Saturday, February 20, 2010

கண்ணில் தெரியும் கனவு


வானவில்லே, இன்ப வானவில்லே!
....வரும் காலம் தோறும் கானம் நூறு,
....பாடும் ராகம் போடும் தாளம்
....கேட்கும் இந்த மண்ணிலே!
....அந்த சரணம் அங்கு விண்ணிலே!!

நானுமங்கே, இன்று நானுமங்கே!
....கோலம் பாதி கோணம் மாறி,
....கூட்டை விட்டு வானில் தாவி,
....விண்ணில் வரைந்த கோலமே!
....என் எண்ணம் அதனுள் வாழுமே!!

வான எல்லை, அங்கு வரைந்த வில்லே!
....கூத்தடிக்க கூட சேர்ந்து
....பாட்டிசைக்க பருவம் பார்த்து,
....நெஞ்சை அள்ளும் தோற்றமே!
....என் எண்ணம் அதனுள் வாழுமே!!

கன்னித் தாமரை, கண்ணுக்கேன் திரை
....கூறும் உருவம் மாறும் பருவம்
....நீரில் அமுதம் தேடும் குமுதம்
....எண்ணம் மிதக்கும் கனவிலே!
....அது நீந்திச் செல்லும் நிலவிலே!!

-சுமஜ்லா.

13 comments:

ஜெய்லானி said...

ரொம்ப நாளா ஆளையே கானோமே!!

SUMAZLA/சுமஜ்லா said...

படிப்பு சம்பந்தமான வேலைகளில் பிஸியாக இருந்தேன். இனி, இன்னும் ஒரு இரண்டு மாதங்கள் இப்படித்தான் போகும். பிறகு தான் மீண்டும் பழையபடி பதிவுலகத்தில் முழு ஈடுபாட்டுடன் உலா வர முடியும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பாடல் ..

தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நிறைய பதிவுகளை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் .

சீமான்கனி said...

//வான எல்லை, அங்கு வரைந்த வில்லே!
....கூத்தடிக்க கூட சேர்ந்து
....பாட்டிசைக்க பருவம் பார்த்து,
....நெஞ்சை அள்ளும் தோற்றமே!
....என் எண்ணம் அதனுள் வாழுமே!!//
அழகு வரிகள் ரசித்தேன் ...
அசலாமு அழைக்கும் அக்கா..நலமாக இருக்கீங்களா??

Asiya Omar said...

அருமை. சுஹைனா,உங்களைப்போன்றவர்களின் கவிதைகளை வாசிக்கும் பொழுது இயற்கையாகவே எமக்கும் கவிதை வருகிறது.கண்ணில் தெரிந்த கனவு விண்ணில் தெரிகிறதம்மா !

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

இரட்டை வானவில்லுடன் கூடிய படம் வரிகளோடு சேர்ந்து அழகாக

SUMAZLA/சுமஜ்லா said...

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்!

என் மேல் ரொம்பவும் நம்பிக்கை வைத்து, என் எழுத்தை எதிர்பார்த்திருப்பதை நினைக்கும் போது, சந்தோஷமாக இருக்கிறது.

அடுத்த வாரம் காலேஜில் கேம்ப்! அப்பொழுது நிறைய போட்டிகள் உண்டு. அதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டுமல்லவா? அதோடு, மார்ச் இறுதியில் tourம் உண்டு. இவை பற்றிய சுவையான குறிப்புகளையெல்லாம் இனி எழுதுகிறேன்.

இறுதித் தேர்வுக்கான விண்ணப்பம் வந்து விட்டது. மே 26 அன்று தொடங்கும் போல் இருக்கிறது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுகமான கவிதை!

மதுரை சரவணன் said...

nalla kavithai . vaalththukkal.

Jaleela Kamal said...

இவ்வள்வு பிஸியுலும் வந்து பதிவு போட்டு இருக்கிறீர்கள்.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வானவில் கவிதை அருமை, வானவில்லை பார்ப்பதே எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

அருவி said...

நல்ல கவிதை. மனதை வருடும் வார்த்தைகளை படிக்க நன்ராக இருக்கிறது

vidivelli said...

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........