Monday, January 4, 2010

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்...

மனிதர்களின் உண்மை முகங்களை புரிந்து கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் நான் இந்த சச்சரவுகளை நினைக்கிறேன்.

முதலில், நான் புரிந்து கொண்டது, இங்கு இந்துபெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல; அதே போல இஸ்லாமியப் பெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அல்ல!

பத்து பேர் சேர்ந்து ஒரு யானைப்பார்த்து பன்றி என்றால் அது பன்றியாகத்தான் தெரியும்; அது மனிதர்களின் மனப்பான்மை! பர்தா விஷயத்திலும் நிகழ்ந்தது இது தான்! பின்னூட்டத்தில் பொறுமையாக பதில் தந்திருக்கிறேன், ஆனாலும் காதையும் கண்ணையும் பொத்திக் கொண்டு கத்துபவர்களை என்ன செய்ய முடியும்??? பேஜ் இம்ப்ரஷன் அதிகரிக்க, ஒரே நாளில் ஃபேமஸாக என்று எதிர் தாக்குதல் நடத்தி இருப்பார்களோ!

எந்தப்புறம் என்றாலும் கொம்பு சீவி விட ஒரு கூட்டம்! ஆனாலும், நான் பொறுமையாகத் தான் பதில் சொல்லி வந்தேன்! முந்திய என் பதிவில் இருக்கும் கவிதையின் உட்கருத்து கூட, பல பதிவர்கள் பல நேரங்களின் எனக்கு அளித்த பின்னூட்டத்தின் விளைவாகத் தான்! அசிங்கமாகத் திட்டி தனிமனிதத் தாக்குதலோடு வந்த பின்னூட்டத்தையெல்லாம் என்னால் வெளியிட முடியவில்லை; அதே சமயம் ஜீரணிக்கவும் முடியவில்லை! என்னை மோசமான வார்த்தைகளில் தாக்கி அவ்வளவு அசிங்கமாக...வக்கிரமாக...காது கூசும் வார்த்தைகள்! அதே போல மதத்தை விமர்சித்தும்....! அந்த பின்னூட்டங்களையெல்லாம் வெளியிட்டால், மதக்கலவரம் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி, ஒரு சிலர் பதிவு எழுதி இருக்கிறார்கள்! அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் புறந்தள்ளி விட்டேன்! ஆனால், நான் பெரும்மதிப்பு வைத்திருந்த ஒரு சிலர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார்கள் என்று நினைக்கவில்லை!

அந்த பின்னூட்டங்கள் மற்றும் முஸ்லிம் பெண்களை வராகங்கள் என்றும் கரும்பன்றிகள் என்றும் சித்தரித்து வந்த கவிதைக்கான பதிலைத்தான் அந்த கவிதையில் கொடுத்தேன்! அது சம்பந்தபட்டவர்களுக்குப் புரியும்! தனியொருவரைத் தாக்கி விமர்சனம் எழுதி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை! ஆகையால், உறைக்க வேண்டியவருக்கு தானாக உறைக்கட்டும் என்று பெயர் குறிப்பிடாமல் பொதுவாக எழுதினேன்! இதில் சம்பந்தப்படாத மாற்றுமத நண்பர்கள் மனத்தையும் இத்துடன் சேர்த்து புண்படுத்தி விட்டோமே என்று வருந்துகிறேன்!

என் தோழியர் பலரிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள்! அதில் வயதில் மூத்த இலக்கியத்துறையில் இருக்கும் நான் மதிக்கும் ஒரு பதிவுலக அம்மையார் அனுப்பிய மெயில் இதோ:

‘அன்பின் சுமஜ்லா,
உங்கள் குறிப்பிட்ட பதிவைப்படித்து உங்கள் துணிவையும்,நேர்மையையும்,பொறுமையையும் வியக்கிறேன்.இவ்வாறான சூழலில் எனக்கு அறச்சீற்றம் ஏற்பட்டு நிதானமிழந்திருப்பேன்.நீங்கள் அமைதியாக...நிதானமாக விளக்கியிருக்கிறீர்கள்.
அப்படி ஒரு மோசமான,வக்கிரமான கருத்தை வெளியிட்டவர்கள் உங்கள் பொறுப்பான,கண்ணியமான பதிலுக்குப் பாத்திரமானவர்கள் அல்ல.அவர்கள் விஷமத்தனமான சகதிகளை வாரி இறைப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள்.

தாஙள் மட்டும் கோட்டும்,சூட்டும் போட்டுக் கொண்டு,’’சேலை உடுத்தத் தயங்கறியே’’என்று பாடும் ஆண் வர்க்கத்தின் வேறு வகைப் பிரதிநிதிகள் இவர்கள்.
பெண் எதை எப்படி எழுதினாலும் இந்த ஆணாதிக்க உலகம் அதை எள்ளலாகவே எடைபோடும்.

கட்டுண்டோம்;பொறுத்திருப்போம்;காலம் மாறும்.
வீணர்களுக்குப் பதில் தந்து பொழுதை விரயமாக்க வேண்டாம்- ஆனால் இந்தப் பதில் பதிவும் கூட அர்த்தச் செறிவுடன் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
அன்பு வாழ்த்துக்களுடன்,’

இந்த சகோதரி ஒரு இந்து தான்! அவர் அனுமதி இல்லாமல், பெயர் வெளியிட விரும்பவில்லை! இது போல பல மின்னஞ்சல்கள்! தரக்குறைவான பதில் விமர்சனத்துக்கு பயந்து, பலரும் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது, பதிவுலகம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ண வைத்து, வேதனை தந்தது!

இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் போதிக்கும் சத்திய சன்மார்க்கம்! பலரும் நினைப்பது போல, அது வாளால் வளரவில்லை, இறைத்தூதரின் நற்குணத்தால் தான் வளர்ந்தது! இந்த சூழலை சாக்காக வைத்து, இதை மதச்சண்டையாக கொண்டு வர முயன்ற ஓரிரு இஸ்லாமியப் பெயரில் வந்த பின்னூட்டங்களையும் நான் அதன் காரணமாகத் தான் வெளியிடாமல் புறக்கணித்து விட்டேன்!

அடுத்து, குழந்தைக்கு எழுதிய தாலாட்டுப் பாடலுக்குக் கூட மைனஸ் ஓட்டு! எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்! சிரிப்பு தான் வருகிறது! எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏன் என்னுடைய ப்ளாகுக்கு வர வேண்டும்?படிக்க வேண்டும்? இனி, மைனஸ் ஓட்டு விழுந்தால், எதிர் டீம் படிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வேன்!

எனக்கு இந்த பிரச்சினையால், பேஜ் இம்ப்ரஷன் கூடியுள்ளது, அதே போலவே எதிர்கருத்து சொன்னவர்களுக்கும் இருக்கும்! ஒரு நாளைக்கு 3000 பேஜ் இம்ப்ரஷன்ஸ்! அதில் 20 மைனஸ் ஓட்டுக்கள்... அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை! அப்போ மற்றவர்களெல்லாம் நடுநிலையாளர்கள் என்று தானே அர்த்தம்!

உண்மையில், நான் என் ப்ளாகுக்கென்று ஒரு தரம் வைத்திருக்கிறேன். எச்சூழ்நிலையிலும் அதை விட்டுக் கொடுத்தலில் எனக்கு விருப்பமில்லை! ஒவ்வொரு கவிதையோ, கட்டுரையோ எழுதியவுடனே, சைடில் இருக்கும் ட்ராப் டவுன் மெனுவில் அதை ரகத்துக்கு தகந்த மாதிரியாக இணைத்து விடுவேன். ஆனால், சாது மிரண்டால், கவிதையை இது வரை இணைக்கவில்லை என்பது கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்! காரணம் நிரந்தரமாக அது என் ப்ளாகில் இடம் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை! அதே போல, இந்த பதிவும், ஒரிரு நாட்களுக்குத் தான் இருக்கும் அதன் பின்பு இதை எடுத்து விடுவேன்!

எனக்கு பல ஆக்கப்பூர்வமான வேலைகள் இருக்கின்றன! இனி, இவ்விஷயத்தில் சொல்ல ஏதும் இல்லை! வழக்கம் போல என் மற்ற பதிவுகள் அவ்வப்போது வெளிவரும்! உண்மையை உண்மையென்று சொல்ல நான் என்றும் தயங்க மாட்டேன், அது கசந்தாலும் சரியே....!

-சுமஜ்லா.

29 comments:

நட்புடன் ஜமால் said...

விளக்கம் கொடுத்து மாளாது

விட்டு தள்ளுங்க

காலமும் பொருமையும் சரியான வழி சொல்லும்.

வெள்ளிநிலா said...

assalamu alaikum ! i would like to send one brief mail to you ., can you give me ur mail id? - sharfudeen, coimbatore

வால்பையன் said...

டெக்னிக்கல் பதிவுகள் எழுதாம விட்றாதிங்க!

PPattian said...

//முஸ்லிம் பெண்களை வராகங்கள் என்றும் கரும்பன்றிகள் என்றும் சித்தரித்து வந்த கவிதைக்கான பதிலைத்தான் அந்த கவிதையில் கொடுத்தேன்//

இதை நீங்கள் (வேண்டுமென்றோ அல்லது அறியாமையாலோ) தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்..

அவரது கவிதை கூறுவது இதுதான் (ரொம்ப சிம்பிள்). கரும்பன்றிகள் அவற்றிற்கே உரிய அமைப்புடனும், வெண் பன்றிகள் அவற்றிற்கு உரியதுமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.. இதில் எது உயர்ந்தது என்று எப்படி கூற முடியும்?

ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு அம்சத்துடன் படைக்கப் பட்டிருக்கிறது தகவமைப்பு என்று ஒரு சொல் உண்டு. அது அந்த மிருகத்தின் குற்றம் அல்ல. உங்களுக்கும் இது கட்டாயம் புரிந்திருக்கும்.

உங்கள் கவிதையை விட கலகலப்ரியாவின் கவிதை நாகரிகமாக இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

இதுவே நானாக இருந்தால், இந்த சர்ச்சை குறித்த அனைத்து இடுகைகளையும் அகற்றி விட்டு, "யாராவது மனது புண்பட்டிருந்தால் மன்னிக்க" என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருப்பேன். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் எனக்குக் கிடையாது. அது உங்கள் சுதந்திரம்.

நன்றி

Thahir said...

good sister...Bad things always hurt us,forget the bad comments.

(Note:Even before 3 days I didn't know ur blog. But three days before i was read about u in that blog(i'm not interest to tell the blog name). he commented u 'he is the truthful person ..other blog people supporting u doing blog polictics here like that... , he wrote in that blog, after that only i search ur blog and now i subscribed to ur blog. Because i support ur positive mind and also his not angry in bhurka or u , his angry on religion. Please dont seperate tamil nadu people in the name of religion)

Wearing burka, cross, poonul...are not indicate we r muslim or christian or iyer.if the person likes who wears it, its indicate he or she loves her own tradition. Dont interfere others freedom. Please........

Unknown said...

அன்பு சகோதரிக்கு,
பெண்கள் என்றாலே தரம் தாழ்த்தி பார்க்க கூடிய இந்த சமுதாயத்தில், அதுவும் முஸ்லிம் பெண்கள் என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம்,இதற்க்கு என்றே ஒரு கூட்டம் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய பிழைப்பே அதுதான்.
எதற்கும் வளைந்து கொடுக்காமல் துணிவாக உங்கள் கருத்துக்களை எழுதி வாருங்கள்.
இறைவன் நல்லவர்கள் பக்கம் என்றும்
துணை நிற்பான்.

நட்புடன்
அபுல்பசர்.
http://abulbazar.blogspot.com

beer mohamed said...

தாங்கள் சொல்வது சரி தான் இந்துக்கள் பெயரில் போடும் பதிவர்கள் இந்துக்கள் அல்ல, இதே தான் நானும் எனது பிளாக்கில் அர்ச்சகர் செய்தி வெளியிட்டேன், அதற்க்கு ஒருவன் மதத்தை ரொம்பவும் கேவலமாக செய்தி வெளியிட்டான், இதே போல பின்னோட்டாம் இட்டு பிரபலம் ஆக சிலர் இருக்கின்றார்கள் தான் தாங்கள் யாருக்க்கும் அஞ்சாமல் வெளியிடுங்கள், வாழ்த்துக்கள்.அடுத்து உங்கள் பிளாக்கை சேமித்து வையுங்கள் சில விஷமிகள் உங்கள் பிளாக்கை தடுக்க முயற்ச்சி செய்வார்கள், ஏன் என்றால் நானும் அதில் மாட்டி கொண்டவன் தான்
http://beermohamedtamilgroup.blogspot.com

ILA (a) இளா said...

//எனக்கு பல ஆக்கப்பூர்வமான வேலைகள் இருக்கின்றன! //
அதைச் செய்ங்க. இதுவும் கடந்து போவும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதில் 20 மைனஸ் ஓட்டுக்கள்... அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை! அப்போ மற்றவர்களெல்லாம் நடுநிலையாளர்கள் என்று தானே அர்த்தம்!//

நன்மைக்கும் தீமைக்கும் இடையில் யுத்தம் நடக்கும்போது நடுநிலை வகிப்பவர்கள் தீமையை ஆதரிப்பவர்களாகவே உணரப்படுவார்கள்

எம்.ஏ.சுசீலா said...

எம்.ஏ.சுசீலா,http://www.masusila.blogspot.com
புதுதில்லி
அன்பின் சுமஜ்லா,
உங்கள் இந்தப் பதிவில் என் அஞ்சலை வெளிட்டமைக்கு நன்றி.அந்தப் பதிவில் பின்னூட்டம் சரியாக அமையாததாலேயே அஞ்சலில் அனுப்பினேன்.எவர்க்கும் அஞ்சவில்லை.உண்மையைச்சொல்ல ஏன் அச்சம்,ஏன் தயக்கம்.தைரியமாக என் பெயரை வெளிடுக.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் கண்டு தயங்காமல் இன்று போல் என்றும் உங்கள் பணி எழுச்சியுடன் தொடர்க.
நான் பிறப்பால் இந்துவெனினும்,உங்களைப் போலவே மதம் கடந்த நிலையில் யோசிப்பவள்.அப்படிப்பட்ட வருங்காலம் இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான்.
இந்தப்பதிவின் கடைசிப் பகுதி உங்கள் தெளிந்த ஞானச் செருக்கைக் காட்டுகிறது.பாரதி நம்மிடம் எதிர்பார்த்தது அதைத்தான்.சபாஷ் !!
அன்பு வாழ்த்துக்கள்.

கிரி said...

சுமஜ்லா ஆபாச பின்னூட்டங்கள் வந்தது வருத்தம் அளிக்கிறது, இதை போன்ற பிரச்சனைகளில் இவை எப்போதுமே தவிர்க்க முடியாதது, எப்படியும் வரும்.

//நான் பொறுமையாகத் தான் பதில் சொல்லி வந்தேன்!//

நீங்கள் பொறுமையாக பதில் கூறினாலும் "நற்குடி" என்ற வார்த்தையை பயன்படுத்தியதை நியாயப்படுத்தியது தவறு தான்,.. அதை நீங்கள் தவறுதலாக எழுதி இருக்கலாம் என்று தான் கோவிக்கண்ணன் போல நானும் சுட்டிக்காட்டினேன். நீங்கள் அதை திரும்ப திரும்ப நியாயப்படுத்தியே பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதிலும் உங்கள் கோபத்தை குறைத்து அமைதியாக யோசித்து இருந்தால் உங்கள் தவறு புரிந்து இருக்கலாம்.

கொஞ்சம் பொறுமையாக யோசித்து பாருங்கள்.. நாம் தவறுதலாக எழுதுவது சகஜமே அதை மற்றவர் சுட்டிக்காட்டும் போது மாற்றிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை, அதில் எந்த விதத்திலும் குறைந்து விடப்போவதில்லை.

உங்கள் கருத்தில் உறுதியாக இருந்தால் நான் தற்போது கூறுவதும் உங்களுக்கு கோபத்தையே வரவழைக்கலாம், இருப்பினும் என் கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இதை நான் எந்த வித அர்த்தத்திலும் கூறவில்லை, மனதில் பட்டதை கூறுகிறேன்.

நான் கூறுவதெல்லாம் உங்கள் கோபத்தை நியாயத்தை ஓரங்கட்டி விட்டு ஒரே முறை இப்படி கூறியவர்கள் பார்வையில் யோசித்து பாருங்கள்.

இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை, உங்கள் விருப்பம்.

சீமான்கனி said...

சரியானதே அக்கா...

அரங்கப்பெருமாள் said...

ஜமால் சொன்னதே நானும் சொல்ல விரும்புகிறேன்.

மாடல மறையோன் said...

//முதலில், நான் புரிந்து கொண்டது, இங்கு இந்துபெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல; அதே போல இஸ்லாமியப் பெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அல்ல!
//

அதே போல கிருத்துவப்பெயர்களில் பின்னூட்டம் எழுதுபவர்களெல்லாம் கிருத்துவர்கள் அல்ல!

மாடல மறையோன் said...

This is an important blogpost that shows you as a person.

I have read it, because I am interested in the gossip columns of bloggers.

I have some points for you:

1.Your saathu mirandaal is a good poem - dont feel about that. I have already commented upon it. The poem proves that you are a great handler of Tamil language. Write more poems.

2.Bloggers like you are in open sphere. Unless you retrict your readers by resorting to technical methods like 'registration' etc. (you are a knowledgeable person in blog techniques, arent you?), you should be prepared to receive obsence comments of all sorts. As you have done already, block them. No use whining about them.

3. You expect women commentators to be different, i mean, to be more decent? Perish that thought! I have read the blog in question where you are savagely criticised. In that blog, I have seen some women commentators using obscene words against you. So, dont expect women to be different.

3. Your lullaby poem (thalaattu), if it reminds one of Krishanan, may it be so. Why do you bother? You have shown again you are a great handler of Tamil verse tradtion. To a women tennis match, some go to watch the match; some, to look at the flowing skits of the players. Can you tell people what to see; and what not to see? It is not your business, as the organisers of the match - mind you!

Continue your blog with the same verve and vigor. You have many many interesting and useful things to say. Be assured that, more than your muslim bros and sisters, so many others are reading your blog. Before long, you will be a popular and enviable blogger in Tamil reading world.

BRAVO...CARRY ON.

டவுசர் பாண்டி... said...

கண்ணதாசன் தன்னை பற்றி குறிப்பிடும் வரிகளை இங்கே இந்த சந்தர்ப்பத்தில் இடுவது பொறுத்தமாயிருக்குமென நினைக்கிறேன். அவர் ஒரு குடிகாரர் அதனால் அவரின் வரிகளை படிக்க மாட்டேனென்றெல்லாம் அடம்பிடிக்க மாட்டீர்களென நினைக்கிறேன்.

“கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை!


இந்த வரிகள் சிந்திக்க தெரிந்த ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வார்த்தைகள்....

வாழ்த்துகள்....

சிங்கக்குட்டி said...

அன்பின் சுமஜ்லா,இந்த இரு பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவதும், விடாததும் உங்கள் விருப்பம்.

"கலகலப்ரியாவின்" பதிவைத்தான் முதலில் நான் முதலில் படிதேன், ஆனால் அப்போது எனக்கு இதுதான் விசையம் என்று தெரியாது, அதன் பின் தொடர்ந்து உங்கள் பதிவுகள், "மயிலின்" பதிவுகள் மற்றும் அனைத்து பின்னூட்டங்களையும் படித்து, நல்ல ஆக்கத்துக்கு பயன் பட வேண்டிய பதிவர் சக்தி இங்கு வீணாகிறதே என்று வருந்தினேன்.

அதிலும் "எரிகிற வீட்டில் எண்ணையை ஊற்றிய பின்னூட்டங்கள்" கொஞ்சம் அதிகமாகவே என்னை உருத்தியது.

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் நல்ல நோக்கத்துடன் நீங்கள் எழுதிய "பர்தா" பதிவின் நல்ல நோக்கத்தில் இருக்கும் அதே தன்மையை, சில வார்த்தைகளை மாற்றி கொடுத்திருக்கலாம், மற்றபடி அது ஒரு "நல்ல பதிவு, நல்ல பகிர்வு".

ஒன்று: இஸ்லாமில் அதிகம் பயன்படுத்தபடும் " "நற்குடி" என்ற சொல் "இஸ்லாமிய கலாச்சார படி" அல்லது "இஸ்லாமிய போதனைகளின் படி" அல்லது "இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி" என்ற அர்த்தத்துடன்தான் சொல்லப்படுகிறது. ஆனால், இதை இஸ்லாமியர் இல்லாத அனைவரும் தெரிந்து வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதால், நீங்கள் "இஸ்லாமிய கலாச்சார படி, போதனைகளின் படி, பாரம்பரிய முறைப்படி" என்று எதாவது ஒரு வார்த்தையை பயன் படுத்தி இருக்கலாம்.

இரண்டு: பர்தா ஏன் அணிகிறோம்? பகுதியை தவிர்த்து இருக்கலாம் அல்லது வேறு சரியான வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கலாம், காரணம், மற்ற ஆண்கள் அனைவரும் அல்லது பர்தா அணியாத பெண்களை அவர்கள் "உடல் அமைப்பை மட்டுமே பார்கிறார்கள்" என்பது போல் இருக்கிறது.

(நீங்கள் எழுதியஉண்மை நோக்கத்தை, உதாரணத்தை "வசதி இல்லாவிட்டாலும் பாரம்பரிய குடும்ப பெயருக்காக பெண் கொடுத்தேன், எடுத்தேன்" என்று நீங்கள் எடுத்து சொல்லும்போது, அதை அனைவரிடமும் சரியாக போய் சேர விடாமல் நம் பின்னூட்ட புலிகள் "வார்த்தை பிரச்னையை மத பிரச்னையாக" திசை திருப்பி விட்டார்கள். என்பதுதான் உண்மை.)

அதே நேரத்தில், நீங்கள் மற்ற ஆபாச பின்னூட்டத்தை அழித்தது போல அந்த "பகவத்கீதை" பின்னூட்டத்தையும் அழித்திருக்கலாம் என்பது என் கருத்து, அந்த இடத்தில் "பைபிள், குரான்" என்று எந்த மத வேதத்தின் பெயர் வந்து இருந்தாலும், நான் இதையே தான் சொல்வேன்.

இஸ்லாமில் வரும் அர்த்தம் போல் இல்லாமல், "நற்குடி" என்ற வார்த்தைக்கு நம் வழக்கத்தில் வெவ்வேறு தவறான அர்த்தங்கள் உள்ளது, அந்த வருத்தத்தை "கலகலப்ரியா" தன் பதிவில் சொல்லி விட்டார், அதன் அர்த்ததையும் "புபட்டியன்" மேலே கொடுத்து விட்டார்.

அந்த இடத்தில் நீங்கள், "கலகலப்ரியா" என் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளும் படி அர்த்தம் இருக்கும் பட்சத்தில், நான் அதை மாற்றி விடுகிறேன் என்று சொல்லி நீங்கள் சொல்ல வந்த கருத்தை கொண்ட மேல் சொன்ன எதாவது ஒரு வார்த்தையை பயன்படுத்தி பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்து இருக்கலாம்!.

ஆனால் "புபட்டியன்" சொல்வது போல் கசப்பான உண்மையை கொண்ட உங்கள் பதில் பதிவு(கவிதை) தேவை இல்லாதது.

உங்கள் தன்னம்பிக்கைக்கும் படிப்புக்கும் அதில் வரும் வார்த்தைகள் சற்றும் பொறுத்தமில்லாதது. இந்த இடத்தில் மயில் "இந்த பதிவு தேவையில்லை என்று" சொல்லியுள்ள பதிவையே வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

மீண்டும் சொல்கிறேன் தவறுகள் உணரப்படும்போது கடவுளால் மன்னிக்க படுகிறது, எனவே கவலையை விட்டு விட்டு ஆரோக்கியமான விமர்சனம் என்பதை நல்ல முறையில் எடுத்து கொண்டு நீங்கள் உங்கள் திறமையை நல்ல பல இடுகைக்கு பயன்படுத்த வேண்டுகிறேன்.

மொத்ததில் அனைவருக்கும் இன்று நான் படித்த ஒரு நல்ல பதிவை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்

நான் ஹிந்து ..! நீ முஸ்லிம்..! நாம் யார்?

பதிவர்கள் அனைவரும் கைகோர்த்து "ஜீவன்" போல நல்ல " ஜீவன்" உள்ள இடுகைகளை எழுதுங்க.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி!.

சிங்கக்குட்டி said...

பொதுவாக மற்றவர் இடுகையில் உள்ள பின்னூடத்திற்கு நான் பதில் சொல்வதில்லை,ஆனாலும் "சுகுணாதிவாகருக்கு" இது இங்கு அவசியம் என்று நினைக்கிறேன்.

யாருமா செல்லம் நீ? உன் தனிப்பட்ட நம்பிக்கையை பொறுத்து எந்த மதமும் வளர போதில்லை அல்லது அழிய போவதில்லை.

ஆனால், எந்த ஒரு மத நம்பிக்கையையும் காயப்படுத்த கூடாது என்ற அடிப்படை பொதுஅறிவு கூட இல்லாமல், எங்கையாவது ஏதாவது உளறி வார்த்தையை விடக்கூடாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சத்திய பிரமான நூல்களில் ஒன்றை நேரடியாக பெயரை சொல்லி கலங்க படுத்துவது என்பது தேசவிரோத குற்றம், இந்த வார்த்தையை கொண்டு அவதூறு வழக்கு போடும் பட்சச்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்று முதலில் ஒரு வழக்கறிஞரிடம் கேட்டு தெரிந்துகொள்.

எந்த மத கடவுளையும் கடவுளாகவும், எந்த தாயையும் தன் தாயாகவும் பார்பதுதான் மனிததன்மை கண்ணா.

போ... போய் விவசாயம் பண்ணு, புள்ள குட்டிகளயாவது ஒழுங்கா படிக்கவை.

புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி!.

Mohamed G said...

நாம் நடக்கும் பாதையில் முட்கல்,கற்கல், இடைமறிக்கும் எறிந்து விட்டு பயணத்தை தொடருங்கள்.

Dr.Rudhran said...

keep going, best wishes. i understand how you feel, it should make you do more.

Asiya Omar said...

cheer up suhaina!happy and prosperous new year.

Suresh.D said...

நம்ம கருத்துக்களை அடுத்தவங்க மனசு புண்படாம பதிவு பண்ணனும் அப்டிங்கறதும், நம்ம கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் அடுத்தவங்க மேல வலுகட்டயமா திணிக்கக்கூடாது அப்டிங்கறதும் என்னோட கருத்து

அதிரை அபூபக்கர் said...

உண்மையை உண்மையென்று சொல்ல நான் என்றும் தயங்க மாட்டேன், அது கசந்தாலும் சரியே....!//

சரியா சொன்னிங்க..
உங்கள் பயனுள்ள தகவல்களை பயணத்தை தொடருங்கள்.

Jaleela Kamal said...

சுஹைனா இன்னும் ஒரு நாளில் புது வருடம் ஆரம்பிக்குது, பல பின்னூட்டங்கள் ரொம்ப மோசமாக வந்து உங்களை சங்கட படுத்தி இருக்கும்,


புது வ‌ருட‌ம் பிற‌க்க போகுது இனி அனைவ‌ருக்கும் சாந்தியும் ச‌மாத‌னமும் கிடைக்கட்டும். இதை ப‌ற்றி பேச‌ பேச‌ ம‌ன‌ச்ச‌ங்க‌ட‌ம் தான் அதிக‌ம் ஆகும.

க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ப்போம், ம‌ன்னிப்போம்.

எல்லோருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

அன்புடன் மலிக்கா said...

பிறக்கவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் நலம் பயக்கட்டும் நடந்தவைகளை கலைந்து
இனி
நடப்பவைகளை நல்லவிதமாக நினைப்போம்.

அக்கா நடந்தவைகளை மறந்துவிடுங்கள்.
இறைவன் நம் அனைவருக்கும் என்றென்றும் துணையிருப்பான்..

ஹுஸைனம்மா said...

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.2:216

இன்ஷா அல்லாஹ் எல்லாம் நன்மையாகவே இருக்கும்.

மிதக்கும்வெளி said...

சிங்கக்குட்டி என்ற கத்துக்குட்டிக்கு..

நான் யார் என்பது நீண்டகாலம் வலையுலகில் இருப்பவர்களுக்கும் என் எழுத்துக்களை வாசித்தவர்களுக்கும் தெரியும். உங்களுக்குத் தெரியவில்லை என்றால் போதுமான சரக்கு உங்களிடம் இல்லை, வெறுமனே மொக்கைப் பதிவுகளைப் படித்து கோவிந்தா போடுவதைத் தவிர ஒருமண்ணும் உங்களுக்குத் தெரியாது என்று அர்த்தம்.பகவத்கீதையில் உள்ள வரிகள் நான் எழுதியது அல்ல, அது பகவத்கீதையில் உள்ளது. ஒன்று எதையாவது படிக்கிற அறிவு இருக்க வேண்டும், அல்லது அடுத்தவன் சொன்னால் அதைத் தெரிந்துகொண்டு விவாதிக்கிற அறிவாவது இருக்க வேண்டும். ஒரு இழவும் இல்லாமல் கூட்டத்தோடு கும்மி அடிக்கிற வேலை உலகத்தில் மிக எளிதான வேலைதான்.

Unknown said...

God will give benefit for your hardwork.Don't consider other's unnecessery comments.Do your Work......Go Ahead....God bless you....

IRSHATH said...

இஸ்லாத்தை சம்பந்தப்படுத்தி ஒரு பதிவிட்டால் commentsகூடும் என்பதே இதில் விஷயம்