Wednesday, December 23, 2009

கால பாதையில்...

பற்பல திக்கிலிருந்து ஒன்று சேர்ந்தோம்,
சொற்களால் இதய ரகசியத்தைப் பகுத்தோம்!
பொற்கனவை பூட்டி வைத்து புன்னகைத்தோம்,
கற்பனையில் சிறகில்லாமலே பறந்து திரிந்தோம்!

விண்ணோடு விளையாடி களித்திருந்தோம்,
மண்ணோடு கதைபேசி மகிழ்ந்திருந்தோம்!
பொன்னையும் தூசாக மிதித்துவிட்டு,
கண்ணாக நன்நட்பை காத்து நின்றோம்!

வந்தது வேறு திசையிலிருந்து என்றாலும்
சந்தம் சேர்ந்து பாடினோம் கல்விப்பாதையில்!
சொந்தம் விலகி பந்தம் மறந்து கைவிட்டாலும்
இந்த உறவு என்றும் தொடரும் காலப்பாதையில்!!

-சுமஜ்லா

11 comments:

நட்புடன் ஜமால் said...

இது வலை நட்புக்கு சரியாக வருது

நல்ல வரிகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//இது வலை நட்புக்கு சரியாக வருது//

இது நான் பள்ளி இறுதி நாட்களில் எழுதியது என்றாலும், பதிவிடும் போதே, நானும் அதைத்தான் நினைத்தேன்!

அன்புடன் மலிக்கா said...

அழகான கருதுக்கள் அடங்கிய வரிகள்..

நிறைய நேரம் ஆகுது சுமஜ்லாக்கா உங்க பிளாக் ஓப்பனாக. நேற்றுமட்டும் 10 முறை முயற்ச்சித்துவிட்டேன்..

sathishsangkavi.blogspot.com said...

அழகான, ஆழமான வரிகள்......

அரங்கப்பெருமாள் said...

//அன்புடன் மலிக்கா said...
அழகான கருதுக்கள் அடங்கிய வரிகள்..

நிறைய நேரம் ஆகுது சுமஜ்லாக்கா//

உண்மைதான். ஏற்கனவே ஒருவாட்டி சொல்லிட்டேனா?

அரங்கப்பெருமாள் said...

நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும்,நட்புறவுகளும்,இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்,நாம் அளித்தவற்றிலிருந்து(நல்வழிகளில்) செலவு செய்யுங்கள் (2:254)

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், நல்ல கவிதை நடை. நன்றி

SUMAZLA/சுமஜ்லா said...

எனக்கு சீக்கிரமே லோட் ஆகிருதே?!! மலர் தோற்றம் டெம்ப்லேட் வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் லோட் ஆயிரும்! ஒரு முறை லோட் ஆகி விட்டால், அது டெம்ப்ரவரி ஃபோல்டரில் பதிவாகி விடும். அதன் பின் அடுத்த முறை சீக்கிரம் லோட் ஆகி விடும். சைட் பார் விட்ஜெட்ஸும் ஒரு காரணம். நேரம் கிடைக்கும் போது, ஆராய்ந்து அவற்றைக் குறைக்கப் பார்க்கிறேன். அதுவரை ரீடரை உபயோகியுங்கள்.

சீமான்கனி said...

//வந்தது வேறு திசையிலிருந்து என்றாலும்
சந்தம் சேர்ந்து பாடினோம் கல்விப்பாதையில்!
சொந்தம் விலகி பந்தம் மறந்து கைவிட்டாலும்
இந்த உறவு என்றும் தொடரும் காலப்பாதையில்!!//

ஆமீன்...இன்ஷா அல்லா.....

நல்லக்கு அக்கா..

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

முருக.கவி said...

பர்தா அணிவது உங்கள் சுதந்திரம். மற்றவர்களின் மதக்கருத்துகளுக்கும் மதிப்பு தருவது பாராட்டுக்குரியது. உள்ள உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. வாழ்த்துகள் சகோதரி!