer said...

இல்ல ஹூசைனம்மா.. சிலவற்றை சொல்லாம விடுவதுதான் அவையடக்கம்.

Jaleela Kamal said...

சுஹைனா, நல்ல அழகான அருமையாக‌ தொகுத்து எழுதி இருக்கீங்க‌.

ரொம்ப சுவரஸ்யமாக நடந்ததை விளக்க உங்களுக்கு நிகர் யாருமில்லை,

கடைசியில அண்ணனா அனானி என்று சொல்லி விட்டீர்களே அவங்க இத படிச்சாங்களா?

ஈரோடு கதிர் said...

உங்கள் எழுத்தில் இருக்கும் திடம் ரசிக்க வைக்கிறது

தொடரட்டும்

SUMAZLA/சுமஜ்லா said...

ம்...மச்சான் தான் அனானியானு தெரியல...ஆனா, ‘ஹாட் டிரிங்க்ஸ் இருந்தா திரும்பிடலாம்னு போனேன்னு சொல்றியே, அப்புறம் எல்லாரும் டீ குடிச்சிட்டு இருந்ததைப் பார்த்து ஏன் திரும்பவில்லை?’ இந்த இடுகையைப் படிச்சிட்டு அவர் சொன்ன கமெண்ட் இது!

SUMAZLA/சுமஜ்லா said...

சீனா அண்ணா...நானும் தங்களிடம் வலைச்சரம் பற்றி ஏதேதோ கேட்க வேண்டும் என்று நினைத்தேன்! ஏனோ தங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து என்னால் அதிகமாக பேச முடியவில்லை!

SUMAZLA/சுமஜ்லா said...

சீமான்கனி, படிப்பு முடிய இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன.

SUMAZLA/சுமஜ்லா said...

//அனானி பற்றி எழுதி இருந்தீர்கள்! நீங்கள் ஏன் அனானி ஆப்சன் வைத்து இருக்கிறீர்கள்... உங்களை போன்றவர்கள் (பெண்கள்) இதை தவிர்ப்பது நலம்..சில மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.//

அனானி பற்றி என் கருத்தை நான் சொல்லியிருந்தாலும், இதுவரை 200க்கும் மேற்பட்ட பதிவுகளில், நான்கோ ஐந்தோ தான் அனானி கமென்ட்ஸ்! அதனால், சரி புதியவர்கள் பின்னூட்டாமிட வசதியாக இருக்குமே என்று தான் விட்டு வைத்தேன்!

SUMAZLA/சுமஜ்லா said...

நாடோடு இலக்கியன் மற்றும் பீர் அவர்களின் கேள்விக்கு சொல்லரசன் மற்றும் ஹுசைனம்மா பதில் தந்திருக்கிறார்கள். சிலருடைய பார்வையில் சரியாக படுவது, சிலருக்கு தவறாகத் தெரியும். இது பெரிய காண்ட்ரோவர்சியல் சப்ஜெக்ட் இல்லையே?!

SUMAZLA/சுமஜ்லா said...

//ரெண்டு முடி நரைச்சிருந்தா உடனே வயசாகி போச்சுன்னு அர்த்தங்களா!?
நான் உண்மையிலேயே உங்களை விட சிறுபையன் தான், வயதிலும், அறிவிலும்!///

நான் சொன்னது வயதிலோ அறிவிலோ அல்ல...விவரத்தில்! அறியாப்பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்க வீட்டுகாரர்கிட பிரியாணி கேட்டேன், அதை எழுதாமல் விட்டுடிங்க!//

இதற்கு நான் நினைத்த பதிலை அப்படியே எழுதினால், உங்கள் மனசு புண்படும்...அதனால் வேண்டாம்!

SUMAZLA/சுமஜ்லா said...

//எனக்குத் தெரிந்து நடந்த முதல் கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன், அதுகுறித்துப் பதிவும் எழுதியிருக்கிறேன். அமீரகத்திலிருந்து வந்த செந்திலையும் அந்தக் கூட்டத்தில் சந்தித்துப் பேசினேனே, மறந்துவிட்டாரா?//

அவர் மறந்திருக்கலாம்...அல்லது பலருடைய பேச்சுக்குரல்கள் மத்தியில் அவர் சொன்னது எனக்கு புரியாமல் கூட இருந்திருக்கலாம்.

SUMAZLA/சுமஜ்லா said...

//தொடர் வாசிப்புக்கு தங்கள் கணவரையும் வற்புறுத்தலாம்...
அநேக தகவல்களை தெரிந்து கொள்ளவும்,
உங்களுக்கே அனானி கமெண்ட் போடவும் அவருக்கு உபயோகமாய் இருக்ககூடுமல்லவா..//

என்னவர் நிறைய வாசிப்பார். ஆனால், வலது கை இயக்கத்தில், இடையில் ஏற்பட்ட சிறு குறையால், யாருக்கும் கமெண்ட் போட மாட்டார். ஓட்டு மட்டும் போடுவார்.

என்னுடைய முதல் வாசகர் அவர் தான். ஏன்னா நான் டைப் செய்யும் போதே கூட அமர்ந்து படித்து விடுவார், சில திருத்தங்களும் சொல்வார். (ஆனா.. அது எனககு சில சமயங்களில் எரிச்சலூட்டும்.... பதிவிட்டபின் படியுங்கள் என்ன அவசரம் என்பேன்?!)

SUMAZLA/சுமஜ்லா said...

//ஹஹஹா நல்ல கதை.. நேரம் தான் அவருக்கு..//

//கடைசியில அண்ணனா அனானி என்று சொல்லி விட்டீர்களே அவங்க இத படிச்சாங்களா?///

ம்...படித்தார்...தேவை தான் எனக்கு என்று உச் கொட்டினார்!

cheena (சீனா) said...

அன்பின் சுமஜ்லா

வலைசரம் பற்றிய ஐயங்களைத் தயங்காமல் கேட்கலாம் - வேண்டுமெனில் தனி மடலிலும் கேட்கலாம். - விளக்கம் அளிக்கப்படும்

லாஃபிரா மற்றும் லாமினை விசாரித்ததாகக் கூறவும். ரங்க்ஸிற்கு விசேச விசாரிப்பு

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

RAMYA said...

ரொம்ப சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க ரசிக்க முடிந்தது!!

Sanjai Gandhi said...

//மொத்தத்தில் நம் பதிவுகளை பின்னூட்டத்தோடு சேவ் செய்து வைத்துக் கொள்ள எக்ஸ்ப்போர்ட் ப்ளாக் ஆப்ஷனை பயன் படுத்திக்கலாம் என்பதை சொன்னேன்.//

உங்க தொழில்நுட்ப அறிவு பிரமிக்க வைக்கிதுங்க.எக்ஸ்போர்ட் செய்ததை ப்ளாகரில் இம்போர்ட் செய்வது எப்படின்னு ஸ்க்ரீன் ஷாட்டுகளோட ஒரு பதிவு போடுங்க. மூன்றாம் தர யுடிலிடிகளை நம்பி பாஸ்வேர்ட் தர முடியாது பாருங்க. அதனாலே ப்ளாகரிலேயே நேரடியா இம்போர்ட் செய்யற மாதிரி சொல்லிக் குடுங்க.

Sanjai Gandhi said...

//நான் முன்னால் போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அங்கே ஏதாவது ஹாட் டிரிங்க்ஸ் பார்ட்டி நடந்து கொண்டிருந்தால், அப்படியே திரும்பி விடலாம். அப்படி இருக்க, ஏன் அவரும் வேஸ்ட்டாக வர வேண்டும் என்று நினைத்தேன்.//

பெண்கள் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முன்னுதாரணப் பெண்.

Sanjai Gandhi said...

//இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்பட்டு, அதே சூழ்நிலையில் வாழ்க்கைப்பட்டிருக்கும் என் போன்ற பெண்களால், டிரிங்க்ஸ் என்ற வார்த்தையைக் கூட ஜீரணிக்க முடியாது. எந்த ஒரு சைட்டில் அது பற்றி எழுதிகிறார்களோ, அந்த ப்ளாகையே நான் டோட்டலாக ஒதுக்கிவிடுவது வழக்கம். எங்கள் குடும்பத்திலோ, நெருங்கிய உறவு வட்டத்திலோ, யாருக்கும் அதன் வாடை கூட பிடிக்காது என்பதும் ஒரு காரணம்.//

அடடே.. இப்படியும் கூட இருக்க முடியுமா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்குங்க. இதே மாதிரி எல்லாரையும் இருக்க சொல்லிக் குடுங்க. உங்க உறவு வட்டத்தில் ஆண்கள் கூட குடிக்க மாட்டாங்களா? ஆச்சர்யமா இருக்கே.

பாத்திமா ஜொஹ்ரா said...

என் ஒட்டு உங்களுத்தான்.உங்கள் இஸ்லாமிய பிடிப்பு,மாஷா அல்லாஹ் மற்றவர்களுக்கும் வேண்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

// ப்ளாகரிலேயே நேரடியா இம்போர்ட் செய்யற மாதிரி சொல்லிக் குடுங்க.//

நிச்சயமா இன்னும் ஓரிரு நாட்களில் இது பற்றி பதிவிடுகிறேன்.

//பெண்கள் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முன்னுதாரணப் பெண்//

நன்றி! நான் அனைத்து மத சடங்குகளையும் மதித்து அவர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பு தருபவள். அதையே நான் மற்றவரிடமிருந்தும் எதிர்பார்ப்பேன்!!

//அடடே.. இப்படியும் கூட இருக்க முடியுமா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்குங்க. இதே மாதிரி எல்லாரையும் இருக்க சொல்லிக் குடுங்க. உங்க உறவு வட்டத்தில் ஆண்கள் கூட குடிக்க மாட்டாங்களா? ஆச்சர்யமா இருக்கே.//

என்னது குடிக்க மாட்டாங்கன்னா ஆச்சரியமா இருக்கா?! எனக்கு குடிப்பாங்கன்னா தான் ஆச்சரியம். சின்ன வயதில் எங்க வீட்டு அருகில் ரோட்டில் முனியப்பன் என்று ஒரு குடிகாரன் கத்திக் கொண்டே போவான். அவனைப் பார்த்தாலே எனக்கு ரொம்பவும் பயம். அந்த பயம் இன்னும் போகலைனு தான் சொல்லணும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//என் ஒட்டு உங்களுத்தான்.உங்கள் இஸ்லாமிய பிடிப்பு,மாஷா அல்லாஹ் மற்றவர்களுக்கும் வேண்டும்//

நன்றி பாத்திமா ஜொஹ்ரா! பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் ஒரு கவசம் போல் அணிவது என்று பலருக்கும் தெரிவதில்லை!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அரசியல், பாலிடிக்ஸை எல்லாம் நான் தொடுவதில்லை. //

அரசியலும் தொட மாட்டீங்க.
பாலிடிக்சும் டச் பண்ண மாட்டீங்க.
அப்ப ரெண்டும் வேற வேறயா?

SUMAZLA/சுமஜ்லா said...

அட விடுங்கண்ணா... யானைக்கும் அடி சறுக்கும்!

எம்.எம்.அப்துல்லா said...

/சில பதிவர்கள் அவரிடம் வந்து, உங்க மனைவி நல்லா எழுதறாங்க, அவங்கள ஊக்கப்படுத்துங்க என்று சொன்னார்கள் //

உண்மையில் உங்களையும்,அவரையும் பார்த்தபோது அவரிடம் இதையே நானும் சொல்ல நினைத்தேன்.எனக்கு சற்று பழகிய பின்னர்தான் புதியவர்களிடம் இயல்பாய் பேசவரும்.முதன்முதலில் உங்கள் இருவரையும் பார்த்ததால் கூச்சத்தில் அதிகம் பேசாது நகர்ந்து விட்டேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அப்துல்லாஹ்! உங்களைப் பார்த்தால் எங்கோ பார்த்த முகம் போல் தெரிந்தது. சரி, ஈரோடு தானே, எங்காவது பார்த்திருப்போம் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது நீங்கள் புதுகை என்று!

லதானந்த் said...
This comment has been removed by the author.
ஹுஸைனம்மா said...

லதானந்த சார், உங்க ஃபாரஸ்ட்ல பெண்மயிலுக்கும் தோகை உண்டா? நல்ல சமத்துவம்தான்!! :-))

லதானந்த் said...
This comment has been removed by the author.