Wednesday, December 30, 2009

நினைவுகளின் தேரோட்டம்


காகிதக் கப்பல் போல்
மறைந்தோடும் எண்ணங்கள்!
காவல் தீபத்தையே
காத்திடும் ராஜாங்கம்...!

முடிந்திட்ட நேரங்காலம்
இருளோடு விளையாடும்,
மொட்டவிழ்ந்த மலர்களெல்லாம்
தென்றலோடு கதை பேசும்!

காலத்தின் பார்வையிலே
கலைந்திட்ட பாதைகள்!
நீங்காத வடுக்களினால்,
சோர்வுற்ற சோகங்கள்!!

சோலைக் குயிலோசையில்
சூறாவளியின் சுகபயணம்!
சூரியக் கிரணங்களாய்,
என் நினைவுகளின் தேரோட்டம்!!!

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

-சுமஜ்லா.

18 comments:

சிங்கக்குட்டி said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுமஜ்லா.

அல்லா தன் புன்னகையை உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் எப்போதும் செலுத்தட்டும்.

'பரிவை' சே.குமார் said...

//சூரியக் கிரணங்களாய்,
என் நினைவுகளின் தேரோட்டம்!!!//

வாழ்த்துக்கள் சுமஜ்லா.

Jerry Eshananda said...

சகோதரி சௌக்கியமா? கவிதை எளிமை,இனிமை. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இன்ஷா அல்லாஹ்

சிநேகிதன் அக்பர் said...

மன வருத்தங்கள் மாறட்டும் அனைவருக்கும்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

சுகுணாதிவாகர் said...
This comment has been removed by a blog administrator.
அப்பாவி முரு said...

//அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

-சுமஜ்லா.//

உலகம் முழுதும் அனைவரும் கொண்டாடும் விடுமுறை தின வாழ்த்துகள் சகோதரி.

அரங்கப்பெருமாள் said...

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி.

ரமேஷ் said...

மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

எல்லா நாளும் நன் நாளே

இன்றும் என்றும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

S.A. நவாஸுதீன் said...

மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழியே.

சீமான்கனி said...

//சோலைக் குயிலோசையில்
சூறாவளியின் சுகபயணம்!
சூரியக் கிரணங்களாய்,
என் நினைவுகளின் தேரோட்டம்!!!//

வரிகள் வலுவாய் இருக்கு..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...அக்கா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்றிட என் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

SUMAZLA/சுமஜ்லா said...

புத்தாண்டு வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றிகள்! தற்சமயம் தேர்வு நேரமாதலால், கொஞ்சம் பிஸி!

சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "இது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்க!" இடுகையை பார்த்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் சுமஜ்லா.

SUFFIX said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், எல்லா நாளும் இனிதாய் அமைந்திட பிராத்தணைகளும்.

Jaleela Kamal said...

ஹை இந்த காகித கப்பல் பார்த்ததும், மழையில் வித விதமா செய்து விட கத்தி கப்பல், ஞாபகம் வருது.