Friday, December 4, 2009

கண்டடைந்த கனவு

“நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன்...காலியான வகுப்பறைகளை நோக்கியபடி...ஒருவர் என்னிடம் கேட்டார், ‘யாரைப் பார்க்க வேண்டும் என்று’ அதற்கு நான் சொன்னேன்,

‘நான் வகுப்புகளை பார்க்க வந்தேன்; நான் அமர்ந்து ஆயிரமாயிரம் கதைகள் பேசிய பெஞ்ச்சுகளையும் டெஸ்க்குகளையும் பார்க்க வந்தேன்; பெருவிருட்சமாக வளர்ந்து இன்று கிளை பரப்பிக் கொண்டிருக்கும், அன்றைய வேப்பஞ்செடியை நலம் விசாரிக்க வந்தேன்; கைநீட்டி மழை வருகிறதா என்று பார்க்கும் சன்னல்களைப் பார்க்க வந்தேன்; அதோடு ப்ளாக் போர்டு, டஸ்ட்டர், உடைந்து போன சாக்பீஸ் துண்டுகள், போர்டின் கீழே சிதறி இருக்கும் சாக்பீஸ் பவுடர், போர்டின் மேல் எழுதியிருக்கும் பொன்மொழி, அங்கு மாட்டியிருக்கும் போட்டோ.... இன்னமும்....இன்னமும்....

என் நினைவலைகள் பின்னோக்கிச் செல்ல...என் கண்களில் அலையும் கனவுகளுடன் யாவையும் காணவே நான் இங்கு வந்தேன்! எனக்குத் தெரியும் இங்கு மனிதர்கள் யாருமில்லை என்று, ஆனாலும் மனிதர்களை விட இவை எம்மிடம் அதிகமாக உரையாடியவை, உறவாடியவை, எம் நேரத்தைக் களவாடியவை, எம்மோடு விளையாடியவை’ கேட்டவரிடம் நான் இவ்வாறெல்லாம் உரைக்க நினைத்தாலும், இதில் பாதியைக் கூட சொல்லவில்லை, அதற்குள் அவர் எம்மை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி சென்றுவிட்டார்”

இவ்வாறு பேசி விட்டு நான் பலத்த கைதட்டலின் இடையே மேடையிலிருந்து இறங்கினேன்! இது நடந்தது 2005ம் வருடம்! நான் படித்த ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பள்ளியில் டைமண்ட் ஜூப்ளி செலிபரேஷன். பழைய மாணாக்கியர் அனைவரும் மெயில் மூலமோ தபால் மூலமோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டு பேப்பரில் விளம்பரம் வந்திருந்தது. நான் மெயில் அனுப்பினேன், எனக்கு இன்விடேசன் வந்திருந்தது!

என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலானோர், டாக்டர்களாக, இஞ்சினியர்களாக பல்வேறு நாடுகளில் பணியாற்றுவதால் அதில் கலந்து கொள்ளவில்லை, ஆனாலும் ஒரு சிலரை சந்தித்தேன். மதியம் எங்களுக்கு பஃபே விருந்து பள்ளியின் சார்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பலப்பல நிகழ்ச்சிகளுடன் இனிமையாக கழிந்த அன்றைய நாட்பொழுதில், அவரவர் தம்முடைய அனுபவங்களை ஸ்டேஜில் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்ட போது தான், நான் இவ்வாறு பேசினேன்.

டிகிரி எல்லாமே கரெஸ்ஸில் தான் என்பதால், என் நினைவில் என் பள்ளி நாட்களே நீங்கா இடம் பெற்றிருந்தன. உயிரோடு, உணர்வோடு கலந்த அந்த பள்ளியை நான் மிகவும் நேசித்ததற்குக் காரணம், என்னுடைய சொல்வளத்தையும் மொழிவளத்தையும் வெளிக் கொணர்ந்த இடம் அது! என் திறமைகளை உரமிட்டு வளர்த்த பாசறை! என் கடமைகளை நான் அறியச் செய்த இரண்டாம் கருவறை! என்னை செதுக்கிய சிற்பி! என் கவிதைகளை அங்கீகரித்து, அதை பதிப்பித்து ஊக்கப்படுத்திய தாய்!

இத்துணை அன்புகள் எனக்கு உண்டு! நான் இன்னமும் என்றாவது ஒரு நாள் பள்ளிக்கு சென்று வருவேன்! அப்போதெல்லாம் கீழே அமர்ந்து அப்பள்ளியின் மணலை கைகளால் துழாவுவதில் எனக்கு அலாதி இன்பம்! அம்மணலில் என் காலடித் தடம் படாத இடமே இல்லை என்கிற இறுமாப்பு!

என் ஆசிரியை கனவுக்குக் காரணம் என் பள்ளியும் என் ஆசிரியைகளும் தான்!

பி.எட் கோர்ஸில் 2 மாத டீச்சிங் ப்ராக்டிஸ் உண்டு! அப்போது, நாங்கள் ஏதேனுமொரு பள்ளிக்கு சென்று ஆசிரியர்களோடு ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும். பள்ளிகளை அலாட் செய்வது சி.ஓ. என்னும் எஜுகேஷன் ஆபீசரின் வேலை! நாங்கள் செல்லும் நாப்பது வேலை நாட்களில் சார்ட், டீச்சிங் எய்ட்கள் மற்றும் மாடல்கள் எல்லாம் செய்ய வேண்டும். அதோடு அங்கு நாம் எடுக்கும் பாடத்தை வைத்து 12 ரெக்கார்டுகள் முடிக்க வேண்டும்.

அந்த 2 மாத காலமும் ஒரு சவாலாகவே இருக்கும்! கவர்ன்மெண்ட் பள்ளிகளில் தான் டீச்சிங் ப்ராக்டிஸுக்கு போடுவார்கள். பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், அப்போது கூடுதல் வேலைச்சுமையும் இருக்கும்! இந்த டீச்சிங் ப்ராக்டிஸை வெற்றிகரமாக முடித்து விட்டால், முக்கால்வாசி பி.எட் முடிந்த மாதிரி!

இதில், பல பள்ளிகளில் ஸ்டூடண்ட் டீச்சர்களை மரியாதையாக நடத்துவதில்லை. உட்கார இருக்கைகள் கூட அளிப்பதில்லை. அதோடு ஒரு நாளைக்கு மொத்தம் எட்டு பீரியட்களில் ஆறு முதல் ஏழு பீரியட்கள் வரை வேலை வாங்குவார்கள். நமக்கென பள்ளியில் நியமிக்கப்பட்டிருக்கும் கெயிட் டீச்சர்(வழிகாட்டி ஆசிரியை) தலையால் இட்ட பணிகளை காலால் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம் ரெக்கார்டுகளில் கையெழுத்து போட மாட்டேன் என்று மிரட்டுவார்கள்.

ஆக, போனவாரம் டீச்சிங் ப்ராக்டிஸ் எங்களை அனுப்ப காலேஜில் கேட்டார்கள். நாம் விரும்பும் பள்ளியை கேட்கலாம், ஆனால் அதே பள்ளிதான் கிடைக்கும் என்று உத்திரவாதமில்லை!

எங்க மேடம் என்னிடம் கேட்க, நான் கலைமகள் கிடைக்குமா என்றேன். அதற்கு அவர், அங்கு போவது சிரமம், வேறு பள்ளி சொல்லுங்கள் என்றார். எங்கள் வீட்டருகில் இருக்கும் கவர்ன்மெண்ட் ஸ்கூல் கேட்டேன். வேறு மாணவியர் யாரும் அங்கு வர தயாராக இல்லை. குறைந்தபட்சம் மூன்று பேராவது ஒரு பள்ளிக்குப் போக வேண்டும். சரியென்று நான், மத்ரஸா இஸ்லாமியா என்னும் முஸ்லிம் எய்டட் பள்ளிக்கு விண்ணப்பித்தேன். என்னோடு இன்னும் மூன்று பேரும் அந்த பள்ளிக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.

அங்கு வேலை செய்யும் என் கசினிடம் விசாரித்தேன். ‘ அய்யோ, இங்கு நிறைய வேலை வாங்குவார்கள், சக்கையாக பிழிந்து விடுவார்கள், இருந்தாலும் பயப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.

சற்று பயமாகத்தான் இருந்தது. கடந்த 30ம் தேதி, சி.ஓ. விடமிருந்து ஆர்டர் வந்தது. ஒரு சில பேருக்கு அப்படியே விட்டு விட்டு, ஒரு சிலருக்கு மட்டும் மாற்றி விட்டார். மதரஸா இஸ்லாமியா பள்ளியை அடித்து விட்டு, அதற்கு பதிலாக அவர் எழுதியிருந்தது, ஆம், கலைமகள் கல்வி நிலையம்! மூன்று பேருக்கு மட்டும் இங்கு அலாட்மெண்ட்!

அப்படியே துள்ளிக் குதித்தது என்னுடைய இதயம். நான் படித்தது இதன் இன்னொரு விங்கான கலைமகள் மெட்ரிக் பள்ளியில்! ஆனாலும், எல்லாம் ஒரே கேம்ப்பஸில் தான்! என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

அய்யோ கலைமகளா, ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க, என்று எல்லோரும் சொல்ல, நான் மட்டும் கனவுலகில் மிதக்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு எட்டு பீரியட் வகுப்பெடுக்கச் சொன்னாலும் ஆர்வத்தோடு எடுக்க வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டேன்.

கடந்த 2ம் தேதி முதல் டீச்சிங் ப்ராக்டிஸ் ஆரம்பம். நாங்கள் அறிமுகம் செய்து கொள்ள, சி.ஓ ஆர்டருடன் 1ம் தேதியே சென்றோம்.

என் பெயரைப் பார்த்தவுடன், கரெஸ்பாண்டண்ட் அம்மா ‘இவங்க இங்கிலீஷ் நல்லா பண்ணுவாங்க, 9த் ஸ்டேண்டர்டு கொடுக்க சொல்லுங்கள்’ என்று சொல்லி விட்டார். அதோடு, எங்களுக்கு வேண்டும் வகுப்பும் எங்களிடம் எழுதிக் கேட்டு கொடுத்து விட்டார்கள்.

எனக்கு வாரத்துக்கு மொத்தம் 12 பீரியட் தான். அதாவது ஒரு நாளை 2 அல்லது 3 பீரியட் மட்டுமே! மீதி நேரமெல்லாம் ரெக்கார்டு எழுதலாம்!

எங்களுக்கு அங்கு ராஜ மரியாதை! எனக்கு பாடமெடுத்த ஆசிரியைகள் ஒரு சிலர் இன்னமும் இருக்கிறார்கள்! எல்லாரும் மிகவும் அன்பாக வந்து பேசினார்கள்!

எங்களோடு, இன்னொரு காலேஜில் இருந்து வந்த மூன்று பெண்களும் சேர்ந்து கொள்ள, எங்கள் ஆறு பேருக்கு, தனி ரூம்! தனித்தனி டேபிள் சேர்! பேன், லைட், பாத்ரூம், குடிநீர் என்று சகல வசதிகளுடன், எங்கள் அறையைப் பூட்டி ஹாஸ்டல் இன்சார்ஜ் மேடமிடம் சாவியைக் கொடுத்துச் சென்று விடுவோம்! ஹாஸ்டல் இன்சார்ஜான மீனாட்சி மேடமும் எனக்கு இரண்டாம் வகுப்பில் பாடமெடுத்த முன்னால் ஆசிரியை தான்!

எங்கள் பொழுது நிம்மதியாக சந்தோஷமாக அதே சமயம் உருப்படியாகக் கழிகிறது. வேறு இடங்களுக்கு டீச்சிங் ப்ராக்டிஸ் சென்றவர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து ரெக்கார்டு எழுத, நாங்கள் அங்கேயே முடித்து விடுகிறோம்.

இப்போதைக்கு நாங்கள் அங்கிருக்கும் ஆசிரியை பாடமெடுப்பதை ‘உற்று நோக்கல்’ செய்து வருகிறோம். இன்று நான் வகுப்புக்கு சென்று ரிவிஷன் செய்தேன். யூனிஃபார்ம் போட்ட பிள்ளைகளையும், அந்த வகுப்பறைகளையும் பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் கிளர்ந்தெழுகின்றன!

என்னுடைய வழிகாட்டி ஆசிரியையும் அங்கு படித்த பழைய மாணவி தான், ஆனாலும் என்னை விட ரொம்பவே சீனியர்! மிகவும் அன்பானவர்! இவ்வாறு எல்லாமே சாதகமாக அமைந்தது இறைவனின் அருள் தான்!!!

இன்று நான் எனதருமைப் பள்ளியில் மீண்டும் படிக்கிறேன், ஒரு ஆசிரியையாகவும், ஒரு மாணவியாகவும்! ஆம்! நான் ஆசிரியை என்றாலும், நான் பி.எட் மாணவி தானே!

“நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன்...காலியான வகுப்பறைகளை நோக்கியபடி...ஒருவர் என்னிடம் கேட்டார், ‘யாரைப் பார்க்க வேண்டும் என்று’ அதற்கு நான் சொன்னேன்,

நான் வகுப்புகளை பார்க்க வந்தேன்; நான் அமர்ந்து ஆயிரமாயிரம் கதைகள் பேசிய பெஞ்ச்சுகளையும் டெஸ்க்குகளையும் பார்க்க வந்தேன்; பெருவிருட்சமாக வளர்ந்து இன்று கிளை பரப்பிக் கொண்டிருக்கும், அன்றைய வேப்பஞ்செடியை நலம் விசாரிக்க வந்தேன்; கைநீட்டி மழை வருகிறதா என்று பார்க்கும் சன்னல்களைப் பார்க்க வந்தேன்; அதோடு ப்ளாக் போர்டு, டஸ்ட்டர், உடைந்து போன சாக்பீஸ் துண்டுகள், போர்டின் கீழே சிதறி இருக்கும் சாக்பீஸ் பவுடர், போர்டின் மேல் எழுதியிருக்கும் பொன்மொழி, அங்கு மாட்டியிருக்கும் போட்டோ.... இன்னமும்....இன்னமும்...."

-சுமஜ்லா.

14 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு...

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு...

அருமையான பகிர்வு அக்கா...படிக்கும்போது நானும் என் பள்ளி நாட்களுக்கு சென்று இன்னும் திரும்பவில்லை...
அந்த கனா காலங்களின் அனுபவம் அருமை அக்கா...

SUMAZLA/சுமஜ்லா said...

ஒவ்வொரு முறையும் ஆர்வமாக வந்து முதல் ஆளாக பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தும் சீமான்கனி தம்பிக்கு நன்றி! அந்த கனா காலங்கள் மீண்டு வரவே வராது!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்கள் மனம் போல் எல்லாமே அமைகிறது. கலக்குங்க அக்கா .. வாழ்த்துக்கள்

நிலாமதி said...

நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்...எல்லோருக்கும் இப்படி கிடைக்காது நல்ல காலத்தை பாருங்கள் படித்த பள்ளியிலே படிபிக்கவும் ( பயிற்சி )கிடைத்தது. வாழ்த்துக்கள் உங்கள் வளமான எதிர்காலத்துக்கு.

SUMAZLA/சுமஜ்லா said...

தம்பி கிருஷ்ணா, நீங்கள் சொல்வது சரி! நம் எண்ணங்கள் தான் செயலாக மாறுகிறது, இறைவனின் துணையால்!

SUMAZLA/சுமஜ்லா said...

//நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்...//

நன்றி நிலா! எதிர்பாராத ஒன்று கிடைக்கும் போது அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

பாத்திமா ஜொஹ்ரா said...

இன்று நான் எனதருமைப் பள்ளியில் மீண்டும் படிக்கிறேன், ஒரு ஆசிரியையாகவும், ஒரு மாணவியாகவும்! ஆம்! நான் ஆசிரியை என்றாலும், நான் பி.எட் மாணவி தானே!

super, அருமை

அன்புடன் மலிக்கா said...

எத்தனைபேருக்கு கிடைக்கும் இதுபோன்றொதொரு வாய்ப்பு, இறைவனின் துணை என்னாலும் இருக்கட்டும்.. அசத்துங்கக்கா..

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி பாத்திமா ஜொஹ்ரா!
நன்றி மலிக்கா!!

நல்லபடி என்னுடைய அப்ரண்டைஸ்ஷிப்பை முடித்து நல்ல பெயருடன் வெளிவர வேண்டும்!

asiya omar said...

"நான் வகுப்புகளை பார்க்க வந்தேன்; நான் அமர்ந்து ஆயிரமாயிரம் கதைகள் பேசிய பெஞ்ச்சுகளையும் டெஸ்க்குகளையும் பார்க்க வந்தேன்."
சுஹைனா நானே இந்த இடுகையை படிக்க ஆரம்பிக்கும் பொழுது தங்களின் வகுப்பறைகளை பார்த்தீர்களா? என்று கேட்க நினைத்தேன்.
அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

பாத்திமா ஜொஹ்ரா said...

என்னுடைய பிளாக்கில் recent post and recent comments தெரியவில்லை.என்ன செய்வது அக்கா?விளக்க முடியுமா?please

SUFFIX said...

வாவ்...எழுத்துக்களிலியே தங்களின் ஆனந்தத்தை உணர முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. இறைவனின் அருள் என்றென்றும் நிலவட்டுமாக.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் சுகைனா!!